பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரான புல்டோசர் அரசியல் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமை காட்டிய பின்னர், அதே புல்டோசரை தேச பக்தியின் பேரில் இஸ்லாமியர் களுக்கு எதிராகத் திருப்பியுள்ளது குஜராத் பா.ஜ.க. அரசு.

பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுநாள் வரை தீவிரவாதிகளைக் கண்டறிய முடியவில்லை. அத்தாக்குதல் தொடர் பாக இந்தியத் தரப்பில் எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும் அமெரிக்கா சமரசத் துக்கு வந்ததால் உடனடியாக அதனை முடிவுக்கு கொண்டுவரும் சூழல். இதனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒன்றிய அரசால் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாத நிலை.

bb

இந்நிலையில், குஜராத்தில் தங்கியிருக்கும் வங்க தேசத்தவர்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி, குஜராத்தின் சியாசித் நகரில் கிட்டத்தட்ட 8000 வீடுகள் வரை இடிக்கப்பட்டுள்ளன. இங்கு வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். இவர்களில் பல்லாண்டுகளுக்கு முன்பே வங்க தேசத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்துவந்து வசித்துவரும் குடும்பங்களும் உண்டு. இவர்களை குடியுரிமை பெறாதவர் களென்று குஜராத் அரசு கூறியுள்ளது.

உண்மை என்னவெனில், இவர்களில் 90% பேர் இந்திய குடியுரிமை பெற்றவர்கள். இவர்களிடம் முறையான ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டைகளிருக் கின்றன. தேர்தல்களில் வாக்கு செலுத்தியிருக் கிறார்கள். இவர்களின் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இம்மக்களுக்கு சட்டப்படியான நோட்டீஸை வழங்கவோ, முன்னறிவிப்பு செய்யவோ இல்லையென்று கூறப்படுகிறது. இந்நிலையில், வீடுகளை இடிக்கும் நடவடிக்கை யைத் தடுப்பதற்காக குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றால், தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைச் சொல்லை வைத்தே நீதிமன்றத்தையும் இதற்கு ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறார்கள்.

Advertisment

இதன்மூலம், பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட களங்கத்தைப் போக்க, மீண்டும் இஸ்லாமி யர்களை தேச விரோதிகளாகக் கட்டமைக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.

இந்நிலையில் குஜராத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, இந்தியர்களை வெறுப்பதும், இந்தியாவுக்கு தீங்கு விளைவிப்பதும் மட்டுமே பாகிஸ்தானின் நோக்கமாக உள்ளது எனக் கூறி, இஸ்லாமிய வெறுப்பரசியலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இப்படி இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டிவிடுவதன் விளைவாக, உத்தரபிரதேசத்தில் அலிகரில், மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறி 4 இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை பிரதமரும், உள்துறை அமைச்சரும் கண்டிக்காமல், கண்டும் காணாதிருப்பது வருந்தத் தக்கதென்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Advertisment