சான் ஆதனா ரின் மெய்க்காவல் படை, மதுரை மாநகரக் கோட்டை யின் மேற்கு நுழை வாயிலை அடைந் தது. அங்கே அவர் களின் வருகையை எதிர்நோக்கி இருந் ததுபோல், பாண்டி யர் கோட்டையின் அகப்படைத் தளபதி யார், கோட்டையின் மேற்கு நுழைவாயி லின் பெரிய கதவு களைத் திறந்து வைத்திருந்தார். கோட்டையின் வெளியே இருந்த பெரிய அகழியின் குறுக்கே குதிரை கள் செல்வதற்காக பெரிய மரப் பாலங்கள் போடப்பட்டிருந்தன.

ஆதனார் மெய்க்காவல் படை யினரின் குதிரைகள் கோட்டையின் வாயிலுக்குள் நுழைந்தபோது எதிரே அகப்படைத் தளபதியார், தம் வீரர்கள் சூழத்தலைவணங்கி, "ஆன்றோர் கோனே வாருங்கள்! தங்களோடு இங்கிருந்து மருங்கூர் செல்வதற்கு வேல்தாங்கிய ஈராயிரம் கடம்ப வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

vel

நான் அனைத்துச் செய்திகளையும் ஒற்றர் படையினர்மூலம் அறிந்தவுடனே இவ்வேற் பாட்டினை செய்திருக்கின்றேன். இளவலை யும் இப்பாண்டிய பேரரசையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்க அரச குடும் பத் தார்கள் விரும்புகின் றனர். அதற் காக நாங்கள் தங்களுக்கு முழுமையாக ஒத்துழைப் புக் கொடுத்து உதவ மிகுந்த கடமைப்பட் டுள்ளோம்' எனக் கூறிக் கொண்டிருக் கும்போதே ஆதனார் குறுக்கிட்டு "எதிரியின் நோக்கம் மருங்கூர் துறைமுக நகரின் வாணிபச் செழிப் பைச் சீர்குலைத்து, மதுரை மாநகரின் செல்வச் செழிப் பையும், பாண்டியப் பேரர சின் செல்வப் பண்டாரத்தை யும் சீரழிக்கத் திட்டமிட்டு, பெரிய சதித்திட்டத்தையும் அரங் கேற்றியுள்ளனர். அதனை விரைவில் முறியடித்து இப்பேரரசைக் காத்திடும் கடமையில் நாம் உள்ளோம். இப்பணியைச் செய்வதற்குச் சீராள குருமார்கள் எங்களைத் தொடர்ந்து இங்குவந்து சேர்வார்கள். அவர்களோடு நமது முக்கிய மந்திரிகளையும் பாதுகாப்புடன் மருங்கூர் நகருக்கு அனுப்பிவையுங்கள். நீங்கள் இங்கிருந்து மிகுந்த கண் காணிப்புடன் பாண்டியர் கோட்டை முழுவதையும் பாதுகாக்க வேண்டும்' எனக் கர்ஜித்த குரலுடன் கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர், "நாங்கள் இளவல், அரசியார், அரச குடும்பத்தினர் மற்றும் பாண்டியப் பேரரசரின் உயிர் நீத்த உடம்பு, பழையன் மாறன் போன்றோரை பாதுகாப்புடன் இங்கு அழைத்து வருகிறோம். அதற்குள் பாண்டியப் பேரரசருக்கான பள்ளிப்படை அமைக்கும் பணியை விரைவில் செய்து முடித்துவையுங்கள். நாங்கள் புறப்படுகின் றோம்' எனக் கூறி, தன் குதிரையைத் தட்டினார்.

Advertisment

ஏகன் ஆதனாரின் படை கோட்டைக்குள்ளே இருந்த ராஜ வீதிகளின் வழியாகச் சென்று மதுரைக் கோட்டையின் கிழக்கு வாயிலை அடைந்தது. அங்கிருந்து ஈராயிரம் கடம்ப வீரர்கள் பின்தொடர, மருங்கூர் நகரை நோக்கிப் புறப்பட்டனர்.

