கொரோனா வைரஸ் தொற்றிலேயே அனைவரின் கவனமும் நிலைத்திருக்க, சப்தமில்லாமல், இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து, கைது செய்யும் நோக்கில் அவர்கள் சம்பந்தமான புள்ளி விபரக்கோப்புக்களை தயார் செய்து கொண்டிருக்கின்றனர் மத்திய, மாநில உளவுத் துறையினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muslim-youngster.jpg)
""குறிப்பட்ட நபரின் பெயர், தந்தை, கணவர், மனைவி பெயர், பிறந்த தேதி, வருடம், பாலினம், குடியுரிமை, பாஸ்போர்ட் விபரங்கள், கல்வித்தகுதி, வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள், முகவரி, சம்பந்தப்பட்ட நபரின் உயரம், அங்க அடையாளங்கள், நிறம், முக அடையாளம், இடுப்புக்கு மேல் உள்ள உடலமைப்பு, இடுப்புக் கீழ் உள்ள உடலமைப்பு மற்றும் குடும்ப உறுப்பி னர்கள், வேலை செய்யும் இடம், பழகும் நபர்கள், சம்பந்தப்பட்ட நபர் மீதான வழக்குகள், வழக்குகள் இருப்பின் அதற்குண்டான விபரம், செல்லுமிடங்கள், அவருக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் பெயர், தொடர்பு எண், வசிக்கும் பகுதியின் காவல் நிலையம் உள்ளிட்ட பல கேள்விகளுடன் தயாராகி வருகின்றது இரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்று.
தமிழ்நாட்டில் மாவட்டந் தோறும் குறிப்பிட்ட 480 இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து, அவர்களை கைது செய்வதற்காக மத்திய, மாநில உளவுத்துறையால் தயாரிக்கப் படுகின்றன இந்த அறிக்கைகள்'' என்கின்றது உளவுத் தகவல்.
மாவட்டந்தோறும் உளவுத் துறையினரிடையே பரிமாறப்பட்ட அந்த தகவலில் மதுரை மாவட் டத்தில் 45, ராமநாதபுரம் மாவட்டத்தில் 17, தேனி மாவட்டத்தில் 7, சிவகங்கை மாவட்டத்தில் 5, விருதுநகர் மாவட்டத் தில் 9, தூத்துக்குடி மாவட்டத்தில் 28, நெல்லை மாவட்டத்தில் 32 மற்றும் தென்காசி மாவட்டத்தில் 40 நபர்கள் என மாநிலம் முழுமைக்கும் கண்காணிக்கப்படும், குறிவைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களின் எண்ணிக்கை 480 என பட்டியல் நீள்கிறது. இதில் இந்துக்களாக இருந்து இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களும் அடக்கம். இவர்கள் அத்தனை பேரையும் "பழனிபாபா மாண வர்கள்' என்ற அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது உளவுத் துறை. முஸ்லிம்களின் உரிமைக்காக அரசியல் களத்தில் முனைப்பாக செயல்பட்ட பழனிபாபா, மதவெறியர்களால் கொல்லப்பட்டவர். அவரது கொலைப் பின்னணி குறித்து அப்போதே நக்கீரன் விரிவாக எழுதியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muslim-youngster1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/muslim-youngster2.jpg)
உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரோ, ""குறிப்பிட்ட இஸ்லாமிய இளைஞர்களை கண்காணித்து அவர்களைப் பற்றிய தகவலை சேகரிக்க எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது உண்மையே.! இதனை நாங்கள் விசாரித்த வரையில் குறிவைக்கப்பட்ட அனைவருமே பழனிபாபா வழித்தோன்றல்கள், மாணவர்கள் என்றுக் கூறிக்கொள்பவர்களே..! இவர்களை கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்தப்படவுள்ளதாக முன்னரே தகவல் வந்தது. நாங்களும் கண்காணித்தோம். ஆனால் அப்படியான எந்த சூழலும் தமிழகத்தில் இல்லை. அசம்பாவிதத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களிடம் இல்லை எனவும் மேலதிகாரிகளிடம் கூறியிருந்தோம். இப்பொழுது என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கண்காணிப்புடன் புள்ளி விபர அறிக்கையும் கேட்டுள் ளார்கள். அனேகமாக இந்த கொரோனா காலங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டு குண்டாஸ் மாதிரி யான பெரும் சட்டங்களில் அடைக்கப்பட சாத்தியக் கூறுகள் உள்ளன'' என்கிறார் அவர்.
இதே வேளையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ரைசுதீனோ, ""பழனிபாபா யாரெனத் தெரியாமலேயே அவரின் மாணவன் நான், வழித்தோன்றல் நான் என சிலர் இயங்குவது கண்டிக்கத்தக்கது. அன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்துத்துவாவிற்கு எதிராக பழனிபாபா நீண்ட நேரம் அழுத்தமான வாதங்களுடன் பேசியதில், வன்முறை தொனிக்கும் பேச்சுக்களை மட்டும் எடிட் செய்து இன்று அதன் மூலம் வளர்கின்றார்கள் இளைஞர்கள். உண்மையில் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல. மாறாக இந்துத்துவ சக்திகளை கையிலெடுத்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கே அவர் எதிரானவர். வஹாபிஸத்திற்கு நேரடி எதிரியான அவர், அரசியல் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான ஒன்று என அதனை நோக்கி நகர்ந்தவர். அவர்களை நோக்கி முன் னேறும் உளவுத்துறையினர் அவர்களை இயக்கும் நபர்களை நோக்கி முன்னேறினாலே வன்முறை என்பது இங்கு இருக்காது'' என்றார் அவர்.
தமிழ்நாட்டில் பெருவாரியான இஸ்லாமிய இளைஞர்கள் கைது என்கின்ற தகவல் கொரோனா காலத்தில் மூழ்கடிக்கப்பட வேண்டுமென்பதும் மத்திய அரசின் திட்டம் என்பதனால் இவர்களை கைது செய்ய மேலிடத்தின் உத்தரவிற்காக காத் திருக்கின்றனர் மத்திய, மாநில உளவுப்பிரிவினர்.
- நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-06/muslim-youngster-t.jpg)