ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் விடுதலை தமிழகத்தையே நெகிழ வைத்திருக்கிறது. திருச்சி சாந்தனுக்கு உதவிகள் செய்து அடைக் கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சர.இரும்பொறை, ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் விவசாயம் செய்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள செரியலூர் இனாமில் வசிக்கும் அவரிடம் எழுவர் விடுதலை குறித்து கேட்டோம்.
"சிறையிலிருந்தவர்கள் அனைவருமே ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவிகள் செய்ததாக, அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தான். நேரடியாக யாரும் பங்கெடுத்தவர்கள் இல்லை. உதவிகள் என்பதும் யாரும் தெரிந்து செய்யவில்லை. நட்புரீதியில் தெரியாமல் செய்தவர்கள்தான்.
கிட்டத்தட்ட 30 வருட போராட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. சிறைப் பட்டிருந்தவர்களும், அவர்களின் உறவினர்களும், ஆர்வலர்களும் வழக்குச் செலவுகளை செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த விடுதலைக்கு மாநில அரசு சட்டரீதியாகவும் இன உணர்விலும் முழுமையாக உதவிகள் செய்திருக்கிறது. அந்த உதவிகள் கிடைக்கவில்லை என்றால் இந்த விடுதலை கேள்விக்குறிதான். அதனால் மாநில அரசுக்கும், இன உணர்வில் விடுதலைக்காக போராடிய முகம் தெரியாக பொதுமக்களுக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumperai.jpg)
நான் ராஜீவ் கொலை வழக்கில் திருச்சி அண்ணாநகர் சாந்தனுக்கு உதவிகள் செய்ததாக சொல்லி தேடிவந்தனர். திருச்சி சாந்தன் குப்பி கடித்து இறந்துவிட்டார். (தற்போது விடுதலையான சாந்தன், இலங்கையைச் சேர்ந்தவர். இறந்த சாந்தனோ, திருச்சிக்காரர்) அதன்பிறகு 3 மாதங்களில், என் பெயர் இல்லை என்றாலும் ராமேஸ்வரத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் அத்தனை கொடுமைகளையும் சித்ரவதைகளையும் அனுபவித்தோம். அனைத்து சித்ரவதைகளை யும் அனுபவித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் இறந்துவிட்ட நிலையில் நான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தேன்.
எனக்காக என் உறவினர்கள், அண்ணன்கள் ஒரு கட் டமைப்பை வைத்திருந்தார் கள். எனக்கு திருமணமும் செய்துவைத்தார்கள். முதலில் சிறையிலிருந்து வந்தவன் என்ற தயக்கம் என் மனைவியிடம் இருந்தாலும் சொல்லிப் புரிய வைத்ததும் அது மறைந்து இப்ப நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.
தற்போது வெளியே வரும் அனைவருக்கும் இதுபோல தங்க இடமிருக் கிறதா என்றால் கேள்விக்குறிதான். சிலருக்கு தமிழ்நாட்டில் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சனை இல்லை. மற்றவர்கள் தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர்கள் ஈழத்திலும் வெளி நாட்டிலும் இருக்கிறார்கள். ஈழம் தற்போது வாழத்தகுந்த நாடாக இல்லை. அதனால் உறவினர்கள் அழைத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லலாம். அதுவரை தமிழக அரசு அவர்களுக்கு போதிய பாதுகாப்பையும், தங்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்''’என்றார்.
-இரா.பகத்சிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/irumperai-t.jpg)