இங்கு நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, சங்க காலத்தில் மதுரை மாநகரம் உருவாவ தற்குமுன்பு நாகமலை, திருப்பரங்குன்றம், யானைமலை, சிறுமலை போன்ற எல்லைகளைக் கொண்ட கடம்பக் காடாக இப்பகுதி இருந்தது. தமிழ் ஆதிக்குடிகளான கடம்பர்கள் அதிகமாக இங்கு இருந்தனர். கடம்பர்கள் என்பவர்கள் ஒளிவீசக்கூடிய வேல்கள் பொருத்தப்பட்ட கடம்ப மரத்தி லான வேல்கம்புகளைக்கொண்டு தூரத்திலிருக்கும் எதிரிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றைக் கொல்லும் அளவிற்கு வலிமையுடன் குறிபார்த்து எறியும் வல்லமை படைத்தவர்கள். தங்களது குலதெய்வமான முருகப் பெருமானை, கையில் வேல்தாங்கிய கடம்பன் எனும் பெயரால் வழிபட்டு வந்தவர்கள். இவர்களால்தான் திருப்பரங் குன்றின் கோவில் கருவறையில் வேல் நட்டுவித்து முருகப் பெருமானின் வடிவமாக அது வணங்கப்படும் வழிபாடு உருவானது.

vel

Advertisment

புதிதாக ஓரிடத்திற்கு இவர்கள் செல்கிறார்கள் என்றால் இவர்களுக்கு முன் அவ்விடத் திற்கு வேல் சென்று குத்தி நிற்கும். இவ் வாறு ஓரிடத் திற்கு வேல் வந்து குத்தி நிற்குமா னால் அங்கே கடம்பர்கள் வரப்போகிறார் கள் என உணர்ந்து மற்றவர்கள் அஞ்சுவார்களாம். இந்த வேலின் வடிவத்தில் மயிலானது தனது தோகைகளைப் பெற்றிருப்பதால், சிறிது தூரமான இடத்திற்கு கடம்பர்கள் செல்லவிருப்பதாக இருந்தால், அங்கே வேலுக்குப் பதிலாக மயிலை அனுப்புவார்கள், மயில்கள் இல்லாத இடங் களுக்கு மயில் வந்துசேர்ந்தால், அங்கே சிறிது நேரத்திற்குள் கடம்பர்கள் வரப்போகிறார்கள் என்று பொருள். இவர்கள் தங்களது எதிரி களுக்கு மரணக் குறியீடாக மயில்களை அனுப்புவது வழக்கம். இதனால்தான் தங்களின் கடவுளான கடம்பருக்கு மயிலையும் வேலையும் குறியீடாகக்கொண்ட வேலவனை வடிவமைத்து வணங்கினர். தாங்கள் புலம் பெயர்ந்து சென்ற அனைத்து இடங்களிலும் இவ்வேலவன் வழிபாட்டை உருவாக்கி னார்கள்.

இதேபோல் இரண்டு மன்னர்களுக் கிடையே போர் மூண்டுவிட்டால் அப்போரில் இறக்கும் மன்னர் குடும் பத்துச் செல்வங்கள் அத்தணையும் சீரழிந்துவிடும். மேலும், அவர்களைச் சார்ந்து இருந்தவர்களின் தொழிலும் பொருளாதாரமும் சீரழிந்துவிடும். இதனைத்தடுத்து அம்மக்களைத் தொழில் பொருளாதாரச் சீர்கேட்டி லிருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்கும் உத்திகளை திறம்பட நடைமுறைப் படுத்தும் குருமார்கள், ஏகன் ஆதனார் கோட்டத்தில் இருந்துள்ளனர். இவர்களுக்குச் சீராள குருமார்கள் என்று பெயர்.

குரு ஆதனாரின் குதிரைப்படை மருங்கூர் நகரை அடைவதற்குச் சில காத தூரத்திற்குமுன் சென்று கொண்டிருந்தபோது, முழு நிலவொளியில் சில கூடாரங்கள் நகரத்திற்கு அப்பால் இருந்ததை ஆதனார் கண்ணுற்றார். பகைவர்கள் நகரைச் சுற்றிலும் பாசறை அமைத்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்தார். தன் குதிரையின் வேகத்தை துரிதப்படுத்தினார். மருங்கூர் நகரத்திற்குள் நுழைந்து முந்நீர்ப் பெருவிழா நடந்த இடத்திற்கு அவர் வந்தபோது இரவு நடுச்சாம நேரமாகியிருந்தது. நகரின் நடுப்பகுதியில் பாண்டியன் மாளிகைக்கு அருகில் வந்தபோது, அங்கு நிலைமை மிக மோசமாக இருந்ததைப் பார்த்து, ஒரு கணம் மிகுந்த அதிர்ச்சியுற்றார். மன்னவன் உடல் தாங்கிய பல்லக்கைப் பார்த்தவுடன் குதிரையை நிறுத்தி, அதிலிருந்து தாவி மன்னவனைக் காண ஓடோடி வந்தார்.

