மிழக உள்துறை செயலாளர் அமுதா உட்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றியிருக்கிறது தி.மு.க. அரசு. இதில் 10 பேர் மாவட்ட ஆட்சியர்கள். கடந்த ஜூலை 1-ந்தேதி 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 65 பேர் மாற்றப்பட்டிருப்பது கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் உதயநிதி முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படலாம் என்கிற சூழலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இந்த மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது என்கிறார்கள்.

Amutha

உள்துறையின் முதன்மைச் செயலாளர் அமுதா மாற்றப்பட்டு புதிய உள்துறைச் செயலாளராக கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல, சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக இருந்த குமரகுருபரனை சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணனுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை வழங்கப் பட்டுள்ளது. அதேபோல பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டிருக்கிறார். கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கோபால், கால்நடை பராமரிப்பு- மீன்வளம்-பால்வளம் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்படி 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம், கோட்டையில் சீரியஸாக விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, "பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இணை ஆணையராக இருந்த அமுதாவை மாநில பணிக்கு அழைத்து வந்தவர் முதல்வர் ஸ்டாலின். திறமையான அதிகாரிகள் மத்திய அரசு பணியில் இருந்தால் தமிழகத்திற்கு என்ன லாபம்? என்கிற எண்ணத்தில் அமுதாவை தமிழகத்துக்கு திரும்ப வைத்தனர். ஆரம்பத்தில் அமுதாவை ஊரக வளர்ச்சித்துறையில் நியமித்த முதல்வர் ஸ்டாலின், பிறகு உள்துறை செயலாளராக மாற்றினார்.

Advertisment

உள்துறையில் அமுதா நியமிக்கப் பட்டபோதே சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரின் முகமும் மாறியது. காரணம், உள்துறை செயலாளர் என்பது தலைமைச்செயலாளர் பதவிக்கு பிறகு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த, சென்சிட்டிவ் வான பதவி. தமிழக காவல்துறையின் தலைவரான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. முதல் போலீஸ் உயரதிகாரிகள் எவரையும் கேள்வி கேட்கக்கூடிய பதவி. அந்த வகையில், உள்துறை செயலாளராக நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கும். அதேநிலையில் சட்டம் ஒழுங்கில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

aa

இப்படிப்பட்ட நிலையில், அமுதாவை விட சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் காவல்துறை யில் உண்டு. அமுதாவை பெயர் சொல்லி அழைக் கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அமுதா எடுக்கும் நட வடிக்கைக்கு சீனியர்கள் எப்படி கட்டுப்படுவார்கள்? ஐ.ஏ.எஸ்.ஸாகவே இருந்தாலும் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி எப்படி ஜூனியர் ஐ.ஏ.எஸ்.ஸை மதிப்பார்? அதனால்தான் அமுதா நியமிக்கப்பட்டபோதே சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் முகம் மாறியது.

Advertisment

அதேசமயம், உள்துறையை திறமையாக கையாளும் ஆளுமை அமுதாவுக்கு இல்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அவர் செய்வது அடிக்கடி நடக்கும். விஜய் படத்துக்கு அனுமதி அளித்தது, போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை சஸ் பெண்ட் விவகாரம், உள்துறையில் தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட டார்ச்சர் என பல விசயங்களில் காண்ட்ரவெர்சியாக நடந்து கொண்டார் அமுதா. டி.ஜி.பி. சங்கர்ஜூவாலுக்கும் இவரோடு ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போவ தில்லை.

இதனால் உள்துறையிலிருந்து எந்த சமயத் திலும் அமுதா மாற்றப்படலாம் என்கிற எதிர் பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இருந்துவந்த நிலையில்தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மர ணங்கள், போதைப்பொருள் தடுப்பு, ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட விவகாரங்கள் அமுதாவுக்கு எதிராகவே இருந்தன. அமைச்சர் உதயநிதி யிடம் சொல்லப்பட்ட பல விவகாரங்களும் அமுதாவுக்கு பாசிட் டிவ்வாக இல்லை.

உள்துறைக்கு அமுதா சரியானவர் அல்ல என்பதை முதல்வரிடமும், உதயநிதியிடமும் அழுத்தமாகவே சொல்லப்பட்டு வந்தது. அதுவும் கள்ளச்சாராய பலிகள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரங்களுக்குப் பிறகு இந்த அழுத்தம் அதிகமாகவே இருந்தது.

ss

அந்த வகையில், அமுதாவை மாற்றிவிட்டு உள்துறைக்கு கூடுதல் தலைமைச் செயலாளரான சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தீரஜ்குமாரை நியமித் துள்ளனர். இவர், முதல்வரின் நேரடி சாய்ஸ் என சொல்லப்பட்டாலும் உயரதிகாரிகளின் யோசனை படிதான் தீரஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஸ்ட்ரிக்ட்டான ஆபீஸர், எதற்கும் காம்பரமைஸ் ஆகாதவர் என்கிற பெயர் இவருக்கு இருக்கிறது.

