திருத்தணி பகுதியைச் சேர்ந்த வீடுகள் இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டு மனை பட்டா வழங்கினார். 130 பயனாளிகளில், அந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் வீடுகள் கட்டியநிலையில் அதை இடித்துவிட்டு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதாகக் கூறி அந்த வீட்டுமனை பட்டாவை வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்த முயற்சிப்பதாகவும் அதன் பின்னணியில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பூபதி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
பயனாளி ராஜிடம் பேசினோம். "எங்க பூர்வீகமே திருத்தணிதான். இதுவரைக்கும் வாடகை வீட்டிலே இருந்துட்டோம். நாங்க பட்ட கஷ்டம் பிள்ளைகளும் படக்கூடாதுனு கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர், முதல்வர் உள்பட எல்லாருக் கும் மனு கொடுத் தோம். அப்போ தைய முதல்வரா இருந்த எடப்பாடி பழனிசாமி திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலையில 130 பயனாளிகளுக்கு, கடந்த 2020-ஆம் ஆண்டு பட்டா வழங் கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளரான பூபதி 130 பயனாளிகளிடம் ஒரு மனைக்கு 1லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டிவந்தார். இந்த 130 பயனாளிகளுமே அடிப்படை கூலித்தொழிலாளர்கள். அரசு வழங் கிய இலவச வீட்டுமனை பட்டாவுக்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும் என்று கேட்டோம். அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் மாவட்ட அமைச்சர் மூ.நாசர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அருகே திருத்தணி பைபாஸ் சாலை அமைந்துள்ளது. அது செயல் பாட்டுக்கு வந்துவிட்டால் இந்த இடத்தின் மதிப்பு உயரும் என்பதால் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டிவந்தார். தரா விட்டால் புதிதாகக் கட்டப் பட்டுள்ள வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிடுவேன் என்றார். கடந்த 08-03-2022 அன்று பயனாளிகள் கட்டியி ருந்த வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள், பயனாளிகள் இனி யாரும் வீடுகட்டி குடியேறக் கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.
நானும் தி.மு.க.காரன்தான். எங்களைப்போல அன்னாடங்காய்ச்சி களுக்கு அரசு முறைப்படி வழங்கிய வீட்டுமனையில் கடன்பட்டு வீடுகட்டி னால் இடித்து விடுவோம் என்று அதிகாரிகளை வைத்து மாவட்ட பொறுப்பாளர் பூபதி மிரட்டுவது நீதியா? முதல்வருக்கு புகாரனுப்பியுள்ளோம். நீதி கிடைக்குமென நம்புகிறோம். இதே பகுதியில் சர்வே எண்:324/3 அரசு புறம்போக்கு இடம் 3 ஏக்கரை ஆக்கிர மிப்பு செய்துவைத்துள்ள மாவட்ட பொறுப் பாளர் பூபதியின் பினாமி சுரேஷிடமிருந்து மீட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டலாமே. ஏன் அதிகாரிகள் இதைச் செய்யவில்லை?''’என கேள்வியெழுப்புகிறார்.
மற்றொரு பயனாளியான சின்னகிருஷ் ணனோ, "65 வயசு ஆயிடுச்சி. இதுவரைக்கும் சொந்த வீடில்ல. சமீபத்துல அரசு கொடுத்த இலவச வீட்டுமனையில கடன்பட்டு வீடு கட்டிமுடிச்சிட்டேன். ஆனா கரண்டு லைன் தரமாட்டேங்கிறாங்க. வீட்டை இடிக்கப் போறோம்னு அதிகாரிங்க மிரட்டுறாங்க''’என்று பரிதாபமாய் முறையிடுகிறார்.
மாற்றுத்திறனாளியான புண்ணியக்கோட்டி, "நானும் என் மனைவியும் மாற்றுத்திறனாளிகள். அரசு கொடுத்த இடத்துமேல பணம் கேட்டார் தி.மு.க. கட்சிக்காரர் பூபதி. திருத்தணி தாசில் தார் விஜயகுமார வைச்சி மிரட்டலும் விடுக்கு றாங்க''’என்கிறார் பரிதாபமாக.
ரோட்டில் பூக்கடை வைத்து பிழைப்பு நடத்திவரும் வாணி, "தாலிய அடமானம் வைச்சு கடக்கால் போட்டோம். மேல வீடு கட்னா இடிச்சிடுவோம். இங்க அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப் போறம்னு சொல்றாங்க அதி காரிங்க. கடந்த 2007-ல் கிழக்குப் பகுதில இருக்கிற சர்வே எண் :324/2 என்ற இடத்தை 170 பயனாளி களுக்கு வழங்கப்பட்டதை மட்டும் ஏன் ரத்து செய்யல? அவுங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா..?'' என்றார்.
இதுதொடர்பாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் பேசினோம். "130 பயனாளிகளுக்கு வழங்கப்பட் டுள்ள இடம் திருத்தணி டவுனிலி ருந்து 1.5 கி.மீ உள்ளே வருவதால் பட்டாவை ரத்து செய்துள்ளோம்” என்றார். அதை ஒட்டியே சர்வே எண்:324/2-ல் 2007-ல் 170 பயனாளி களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் கூறவில்லை. "நான் டாக்கு மெண்டு பார்த்துவிட்டுக் கூறுகிறேன்''’என்று நழுவினார்.
மாவட்ட ஆட்சியர் அல்பீன் ஜான் வர்கீஸை தொடர்புகொண்டோம். உதவியாளர் விவரங்களைக் கேட்டுவிட்டு, "பிறகு பேசுகிறேன்' என்று தொடர்பைத் துண்டித்தார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பூபதியை பலமுறை தொடர்புகொண்டும் பேசவில்லை.