நீட் தேர்வு பாதிப்பினால் மாணவ, மாணவிகளின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் மட்டுமே, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அனிதா மரணம் தொடங்கி, இலந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், தற்போது கனிமொழி என்ற மாணவியுடன் சேர்ந்து மூன்று இளம் பிஞ்சுகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சாத்தம்பாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தம்பதிகள் கருணாநிதி, விஜயலட்சுமி. இவர்களுக்கு, கயல்விழி, கனிமொழி என இரண்டு மகள்கள். முதல் மகள் கயல்விழி, பி.எஸ்சி., நர்சிங் படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி, அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராக வேண்டுமென்ற லட்சியத்தோடு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படித்துள்ளார். அங்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 469 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600-க்கு 562 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 93 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றும்கூட, மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்பதால் அதற்குத் தீவிரமாகத் தயார்படுத்தி வந்துள்ளார்.

nn

கடந்த 12-ம் தேதி, தனது தந்தை கருணாநிதியுடன் சென்று, தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வெழுதியுள்ளார். தேர்வில், இயற்பியல், வேதியியல் பாடத்தில் கேள்விகள் கடுமையாக கேட்கப்பட்டிருந்ததால் அதிக மதிப்பெண்கள் பெறுவது சந்தேகமாக உள்ளதென்று தந்தையிடம் கவலையோடு கூறியுள்ளார். தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும் கவலைப்பட வேண்டாமென்றும், அடுத்த முயற்சியில் வெற்றி பெறலா மென்றும் தந்தை ஆறுதல் கூறியுள்ளார். தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள தனது மனைவி விஜயலட்சுமியை அழைத்து வருவதற்காக, மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஆயிரங்கால் மண்டபம் என்ற ஊருக்கு கருணாநிதி சென்றுள்ளார். அங்கிருந்து மனைவியுடன் வந்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது கண்டு சந்தேகமடைந்தவர்கள், அக்கம்பக்கத்தவர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு பார்த்தபோது, மின்விசிறியில் கனிமொழி தூக்கில் தொங்கியது அறிந்து இருவரும் கதறித் துடித்தனர்.

Advertisment

தகவலறிந்து பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மாணவியின் வீட்டுக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தியதோடு, மாணவியின் தந்தை கருணாநிதிக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவ ரிடம், "என் மகள் மிகவும் eeதுணிவோடு இருந்த பெண் தான். தவறான முடிவு எடுக்குமளவுக்கு கோழையாக இருப்பாளென்று கருதவில்லை. நீட் கொடுமை அவளைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது'' எனக் கூறிக் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய அமைச் சர் சிவசங்கர், "மாணவ, மாணவிகள் தைரியமான மன தோடு நீட்டை எதிர் கொள்ள வேண்டும். தமி ழகத்துக்கு நீட்டில் இருந்து விலக்கு பெற சட்டமன்றத் தில் அனைத்துக் கட்சி ஆதர வுடன் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஒட்டுமொத் தத் தமிழக மக்களும் நீட்டை விலக்கப் போராட வேண்டும்'' என்றார்.

மாணவியின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பாக 10 லட்ச ரூபாய் நிதி உதவி அளிப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோத னைக்காக எடுத்துச் சென்றனர். அப்போது மாணவியின் தாயார் விஜயலட்சுமி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க. முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன், "நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது தீர்மானம் கொண்டுவந்தோம். அதைக் கிண்டல் செய்த தி.மு.க., தற்போது அதே தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள். மாணவ-மாணவிகளுக் குத் தொடரும் மரணத்திற்கு, தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.

