"காலம் வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இல்லையில்லை; காலம் எப்போதும்போலவே இயல்பாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. காலத் தைத் தொலைத்து இயற்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறது ஆறாவத றிவு. "புதிதாகக் கண்டுபிடிக்கிறேன்' என்று சொல்லி, ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டிருக்கிறது. சமீபமாக வாசித்த ஒரு குறிஞ்செய்தி. "தொலைவின் தேடல்கள் எல்லாமே நம் அருகிலிருந்தபோது தொலைக்கப்பட்டவையே.' எவ்வளவு பட்டவர்த்தமான உண்மையென்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும்; உணரமுடியும்.

சூரியன் அதிகாலை ஐந்து மணிக்கே தனது உயிராற்றலான வெளிச்சம் பரப்பும் வேûயை வெகு நேர்த்தியாகத் துவங்கி விடுகிறது. ஆனால் ஆறாவது அறிவு காற்றாடியை வேகமாகச் சுழலவிட்டு போர்வைக்குள் முடங்கிக் கிடக்கிறது.

நமது சுற்றுச்சூழல், சீதோஷ்ண நிலை, மனநிலை ஆகியவற்றோடு தொடர்புடைய உணவை நாம் உட்கொள்ளாவிட்டால், வரும் கேடுகளுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்பதை திருக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

"அருங்கேடன் என்பது அறிக மருங்கோடி

Advertisment

தீவினை செய்யான் எனின்.'

ஒருவன் தீய நெறியிலிருந்து ஒருபக்க மாக விலகிச்சென்று பிறருக்குத் தீமை செய்யாதிருப்பானானால் அவனுக்கு கேடென்பது வராது.

இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவ மனையின் எண்ணிக்கை 5000-த்தை தாண்டிவிட்டது. பணம் எனும் கொடிய பேராசை எத்தகைய பாதகமான செயலைச் செய்யவும் மனித மனதைத் தூண்டி விடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாம் நமது குழந்தைகளுக்கு வரலாற்றையும், நன்னெறி வாழ்க்கைக் கல்வியையும் போதிக்கத் தவறிவிட்டோம். உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி செம்மொழியாம் தமிழ்மொழி. இதனை அமெரிக்காவின் வரலாற்று ஆராய்ச்சி யாளர் உறுதிப்படுத்துகிறார்.

Advertisment

பல்வேறு ஆய்வுகளும் தமிழ்மொழியின் தொன்மையை விளக்குகின்றன. இன்று நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் பொது அறிவை கணினியில் தேடிக் கொண்டிருக்கின்றனர். நமது வரலாறு வீரம், கல்வி, அன்பு, உறவு, கருணை, ஈகை, ஒழுக்கம் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டங்களைத் தொலைத்து விட்டோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மனமே மிக முக்கிய காரணியாக இருக்கிறது.

அந்த மனதை அமைதியாக, ஆனந்தமாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நம் முன்னோர்கள் மிகச்சிறந்த வழிவகைகளை வகுத்துச் சென்றுள்ளனர். அமைதியில்லா மனம், ஆரோக்கியக் கேட்டைத் தரும். "மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்' என்பது ஆன்றோரின் வாக்கு. மனதைப் பற்றி திருவள்ளுவரின் கூற்றினைப் பார்ப்போம்.

"மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்

தானாம்

இன்னான் எனப்படும் சொல்.'

மக்களுக்கு இயற்கையான புலன் உணர்வு, அவரவர் மனம் காரணமாக உண்டாகும். இவன் இப்படிப்பட்டவனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படும் சொல், அவன் சேர்ந்த இனம் காரணமாக உண்டாகும். இங்கே இனம் என்பது நன்னெறியுடன் கூடிய நட்பு என்று பொருளாகிறது.

nn

மனதின் செயல்பாட்டினை விளக்கும் திருமந்திரக் கூற்றினைப் பார்க்கலாம்.

"மனமாயை மாயை இம்மாயை மயக்க

மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை

பினை மாய்வதில்லை பிதற்றவும் வேண்டா

தனை ஆய்ந்திருப்பது தத்துவம் தானே.'

