நான்கு ஆண்டு களுக்கு முந்தைய போதைப்பொருள் வழக்கு டோலிவுட் பெரும்புள்ளி களை தற்போது கலக் கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதரா பாத்தில் போதைப்பொருள் கடத்தியதாக தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டார். இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப் புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத் திரங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறி யப்பட்டது. இது சம்பந்தமாக 11 டோலிவுட் பிரபலங்கள் உட்பட சுமார் 62 பேர் விசா ரணை செய்யப்பட்டு, இதுவரை சுமார் 30 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருள் பரிமாற்றத்தில் பலகோடி பணம் கைமாறி இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்ததால் அமலாக்கத்துறை இவ்வழக்கைக் கையில் எடுத்து, தனியாக விசாரணையைத் தொடங்கியது. இதில் கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, இதுதொடர்பாக தற்போது பல்வேறு பிரபலங்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதன்படி, நடிகைகள் ரகுல் ப்ரீத்சிங், சார்மி கவுர், முமைத்கான், நடிகர்கள் ரவிதேஜா, ராணா டகுபதி, நவதீப், இயக்குநர் பூரி ஜெகநாத் உட்பட 9 பேர் அமலாக்கத்துறை இயக்குநரகத் தில் தனித்தனியாக விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் நடிகை ரகுல் ப்ரீத்சிங், "ஏற்கனவே நடிகர் சுஷாந்த் மரணத்தின்போதும் போதைப்பொருள் வழக்கில் விசாரிக்கப்பட்டார்' என்பது குறிப்பிடத்தக்கது.
போலிகள் உஷார்!
சினிமா கனவோடு சிட்டிகளை நோக்கிப் படையெடுப்பவர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து சில போலி ஆசாமிகள் பணம் பறிப்பது என்பது ஆண்டாண்டு காலமாக அரங்கேறி வருகிறது. இதில் சில நேரங்களில் பிரபல இயக்குநர்களின் பெயரையோ அல்லது தயாரிப்பாளர்களின் பெயரையோ பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதும் நடக்கும். அந்த வகையில், அண்மையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவன பெயரைப் பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது "2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக இது இருந்துவருகிறது. இந்த நிலையில், "2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக "2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில்... இது மாதிரியான மோசடி நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
"எங்கள் 2டி எண்டர்டெயின் மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி மோசடி நபர் ஒருவர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியிருப்பதை அறிந்தோம். அதன்மூலம், ஏமாறக் கூடிய நபர்களை ஆடிஷனில் கலந்துகொள்ள அழைப்பது மற்றும் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையை அவர் செய்கிறார். நாங்கள் அதுபோன்று எந்தவொரு ஆடிஷனையும் நேரடியாக நடத்தவில்லை. எங்கள் நிறு வனத்தின் படங்களுக்கான ஆடிஷன், அந்தப் படத்தின் இயக்குநரால், அவர் அலுவலகத்தில் வைத்துத்தான் நடத்தப்படும். ஆடிஷனில் கலந்துகொள்ள எந்தக் கட்டண மும் நாங்கள் வசூலிப்பதில்லை. இந்த மோசடி நபர் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். இது மாதிரியான மின்னஞ்சல் வந்தால் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், உங்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிரவேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
திரைக் கூட்டணி!
ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள், தமிழ் பேசத் தெரியாத வில்லன், ஒரு சிறிய லவ் டிராக், ஆங்காங்கே தூவிவிடப்பட்ட காமெடிகள் என்ற வழக்கமான மசாலா விஷயங்களிலிருந்து மெல்லப் பாதையை மாற்றி வருகிறது தமிழ் சினிமா. புதிய இயக்குநர்கள், வித்தியாசமான ஜானர்கள், புதிய தொழில்நுட்பங்கள் என பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இப்படிப்பட்ட புதிய படைப்புகளில் முதலீடு செய்வதற்கான தயாரிப்பாளர்கள் என்னவோ வெகுசிலர்தான் உள்ளனர். இந்தச் சூழலில், இளம் இயக்குநர் களுக்கும் புதிய கதைக்களங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்க உதவியாக முன்னணி இயக்குநர்கள் ஒன்றிணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி யுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், சங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர். முருகதாஸ், கௌதம்மேனன், சசி, வசந்தபாலன் உள்ளிட்ட பத்து இயக்குநர்கள் இணைந்து இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். "ரெயின் ஆன் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் தொடங் கப்பட்டுள்ள இந்த நிறுவனம் மூலம் திரைப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தயாரிக்கப் படவுள்ளன. இவர்களில் பெரும்பாலான இயக்குநர்கள் தனித்தனியே தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிலையில், இந்த புதிய முன்னெடுப்பிற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ள னர். இந்நிறுவனத்தின் தயாரிப்பு அலுவலகம், இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகத்தில் வைத்துச் செயல்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. "ரெயின் ஆன் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா சமாதானம்!
அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘"தி ஃபேமிலி மேன்' சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாம் பாகம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் நடிகை சமந்தா தமிழீழப் போராளியாக நடித்திருந்தார். இந்த தொடர் தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. இந்த தொடருக்கும், இதில் நடித்த நடிகை சமந்தாவிற்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நடிகை சமந்தா இதுதொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமலிருந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த சர்ச்சை குறித்து முதன்முறையாகப் பேசியுள்ளார்.
அப்பேட்டியில், "மக்களுக்கென இருக் கும் சொந்த கருத்துக்களை நான் மதிக்கிறேன். அவர்கள் மனதைப் புண்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். அவர்களைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. அப்படி நடந்திருந்தால் அதற்கு நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை. அதனால் (அப்படி நடந்ததற்கு), நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் சீரிஸ் வெளியாகி, அதைப் பார்த்த பிறகு நிறைய சத்தங்கள் (விமர்சனங்கள்) நின்றுவிட்டன என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இருப்பினும், இதற்காக என்னை இன்னமும் வெறுப்பவர்களிடம், நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.