கொரோனா விற்குப் பிறகு தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட பலரும் தற்போது அதில் இருந்து மீண்டுவர ஆரம்பித்துள்ளனர். அதே போல், திருச்சி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த ஊரிலிருந்து ஒவ் வொரு ஆண்டும் வட மாநிலங்களுக்கு திருட்டுக்கு செல் பவர்கள், கொரோனா பாதிப்பிற்கு பிறகு வெளி மாநிலங் களுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர்.
அதேபோல், திருடுவதற்காக வெளி மாநிலங் களுக்கு செல்லும் பழைய தலைமுறை யினர் பலர், வயது முதிர்வு காரணமாக தங்க ளுடைய வாழ்க்கையை இயல் பாக வாழத் தொடங்கியுள்ளனர். தற்போது வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர் வெளிமாநிலங்களுக்கு செல்வதில்லை.
இருக்கும் இடத்திலிருந்தே பணம் சம்பாதிக்கும் யுக்தியை கற்றுக்கொண்டு, தற்போது திருட்டுத்தொழிலைக் குறைத்துக் கொண்டு, கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, அபின் என்று தங்களுடைய தொழிலை மாற்றிக்கொண்டுள்ளனர். ராம்ஜி நகர் பகுதியிலிருந்து, திருச்சி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களுக்கும் சப்ளை செய்யும் அளவிற்கு இந்த போதைப்பொருள் விற்பனைத்தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.
அதேபோல், இருசக்கர வாகனத்தில் வருபவர்களிடமிருந்து செல்போன் பறிப்பது, பிக்பாக்கெட், கார் கண்ணாடிகளை உடைத்து திருடுவது, பேருந்தில் செல்பவரிகளிடம் திருடுவது என இப்பகுதி சிறுவர்கள் ஈடுபடும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2021,டிசம்பர் மாதத்தில், திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப்பு களைத் திருடிச் சென் றது. அக்கும்பலை சென்னை அண்ணா நகர் தனிப்படை போலீஸார் பெங்க ளூருவில் கைது செய்தது தெரிய வந்தது. தற்போது அதே பாணியில் மீண்டும் சென் னையில் பாரிமுனை, பாண்டி பஜார், தி. நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற தாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து, குற்றவாளிகள் எங்கெங்கு பயணித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, பெங்களுரில் பதுங்கியிருந்த சபரியின் கூட்டாளிகளான தீபக், மதன், பிரதீப், விவேக் ஆகிய நான்கு பேரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், சபரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல், திருவெறும்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகர், காந்தி நகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை ஊசி , மாத்திரை விற்பனை செய்த ஸ்டீபன் ராஜ், ரமேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதில் முத்துமணி என்பவர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது இந்த பகுதியில் உள்ளவர்களுக்கும், ராம்ஜி நகர் பகுதியிலிருந்து தான், போதை ஊசி, போதை மாத்திரைகள் விநியோகிக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இப்படி தொடர்ந்து ராம்ஜி நகர் பகுதியினர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம், சம்பந்தப் பட்ட காவல் நிலையங்களுக்கு புதிய ஆய்வாளர்கள் யார் வந்தாலும், அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிந்து, மாதம் தவறாமல் செய்துவிடும் அளவிற்கு அவர்களும் பழக்க மாகி விட்டனர்.
அதேபோல் பழைய வழக்குகளில் தொடர்புடை யவர்களை வெளிமாநில காவல்துறையினர் பிடிப்பதற் காக வந்தாலும், நல்ல உயர்தர ஹோட்டல் ரூம்களை போட்டுக்கொடுத்து அவர் களுக்குத் தேவையான அனைத் தையும் செய்து கொடுத்து, நன்றாகக் கவனித்து அனுப்பி விடுவதால், அவர்களும் தேடி வந்த குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை எனக் கூறிவிட்டுச் செல்கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஊசிகளின் பெருக்கம் அதி களவில் புழங்க ஆரம்பித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதிய வழிகளைப் பின்பற்றி வெளி மாநிலங்களி லிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை திருச்சிக்குள் கொண்டுவந்து இருப்பு வைத்துக் கொள்கிறார்கள்.
அதேபோல் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையானதோடு, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் இவர்கள் மூலம் கல்லூரி வளாகங்களுக்குள்ளே கொண்டுசெல்லப்படு கிறது.
கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு செல்ல கல்லூரி மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வரும் அளவிற்கு, தேவையான அனைத் தையும் ராம்ஜி நகர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்து கொடுத்துவிடுவதால், அந்த இளைஞர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு, போதை கஞ்சா பொட்டலங்களை கல் லூரிகளுக்குள் கொண்டு சேர்க் கின்றனர்.
இதில் கஞ்சா மட்டு மல்லாமல், ஹான்ஸ், பான்பராக், கூல் லிப், குட்கா என்று பல வகையான போதை வஸ்து களும் கல்லூரி வளாகத்திற்குள் மிகச்சுலபமாகக் கிடைக்கும்படி ஒரு பெரிய நெட்வொர்க்காகச் செயல்பட்டு, பலரை போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ள னர்.
இந்நிலையில், போதைப் பொருட்களை வட மாநிலங் களுக்கு சப்ளை செய்துவந்த திருச்சி ராம் நகரைச் சேர்ந்த கஞ்சா கமல் என்பவனை ஸ்கெட்ச் போட்டு புதுச்சேரியில் வைத்து கைது செய்துள்ளது போலீஸ்.
இதுபோல், காவல்துறை ஒருபக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், கட்டுப்படுவதுபோல் தெரியவில்லை. போதை வஸ்துகள் இல்லாத மாநிலமாக மாற்ற, திருச்சி ராம்ஜி நகர் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, மற்றும் அங்குள்ளவர்களின் வருமானத்துக்கான மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்யவேண்டியது அவசியம்.