மிழக அரசின் வருவாய்த் துறை, பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், 256 ஏக்கர் அரசு நிலத்தை தொழிலதி பருக்கும், திரைப்பட இயக்குனருக்கும் கைமாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிலம்பினாதன் பேட்டை ஊராட்சி. அதைச் சார்ந்த புலியூர் பகுதிகளில் தான் மிகப்பெரிய நில மோசடி நடைபெற் றுள்ளது. இந்த மோசடியை சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை யும், அவரது கணவர் சிங்காரவேலும் தான் வெளிக்கொண்டுவந்துள்ளனர். இந்த மோசடி குறித்த ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இந்த வழக்கு விசாரணையின்போது அரசு அதிகாரிகளை நோக்கி சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளார் நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன்.

ff

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலுவிடம் கேட்டோம். "எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு நிலம் சுமார் 180 ஏக்கரையும், புலியூர் பகுதியில் 76 ஏக்கரையும் சில தனி நபர்களுக்கு வருவாய்த் துறையினர் கைமாற்றி பட்டா கொடுத்துள்ள னர். இந்த நிலம் 1921-ல் ரிசர்வ் பாரஸ்ட் நிலமாக இருந் துள்ளது. பிறகு வருவாய்த்துறைக்கு மாற்றம் செய்து, தரிசு நிலமாக இருந்துள்ளது. அந்த நிலத்தை குறிஞ் சிப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 1929-ல் தனி நபர்கள் விலைக்கு வாங்கியதாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். அப்படி நிலத்தை வாங்கிய வாரிசுகள் திருச்சி மலைக்கோட்டை புகழியா பிள்ளை தெருவை சேர்ந்த யசோதை, சந்தானம், பார்த்தசாரதி ஆகியோர். அவர்களோ அந்த நிலத்தை பண்ருட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி செட்டியாருக்கு கிரயம் கொடுத்துள்ளனர். மேலும் அந்த நிலத்தை பகுதி பகுதியாகப் பிரித்து கடலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 1942-லும், குள்ளஞ்சாவடி சார்பதிவாளர் அலுவல கத்தில் 1976-லும் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இந்த தரிசு நிலத்தை வசதி படைத்தவர் களுக்கு வருவாய்த் துறையினர் குத்தகைக்கு கொடுத்ததாகவும், அதன்பிறகு அவர்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாகவும், அவ்வப்போது மாற்றி மாற்றி கிரயம் கொடுத்துள்ளதும் தெரிய வந்தது. தற்போது அந்த நிலத்தின் பெரும் பகுதி கடலூர் முக்கிய புள்ளியின் குடும்ப உறவினர்களிடமும். திரைப்பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தினரிடமும் உள்ளது. இதேபோல் புலியூர் பகுதியில் 76 ஏக்கர் நிலம் தனி நபர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி அரசுக்கு சொந்தமான 256 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்த் துள்ளதைக் கண்டறிந்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி. அவற்றை ரத்து செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகளே முறைகேட்டுக்கு உடந்தையாக இருப்பது தெரிந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். உண்மையைப் புரிந்துகொண்ட நீதிமன்றம், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. எங்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

இவ்வழக்கு கடந்த 26 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தெய்வானை சிங்காரவேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏழுமலை, "முறையான அனுமதியில் லாமல் பட்டா மாற்றி, சுமார் 100 ஏக்கர் நிலம், கடலூர் முக்கிய புள்ளியின் குடும்ப உறவினர்களிடமும், திரைப்பட இயக்குனர் ஒருவரிடமும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தில் சட்டவிரோதமாக நீச்சல் குளம் கட்டி சொகுசாக வாழ்கின்றனர்' என்று வாதிட்டார். அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து நீதியரசர் எம்.எஸ்.சுப்பிர மணியன், "அரசு நிலத்தை அரசின் ஒப்புத லின்றி வகைமாற்றம் செய்து பலருக்கு பட்டா கொடுக்கப்பட்டதான குற்றச்சாட்டு தீவிரமானது. இது விஷயத்தில் நில நிர்வாக ஆணையர், கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் போன்றோர் கட்சி ஊழியர் போன்று செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பெரிய அளவில் அதிகாரிகளின் கூட்டுச்சதி இருப்பதை நிராகரிக்க முடியாது. இந்த விவகாரத்தில், 3 மாதங்களில் நேர்மையான விசாரணை நடத்தி இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு, அடுத்த ஜனவரி 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நாம் விசாரணை செய்ததில், சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பத்திரக்கோட்டை மற்றும் புலியூர் பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் வனத்துறை நிலத்தை, பூமிதான இயக்கக் கொள்கைப்படி அக்கிராமத் தைச் சேர்ந்த ஏழை மக்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக மாற்றம் செய்துள்ளனர். ஆனால் அந்த நோக்கத்தையே பாழ்படுத்தி, கடலூர் முக்கிய புள்ளியின் உறவினர்கள் யசோதை, சந்தானம், பார்த்தசாரதி ஆகியோருக்கு 101 ஏக்கர் நிலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவரும் 25 ஏக்கர் நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். அவரது உறவினர்கள் சிலரும் கிரையம் செய்துள்ளனர்.

வீடற்ற, நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனையாகவும், விவசாயம் செய்யவும் வழங்குவதற்காக இருந்த அரசு நிலங்களை இப்படி தனி நபர்கள் கைப்பற்றியுள்ளதை மீட்குமா அரசு?

Advertisment