மனத்துள் எழும் பந்தபாசப் பற்றுகளே மாயையாகும். மாயை, ஆசையைத் தூண்டும். இந்த மாயையானது அறிவை, மனதை மயக்கும் இயல்புடையது. இந்த ஆசையைத் தூண்டும் மயக்கம் அழிந்து விட்டால்போதும். வேறு துன்பங்கள் எதுவுமில்லை. இதற்குமேல் விடுவதற்கும், அழிவதற்கும் ஒன்றுமில்லை. எனவே வீணாக வெறும் பேச்சு பேசிக்கொண்டிருக்காமல், தன்னையறிவதே தத்துவம் என்பதை யுணர்ந்து, நம்மையறிய முயற்சி செய்ய வேண்டும். தத்துவம் என்பது தன்னை உணர்வது. தன்னை உணர்வதென்பது, நம்மை மயக்கித் தீயவழி செல்லத் தூண்டும் பாசங்களை விட்டொழிப்பது. ஏனெனில் அது நம்மை அடக்கும். நாம் பாசத்தை (மாயை) அடக்கிவிட்டால் அது நமக்குள் ஒடுங்கிவிடும்.

மனம் வசிக்கும் இடத்திலேயே உயிர் குடிகொண்டிருக்கிறது. மனம் செய்யும் வேலைகளையும், மனம் இருக்கும் இடத்தையும் உணர்ந்து அதைப் பாதுகாக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகில் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன்பு உருவாக்கப்பட்ட ஈபிள் டவர், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை ஆகியன எல்லாம் தனது மையப்புள்ளியிலிருந்து சற்றே விலகியிருப்பதாக ஊடகங்கள், பத்திரிகைகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துமிக கம்பீரமாகக் காட்சியளிக்கும் நமது தஞ்சை பிரகதீஸ்வரர் எனும் பெரிய கோவில் தனது மையப்புள்ளியைவிட்டு இம்மியளவுகூட நகராமல் வானுயர்ந்து நிற்பது நமது கட்டடக் கலையை, சிற்பக் கலையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இருக்கின்றது.

இந்தக் கோவில் உருவாகக் காரணமாக இருந்த மூலப் பொருட்கள், நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று எனும் ஐம்பூதங் களாகும். இதனை பஞ்சபூத சக்திகள் (Five Elements Energy) என்று அழைக்கிறோம்.

இந்த பஞ்சபூத சக்திகள் அகமும், புறமும் என்று அண்டமெங்கும் விரிந்து பரந்து வியாபித்திருக்கிறது. இதனைப் போன்றதே இறைவனளித்த இவ்வுயிர் குடிகொண்டிருக்கும் மானிட உடலெனும் பிறவியாகும். இந்த மானுடப் பிறவியின் கட்டுமானப் பொருட்கள் இரண்டு வகைப்படும்.

1. மூலப்பொருள். அது விந்தணு, கருமுட்டை. இவை உயிர் உருவாகக் காரணப் பொருட்கள்.

2. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து மூலப்பொருட்களின் இணைப் பொருட்கள்.

நம்மைப் பொருத்தவரை பூமிப்பந்தில் ஒரு அணுத்துகளே மானிட உடலெனும் நிலப்பரப்பாகும். பூமிப் பந்தைச் சுற்றி 80 சதவிகிதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. உடலெனும் பூமியும் 80 சதவிகிதம் நீர் நிறைந்தே காணப்படுகிறது. குருதி யோட்டமும், ஒன்பது வாசல்களும் உஷ்ணமாகவே (நெருப்பு) இருக்கிறது. உடலெனும் பூமியில் கண்ணுக்குப் புலப்படாத, எண்ணிக்கையில் அடங்கா அணுக்களின் கூட்டம் (ஆகாயம்) வெட்டவெளி எனும் பெயரில் கண்ணுக் குப் புலப்படா வண்ணம் இயங்கிக்கொண்டி ருக்கிறது. இந்த நான்கின் சேர்க்கையும் கொண்ட இவ்வுடலெனும் பூமி சரியாக இயங்க, உயிர் (காற்று) மிக முக்கியம். இவ்வாறு பஞ்சபூதங்களும் நமது ஐம்புலன்களுடன் நுணுக்கமான, நுட்பமான தொடர்பில் உள்ளன. இவ்வாறு உடலில் பொருந்தியுள்ள கண்ணுக்குத் தெரியும் புலன்களை நிலைதடுமாறச் செய்வது கண்ணுக்குத் தெரியாத மனமாகும். இந்த மனம் சரியாக இயங்க, செயல்பட வேண்டுமென்றால் இறைவன் குடிகொண்டிருக்கும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். ஆரோக்கியம் பாதுகாக்கப்பட திருமந்திரம் கூறும் உபாயத்தைப் பார்க்கலாம்.