இருப்பினும் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் எப்படி வேலை வாங்குவார் என்பது யாருக்குமே தெரியவில்லை. குறிப்பாக, சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுக்கும் பல்வேறு க்ரைம்களை கட்டுப் படுத்துவதில்தான் இவரது திறமை இருக்கிறது. ஆக, புதிய உள்துறை செயலாளருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன”என்கிறார்கள் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

பொதுவாகவே, உள்துறையில் நியமிக்கப் பட்ட பெண் அதிகாரிகள் யாரும் சோபித்ததில்லை என்கிற கருத்தும் கோட்டையில் நிலவுகிறது. இதற்கு முன்பு உள்துறை செயலாளராக மாலதி, சாந்த ஷீலாநாயர், ஷீலாராணி சுங்கத் வரிசையில் தற்போது அமுதா. சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்பி அப்ளை செய்திருந்தார். அவர் டெல்லிக்கு சென் றால் மாநகராட்சி கமிஷனராக குமர குருபரனை கொண்டு வர நினைத்திருந் தார் அமைச்சர் சேகர்பாபு. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசிலிருந்து அனுமதி கிடைப்பது இழுத்துக் கொண்டே இருந்தது. இனியும் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிந்ததால் ராதா கிருஷ்ணன் மாற்றப்பட்டு குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபுவின் முழு ஆசி இவருக்கு இருக்கிறது என்கிறார்கள்.

குமரகுருபரன் கவனித்த பள்ளிக் கல்வித்துறைக்கு மதுமதியை நியமித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் ஏகப்பட்ட அக்கப்போர் களும் அரசியலும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த அரசியலையும் அக்கப்போர்களையும் தாண்டி மதுமதி தாக்குப்பிடிப்பாரா? என்கிற விவாதம் இப்போதே பள்ளிக்கல்வித் துறையில் எதிரொலிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை கலெக்டராக இருந்த மதுமதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெறாமலேயே கலெக்டராக அவர் பதவியேற்றுக்கொண்டதால் அடுத்த சில மணி நேரங்களிலேயே தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூக்கியடிக்கப்பட்டார். அரசியல் நெளிவு சுளிவுகள் தெரியாத மதுமதி பள்ளிக்கல்வித்துறையில் எப்படி நீடிக்கப்போகிறார்?'' என்கிற சந்தேகத்தை கிளப்புகின்றனர்.

இப்படி ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. அந்த வகையில், தற்போது கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 10 மாவட்ட கலெக் டர்கள், சென்னை, தாம்பரம், ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி கமிஷனர்கள், அரசு துறைகளைச் சார்ந்த 51 அதிகாரிகள் என 65 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றப்பட்டதிலும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.

இதுபற்றி உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "கோட்டையில் மாற்றப்பட வேண்டிய பலர் இருக்கின்றனர். அவர்கள் மாற்றப் பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தலைமைச் செய லகத்தில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டு வெளியிலிருப்பவர்கள் கோட் டைக்குள் வரவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. செக்ரட்டரி அந்தஸ்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். நீண்ட வருடங்களாகவே அவர்களுக்கு கோட்டைக்குள் வரும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

சிலருக்கு மீண்டும் மீண்டும் ஒரே போஸ்டிங்கே கொடுக்கின்றனர். உதாரணத்துக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத்துறையிலிருந்துதான் சென்னை கார்ப்பரேசன் கமிஷனராக மாற்றப் பட்டார் ராதாகிருஷ்ணன். தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு, மீண்டும் கூட்டுறவு உணவுத்துறைக்கே மாற்றியுள்ளனர். அதேபோல, இந்த துறையிலிருந்த சீனியர் அதிகாரி கோபால், கால்நடை -மீன்வளம் -பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டார். ஏற்கனவே இதே துறை யில் அவர் இருந்தவர்தான். சில அதிகாரிகள் மட் டும் அடிக்கடி பந்தாடப்படுகிறார்கள். மூன்று வரு டங்கள் நீடிக்க விடுவதில்லை. திறமையான அதிகாரி என சொல்லப்படுகிற செய்தித்துறையின் செயலா ளர் சுப்பிரமணியத்தை மாற்றி அவரை காத்திருப் போர் பட்டியலில் வைத்துள்ளனர். கடந்த 3 வரு டத்தில் 5 முறை மாறுதல்கள் இவருக்கு கிடைத்துள்ளது. அதேபோல, ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ். அதிகாரிக் கும் இதே நிலைதான். அடிக்கடி மாற்றப்படுகிறார்.

அதேசமயம், நெகட்டிவ் இமேஜ், காண்ட்ரவெர்சி, துறையை விற்று விடுபவர் என் கிற பெயர் எடுத்திருக்கும் அதிகாரிகள் சிலருக்கு நல்ல பதவிகளும், கலெக்டர் வாய்ப்பும் தரப்பட்டுள் ளன. மாற்றப்பட வேண்டிய சில கலெக்டர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். கலெக்டர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு மாவட்ட அரசியல், சாதி அரசியல், சட்டம் ஒழுங்கு விவகாரங்கள், முத லமைச்சரின் பிரத்யேக திட்டங்கள், மத்திய-மாநில அரசு திட்டங்களின் செயலாக்கம், வளர்ச்சிப்பணி கள் உள்ளிட்ட பல விசயங்களை கவனித்து திறம்பட செயலாற்றும் ஆளுமை இருக்க வேண் டும். இவைகளெல்லாம் இடமாற்றம் செய்யப்படும் போது கவனிக்கப்படுகிறதா என தெரியவில்லை. இப்படி பல காண்ட்ரவர்சிகள் இந்த மாறுதலில் இருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர்.