இந்த வருடம் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு நடிகர் விஜய்யை அழைத்து பங்கேற்க வைத்தால் ஈஷா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்கள். கூட்டத்திற்கு கூட்டமும் சேரும்' என்ற கணக்கில் விஜய்யை அழைக்க முடிவுசெய்தார் ஜக்கி.
நடிகர் விஜய்யின் பெற்றோர் ஈஷாவின் பக்தர்கள். இதில் எஸ்.ஏ. சந்திரசேகர், "ஜக்கியால்தான் நான் மனத்தெளிவு பெற்றேன்' என பேட்டியும் கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, "நடிகர் விஜய்யை, தான் நடத்தும் விழாவிற்கு அழைத்துவந்தால் கூட்டம் தானாகச் சேரும்...'' என முடிவுசெய்து விஜய்யின் பெற்றோரிடம் இதுபற்றிக் கூற... கோவை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்படும் விழாவிற்கு போய்வர கூறியுள்ளனர்.
பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேறினார் விஜய். நடிகரைப் பார்க்க கூட்டம் முண்டி யடித்துத் தள்ள, அங்கிருந்த நாற்காலிகள் உடைந்தன. ஜக்கியும், "உங்க ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. காட்டுமிராண்டித்தனமாக நடக்கக்கூடாது'' என நடிகர் விஜய்யிடம் பொங்கிய நிலையில்... கடுங்கோபத்தி லிருந்த விஜய், தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து "ஏம்பா.! உங்களை இவர் அமைதியாக இருக்க சொல்றார்'' என ஜக்கியைக் கைகாட்டிவிட்டு அமர்ந்திருக்கிறார். "தலைவனே ஒண்ணும் சொல்லலை. சாமியார் சொன்னால் கேட் கணுமா?' என நாற்காலிகளை துவம்சம்செய்து ரகளையில் ஈடுபட்டனர்'' என்றார் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி ஒருவர்.
ஈஷா யோக மையத்தில் கணக்குப் பிரிவில் பணியாற் றிய ஒருவரோ, "அன்றைய தினம் கூட்டம் முடிந்த பின் வாடகைக்கு நாற்காலி கொடுத்தவர், "இத்தனை சேர்கள் உடைஞ்சிருக்கு. அதற்கும் பணம் வேண்டும்' என வாதாடிய நிலையில்... “"நான் வாடகைக்குத்தான் எடுத்தேன். உடைச்சது விஜய் ரசிகர்கள். அவங்ககிட்ட போய் கேட்டுக்க'’என்றார். விடாது, நாற்காலி வாடகைக்கு விட்டவர் "நீங்கதான் தரணும்' என போராட... "நீங்க விஜய்யிடம், உடைஞ்ச நாற்காலிக்கு பணம் கேளுங்க... தரலைன்னா நான் தர்றேன்' என ஜக்கி சமாதானம் பேசி யனுப்ப, அவரும் சென்னை யில் விஜய்யை சந்தித்து... நாற்காலிக்கு பணம் கேட்க, கோபமடைந்து சத்தம்போட்டு அனுப்பியிருக்கிறார்'' என்றார் அவர்.
ஈஷாவில் யோகா பயிலவந்த சுபஸ்ரீயின் மர்ம மரணம் ஜக்கியை பெரு மளவில் டேமஜ் செய்திருக்கும் நிலையில், "ஈஷாவை சீல் வைத்து அரசுடைமையாக்க வேண்டும். சுபஸ்ரீ மரணத் தில் நியாயமான விசாரணை வேண்டு'மென என சி.பி.ஐ., சி.பி.எம்., த.பெ.தி.க., அம்பேத்கரிய, பெரியா ரிஸ்ட்கள் இணைந்து ஆர்ப் பாட்டம் நடத்தி, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள னர்.
இந்நிலையில், மகா சிவராத்திரியான பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துள்ள ஜக்கியின் ஈஷா நிறுவனம், நடிகர் விஜய்யை சிவராத்தி ரிக்கு அழைத்து வந்தால், மக்களின் கவனம் வேறு பக்கம் திரும்புமென அவரை அணுகிய நிலையில், "பழசு ஞாபகம் இருக்கு...! பட்ட அடி போதும்பா' என கையெடுத்துக் கும்பிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.