"மாடுதா னானாலும் ஒரு போக் குண்டு

மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா

நாடுமெச்ச நரக மென்பார் சொர்க்க மென்பர்

நல்வினை தீவினை யென்ன மாட்டார்.''

Advertisment

(அகத்தியர்)

இந்த மண்ணுலகில், ஈ, எறும்பு பூச்சி, புழுக்கள் என ஓரறிவு உள்ள உயிரினம் முதல், ஐந்தறிவு வரை உள்ள, அனைத்து உயிரினங்களும், தன்னையறிந்து தன் உழைப்பு, அறிவால் வாழ்கின்றன. ஆனால் ஆறறிவு உள்ள மனிதன், மனிதர்கள் மட்டும் தன்வினை, வித்தெரியாமல் வாழ்ந்து கஷ்டப்படுகின்றான். உதாரணமாக, ஐந்தறிவுள்ள ஒரு மாட்டின் செயல்பாடுகளை தெரிந்துகொள்வோம்.

ஒரு மாட்டினை வண்டியில் கட்டப் போகும்போது, பாரம் இழுக்கப் போகின்றோம்

Advertisment

என்பதை அறிந்து, வண்டி நுகத்தடியில் தானே தன் தலையை நுழைத்துக்கொள்ளும். வய-ல் ஏரில் கட்டினால், வயலை உழப்போகின்றோம்

என்று அறிந்து, கலப்பையை இழுத்துச் செல்லும். கிணற்றில் நீர் இறைக்க கவலையில் கட்டினால், நீர் இறைக்கப் போகின்றோம்

என்று முறையாக செயல்பட்டு நீரை இழுத்துப் பாய்ச்சும்.

ஒரு காளை மாடு, வய-ன் எஜமானனுடன் சேர்ந்து, ஏர் உழுது, நீர் இறைத்து, விவசாய பயிர்த்தொழிலில் தன் பங்கு உழைப்பி னைத் தந்து, வயலில் நெல், தானியப் பயிர் களை விளைவிக்க உதவிசெய்கின்றது. அதில் விளையும் நெல் மணிகளை, மனிதர்கள் எடுத்துக் கொள்ள, தன் உழைப்பிற்கு கூலியாக வைக்கோ லைப் பெற்று, தானும் உண்டு தன் பட்டியில் தன்னுடன் வசிக்கும் மற்ற மாடுகளும் உண்டு பசியாற்றிக்கொள்ள பகிர்ந்துண்டு வாழ்கின்றது.

ஒரு மாடு புல் மேயும் போதுகூட தனக்கு நன்மையும் உடலுக்கு வ-மையையும் தரும் புற்களையே கவனமாக தேர்ந்தெடுத்து பார்த்து மேயும். தனக்கு நன்மை தராத புற்களை மேயாமல் ஒதுக்கிவிடும்.

ஐந்தறிவுள்ள கால்நடைகள், தங்கள் சுயஉழைப்பினால் உணவு தேடி உண்டு வாழ்கின்றது. தன்னைச் சேர்ந்த, தன் பட்டியலுள்ள மற்ற கால்நடைகளுக்கு, தன் உழைப்பால் கிடைத்த உணவைத்தந்து,

அவற்றையும், பசியாற்றி வாழவைக்கின்றது. தன் உடலுக்கு நன்மை தரும் உணவை மட்டுமே உண்டு, சரீர வ-மையைப் பெறுகின் றது. மற்றவர்களைச் சார்ந்து, பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ்வது இல்லை. தன் உழைப் பினாலேயே உயிர் வாழ்கின்றது.

ஆறறிவுள்ள மனிதர்களோ, தன் வினை, வினையறியாமல், தன்னையறியாமல் வாழ்கின்றார்கள். மற்றவர்கள் தன்னைப் பெருமையாகப் பேசவேண்டும் என்று, சொர்க்கம், நரகம், இந்திரலோம், கைலாசம், வைகுந்தம் என்று இவற்றைப் பற்றி எவரோ, எப்போதே எழுதிவைத்த கதைகளைப் படித்துவிட்டு, இவற்றைக்கு ஏகப்பட்ட விளக்கங்களை, எல்லாம் தெரிந்தவர்கள்போல் மற்றவர்களுக்கு கூறுவார்கள். ஆனால், தன் வாழ்வில் தானும், தன் குடும்பத்தினரும் அனுபவிக்கும் நன்மை- தீமைகளுக்கு காரணம் தெரியாமல் தன் நல்வினை- தீவினை அறியாமல் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.

