"உங்களுக்கு ஓட்டுப் போட்டதுக்கு இதுவும் வேணும்.... இன்னமும் வேணும்' என ராஜஸ்தான் மக்கள் கொந்தளிக்கின்றனர்.
ராஜஸ்தானில் தற்போது பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக் கின்றது. மாநிலம் முழுவதும் 190 தொடக்கப் பள்ளிகள், 260 நடுநிலைப் பள்ளிகள் என 450 பள்ளிகளை மூடியிருக்கிறது அரசு என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி மக்க ளைத் திரட்டி போராட்டங் களை நடத்திவருகிறது.
தனியார் கல்வி நிறுவனங் களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு திட்டமிட்டு பொதுக் கல்வி யமைப்பைப் பலவீனப்படுத்தி வருவதாக ராஜஸ்தான் காங் கிரஸ் தலைவர் கோவிந்த்சிங் தோஸ்தானா வலுவான குற்றச் சாட்டை முன்வைக்கிறார்.
"அரசுப் பள்ளிகளை மூட வேண்டுமென்பது பா.ஜ.க.வின் நீண்டகால எண்ணம். இந்த வருடம் மட்டும் அந்தத் திட்டத் தின் பகுதியாக ராஜஸ்தானில் 450 அரசுப் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. இந்தப் பள்ளிகளில் கணிசமானவை மகளிர் பள்ளி கள். இதனால் பெண்கள் பள்ளி செல்வது பாதிக்கப்படுவதுடன், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதாயமடையும். விளிம்பு நிலை மக்கள் கல்வி பெறு வது சிரமமானதாக மாறும். காங்கிரஸ் காலகட்டத்தில் ஒரேயொரு பெண்கள் பள்ளிகூட மூடப்படவில்லை. தவிரவும் பள்ளிகளின் உட்கட்டுமான வசதி மேம்பாடு, ஆசிரியர் நியமனம், மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் போன்ற நலத்திட்ட உதவிகளும் பா.ஜ.க. அரசால் குறிவைக்கப் பட்டுள்ளன. இது பொதுக்கல்வி யை வலுவிழக்கச் செய்வதற்கான பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட முயற்சி'' என்று குற்றம்சாட்டுகிறார்.
இதற்கு எதிராக ராஜஸ் தானின் கல்வியமைச்சரான கன்ஸ்யாராம் திவாரி, "பா.ஜ.க. பள்ளிகளை மூடவில்லை. மாறாக, குறைந்த வருகையுள்ள மற்றும் ஒரேயோரு மாணவர்கூட வருகை தராத பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதைத் தான் மேற்கொண்டுவருகிறோம். இதனை காங்கிரஸ் அரசிய லாக்குகிறது''’என்கிறார்.
ராஜஸ்தானில் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசத்திலும் பா.ஜ.க. அரசு 27,000 ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை மூடத் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
"உலக வங்கிகள் தாங்கள் கடன்கொடுக்கும் நாடுகளில், அரசு நிர்வாகத்தைத் தவிர கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத் தையும் தனியார் மயமாக்க நெருக்கடி தந்துவருகின்றன. தாராளமயத்தில், அதீத ஆர்வம் காட்டும் பா.ஜ.க.வும் உலகவங்கி யின் விருப்பங்களை நிறைவேற்று வதில் சுறுசுறுப்பு காட்டுகின்றது. அதன் வெளிப்பாடே இத்தகைய நிகழ்வுகள். இது எதிர்காலத்தில் இந்தியாவின் கல்வி வளர்ச்சிக் குப் பாதிப்பை ஏற்படுத்தும். காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும் என்ற நிலை ஏற்படும்''’என்கின்றனர் தாராள மயத்துக்கு எதிரான சிந்தாந்த முடையவர்கள்.