அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது. “"நடிகர் விஜய் யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடுகிறது. விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் பொய். தனித்தே களம் காண்போம்'” என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

vv

அதைப்பற்றி கருத்து தெரிவித்த விஜய் கட்சி ஆதரவாளர் கள், “"அ.தி.மு.க. என்ன ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். தலைமையில் இயங்கிய பலம் வாய்ந்த வாக்கு வங்கியை வைத்திருக்கக்கூடிய கட்சியா? இப்பொழுது எடப்பாடி தலைமையில் 11 தோல்வி களைக் கண்ட கட்சியாக உள்ளது. கடந்த பாராளு மன்றத் தேர்தலில் வெறும் 20 சதவிகித வாக்குகளைத் தான் அ.தி.மு.க. பெற்றது. விஜய்யின் த.வெ.க.வை அ.தி.மு.க. மிகவும் குறைவாக மதிப்பிடுகிறது. விஜய் தனியாக நின்றாலே யாருடைய ஆதரவும் இல்லாமல் 20 சதவிகித வாக்குகளைப் பெறுவார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் அது விஜய்யுடன் சமமான எண்ணிக்கையுடன் கூடிய கூட்டணியாகத்தான் இருக்கமுடியும். விஜய் 117 தொகுதிகள், அ.தி.மு.க. 117 தொகுதிகள். முதல் இரண்டரை ஆண்டுகாலம் விஜய் முதல்வர், அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் எடப்பாடி முதல்வர்... இப்படித்தான் கூட்டணி அமைய முடியும்''’என கருத்து தெரிவித்தார்கள்.

ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம் செய்தியை வாபஸ் பெற்றுவிட்டது. அந்த நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அந்த செய்தி அழிக்கப்பட்டுவிட்டது. ஏன் இந்த செய்தி வெளியிடப்பட்டது, ஏன் அழிக்கப்பட்டது என அவர்களிடம் கேட்டதற்கு, “"கூட்டணி விசயத்தில் த.வெ.க.வில் குழப்பம் நிலவு கிறது. வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியம் தலைமையிலான டீம் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் விஜய்யிடம், தேர்தல் நடக்க இன்னும் ஒன்றரை வருட காலம் இருக்கிறது, அதற்குள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என செய்திகள் வருவது தவறு' என சொல்ல வே, விஜய், அ.தி.மு.க. வுடன் கூட்டணி இல்லை என அறி வித்துவிட்டு, பிறகு பார்த்துக் கொள்ள லாம்” என சொல்லச் சொல்லிவிட்டார். செய்தி வெளியானதும் விஜய்யுடன் கூட்டணி பேசி வந்த அ.தி.மு.க. டீம் தனது கடுமையான எதிர்ப்பை ஆதவ் அர்ஜுன் மூலம் விஜய்யிடம் பதிவு செய்ய, விஜய் அந்த செய்தியை எடுக்கச்சொல்லி கேட்டுக்கொண்டார்.

Advertisment

உண்மையில் நடிகர் விஜய்க்கும் அ.தி.மு.க.வுக் கும் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 117 சீட் என ஆரம்பித்த பேச்சுவார்த்தை யில் அவ்வளவு சீட் தரமுடியாது எனச் சொல்லிய துடன், விஜய் இதுவரை ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை எனச் சுட்டிக்காட்டி 30 சீட் வரை தர அ.தி.மு.க. பேசிக்கொண்டிருக்கிறது. அதற்கு அ.தி.மு.க. தரப்பு சொல்லக்கூடிய காரணம், "நாங்கள் இம்முறை அ.தி.மு.க., விஜய், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. அடங்கிய மெகா கூட்டணியை அமைக்கப் பேசிவருகிறோம். இதில் விடுதலைச் சிறுத்தைகளும் எதிர்காலத்தில் சேருவார்கள். இந்த மெகா கூட்டணி அமைந்தால் திமுக 234 தொகுதிகளிலும் தோற்றுவிடும். சீமான் கட்சியைப் போல சின்ன கட்சியாக சுருங்கிவிடும். துணை முதல்வர் பதவியை விஜய்க்கு தருகிறோம்' என்பதுதான் அ.தி.மு.க. முன்வைக்கும் வாதம்.

ss

நடிகர் விஜய்யுடன் எஸ்.பி.வேலுமணியும், அவர் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் கே.பி.கந்தனும் தினமும் பேசி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் இந்த 30 சீட் ஆபரில் விஜய்க்கு திருப்தியில்லை. அதேபோல் பா.ஜ.க. ஆபரையும் ஒத்துக்கொள்ள விஜய்க்கு மனமில்லை. ஆனால், பா.ஜ.க., அ.தி.மு.க.வை விடவில்லை. எடப்பாடியின் மகன் மிதுன் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசிவருகிறார். மிதுன் நடத்தும் பேச்சு வார்த்தையில் பா.ஜ.க. மா.த.வும் கலந்துகொள் கிறார். “"என்னால்தான் அ.தி.மு.க. கூட்டணி முறிந் தது என்கிறார்கள். நானே அ.தி.மு.க.வை கூட்டணிக்குள் கொண்டுவருகிறேன்'” என அவர் செய்யும் முயற்சியை நகைச்சுவையாகவே பார்க்கிறார்கள் பா.ஜ.க.வினர். வேலுமணியும் தன் பங்கிற்கு தமிழிசை, முன்னாள் நீதியரசர் சதாசிவம், வினோஜ் பி.செல்வம், சி.பி.ராதாகிருஷ்ணன் என பா.ஜ.க. தலைவர்களுக்கு தனது மகனின் கல்யாணப் பத்திரிகையை வைத்து கூட்டணி பேசி வருகிறார். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைவதில் விஜய்க்கு இருக்கும் தயக்கத்தைப் போக்க பா.ஜ.க.வும், விஜய்யின் உறவினர்களிடம் மிரட்டல் தொனியில் பேசிவருகிறார்கள்.

Advertisment

இப்படி ஊர்கூடி ‘அ.தி.மு.க., விஜய், பா.ஜ.க.’ கூட்டணி அமைவதற்காக பாடுபட்டு வருகிறார்கள். இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் எதிரொலி யாக சமீபத்தில் டெல்லி மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க.வைப் பாராட்டி எடப்பாடி பேட்டியளித்துள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியைக் கடு மையாக விமர்சித்துள்ளார். ஒரு மெகா கூட்டணி அமையும் என்கிற பெருங்கனவை முன்னெடுத்துச் செய்துவருகிறார் எடப்பாடி. கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளும் வருவார்கள் என எடப்பாடி சொல்லி வருவதை மிகப்பெரிய அரசியல் ஜோக் எனச் சொல்லி சிரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.