"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.'

உள்ளமும் மனமும் கருவறை. சதையால் (சப்த தாதுக்கள்) ஆக்கிரமிக்கப்பட்ட இவ்வுடம்பானது ஆலயமாகத் திகழ்கின்றது. அகிலத்திலுள்ள அனைத்துயிர்களுக்கும் கருணையோடு அருளை வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிற பரம்பொருளை வழிபட (உள்ளத்திற்கு) கோபுரவாசலாக வாயானது உள்ளது. அறிவு விளக்கமுற்று, அறியாமை எனும் இருளகன்று, தெள்ளத் தெளிவான மனநிலை வாய்க்கப்பெற்ற ஒருவனுக்கு, உயிரே (சீவன்) வணங்கத்தக்க சிவலிங்கமாகும். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐந்துபுலன்களும், அவை பொருந்தியுள்ள உடலுக்கு வஞ்சகமாக, அறிவைத் தம் இச்சைக்கேற்ப செயல்படச் செய்வதால், அவை கள்ளப்புலன்கள் எனப் பட்டது. ஆனால் ஐந்து புலன்களும் கோவிலின் மிகப்பெரிய ஐந்து அழகிய மணிவிளக்குகளையே குறிக்கிறது.

இப்படி இறைவன் அருளிய உடலைப் பாதுகாக்கும் வழியை திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறும் கூற்றினையும் பார்க்கலாம். உடலே இறைவன் குடிகொண்டுள்ள வீடு என்கிறார் திருமூலர்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடபினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோவில்கொண் டானென்று,

உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.'

உடம்பை முன்பு பாவச்சுமையாகக் கருதினேன். அப்படி நினைத்துக்கொண்டி ருந்த நான், இந்த உடம்பினுள்ளே இருக்கும் சிறந்த செல்வத்தைக் கண்டுகொண்டேன். பிறகுதான் உடம்பினுள் இருக்கும் சிறந்த செல்வம் என்பது உத்தமனாகிய பரம்பொருள் சிவம் என்பதை உணர்ந்தேன். இந்த உண்மையை உணர்ந்தபின், உடம்பைப் போற்றி, வணங்கி பேணிப் பாதுகாத்து வருகிறேன்.

இப்பாடல் நமக்குணர்த்துவது, நம் உடம்பினுள்ளே இறைவன் இருக்கிறான் என்பதேயாகும். அத்தகைய இவ்வுடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நல்ல உணவு அவசியம். உணவே உணர்வாகப் பிரதிபலிக்கும். சமச்சீர் உணவும், அதனால் உருவாகும் உணர்வும் உடலெனும் ஆலயத்தை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள உதவும் அருமருந்தாகும். இதைக் கடைப்பிடிக்கும்போது எந்த நோயைப் பற்றிய பயமோ, கவலையோ தேவையில்லை.

நம்மிடமிருக்கும் வளத்தால் (செல்வம்) நலத்தை ஒருக்காலும் வாங்கமுடியாது. நம் மனமும், உடலும் நலமாக (ஆரோக்கியம்) இருந்தால் இறைவன், எம்பொருள், அணுக்களின் தலைவனாம் சிவம், நமக்கு அணைத்து வளங்களையும் அள்ளித் தந்தருளும்! அருட்பெருஞ்சோதி...

அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!