துரை "கணேச விலாஸ்' கடலை மிட்டாய் நிறுவனம்.

1953-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது பல புதுமைகளைப் புகுத்தி பாரம்பரிய சுவை, அனுபவம், புகழுடன் 72 ஆண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.

மதுரை முனிச்சாலை ஓபுலா படித்துறை மெயின் ரோட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை நிர்வாகிகளில் ஒருவரான எம். அர்ஜூன் ராஜ் இ.பங்ஸ்ரீட் (எர்ர்க் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) அவர்களை "ஓம் சரவணபவ' இதழுக்காக சந்தித்து உரையாடினோம்.

தாய், தந்தை, மனைவி மற்றும் சகோதர சகோதரியுடன் ஒரே வீட்டில் 15 பேர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் "கணேச விலாஸ்' அர்ஜூன் ராஜ் அவர்கள் நம்மிடம் கூறிய பக்திமயமான, சுவையான அற்புதமான தகவல்கள் இதோ...

அந்தக் காலத்தில் தாத்தா அமரர் கணேசன் அவர்களால் சைக்கிளில் பெரிய டப்பாக்களில் கடலை மிட்டாய்களை எடுத்துசென்று தெருத்தெருவாக போய் விற்று, தரமான சுவையால் மக்களின் ஆதரவை படிப்படியாகப் பெற்று வளர்ந்த நிறுவனம் இந்த கணேச விலாஸ் கடலை மிட்டாய் நிறுவனம்.

இந்நிறுவனம் இப்போதும் மக்களிடம் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனி வெல்லத்தால் தயார் செய்யப்பட்டு அதிநவீன பேக்குகளில் 140-க்கும் மேற்பட்ட கடலை சார்ந்த தயாரிப்புகளை தமிழகம் மற்றும் வெளிநாடு களுக்கு அனுப்பி வருகிறோம்.

நாங்கள் கடலையில் தெய்வ உருவங்கள் செய்து வழங்கிவருவது பக்தர்களை பரவசப்பட வைக்கிறது. கடலையில் முருகப்பெருமானின் "வேல்' செய்து தந்தோம். "கந்த வேலுக்கு கடலை வேல்' செய்து தந்து பூஜிக்க வைத்தோம். கந்தனுக்கும் அரோகரா. கணேசவிலாஸ் கடலை வேலுக்கும் அரோகரா என்று மனமுருக பக்தர்கள் கோஷமிட்டு கடலை வேலை பக்தியுடன் வாங்கிச் சென்று எங்களை மெய்சிலிர்க்க வைத்தார்கள்.

ss

எங்கள் கணேசவிலாஸ் கடலையில் விசேஷமாக செய்யப்பட்ட கணபதி சிலை மற்றும் சிவலிங்க சிலைகளை வாடிக்கை யாளர்கள் வாங்கி அவரவர் இல்ல பூஜையறையில் வைத்து பூஜை செய்து வழிபட்டு பின்னர் அதனையே "பிரசாதம்' ஆக்கி சாப்பிட்டு, தெய்வ அருளைப் பூரணமாகப் பெற்று திருப்தி அடைவதாக சொல்கிறார் கள். இப்படி எங்கள் கணேசவிலாஸ் கடலையில் உருவாக்கப்படும் பிள்ளையார், சிவலிங்கம், முருகனின் வேல் போன்றவைற்றை செய்து தருவதால், எங்களுக்கு தெய்வத் திருப்பணி செய்த திருப்தியும் கிடைத்துவருகிறது.

இப்போது வாடிக்கையாளர்கள் கடலைப் பருப்பில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, முருகன், வேங்கடாஜலபதி, மகாலட்சுமி, அய்யனார் போன்ற பல தெய்வ உருவங்களையும் செய்து தரச்சொல்லிக் கேட்டு வருகிறார்கள். அவற்றையும் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து வணங்க ஆர்வம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம்.

Advertisment

எட்டுக்கு எட்டு இடம் இருந்தாலே போதும். எங்கள் கடலைத் தயாரிப்புகளை வாங்கிச் சென்று, சிறிய கடைகள் முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சப்ளைசெய்து நிறைந்த லாபம் பெறலாம். இதற்கு பல லட்ச ரூபாய் முதலீடு தேவையில்லை. மூன்று லட்ச ரூபாய் போதும். வங்கியில் தொழில் கடன் வாங்கி முதலீடு செய்து வாழ்வில் வளம் பெறலாம்.