பல்லக்கைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் தீவெட்டிகள் ஒளிவீச, துடியர்கள் தங்களுக்குரிய துடியிசைக் கருவியில் ஒலி எழுப்பி வந்தனர். அவர்கள் எழுப்பிய துடியிசைத் தாளத்திற்கேற்ப பாணர்கள் ஒருசேர பாலைத்திணையில் தங்கள் மன்னவரின் நிரந்தரமான பிரிவை உணர்த்தும்விதத்தில் மனம் நெகிழும் பண் வாசித்தனர். அந்தத் தாளமும் பண்ணொலியும் மனதை வருட வருட கூத்தர்கள் உணர்வு தாங்காமல் ஊழிக்கூத்து ஆடத் தொடங்கினர்.

ஊழிக்கூத்து என்பது வருத்தத்தோடு சேர்ந்த மனக் கொந்தளிப்பை வெளிக்காட்டும் கூத்து நடனமாகும்.

இங்கும் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் கூத்தர்களின் கூத்திலிருந்துதான் தில்லை நடராஜரின் நடனம் உருவானது. இதை உணர்த்தும் வகையில்தான் "தில்லைக் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!' என மாணிக்கவாசகர் பாடுகிறார்.

தமிழ்க் கூத்தர்களின் கூத்துக் கலையானது வேற்று நாட்டு மன்னர்களின் படையெடுப்பிற்குப்பின்பு, அதாவது விஜயநகர ஆட்சிக் காலத்தில்தான் பரதநாட்டியமாக மாற்றப்பட்டது.

மேலும் ஆதித் தமிழ்ப் பாணர் களின் தமிழ்ப் பண்கள் இதே காலப் பகுதிகளில் உயர் ஜாதியினரால் தெலுங்குக் கீர்த்தனைகளாகவும், கர்நாடக சங்கீதங்களாகவும் உருமாற்றப்பட்டு, யாழ்ப்பாணர்கள் மற்றும் தமிழ்க் கூத்தர்களின் கலைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, அவர் கள் தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப் பட்டார்கள்.

திருஞானசம்பந்தரின் மனதை இறைவன்பால் நெகிழ்விக்கும் சுவைமிகுந்த பதிகங்களுக்கு பண் அமைத்துக் கொடுத்தவர், அக் காலத்தில் வாழ்ந்த நீலகண்ட யாழ்ப்பாணர் என்ற பாணராகும். இவர் முதலில் தமிழ்ப் பண்களை யாழில் இசைத்துக் காட்ட, அதற் கேற்றாற்போல் திருஞானசம்பந்தர் கவிகள் எழுதுவார் என்பது வர லாற்றுச் செய்தி. இந்த நீலகண்ட யாழ்ப்பாணரை, அக்காலத்திலேயே சிவன் கோவிலுக்குள் சென்று சிவ பெருமானைத் தரிசிக்க அனுமதிக்க வில்லை. எனவே தமிழ்க் கூத்தர்களை தீண்டாமையைக்கொண்டு ஒடுக்கத் தொடங்கிய காலம், திருஞானசம்பந்த ரது காலம் என்பது புலனாகிறது. திருவிளையாடல் புராணத்தில் சிவ பெருமானே இப்பாணருக்காக தொண்டு செய்ததையும், அவர் பாணப்பட்டர் எனும் பாணர் குலத்தவர் என்பதையும் நாம் மறந்து விட்டோம். எனவே, சங்க காலத்தில் பேய் மகளிர்களின் ஆட்டம் தில்லைக் காளி நடனமாகவும், கூத்தர்களின் ஊழிக்கூத்து தில்லைக் கூத்தரான சிவபெருமானின் நடனமாகவும் பரிமளித்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

ஆதனார் அவ்விடத்தைச் சுற்றிலும் பார்வையிட்டார். கடற்காற்று பலமாக ஓசையிட்டு வீசிக்கொண்டிருந்ததால், அங்கு பரவலாக எரிந்துகொண்டிருந்த தீவெட்டி வெளிச்சத்தில் அந்நகர மக்கள் எரிந்துகிடந்த தன் உறவினர்களின் உடல்களை அடையாளம் காணமுடியாமல், அவர்கள் அணிந்திருந்த தண்டை, வளையல்களைக்கொண்டு அடையாளம்கண்டு கதறி அழுதார்கள்.

