கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்- கலைச் செல்வி தம்பதிகளின் மகள் சுப்பு லட்சுமி. 26 வயது. இவரது பெற்றோர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். சுப்புலட்சுமியை கொத்தட்டையில் உள்ள அவரது தாத்தா -பாட்டி -தாய்மாமன் ஆகியோர் பராமரிப்பில் எம்.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர் வரை படித்து பட்டம் பெற்றார். சுப்புலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த 3-ம் தேதி காணாமல்போனார். இரண்டு நாட்களுக்குப் பின் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் பிணமாகக் கிடப்பதாக அவரது தாய்மாம னுக்கு தகவல் வரவே... அவரும் உறவினர்களும் பதறியடித்துக்கொண்டு ஜெயங்கொண்டம் ஓடினார்கள்.
கொத்தட்டையில் சுப்புலட்சுமியின் தாத்தா-பாட்டி வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த கொளஞ்சி என்பவரது மகன் வசந்தகுமாருக்குமிடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. வசந்தகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருக்கிறது. சுப்புலட்சுமி, சென்னையிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் வேலை கிடைத்து பணியாற்ற, வசந்தகுமாரும் சென்னை கோயம்பேட்டில் தொழிலாளியாகப் பணியாற்றியுள்ளார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள, இருவரும் எல்லைமீற, சுப்புலட்சுமி கர்ப்பமானார்.
இந்த விஷயமே தெரியாமல் தாய்மாமன் வீட்டார், சுப்புலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டைச் செய்து, அவரை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த சுப்புலட்சுமி, வசந்தகுமாரிடம் தனது கர்ப்பத்துக்கான தீர்வைக் கேட்டுள்ளார். இருவருமே வயிற்றிலுள்ள கருவைக் கலைக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் தனித்தனியாக கொத்தட்டைக்குச் சென்று, அங்கிருந்து கடந்த 3-ம் தேதி, கருக்கலைப்பு செய்வதற்காக இருவரும் இணைந்து விருத்தாச்சலத்திலுள்ள தனியார் மருத் துவமனையில் ஆலோசனை கேட்டுள்ளனர். ஆனால், சுப்புலட்சுமி வயிற்றில் 8 மாதக் குழந்தையாக இருப்ப தால் உயிருக்கு ஆபத்து என்று கூறிய மருத்துவர்கள், குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருக்கும்படி கூறியுள்ளனர். அங்கு செவிலியராகப் பணியாற்றிய கிருஷ்ணவேணி, தன்னால் அந்த கருவைக் கலைக்க முடியுமென்று கூறி, சுப்புலட்சுமியை ஆண்டிமடம் அருகி லுள்ள அண்ணங்காரன்குப்பம் கிராமத்திலுள்ள தனது உறவினர் பொற்செல்வியிடம் அழைத்துச் சென்றுள்ளார் பொற்செல்வியோ, தனக்குத் தெரிந்த முரட்டுத்தனமான வழிமுறையில் சுப்பு லட்சுமிக்கு மயக்க ஊசி செலுத்தி, 8 மாத ஆண் குழந்தையை வெளியே கொண்டுவர முயற்சிக்க, அக்குழந்தை வயிற்றுக்குள் ளேயே இறந்தது. எனவே, குழந்தையை வெளியே எடுக்க சுப்புலட்சுமியின் பிறப்புறுப்பை கத்தியால் கிழிக்க, ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. அதோடு, குழந்தையை ஒருவழியாக வெளியே எடுத்து, தனது தம்பி கர்ணனின்மூலம் யாருக்கும் தெரியாமல் முந்திரிக்காட்டில் புதைக்குமாறு கொடுத்துள்ளார். மயக்கத்தி லேயே ஆபத்தான நிலையிலிருந்த சுப்பு லட்சுமியை ஆண்டிமடத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர்களோ எங்களால் முடியா தெனக் கைவிரிக்க, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசென்று சேர்த்தனர். ஆனால் சுப்புலட்சுமி, வரும்வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்ததால், செவிலியர் கிருஷ்ணவேணியும், வசந்தகுமாரும் எஸ்கேப்பானார்கள். சுப்புலட்சுமியின் ஆம்புலன்ஸ் ஆண்டிமடத்தைச் சேர்ந்தது என்பதால், அங்குள்ள மருத்துவர்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சுப்புலட்சுமியின் செல்பேசியைச் சோதித்து, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை செய்ததில், கிருஷ்ணவேணி சிக்கினார். அதன்பின்னர், குணசேகரன் தலைமையிலான தனிப்படை விரை வாகச் செயல்பட்டு, வசந்தகுமாரையும், அவரது நண்பர்கள் திருமூர்த்தி, சந்தோஷ்குமார், தம்பி சஞ்சய் காந்தி, இவர்களின் உறவினர் கலாவதி உட்பட இதில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவ்விவகாரத்தில் சுப்புலட்சுமி யின் உறவினர்களுக்கு ஆதரவாக நிற்கும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள், "எங்களது இயக்கத்தைச் சேர்ந்தவரின் உறவினர்தான் சுப்பு லட்சுமி. வாழ வேண்டிய வயதில், ஓர் ஆண் நண்பருடனான பழக்கத்தால் கருக்கலைப்பு என்ற பெயரில், 8 வயது சிசுவும் தாயும் கொல்லப்பட்டிருப்பது வேதனை தருகிறது. கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும்வரை சுப்புலட்சுமியின் உடலை வாங்க மாட்டோமென்று தெரிவித்ததால் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்துள்ளனர். இக்கொடூரத்தை நிகழ்த்திய கிருஷ்ண வேணிக்கு தப்பவே முடியாதபடி கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். கிருஷ்ணவேணியும், வசந்தகுமாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல இயக்கங்கள் இச்சம்பவத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப் பட்டிருந்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்" என்றார் வேதனையுடன்.
"சுப்புலட்சுமி இறந்த தகவல் கிடைத்தவுடன் அதற்கு காரணமான 8 பேரையும் அடுத்தடுத்து தேடிப்பிடித்து கைது செய்துள்ளோம். இது சட்டத்தை மீறிய கொடூர மான சம்பவம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்'' என்கிறார்கள் ஆண்டிமடம் காவல்துறையினர்.
-நமது நிருபர்