பெரிய பெரிய அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கும் குடும்பத் தலைவிகள் புடவைகள் வாங்கி அந்த அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு விற்று வருமானம் பெறுவதுபோல் பி.டெக் பயோடெக்னா லஜி, எம்.டெக் புட் டெக்னாலஜி படிப்பை முடித்து பட்டம் பெற்று, தொழில்நுட்ப அறிவுடன் எங்கள் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்திருக்கும் என் உடன்பிறந்த தங்கை செல்வி மேகன ஹர்சினி, அபார்ட் மெண்ட் பெண்களில் பேசத்தெரிந்த, இல்லத் தரசிகளை எங்கள் கணேசவிலாஸ் தயாரிப்பு பொருட்கள் ஏஜென்சி எடுக்கவைத்து அபார்ட்மெண்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக் கேட்கும் ஆரோக்கியம் தரும் கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய் போன்ற ஏராளமான சுவையான தயாரிப்புகளை விற்பனைசெய்து அவர்களை நல்ல வருமானம் பெற வைத்து வருகிறார்.

வெளியிடங்களுக்கு அலைந்து திரிந்து நேரத்தை வீணாக்காமல் அபார்ட்மெண்ட் உள்ளேயே இருக்கும் வீடுகளுக்கு எங்கள் கணேசவிலாஸ் கடலைத் தயாரிப்புகளை வழங்கி நீங்களும் வருமானம் ஈட்டலாம்.

Advertisment

நாங்கள் கல்லூரி பழைய, புதிய மாணவர் களின் கெட் டு கெதர், குழந்தைகளின் பிறந்த நாள் விழாவுக்கு வருபவர்களுக்கு அளிக்க குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய கிப்ட் பாக்ஸ், நிச்சய தார்த்தம், திருமணப் பத்திரிகை யோடு அளிக்க ஸ்வீட், திருமணங் களில் கலந்துகொள்பவர்களுக்கு தாம்பூல பைகளில் போட்டுத் தர மணமக்களின் புகைப்படத் துடன்கூடிய ஸ்பெஷல் கிப்ட் பாக்ஸ் என்று அதிநவீன பேக்கிங்கு களில் எங்கள் கணேச விலாஸ் தயாரிப்புகளை வழங்கிவருவதில் பெருமை கொள்கிறோம்.

புதிதாக கடலையில் ரோபோ செய்து தந்திருக்கிறோம். மதுரையில் எங்கள் தொழில், வியாபாரம் தொடர்பான அமைப்புகளில் பங்கேற்று அவர்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றுவருகிறோம். எங்கள் தயாரிப்புகளின் முழு விவரங்களை www.ganeshavilasfoodproducts.com என்ற வெப்சைட்டில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

ss

குறிப்பாக கூகுளில் ganeshavilasஎன்று சொன்னாலே போதும் எங்கள் நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் வந்துவிடும். திருமணம், வளைகாப்பு போன்றவற்றில் சிறப் பாக, விசேஷமாக கடலைக் கோன்களை தயாரித்துத் தந்துவருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

விநாயகருக்கு கோவில் கட்டி வழிபடு வதோடு, எங்கள் குலதெய்வமான சிவகாசி அருகிலுள்ள கம்மாபட்டி கல்லக்குடி அய்யனாரையும், இஷ்ட தெய்வங்களான காளியம்மன், மாரியம்மனையும் தவறா மல் வழிபட்டு வருகிறோம். தெய்வ வழிபாடு மென்மேலும் எங்கள் வாழ்வினை உயர்த்து கிறது என தங்கள் தொழில் உயர்வுக்கான ரகசியத்தையும் நம்மிடம் பகிர்ந்தார் அர்ஜூன் ராஜ்.

மதுரை கணேச விலாஸ் கடலைத் தயாரிப்பு கள் உலகம் எங்கும் செல்ல அர்ஜூன் ராஜ் அவர்களை வாழ்த்தி விடைபெற்றோம்.

மதுரை கணேசவிலாஸ் தொடர்பு கைபேசி எண்: 73734 64640.