மீபத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. பேசியதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மோதலுக்கு முன்பும் பின்பும் பெரிய பஞ்சாயத்தே நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

பொன்னையன், திடீரென பா.ஜ.க.வை எதிர்த்து அவராகவே பேசிவிடவில்லை. பொன்னையனுக்கு இரண்டு குணம் உண்டு. ஒன்று, அவருக்கு சசிகலாவை பிடிக்காது. அத்துடன் எம்.ஜி.ஆரின் திராவிட இயக்க தளகர்த்தராக அவர் திகழ்ந்தவர். இந்த இரண்டு விஷயங்கள் பற்றி அவர் எடப்பாடியிடம் அதிகமாகப் பேசுவார்.

ee

Advertisment

சமீபகாலமாக சசிகலாவை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. அத்துடன், சசிகலா இந்துத்வா கருத்துக்களை ஆதரித்துப் பேசிவருகிறார். மோடியை சமீபத்தில் சென்னை வந்தபோது சந்தித்ததோடு சரி, தனிப்பட்ட முறையில் மோடியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டார், அது எடப்பாடிக்கு தரப்படவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை மதிக்கவில்லை. தேவைப்படும்போது மட்டும் அ.தி.மு..க.வை பயன்படுத்துகிறார்கள் என்கிற கோபம் எடப்பாடிக்கு இருந்தது.

தர்மபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் நடத்துவதற்கு தி.மு.க. அரசு தடை விதித்தது. அதைப்பற்றி கேள்வி எழுப்புங்கள் என பா.ஜ.க. மேலிடம் எடப்பாடியிடம் சொன்னது. அதோடு சரி. அந்த வேலை முடிந்ததும், பா.ஜ.க. அ.தி.மு.க.வை கழட்டிவிட்டது.

eeஇந்நிலையில்… தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி என்றால் பா.ஜ.க.தான் என்ற பாணியில் பா.ஜ.க. நடந்துகொண்டிருக்கிறது. சசிகலா விஷயத்தில் பா.ஜ.க. எடப்பாடி சொல்வதை கேட்டால் சசிகலா ஆதரவாளரான ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்டிவிட்டு அடுத்து நடக்கும் பொதுக்குழுவில் அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்கிற எடப்பாடியின் கணக்கிற்கு பா.ஜ.க. ஒத்துவரவில்லை. ஆகவே, பா.ஜ.க.வை கொஞ்சம் மிரட்டிப் பார்த்தால் என்ன? என பொன்னையனைக் கூப்பிட்டு, பா.ஜ.க.வை விமர்சனம் செய்யச் சொன்னார் எடப்பாடி.

பொன்னையனின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் வி.பி.துரைசாமி பதில் கொடுத்தார். உடனே செல்லூர் ராஜுவைக் கூப்பிட்டு பா.ஜ.க.வை திட்டச் சொன்னார் எடப்பாடி. அத்துடன், வி.பி.துரைசாமி பொன்னையனைப் பற்றி சொன்னதற்கு எடப்பாடியும் பதில் சொன்னார்.

இந்த மோதல் பற்றி டெல்லிக்கு தகவல் போனது. டென்ஷனான டெல்லி பா.ஜ.க., எடப்பாடியை எச்சரித்தது. உங்களது பழைய குப்பைகளைக் கிளறுவோம் என அழுத்தமான எச்சரிக்கை டெல்லியிலிருந்து வந்ததும் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பதில் சொன்னார்கள்.

எடப்பாடிதான் பா.ஜ.க.வை பொன்னையன் திட்டியதற்கு காரணம் என ஓ.பி.எஸ்.ஸும், பா.ஜ.க.வின் டெல்லி மேலிடத்திடம் புகார் தெரிவித்தார். அதே நேரத்தில், அண்ணாமலை பற்றி பக்கம் பக்கமாக புகார் கடிதம் ஒன்றை எடப்பாடி அனுப்பி வைத்தார். அதையெல்லாம் பிறகு பார்க்கலாம் என எடப்பாடியிடம் டெல்லி பா.ஜ.க. கூறினாலும் அண்ணாமலை பற்றி இ.பி.எஸ். சொன்ன புகார்களை விசாரிக்க… ஒரு தனி கமிட்டியையே டெல்லி பா.ஜ.க. நியமித்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

கோவை மாநகரில் பிரபலமான லாட்டரி அதிபர் மார்ட்டின் என்பவர்தான் அண்ணாமலையின் ரியல் எஸ்டேட் மற்றும் ஜி ஸ்கொயர் பற்றிய பேச்சுக்கு பின்னணியாம். மார்ட்டினின் மனைவி பா.ஜ.க.வில் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததற்கான காரணமே லாட்டரி தொழிலை வடகிழக்கு மாநிலங்களில் நடத்துவதற்காகத் தான்.