அவர்கள் அடைந்த தீக்காயங்களைத் தொட்டுப் பார்த்து, தங்களது தலைகளில் அடித்து அடித்து அழுதவர்கள், தீவெட்டி களின் வெளிச்சத்தில் மயிர்கள் பிசுபிசுப் பாகவும், பேய்மகளிர்கள்போலவும் தோற்றமளித்தனர்.

அந்நகரப் பறையர்கள், தங்கள் மன்னர் இறந்த செய்திகளைக் கூறி சங்க காலத்தில் இறந்தோர் வீட்டில் இசைக்கும் பறை ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தனர். அப் பறை இசைக்கேற்ப பேய்மகளிர் அசைந்து அசைந்து நடனமாடத் தொடங்கினர். இவற்றையெல்லாம் பார்த்த ஆதனார், தன் உயிர் நண்பனும் மன்னனுமாகிய பாண்டியப் பேரரசனின் முகத்தைக் காண கூட்டத்தை விலக்கிக்கொண்டு விரைந்துசென்றார். குரு ஆதனார் வருவதைக் கண்ணுற் ற ஒற்றர் படைத் தலைவன் மக்கள் கூட்டத்தை விலக்கி ஆதனார் வருவதற்கான வழியை ஏற்படுத்தித் தந்தான்.

மன்னவனின் பல்லக்கானது பாண்டியன் மாளிகையிலிருந்து மெல்ல மெல்ல மக்கள் கூட்டத்தினூடே நகர்ந்து நகர்ந்து, நெடுமிடலின் எரிந்த உடல்கிடந்த மேடைக்கருகே வந்தபோது, ஆதனாரும் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தார். இருவரையும் ஒருசேர்ந்தவாறு கண்டகாட்சி ஆதனாரின் இதயத்தை ஒரு கணம் நிலைகுலயச் செய்தது. இருவருமே அவரது உயிர்த் தோழர்கள்.

கடந்த காலத்தில் பாண்டிய நாட்டில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கு மூவரும் சேர்ந்து செய்த பணிகள் அனைத்தும் வீண்போனது போன்ற வெற்றிடத்தை உணரலானார். ஆனால். இத்தருணம்தான், தாம் இந்நாட்டு மக்களுக்குச் உயரிய கடமையைச் செய்யவேண்டிய நேரம். இக்கணத்தில் மனம் தளர்ந்துவிட்டால் பாண்டிய தேசத்திற்கு இன்னல்கள் ஏற்பட்டுவிடக்கூடும் எனத் தம் உயர்ந்த அனுபவ அறிவால் உணர்ந்து சுதாரித்து வெகுண்டெழுந்தார். பாண்டியப் பேரரசரின் முகத்தை அருகில் சென்று பார்க்க எத்தனித்தபோது அவரது உடம்பெல்லாம் மனித ரத்தம் பீறிட்டு அடிப்பதை உணர்ந்தார்.

அப்போது அந்நகரத்து மகாபறையர், மன்னரின் மெய்க்காப்பளர் தத்தனார் நம் மன்னருக்காக "அரிகண்டம்' செய்துவிட்டார் எனக் கூட்டமே அதிரும்வண்ணம் உரக்கக் கத்தினார். ஆதனார் அதிர்ச்சியில் உறைந்தார். எது நடக்கக் கூடாதென நான் விரைந்து இங்கு வந்தேனோ அது நடந்துவிட்டது எனக் கூறிக்கொண்டு தத்தனாரின் தலையற்ற உடலைத் தன்மீது தாங்கிப் பிடித்தார். அவ்வுடல் பயங்கர மாகத் துடிதுடித்து அவரு டைய கரங்களிலேயே ஓய்ந்து அமைதியானது.

இவ்வதிர்ச்சியுடனே அடுத்த இதழில் தொடர் வோம்!

(இன்னும் விரியும்...)

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்