மனிதர்கள் தங்கள் வாழ்வில், தாங்கள் செய்யும் செயல்களால், தனக்கு நன்மை- உண்டா? தீமை உண்டாகுமா? என அறிந்து கொள்ளாமலும், தன் வாழ்வில் நன்மை, உயர்வு, தீமைகள், தடைகளுக்கு காரணம் என்ன? தன் வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகள், வறுமையை விலக்கி, உயர்வுபெற எவ்வாறு செயல்பட்டு வாழ்வது என சிந்திக்காமலும், தான் உண்ணும் உணவு தனது உடலுக்கு நன்மை தருமா? தீமை தந்து நோயை உண்டாக்குமா? என்பதைக்கூட அறியாமல், கண்டதையெல்லாமல் உண்டு வாழ்கின்றான்.

ss

தன் வாழ்க்கையையும், சரீரத்தையும் கெடுத்துக் கொள்கின்றான்.

மனிதர்கள் தன்விதி, வினை, தன்னையறிந்து வாழவேண்டும். உழைத்து சம்பாதித்து, தானும் உண்டு, தன் குடும்பத்தினர் பசியையும் போக்கவேண்டும். தன் உழைப்பால் வந்த சொத்து, பொருள், செல்வங்களை விரையம் செய்யாமல் சேமித்து, வாழ்வில் உயர்வு பெற வேண்டும். எதிர்காலத்தை வளமாக அமைத்துக் கொள்ளவேண்டும். "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை. அருளீல்லார்க்கு அவ்வுல கம் இல்லை'' என்பது சித்தர்கள் வாக்கு.

மனிதர்கள் இவ்வுலகில் நிம்மதியாக வாழ பணம், பொருள், சொத்துகள் தான் தேவை. அதை விடுத்து, சொர்க்கம், நரகம், கடவுள், பூஜை, யாகம், வழிபாடு போன்ற அவ்வுலக வாழ்க்கையை, தேடி, அவை இருக்கின்றதா? இல்லையா, என்பதே தெரியாமல், நம்பிக்கை யில் இவற்றுக்கு பணம், பொருளை செலவழித்து தன் செல்வத்தை தானே அழித்துக்கொள்ளக்கூடாது. இந்த செயல்களால் தனக்கு நன்மை உண்டா? இல்லையா? என்பதை சிந்தித்து, செயல்பட்டு வாழவேண்டும். ஐந்தறிவுள்ள உயிரினங் களைப்போல் மனிதர்களும் தன்னையறிந்து வாழவேண்டும்.

அகத்தியர்: காகபுசுண்டரே, சித்தர்கள் கூடியுள்ள இத்தமிழ் சபையில், மனிதர்கள் வாழ்வினில் பாதிப்பைத் தரும் பாவ- சாப செயல்களைப் பற்றிக் கூறிவருகின்றீர்கள். இன்று எந்த பாவச் செயலைப் பற்றிக் கூற எண்ணுகின்றீர்களோ, அதைப்பற்றிக் கூறுங்கள். உங்கள் கருத்தைக் கேட்க ஆவலாக உள்ளோம்.

காகபுசுண்டர்: தமிழே, தமிழின் உருவே, பகுத்தறிவைப் போதிக்கும் தமிழ்மொழிக்கு ஆதாரமே, பூரண ஞானம் தரும் தமிழ்மொழிக்கு காவலனே, எங்கள் ஆசானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கங்கள்.

"வம்ப ரோடிணங்கியே திரிந்த தோஷம்.''

இந்த சித்தர் சபையில், இதுவரை, ஒவ்வொரு மனிதனும், தன் குடும்ப உறவு களுக்குச் செய்யும் பாவ- துரோக செயல்களையும், அதனால் அவன் அடுத்தடுத்த பிறவி வாழ்க்கையில் அனுபவிக்கப் போகும் பலன்களைப் பற்றிக் கூறினேன். இன்று சமுதாயத்திற்கும், சமூகத்திலுள்ள மக்களுக்கும் பாவங்களைச் செய்து சீர்க்கேட்டை உண்டாக்கும் மனிதர்களைப் பற்றி அறிவோம்.