அந்த மார்ட்டினை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்தவர்தான் அண்ணா மலை. மார்ட்டின் மூலம் பாண்டிச்சேரியில் லாட்டரி தொழிலை கொண்டுவர மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து முயற்சி நடந்தது. அப்போது பா.ஜ.க. மேலிடம் அண்ணாமலையின் வாயை மூடிவிட்டது. அதன்பிறகு ஒரு பெரும் பேரம் நடந்தது. படிந்தது.

கோவைக்கு அண்ணாமலை சென்றால் அவரது அனைத்துச் செலவுகளையும் மார்ட்டின்தான் பார்த்துக்கொள்வார். அந்த மார்ட்டினுக்குச் சொந்தமான நிலம், கோவையில் உள்ள எல் அண்ட் டி நிறுவன தொழிற்சாலைக்கு பக்கத்தில் உள்ளது. அதை துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ஜி ஸ்கொயர் மூலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்.

ee

வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில் எப்படி ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என கோவை பா.ஜ.க. கேள்வி எழுப்பியது. அந்த நில பேரத்தில் மார்ட்டினுக்கும் ஜி ஸ்கொயருக்கும் மோதல் வர,… மார்ட்டினின் தூண்டுதலுக்குப் பிறகு அண்ணாமலை, ஜி ஸ்கொயரோடு மோதத் தொடங்கி னார். அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக் கும் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் டெண்டர் விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் அனிதா டெக்ஸ் நிறுவனத்தை குறிவைத்து அண்ணாமலை தாக்குதல் நடத்துவதிலும் உள்நோக்கம் இருக்கிறது. இன்னமும் டெண்டர் முடியவில்லை. அதற்குள் அண்ணாமலை, அனிதா டெக்ஸ் டெண்டர் ஆர்டர் பெற்றது மாதிரி பேட்டியளித்தார்.

உண்மையில்…. அந்த டெண்டருக்காக அனிதா டெக்ஸ் காட் நிறுவனம் மற்றும் பாலாஜி, நாக்கோப், என்.சி.சி.எப். சென்னை, அப்பல்லோ சென்னை ஆகிய ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் அனிதா டெக்ஸ் காட், என்.சி.சி.எப்., அப்பல்லோ ஆகிய நிறுவனங்கள் ஒரே ஒருவருக்குச் சொந்தமானது. அவர், அனிதா டெக்ஸ் காட் சந்திரசேகரன்.

இப்படி அந்த டெண்டரை எடுக்க அனிதா நிறுவனம் முயற்சி செய்து வந்தது. ஏற்கனவே பொங்கல் பரிசு வழங்கியதில் தவறிழைத்த நிறுவனம் என முதல்வர் மு.க.ஸ்டாலினால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனம் என கூறப்பட்ட அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவதற்கு அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

இதைப்பற்றி தெளிவாகக் கூறாமல் உண்மையை மறைத்து டெண்டர் வழங்கப்பட்டதாக அண்ணாமலை கூறியதற்கு காரணம், அவருக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என அண்ணாமலை மீது ஏகப்பட்ட புகார்கள் எடப்பாடி தரப்பிலிருந்து பா.ஜ.க. மேலிடத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நாங்கள் பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை. அண்ணாமலையைத்தான் எதிர்க்கிறோம் என எடப்பாடி, பா.ஜ.க.வுடன்தான் தேர்தல் கூட்டணி என அறிவித்துவிட்டார்.

இப்படி… காதலும் மோதலுமாக பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு அலைபாய்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி. மு.க.வையும், பா.ஜ.க.வையும் சேர்ந்த தலைவர்கள்.