இதைத்தான் அட்டைப் படம் வெச்சோம். கால் வடிவிலான ஒரு வடிவம் தெரியுதுல்ல,… அது மறுநாள் எங்கே போச்சு?
நக்கீரன் ஏன் விடாப்பிடியா காலைப் பிடிச்சு தொங்குதுன்னா, ரோசய்யா மலர்ச்செண்டு வைக்கும் போது பொசுக்குனு உள்ளிறங்குச்சு. தம்பிக எடுத்த படம், அரசாங்கம் அனுப்புன படம் எல்லாத்தையும் எடுத்து டைட் பண்ணிப் பார்த்தோம்.
கால் தொடையிலிருந்து இரண்டு காலும் இல்லை. எனக்குப் பகீர்னு இருந்துச்சு. அப்பதான் கால் விஷயத்தை ஆணித்தரமா சொல்ல ஆரம்பிச்சேன்.
கலைஞரோட இறுதி ஊர்வலத்துல இருந்த பெட்டி. பெட்டி வேணா வித்தியாசமா இருக்கலாம். இருவர் உடல்மீதும் தேசியக் கொடி போர்த்தியிருக்கு. கலைஞர் உடலில் மார்பிலிருந்து தேசியக் கொடி போர்த்தியிருக்கு. ஜெயலலிதா உடலில் வயிறிலிருந்துதான் தேசியக் கொடி போர்த்தியிருக்கு. கலைஞருக்கு கறுப்புசிவப்பு கரை வேட்டி, காலில் கட்டுப் போட்டிருக்காங்க. அவருக்கு இதேமாதிரி அளவுள்ள பெட்டிதான். ஆறுமுகசாமி ஆணையத்துல சாட்சி சொன்னவங்க, ஜெயலலிதாவுக்கு, கால்லதான் கட்டுப் போட்டோம்னு சொன்னாங்கல்ல. படத்துல காலையும் காணோம். கட்டையும் காணோம்.
இருவருமே நம்மை ஆண்டவங்க. இருவரது பூத உடலும் ராஜாஜி ஹால்லதான் வைக்கப்பட் டது. இருவரது உடலிலும் தேசியக் கொடி இருக்கு. கலைஞருக்கு கால் இருக்கு. ஜெ.வுக்கு கால் இல்லை.
அதுலயும் ஒரு பிராடுத்தனம் என்னன்னா, கலைஞருக்கு வெச்ச மாதிரி தேசியக் கொடியை மார்பிலிருந்துதான் போட்டிருக்கணும். ஆனா, காலைல வெச்ச பூத உடலில், கலைஞருக்கு எப்படி மார்பிலிருந்து கொடியைப் போத்துனாங்களோ, அதுபோலதான் ஜெயலலிதாவுக்கும் மார்பிலிருந்து கொடியைப் போர்த்தியிருக்காங்க. ஜெ.வுக்கு கால் தெரியுது. இது போலி கால். சசிகலாவின் மேற்பார்வையில் உடலைத் தூக்கும்போது பயங்கர ஸ்க்ரீன்ப்ளே. மார்பிலிருந்த கொடி தூக்கும்போது வயிற்றுக்குக்கீழே போய், சவப்பெட்டியின் கடைசி வரைக்கும் போயிடுச்சு. கால் தெரியக்கூடாதுனு சவப்பெட்டியின் கடைசிவரைக்கும் போர்த்தி யிருக்காங்க.
அவங்களோட துரதிர்ஷ்டம், ஆர்மி உடலைக் கையில் எடுத்துச்சு. அவங்க எடுக்கும் போது கொடியை டைட் பண்ணி எடுத்துட்டாங்க.
நம்மிடம் மனோன்னு ஒரு தம்பி இருந்தார். சவப்பெட்டி சம்பந்தப் பட்ட கம்பெனிக்கு, அம்மா வெச்சிருந்த அதே பெட்டி வேணும்னு சொல்லி 10,000 ரூபாய் அட் வான்ஸ் குடுத்து, அந்தப் பெட்டியைப் படம் எடுத்துட்டு வந்தார். பெட்டியோட அளவு ஆறு அடி. பெட்டியில ஜெ.வோட உடல் இருக்கும்போது இரு பக்கமும் இடைவெளி. அந்தம்மாவோட உடல் அளவு மூணரை அடிதான்.
ஜெயலலிதாவோட உடலை நிறுத்திவெச்சு ஒரு படம் போட்டுருக்கோம். உயிரோட இருந்தபோதுள்ள அதேயளவுள்ள படத்தை வெச்சு ஒப்பிட்டு அட்டைப் படம் போட்டிருந்தோம். கோடு போட்டு ஒப்பிட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒப்பிட்டிருந்தோம். சவப்பெட்டியில் இருக்கிற படத்தில் காலைக் காணோம்.
நான் பெரிய விற்பன்னர், விஞ்ஞானி கிடை யாது. என் பார்வைக்கு ஜெ. துள்ளத் துடிக்கத்தான் இறந்திருகிறதா படுது. ஜெ.வுக்கு எப்ப உயிர் போச்சுன்னு யாருக்கும் தெரியாது. ஆறுமுகசாமி கமிஷன்லயே சாட்சியங்கள் அடிப்படையில்தான் அவரது மரண நேரம் சொல்லப்பட்டிருக்கு. அந் தம்மாவோட ஒரு உறுப்பு வெட்டப்பட்டிருக்கு.
ஒரு பெரிய கட்சியோட தலைவி, ஆண்ட முதல்வரோட கால்கள் வெட்டப்பட்டிருக்கு. புகைப்படங்களை வெச்சுதான் அதை நாங்க கண்டுபிடிச்சோம். தலைவியோட உயிர் சின்னாபின்னப்படுத்திப் போயிருக்கு. அதுக்கு காரணமானவங்க பதில் சொல்லியாகணும். பாதிப் பேர் பதில் சொல்லியிருக்காங்க. மருத்துவர் சுதா சேஷய்யன் மாதிரி ஆட்கள் தப்பிச்சுட்டாங்க.
நக்கீரனைப் பொறுத்தவரை பிடிச்ச பிடியிலிருந்து விலகி நிற்கிறதில்லை. அது எங்களோட பணி. இன்னைக்கு வரை அப்படித்தான் போய்க்கிட்டிருக் கோம். ஜெ. மறைவுக்குப் பிறகு, ஆறுமுகசாமி கமிஷன்ல விசாரணை நடந்து அறிக்கை வந்திருச்சு. அறிக்கையை நாங்க எந்த இடத்துலயும் குறை சொல்லலை. கால் பற்றி சாட்சி சொன்னவங்க எல் லாம் பிராடு. பொய் சொல்லிருக்கான். ஜெ.வைப் பாத்துட்டு கால் இருக்குன்னு சொன்னாங்கள்ல அவனை எதால அடிக்கிறதுன்னு நீங்க முடிவெடுத்துக்கோங்க.