இந்த சமுதாயத்தில், பலதரப்பட்ட குணங்களைக்கொண்ட மனிதர்கள் வாழ்கின் றார்கள். பிறக்கும்போது, எல்லாருக்கும், இயற்கை நிர்ணயித்த விதிபடிதான் பிறக்கின் றார்கள். ஒன்றுபோல் வளர்கின்றார்கள். வயதுக்கூடக்கூட, மற்றவர்கள் செயல்களைப் பார்த்தும், பிறர் சொல்வதைக் கேட்டும், சுற்றுபுற சூழ்நிலைகள், சந்தர்ப்ப நெருக்கடிகள், வாழும் சூழ்நிலை போன்றவற்றால், தன் குணத்தையும், வாழ்வின் நடவடிக்கை முறைகளையும் மாற்றிக்கொண்டு வாழ்கின்றார்கள்.

இந்த மண்ணுலகில் நல்லவர்களும் இருக்கின்றார்கள். நல்லவர்கள்போல் நடித்து வாழும் வஞ்சகர்களும் உண்டு, உண்மையான கடவுள் பக்திகொண்ட ஆன்மிகவாதிகளும் உண்டு. இதேபோன்று கடவுள் பெயரைச் சொல்-, பிழைக்கும் ஆஸ்திகவாதிகளும் உண்டு. எல்லாரும் சமம் என்று கூறும் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்களும் உண்டு.

அதேபோன்று ஆட்சி, அதிகாரத்தை அடைய நினைக்கும் அடைந்தவர்களில் மக்களை மதம், சாதி, இனம் என்று கூறி மக்களை பிரிவினைபடுத்தி, பேதபடுத்த தங்கள் வாழ்வை உயர்த்திக்கொள்ளும் வஞ்சக குணம் கொண்டவர்களும் உண்டு.

கமல முனிவர்: புசுண்ட முனிவரே, மக்களிடையே வஞ்சக குணம் கொண்டு வாழ்பவர்களைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: கமல முனி சித்தரே, தாங்கள் கேட்பது, இந்த மண்ணுலகில் வாழும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமானதுதான். அறிவிற்குறைந்தவர்கள், பகுத்தறிவு, அனுபவ அறிவு இல்லாத அனைத்து மக்களும் அறிந்து, புரிந்து, தெளிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான். இனி வஞ்சக குணம் கொண்ட ஒவ்வொரு பகுதியினரைப் பற்றியும் விளக்கமாகக் கூறுகின்றேன்.

உடல்பலம், ஆள்பலம் கொண்டவர்கள், திருடுதல், பிறரைத் தாக்கி பணம், பொருள் பறித்தல், தன்னைவிட கீழானவர்களை, உடல் ஊனமுற்றவர்களை அடித்து, துன்புறுத்துவது, மற்றவர்களை கீழ்த்தரமாக எண்ணுதல்,

அடாத சொற்களால் கேவலமாக பேசுதல், மது, போதை தந்து மதியை மயக்கும் பொருட்களை அருந்துதல், மற்றவர்களிடம் பணம் பொருட்களைப் பெற்றுக்கொண்டு,

அவர்களுக்கு அடியாட்கள், அடிமைகள்போல் இருந்து, நியாயம், அநியாயம் பாராமல் அவர்கள் கூறிய வேலைகளைச் செய்தல், பிறரை கொலை செய்யக்கூட தயங்காத கொடிய குணம், பறவை, மிருகங்களை வேட்டையா முதல் போன்ற இன்னும் பல தீமையான செயல்களைச் செய்து, மக்களின் நிம்மதியான வாழ்வைக் கெடுப்பவர்கள்.

அடுத்து ஒரு வஞ்சக குணத்தோரையும் தெரிந்துகொள்வோம். இவர்கள் பணத் தாசை கொண்டவர்கள். பண பலத்தினை உயர்த்திக்கொள்ள எதையும் செய்யக் கூடியவர்கள். பிறர் வசதியாக வாழ்வதைப் பார்த்து மனம் பொறுக்காதவர்கள், தன் குடும்ப உறவுகளின் உழைப்பு, பணம், சொத்துகளை ஏமாற்றி பறித்துக்கொள்வார்கள். மற்றவர் களிடம் சேர்ந்து கூட்டாக வியாபாரம் செய்யும்போது, பொய்க்கணக்கு எழுதி, நட்டக்கணக்கு கூறி, அந்தத் தொழில் கூட்டாளிகளை ஏமாற்றி, அவர்களின் முதலீட்டு பணத்தை அபகரித்து விடுவார்கள். தன்னுடன் பழகும் நண்பர்களிடம் கூறி அலங்காரமான வார்த்தைகளைக் கூறி, அவர்களை ஏமாற்றி பணத்தைப் பறித்துவிடுவார்கள்.மற்றவர்கள் வீடு, மனை, விவசாய நிலங்களில் இவர்களே ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கி, அவர்களை பாதிப்படையச் செய்துவிட்டு, அவர்களிடம் நல்லவர்கள்போல் நடித்து, அவர்களை சிக்க-ல் இருந்து விடுவிப்பதாக கூறி, குறைவான விலைபேசி குறைவான பணம், தொகை கொடுத்து சொத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

