1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தைரிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் இருக்கும். அதனால், கம்பீரமாக இருப்பார்கள். சிலர் உயரமாக இருப்பார்கள். ஆழமாக சிந்திப்பார்கள். வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தைப் பார்ப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்த சிலர் பெரிய அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

சிலர் பெரிய அரசாங்க பதவிகளில் இருப்பார்கள்.

பலர் மக்களுக்கு நல்லவற்றைச் செய்யும் காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். சிலர் புகழ்பெற்ற தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

சிலர் சார்ட்டட் அக்கவுண்டன்ட், ஃபைனான்ஸியர் என்று இருப்பார்கள். பலர் பணியில் இருக்கும்போது பெயரையும் புகழையும் பெறுவார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உணவை ருசித்து சாப்பிடுவார்கள். சுத்தமாகவும் நாகரீகமாகவும் இருக்க வேண்டுமென நினைப்பார்கள். நல்ல ஆடைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் முகம் பிறரை வசீகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கான தகுதிகள் இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நேர்மை குணமுள்ளவர்களாக இருப்பார்கள்.

செய்யும் செயல்கள் எதையும் நல்ல முறையில் முடிப்பார்கள். 28-ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

‌இந்த நான்கு தேதிகளிலும் பிறந்தவர்கள், வாழும் நிலையைக் கட்டாயம் மாற்ற வேண்டுமென நினைப்பார்கள்.

நெருப்பு, உணவு, ஸ்டீல், மின்சாரம், செம்பு ஆகியவை சம்பந்தப்பட்ட வியாபாரம் லாபகரமாக இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்த சிலர் சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மூளை எப்போதும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும்.

இவர்களுக்கு உஷ்ண உடல். அதைத் தணிப்பதற்கு மோர், குளிர்பானம் அருந்த வேண்டும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மன சந்தோஷத்திற்காக பணத்தை நன்கு செலவழிப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் பிள்ளைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார்கள். எதிர்காலத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள். யாரையும் துன்புறுத்த மாட்டார்கள். பொய் பேச மாட்டார்கள்.

இயற்கையை ரசித்துப் பார்ப்பார்கள். மலை, கடல் ஆகியவற்றைப் பார்க்கும் போது, தங்களையே மறந்துவிடுவார்கள்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களுடன் நட்பு இருக்கும். அனைவர்களிடமும் அன்புடன் பழகுவார்கள். காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள். தன் அந்தஸ்தைச் சிறிதும் விட்டுக் கொடுக்கா மல் அனைவருக்கு முன்னாலும் மதிப் புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டு மென நினைப்பார்கள்.

‌இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நேர்மை யான வழிகளில் சம்பாதிக்க வேண்டுமென்று மட்டுமே எண்ணுவார்கள். தவறான பாதைகள் தெரிந்தாலும், அவற்றைப் பின்பற்றாமல் நேர்மையான வழிகளில் மட்டுமே பயணிப்பார்கள்.

இவர்களை நம்பி பெரிய தொகையைக் கொடுத்தாலும், அதை நல்ல முறையில் காப்பாற்றுவார்கள். ஏமாற்ற மாட்டார்கள்.

வாகனங்கள் இருக்கும். சிலர் புகழ்பெற்ற பழைய வாகனங்களின் மீது விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களை மற்றவர்கள் பெரிய அளவில் மதிப்பார்கள். நாட்டுப் பற்று நிறைந்தவர்களாக இருப் பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள் வார்கள். சிலருக்கு பைல்ஸ், ரத்த அழுத்தம், கண்ணில் நோய் இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்த வர்கள் உணவைச் சூடாக சாப்பிடக் கூடாது.