இந்திரா காந்தி யின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியின்போது ஊடகச் சுதந்திரம் கடுமை யாக நசுக்கப்பட்டது வரலாறு. தற்போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வந்தபின் னர், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியால் ஊடகங் கள், பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனை உறுதிப்படுத் தும்விதமாக, ரிப்போர்ட் டர்ஸ் வித்தவுட் பார் டர்ஸ் அமைப்பு வெளி யிட்டுள்ள, 2022-ம் ஆண் டின் உலக பத்திரிகை யாளர் சுதந்திரத்துக்கான (
RSF 2022 World Press Freedom Index) பட்டியலில் இடம்பெற்ற 180 நாடுகளில், இந்தியா 150-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 142-வது இடத்தில் இருந்தது.
கடந்த எட்டாண்டு கால ஆட்சியில், ஊடகங் களின் கேள்விகளை பொதுவெளியில் எதிர் கொள்ளாத பிரதமர் என்ற பெருஞ்சாதனையை பிரதமர் மோடி தக்கவைத் துள்ளார். சமீபத்தில், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் 14 ஒப் பந்தங்களில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில், இந்தியாவின் வற்புறுத்தலால் பத்திரிகையாளர் களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை! மோடி ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதையோ, கேள்வி எழுப்புவதையோ அவர் விரும்புவதில்லை என்பதே இதற்கு அடிப்படைக் காரணம். கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் காப்பான், உத்தரப்பிரதேசத்திலுள்ள ஹத்ராசில், 2020-ம் ஆண்டு, செப்டம்பரில், தலித் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன் கொடுமையால் கொல்லப்பட்டு, இரவோடிர வாக போலீசாரால் எரிக்கப்பட்டது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றதற்காக உ.பி. அரசால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 580 நாட் களுக்கும் மேலாக ஜாமீன் கூட கிடைக்காமல் சிறையில் வாடிவருகிறார். காஷ்மீரில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, புல்வாமாவின் நைரா பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தீவிரவாதியே இல்லையென்ற கருத்தை பதிவு செய்ததற்காக, தி காஷ்மீர் வாலா இணையதள ஆசிரியர் ஃபஹத் ஷா, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், போலிச்செய்திகளைப் பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரின் புறநகர் பகுதி யில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சலீம் பரே என்பவர் கொல்லப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத் தை ட்விட்டரில் வெளி யிட்டதற்காகக் கைது செய்யப்பட்ட பத்திரிகை யாளர் சஜத் குல், ஜாமீ னில் வெளிவந்த மறு நாளே பொதுப் பாதுகாப் புச் சட்டத்தின்மூலம் மீண்டும் கைது செய்யப் பட்டார்.
அரசை விமர்சிக் கும் பத்திரிகையாளர் களை மிரட்டுவது, குறிப் பாக, இஸ்லாமியப் பத்திரிகையாளர்களைக் குறிவைத்துத் தாக்குவது, பயங்கரவாதச் சட்டத் தில் கைது செய்வது என ஒன்றிய அரசின் பத் திரிகையாளர் விரோதப் போக்கு அதிகரித்து வரு வதை உலக நாடுகளும் கவனிக்கத் தவறவில்லை. ஊடகங்களை ஒடுக்க நினைப்பது, ஜனநாய கத்தை சர்வாதிகாரமாக மாற்ற மட்டுமே உதவும்!