பண பலத்தால் வாழ ஆசைகொண்ட இவர்கள், தாங்கள் கூறுவதைக் கேட்காதவர் கள், தங்களை எதிர்த்து செயல்படுபவர்களை, தங்களின் பணபலத்தால், பணத்திற்காக வேலை செய்யும் அடியாட்களை ஏவிவிட்டு அவர்களை மிரட்டியும், அடித்தும், தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்வார்கள். ஏன்? அவர்களை கொலை செய்யவும் துணிந்துவிடுவார்கள்.

இந்த பண பலத்தை பெருக்கிக் கொள்வதையே நோக்கமாகக்கொண்ட இவர்கள், செய்யும் தொழில்களில்கூட சமுதாயத்தையும், சமுதாய மக்களின் வாழ்வை சீரழிக்கும் தொழிலையே செய்வார்கள். மனிதர்களின் மதியை கெடுத்து, தீமை செய்யும் மது, சாராயம் இதுபோன்ற இன்னும் பல போதைப் பொருட்களை விற்னை செய்தல், சூதாட்டம், கள்ளக்கடத்தல், போ- மருந்து தயாரித்தல், உணவு, மற்ற வியாபாரப் பொருட்களில் கலப்படம் செய்தல் போன்ற தவறான முறை தொழில்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள். மற்றவர்கள் வாழப்பொறுக்காதவர்கள்.

இந்த சமுதாயத்தில், பணத்திற்காக அனைத்துவிதமான தவறுகளையும், செய்யும் இவர்கள் சமுதாயத்தில், மக்களிடையே பெரிய மனிதர்கள்போல், கடவுள் பக்தி கொண்டவர்கள்போல், கோவில் கட்டுதல்,

உற்சவம் திருவிழா நடத்துதல், திருப்பணி, விழாக்களில் மக்கள் மத்தியில் கலந்து கொள்வது, தாங்கள் தவறான வழியில் சம்பாதித்த பணத்தில் சிறிதளவு கொடுத்து, ஆன்மிக வள்ளல்கள் பொய் வேஷம் போட்டு, நல்லவர்கள் வேஷத்தில் வாழும் வஞ்சகர்கள் இவர்கள்.

அகத்தியர்: காகபுசுண்டரே, இன்று சபை கலையும் நேரம் நெருங்கிவிட்டது. இவர்களை போன்றே இன்னும் சில வஞ்சக குணம் கொண்டவர்களைப் பற்றி நாளை இத்தமிழ் சபையில் கூறுங்கள். இன்று சபை கலையலாம்.

"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள

கோவேந்தர் உழுதுண்ட கடமைக் கேட்க

குருக்கள் வந்து தடசணைக்கு குறுக்கே நிற்க

பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்க

பாவிமகன் படுந்துயரம் பார்க்க வொண்ôதே.'

(விவேகசிந்தாமணி)

ஒரு ஏழை விவசாயியின் வீட்டில், கன்று ஈன, அப்போது விடாது மழைபெய்து, வீடு இடிந்துபோக, அவன் மழை ஈரம். வய-ல் விதை போடலாம் என்று விதையை எடுத்துக்கொண்ட ஓடும்போது, பணம் கடன் கொடுத்தவர், கடனைத் திருப்பிக்கொடு என்று வழியில் மறித்துக்கொள்ள, அந்த சமயத்தில், விவசாய நிலத்திற்க செலுத்த வேண்டிய வாய்தா, வரிப்பணத்தைக் கொடு என்று அரசு அதிகாரி வந்துகேட்க, அதே சமயத்தில் கோவில் குருக்கள், குறுக்கே வந்து நின்று, தட்சணைகொடு, இல்லையென்றால் தெய்வம் கோபம் கொண்டு உன்னை தண்டிக்கும் என்று மிரட்ட கவிபாடும் பாட்டுக்காரர்கள், தங்களுக்கு காசு கொடு என்று கேட்க, இந்த நாட்டில் பாவி மகன் ஒரு விவசாயி அனுபவிக்கும் துன்பத்தைச் சொல்ல முடியாது.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ் வில் வெற்றி நிச்சயம்!