இனிவரும் காலங்களில் இது தான் யானை என, யானையின் புகைப்படத்தைக் காட்டும் நிலையை உருவாக்கி வருகின்றது தமிழக வனத்துறை. கடந்த 6 ஆண்டுகளில் ஏறக் குறைய 575-க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளன.
தந்தத்திற்காக வேட்டையாடியது, விஷத்தால் இறந்தது, மனித- மிருக மோதல், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, யானை களுக்கிடையேயான மோதல், ரயிலில் அடிபட்டு இறந்தது மற்றும் நோயால் இறந்தது என இறப்பின் காரணத்தை அட்டவணைப்படுத்தினாலும், இறந்த யானைகளில் 70 சத விகிதத்திற்கும் அதிகமான யானைகள் உடற்கூராய்விற்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வில்லை. இதனால் யானைகளின் இறப்பில் கடத்தல் மாபியாக் களின் கைவண்ணம் இருக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள னர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elephant_11.jpg)
"கடந்த நூற்றாண்டுகளில் இந்தியாவில் லட்சக்கணக்கிலிருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30 ஆயிரமாகக் கணக் கிடப்பட்டது. இப்பொழுது இந்தியாவில் 27 ஆயிரத்திற்கும் குறைவான யானைகளே இருக் கின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் 12 ஆயிரம் யானைகள் இருக்கின்றன என்கின்றது சமீபத்திய புள்ளிவிவரம்.
ஒரு யானை வருடத்தில் ஆயிரக் கணக்கான மரங்களையும், தன்னு டைய வாழ்நாளில் லட்சக்கணக்கான மரங்களையும் உருவாக்கி காட் டைச் செழிப்புறச் செய்கிறது. நன்கு ஆரோக்கியமான யானை தினசரி குச்சிகள், இலை, தழைகள் என 200 டன் எடையிலான உண வினையும், சராசரியாக 300 லிட்டர் தண்ணீரையும் உட்கொள் ளும். கழிவாக 15 சதவிகித விதை களையும், குச்சிகளையும் காட் டிற்கு அளித்து புதிய காட்டினை உருவாக்குகின்றது யானை.
யானைகள் இறப்பு என்றாலே முறைப்படி ஆய்வுக்கு உட்படுத் தாமல் இதுதான் காரணமென "டெம்ப்ளேட்' காரணங்களைக் கூறுகின்றது வனத்துறை. இப் பொழுது தந்தந்திற்காக வேட்டை யாடிய இறந்த யானைகள், மின் சாரம் தாக்கி இறந்த யானைகள் குறித்து விசாரணையை நடத்தி வரும் சி.பி.ஐ., கடந்த ஆறு ஆண்டு களில் இறந்த அத்தனை யானை களின் இறப்பு குறித்தும் விசா ரணையை மேற்கொண்டால் இதன் பின்னணியிலுள்ள வனத் துறை அதிகாரிகள், மருத்துவர் கள் மற்றும் கடத்தல் மாபியாக் கள் அனைவருமே சிக்கிக்கொள் வார்கள்'' என்றார் கோவை மதுக் கரை வனச்சரகத்தைச் சேர்ந்த வன ஆர்வலர் ஒருவர்.
ஆனைமலை புலிகள் காப் பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு புலிகள் காப்பகம், முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் மதுரை, விருதுநகர், ஈரோடு, தருமபுரி, கோவை உள் ளிட்ட 9 வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணலாயங்களில் ஏறக்குறைய 2800 யானைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில், குறிப்பாக 2015-ல் 61 யானைகளும், 2016-ல் 98 யானைகளும், 2017-ல் 125 யானைகளும், 2018-ல் 84 யானை களும், 2019-ல் 108 யானைகளும், 2020-ல் 85-க்கும் அதிகமான யானைகளும் இறந்துள்ளன. அதாவது, மொத்த எண்ணிக்கை யில் 20 சதவிகிதத்திற்கும் அதிக மான யானைகள் இறந்துள்ளன. அதிகபட்சமாக ஈரோடு வனக்கோட்டத்தில் 167, கோவை வனக்கோட் டத்தில் 134 மற்றும் தருமபுரி வனக் கோட்டத்தில் 89 யானைகளும் இறந் துள்ளன என்கின் றது புள்ளிவிவரங் கள்.
சி.பி.ஐ. விசா ரணைக்கு ஆளான மருத்துவர் ஒருவரோ, "வனக்கோட்டத்தில் தங்க ளுக்கு சாதகமான மருத்துவர் இருந்தால் சம்பாதித்து விடலாம் என்பதற்காக தகுதியே இல்லாத மருத்துவர்களை, வன அதிகாரி யின் துணையுடன் அயல்பணி மாற்றம் என்கின்ற பெயரில் வனக் கோட்டத்திற்கு கொண்டு வந்து விடுகின்றனர் கடத்தல் மாபியாக் கள். இவர்களோ இறந்த யானை யை முறைப்படி பரிசோதனை செய்வதில்லை. எடுத்த எடுப்பி லேயே இறந்த யானைக்கு ஆந்த் ராக்ஸ் நோய் என சான்றிதழ் கொடுத்துவிடுவார்கள். அதிக மான ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்த யானைகளின் சான்றிதழ் கள் இங்குதான் இருக்கின்றன. ஆனால் இதனை உறுதிப்படுத்த பரிசோதனைக்காக உடல்பாகங் கள் அனுப்பப்பட்டதா என்பது இங்கு மில்லியன் டாலர் கேள்வியே..! சில சான்றிதழ்களில் மேலேயிருந்து கீழே விழுந்து இறந்துபோனதாக காரணம் கூறியிருப்பார்கள். சில சான்றிதழ் களில் சண்டைபோட்டு இறந்த தாக இருக்கும். பொதுவாக யானை ஒரு சென்சிட்டிவான மிருகம். கவனமாகத்தான் சூழ்நிலைகளைக் கையாளும். இனப்பெருக்கத்திற் காக எங்கும் மோதிக்கொள்வது மில்லை. மேலேயிருந்து விழுந்து இறப்பதும் இல்லை. இதுகூட பரவாயில்லை. யானைக்கு இருதயத்தில் புழு இருந்து இறந்துள்ளதாக சான்றிதழ் கொடுத்திருக்கின்றார்கள். பொதுவாக யானைகள் காட்டில் உணவு, நீர்ப்பற்றாக்குறை மற்றும் உடல் நிலை சரியில்லாமையால்தான் இறக்கும். அதனைச் சரி செய்ய வேண்டிய வனத்துறை, காட்டிற் குள் ரோந்து போவது இல்லை. வேட்டையாளர்கள் மானைக் கொல்வதற்காக தண்ணீர்த் தொட்டிகளில் யூரியாக்களைக் கொட்டி கலந்திருப்பார்கள். தண்ணீர் தேவைக்காக அதனை அருந்தும் யானை உடலெங்கும் ஏற்பட்ட எரிச்சலாலே நடக்க இயலாமல் நடக்கும். இதுபோன்ற யானைகள்தான் ரயிலில் அடிபட்டு சாகின்றன. வேட்டை யாளர்களைத் தடுக்கவேண்டிய வனத்துறையினர் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு தந்தங் களைத் திருடிவிற்கின்றனர். சி.பி.ஐ. இதனையும் கருத்தில் கொண்டால் கடத்தல் மாபியாக் களோடு கைகோர்த்த வனத்துறையினர் சிக்குவார்கள். யானை பிழைத்து நாமும் மூச்சுவிடுவோம்'' என்கிறார் அவர்.
படங்கள்: விவேக்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/elephant-t.jpg)