அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைவதற்கு பா.ஜ.க. மா.த. திருவாய் மலர்ந்து மறுபடியும் ‘ஆப்பு’ வைத்துவிட் டார். “நடிகர் விஜய்யுடன் மக்களின் செல்வாக்கை இழந்து வரும் சில கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விஜய்யுடன் கூட்டணி அமைப்ப தற்கு அழைப்பு விடுக்கிறார். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விஜய் கட்சி ‘இண்டியா’ கூட்டணியில் இருப் பதற்கு பொருத்தமானது எனச் சொல்கிறார். இந்தக் கட்சிகள் எல்லாம் மக்களிடம் செல் வாக்கை இழந்து வாக்கு சதவிகி தத்தையும் இழந்து வருகின்றன. இவை விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு முயற்சி செய் கின்றன” என்று பா.ஜ.க. மா.த. கிண்டலடித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உருவாகிவிடும் என பேசப்பட்டுவரும் நிலையில் பா.ஜ.க. மா.த.வின் இந்த எகத்தாளமான பேச்சு அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை நிரந்தரமாக அமைக்க முடியாமல் செய்துவிடும் என்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்.
பா.ஜ.க.வின் தலைவர் ரேஸ் ஒருபக்கம் விறுவிறுப்பாக கிரிக்கெட் ‘பெட்டிங்கை விட பரபரப்பாக நடந்து கொண்டிருக் கிறது. இதில் ஆடுமலை மறுபடியும் தலைவராக வருவதற்கு அனைத்துவிதமான காய்களையும் நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த மாற்றம் உறுதியானால்தான் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வரும். இல்லையென்றால் ஆடுமலை சொல்வது போல பா.ஜ.க., பா.ம.க., ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என ஒரு பெரிய அணியை அமைத்து மக்கள் நலக் கூட்டணி போல ஒரு அரசியல் எதிர்வினையை தமிழக அரசியலில் உருவாக்க ஆடுமலை திட்டமிடுகிறார்.
பா.ஜ.க.வின் மற்ற மாநிலத் தலைவர்கள் யாரும் பா.ஜ.க. மா.த.வின் இந்த பார்முலாவை ஏற்கத் தயாராகவில்லை. அவர்கள், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லையென்றால் நஷ்டம் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கும்தான். பா.ம.க. கூட பா.ஜ.க. கூட்டணியில் உறுதியாக நிற்குமா என்பது சந்தேகம்தான். பா.ஜ.க. தனிமைப்படும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 சதவிகிதம் ஓட்டு வாங்கியது எனப் பெருமைப்படும் பா.ஜ.க., ஓட்டு சதவிகிதத்தில் அடுத்த தேர்தலில் நோட்டாவுக்கு கீழ் சென்றுவிடும் என எச்சரிக்கை செய்கிறார்கள். பா.ஜ.க.வில் நடைபெறும் இந்த மாற்றங்கள் அ.தி.மு.க.வில் வேறு விளைவுகளை பிரதிபலிக்கிறது.
எடப்பாடியை, அவருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் மற்றும் எடப்பாடியின் சம்பந்தி ஆகியோர் வீட்டில் ரெய்டுகள் நடத்தி வளைக்க பா.ஜ.க. முயல் கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு எடப்பாடி தயார். ஆனால், பா.ஜ.க. கூட்டணிக்குள் அவர்கள் இலவச இணைப் பாகக் கொண்டுவரும் சசி கலாவையும், ஓ.பி.எஸ்.சையும், தினகரனையும் ஏற்க எடப்பாடி தயாராக இல்லை. சசிகலா அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வருகிற ஏப்ரல் மாதம் இறுதிவரை கெடு விதித்துள்ளார். “என் னைச் சேர்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் எடப்பாடி மீது பா.ஜ.க.வின் தாக்குதல்கள் அதிகரிக்கும்” என்று சசிகலா எச்சரித்துள்ளார். இது எடப் பாடிக்கு உடன்பாடில்லாத விசயம். அதற்காக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியுடன் மறைமுக மான கூட்டணிப் பேச்சுவார்த் தையை எடப்பாடி ஆரம்பித் துள்ளார். இந்த கூட்டணி பேச்சுவார்த்தை களுக்காக முன்பு பிரஷாந்த் கிஷோர் மற்றும் சுனிலுடன் இணைந்து பணியாற்றிய விமல் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கும் முதலாளிகளின் சங்கமான ‘பவுன்சிங் பேட்டின் ஆதவ் அர்ஜூன் ரெட்டி எடப்பாடியின் இந்த முயற்சிகளுக்கும், அவர் அமைத்த குழுவின் தலைவர் விமல் எடுக்கும் முன் முயற்சிகளுக்கும் துணை நின்று உதவி செய்கிறார். எடப்பாடியின் மகன் மிதுன் மூலம் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியமான சாராம்சமே, விஜய்க்கு எவ்வளவு சதவீதம் மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஒருவர் அரசிய லில் மக்கள் ஆதரவை நிரூபித்த பிறகுதான் முதல்வர் அல்லது துணை முதல்வர் பொறுப்புகளைக் கோர முடியும். ஆனால் அ.தி.மு.க. விஜய்க்கு துணை முதல்வர் பொறுப்பு தரத் தயாராக இருக்கிறது. ஆந்திராவில் பவன் கல்யாண் எப்படி துணை முதல்வர் பொறுப்பை பெற்றாரோ அதுபோல, பவன் கல்யாண் எப்படி சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஆக்கினாரோ அதுபோல நடிகர் விஜய் எடப்பாடியை முதல்வராக்க வேண்டும். அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க நாங்கள் தயார் என எடப்பாடி சிக்னல் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். உதிரியாக விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சியையும் தி.மு.க. கூட்டணியிலிருந்து உடைத்து நம் கூட்டணிக்கு கொண்டு வருவோம் என எடப்பாடி அறிவித்துள்ளார். பா.ஜ.க. மா.த. அமைக்கும் வியூகமா.. எடப்பாடி அமைக்கும் வியூகமா அல்லது இரண்டு அணி களையும் பயன்படுத்தி தி.மு.க. முன்னெடுக்கும் வியூகம் பலிக்குமா என்பதுதான் தமிழக அரசிய லில் தற்போதைய ‘ஹாட்’ டாபிக்.
___________________
சென்னை சங்கமம்! கனிமொழி எம்.பி. நெகிழ்ச்சி!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., தனது எக்ஸ்தளப் பதிவில், "2007ஆம் ஆண்டு 1,300 கலைஞர்களைக் கொண்டு முதல் சங்கமத்தை முடித்துவிட்டு விரை யும் போது என்ன உணர்வைப் பெற்றேனோ, அதே உணர்வால் தான் இப்போதும் சூழப்பட்டிருக் கிறேன். குறிப்பாக, முதல்நாள் சங்கமம் மேடையில் அப்பாவின் (கலைஞர்) உரையை ஏ.ஐ. மூலம் கேட்டபோது, அவர் ஆற்றிய முதல் சங்கமம் உரை கண்ணில் தோன்றி, நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தது. உயிரெனக் கருதும் தமிழ் மண்ணின் கலைகளையும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கலைஞர்களையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்றுணர்ந்தே, தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் வழியாகச் ‘"சென்னை சங்கமம் 2025, நம்ம ஊரு திருவிழா' வைப்’ பெருவிழாவாகக் கொண்டாடி முடித்துள்ளோம். இந்நிகழ்வின் முதல்நாள் தொடங்கி, இறுதிநாள் வரை உடனிருந்து வழிகாட்டிய முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-கீரன்