Advertisment

"நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ- மாணவிகளின் மனஉளைச்சலுக்கு அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் ஒரு காரணம்'' என்கிறார் உளவியல் கல்வியாளர் பரமசிவம். இவர் கூறும்போது, "பிள்ளைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட கல்வி ஆசைகளை அறிந்து, அதன் படி அவர்கள் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. தங்கள் ஆசையை அவர்களிடம் திணிக்கிறார்கள். கடந்த 12-ம் தேதி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளி டம், பல பெற்றோர்கள் ஓடிச்சென்று, "கேள்வி நன்றாக இருந்ததா? நன்றாக எழுதினாயா? எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்? தேர்ச்சி பெற்றுவிடுவாயா? என்று அவர்களைக் கேள்வி களால் துளைத்து எடுத்தனர். கடும் முயற்சி யெடுத்துப் படித்துத் தேர்வெழுதிய பிறகும் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

கோச்சிங் சென்டரில் நிறைய பணம் செலுத்தி சேர்க்கும் பெற்றோர்கள், உனக்காக நிலத்தை விற்றுப் படிக்க வைத்துள்ளோம். நீ நீட் தேர்வில் பாஸாக வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதும் நடக்கிறது. கல்வியில் சாதிக்க எவ்வளவோ படிப்புகள், வழிமுறை கள் உள்ளன. எனவே மருத்துவராகத்தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தாமல் கற்க வழிசெய்ய வேண்டும்'' என்கிறார். நீட் தேர்வு எழுதுவதற்கு முதல் நாளில்தான் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்தது. அடுத்ததாக, கனிமொழியின் தற்கொலையைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி சவுந்தர்யாவும் தற்கொலை செய்துள்ள துயரம் நடந்துள்ளது. வேலூர் தோட்டப்பாளை யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த சவுந்தர்யா, +2 தேர்வில் 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நம்பிக்கையோடு நீட் தேர்வு எழுதியவருக்கு, தேர்வுக்குப்பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததால் மன உளைச்சலோடு இருந்தவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஒருபுறம், மருத்துவராக வேண்டுமென்ற கனவோடிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் இதே நீட் தேர்வில், இன்னொருபுறம் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சிகரமானவை. இந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில், ஜெய்ப்பூரிலுள்ள, ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற தேர்வு மையத்தில் வினாத்தாள் மோசடி நடைபெற்றுள்ள விவகாரம் வெளிவந்துள்ளது.

இங்கு நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொண்ட தானேஸ்வரி என்ற மாணவிக்காக வினாத்தாளை, அக்கல்லூரியின் நிர்வாகி செல்போனில் புகைப்படம் எடுத்து, வெளியே அனுப்பி, விடைகளைத் தயாரித்துக் கொடுத்து, அதைக் காப்பியடிக்கும்போது தானேஸ்வரி மாட்டிக்கொண்டார். இம்மோசடிக்காக 35 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், நீட் தேர்வில், லட்சக்கணக்கில் செலவழிக்கும் வசதி படைத்தவர்கள், கோச்சிங் கிளாஸ் மூலமாகவோ, குறுக்கு வழியிலோ தேர்ச்சி பெற வாய்ப்பிருப்பதும், வசதியில்லாதவர்கள், சரியான பயிற்சியில்லாமல் தேர்ச்சிபெற முடியாமல்போவதும் தெரியவருகிறது.

neet

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில், "நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன். மிகக்குறுகிய காலத்தில் இதுகுறித்த ஆய்வை நடத்தி, மசோதாவைக் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். அதேபோல, ஆல் இந்தியா கோட்டா, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளில், அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர் களும் சேர முடியும் என்பதால், அங்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தமுடியாது. எனவே அங்கே நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது தவிர்க்க முடியாது. அப்படி நடத்தப்படும்போது, அதனை முறைகேடு இல்லாமல், கண்காணிப்புகளுடன் நடத்தப்படு வதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

ஜெய்ப்பூரில் தற்போது நடந்துள்ள முறை கேட்டைப்போல் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஒரு மருத்துவரின் மகனுக்கே ஆள் மாறாட்டம் செய்த முறைகேடு நடந்தது. எனவே, இதுபோன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

ff