நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில், அனுமதியின்றி யானைகள், காளை மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வந்தது. நியூஸ் தமிழ் செய்தியாளர் ஜெபர்சன் தலைமையிலான குழுவினர், அப்பகுதிக்கு வந்து செய்திகளைச் சேகரித்தனர்.
அப்போது, பச 21 த 8154 என்ற பதிவெண் கொண்ட பச்சைநிற டொயோட்டா குவாலிஸ் கார் திடீரென அங்கு வந்தது. அதிலிருந்து அடியாட்களைப்போல இறங்கிய இருவர், எதுவுமே விசாரிக்காமல், "முதலில் கேமராவை ஆப் பண்ணுங்க' என்று மிரட்டியுள்ளனர். பின்னர், விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்டத் தலைவர் ஈ.சி.ஆர்.சரவணன் தலைமையில் நான்கைந்து குண்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, "எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்?' எனக் கேட்டபடி, செய்தியாளரைச் சுற்றி வளைத்துத் தனியாக ஓரங்கட்ட முயன்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijayfanclub.jpg)
மேலும் நான்கைந்து பேர் அச்சுறுத்தும் தொனியில், "இனிமேல் வீடியோ எடுத்தால் கேமராவை நீ வீட்டுக்குக் கொண்டுபோக முடி யாது. உன்னைய என்ன வேணாலும் பண்ணு வோம்'' என்று கொலை மிரட்டல் விடுத்ததோடு, "கேமராவை கொடு... கேமராவை கொடு' என்று கூறிக்கொண்டே, கேமராவைப் பறித் தனர். அதோடு, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், செய்தியாளர் குழுவின் மீது தாக்குதல் நடத்தி, தரதரவென இழுத்துச்சென்று, அவர்களுடைய குவாலிஸ் காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
அலுவலகத்திலிருந்து தொடர்புகொள்ள முடியாதபடி செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஓட்டுநர் என மூவரின் செல்போன்களையும் பறித்து ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, காருக்குள் வைத்தே மூவர்மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தி யதில் செய்தியாளர் ஜெபர்சன் காயமடைந்தார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, கடத்தல் கும்பலிடமிருந்து நியூஸ் தமிழ் செய்தியாளர் குழுவை பத்திரமாக மீட்டனர். விசாரணையின் முடிவில், செய்தியாளர் ஜெபர்சன் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய ஏழு பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், திருட்டு போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்கள் கடத்தலுக்கு, சீமான், முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத் தைத் தெரிவித்துள்ளனர். நக்கீரன் ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் மன்றங்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/vijayfanclub-t.jpg)