"மஞ்சள், குங்குமம், மங்களமென்று இந்துமத சாஸ்திரங்கள் சரியாகவே சொல்கின்றன. ஆண்டவனுக்கு ஆலயத்தில் நடைபெறும் ஆறுகால பூஜை முதல், சாதாரணமாக வீட்டில் நடைபெறும் அனைத்து நல்ல காரியங்களிலும் மஞ்சள், குங்குமம் என்பது முதலிடம் வகிக்கிறது. சிலசமயம் குங்குமத்திலேயே அபிஷேக மும் நடக்கிறது. திருமண வீட்டில் இந்த மங்களகரமான பொருள்தான் மணவறைக்கு முதலில் வருகிறது.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமமிட்டு, பிறகுதான் வைதீகப்பணிகள் தொடங்குவது வழக்கத்தில் உள்ளது. வாசற்படிக்கு மஞ்சள், குங்குமம் வைத்தபிறகுதான் புதுமனைக்குள் செல்கிறோம். புத்தாடையில்கூட மஞ்சளோ, குங்குமோ வைத்துவிட்டுதான் உடுத்திக்கொள்கிறோம். மஞ்சள், குங்குமத்துடன் இருக்கும் மங்கையே சுமங்கலியென்று அழைக்கப்படுகிறாள். அந்த சுமங்கலி ஸ்தானத்தையே மஞ்சளும் குங்குமமும்தான் கொடுக்கின்றன.
பெண்கள் நெற்றியில் பக்தியோடு குங்குமத்தை இட்டுக்கொள்ளவேண்டும். கணவனை நினைத்து நெற்றி யில் குங்குமத்தை இட்டுக் கொண்டு, கணவன் நீடூழி வாழ இறைவனை நினைத்து கூந்தலில் மலரைச் சூடிக் கொள்ளவேண்டும். மஞ்சள் பூசிக்குளித்த கையோடு பூஜையறையிலிருக்கும் குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும். மஞ்சள்பூசிய முகத்திற்கு மகிமையளிப்பதே குங்குமம்தான். அந்த முகத்திற்கு தனி மரியாதை என்றுமுண்டு; எங்குமுண்டு. மஞ்சள் சரட்டில் மாங்கல்யம்; மாங்கல்யத்தில் குங்குமம். இதுதான் சுமங்கலிக்கு ஆதாரம். மஞ்சளும் குங்குமமும் மங்கையர்களுக்கே சொந்தம் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல;
அவரவர்களின் கணவருக்குத்தான் சொந்தம். எப்படியென்றால் கணவனின் மறைவுக்குப் பிறகு இவையிரண்டும் அவனோடு போய்விடும்.
இன்னும் எத்தனையோ இந்துமத சாஸ்திரங்கள் மங்களப் பொருட்களின் பெருமையைச் சொல்லியிருக்கின்றன. ஆனால் இன்றைய நாகரீகப் பெண்கள் பெரும்பாலும் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.
பறவைகளும் மிருகங்களும் ஐந்தறிவு படைத்தவை. ஒருபோதும் தங்கள் பழக்க- வழக்கங்களை அவை மாற்றிக்கொள்வதில்லை. ஆனால் நாகரிகம் படைத்த ஆறறிவுகொண்ட நாம் காலத்தை மாற்றி, கோலத்தை மாற்றி, கொள்கைகளையும் மாற்றிக்கொள்கிறோம்.
ஒரு நாத்திகப் பெண்மணி எந்த நேரமும் தலைவிரிக்கோலமாக இருப்பாள். மாலை சூரியன் மறைந்துவிட்டால் ஆட்டம் போடு வாள்; குதிப்பாள்; அட்டகாசம் செய்வாள். அந்த நேரத்தில் அம்பாளின் குங்குமத்தை அவள் நெற்றியில் இட்டாலே போதும்;
அவள் ஆட்டம், ஆர்பாட்டம் எல்லாமே அடங் கிப்போய்விடும். அம்பாளின் குங்குமத்திற்கு அத்தனை மகிமை. குங்குமத்தை நெற்றியில் இட்டுகொண்டால் பேய், பிசாசு அணுகாது; பில்லி, சூனியமண்டாது.
நமது நாட்டுப் பெண்கள் பலர் குங்குமத்தை மறந்துவிட்டாலும், அயல் நாட்டினர் இதை விரும்பி வாங்குவதாக குங்குமத்தைத் தயார் செய்து விற்கும் தொழிலதிபர் ஒருவர் கூறுகிறார்.
நம் நாட்டுக் கலாச்சாரங்களை அயல் நாட்டின ருக்குக் காட்டிக் கொடுக்கலாம். ஆனால் விட்டுக் கொடுப்பது என்பது எந்தவகையிலும் நியாய மில்லை. பெண்கள் மஞ்சள், குங்குமத்தின் பெருமைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
இராமாயணத்தில் வரும் ஜானகியின் மஞ்சள், குங்குமம் ஸ்ரீராமபிரானை நினைக்கி றது. திருப்பாவை ஆண்டாளின் நெற்றிக் குங்குமம் கண்ணனின் அன்பைக் காட்டுகிறது. அம்பாளின் நெற்றிக் குங்குமம் அருளைக் கொடுக்கிறது.
பெண்கள் என்றென்றும் மஞ்சள் பூசி மங்க ளக் குங்குமம் வைத்து வளத்துடன் வாழ்க!