புத்தர் ஒரு சமயம் புத்த மடத்தின் புதிய கிளைக்குச் சென்றிருந்தார். சீடர்களான புத்த பிக்குகளெல்லாம் ஒருவித ஆர்வத்தோடு புத்தரை வரவேற்க மடத்தின் வெüயே காத்திருந்த னர்.
புத்தபிரானின் முதல்நாள் வருகை என்பதால் அன்று பிக்கு கüடம் மட்டுமே கலந்துரை யாடலுக்கு ஏற்பாடு செய்திருந் தார் மடத்தின் பொறுப்பாளர். மறுநாüலிருந்து அம்மடத்தில் தங்கும் வரை மாலை நேரங்கüல் புத்தபிரானின் நல்லுரையை மக்கள் கேட்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
புத்தர் அருள் பொழியும் புன்னகை முகத்துடன் வந்தார்.
அவரை வரவேற்று, அவருக்கான எüமையான, பிக்குகள் அனைவரையும் புத்தர் பார்க்கும்படியான ஒரு உயரம் தூக்கலான இடத்தில் அமரவைத்தனர்.
ஆயினும் பிக்குகüன் முகங்கüலெல் லாம் ஒருவிதக் குழப்பம்.
இதுவரை கேள்விப்படாத விஷயமாக புத்தரின் கையில் கைக்குட்டை ஒன்று இருந்தது. புத்தர் அந்த கைக்குட்டைத் துணி யில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே இருந்தார். அவரின் செயல் பிக்குகளுக்கு விநோதமாக இருந்தது.
அந்தத் துணியில் நிறைய முடிச்சு களை இட்டபின்... அதை உயர்த்திக் காட்டி... "நான் மடத்திற்குள் வரும்போது கொண்டு வந்த துணியும் இதுவும் ஒன்றா?'' எனக் கேட்டார். ஒரு பிக்கு எழுந்து... "இல்லை' என்றார். இன்னொரு பிக்குவோ... "அதே துணி தான் பிரானே. ஆனால் அது இல்லையோ? என்கிற அளவிற்கு மாறுதல் தெரிகிறது. இருப்பினும்.... அதே துணிதான்'' என்றார்.
"மிகச்சரியாகச் சொன்னாய்... இந்தத் துணியை பழைய நிலைக்கு கொண்டுவர இயலுமா?'' என்றார் புத்தர்.
"முடியும்; ஆனால்... துணியில் போடப் பட்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் பக்குவ மும், பொறுமையும் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் முடிச்சு இறுகி, அந்தத் துணியை பயன்படுத்த முடியாதபடி செய்து விடும்'' என்றார் ஒரு பிக்கு.
அந்த பிக்குவைப் பாராட்டிய புத்த பிரான் "மிகநுட்பமாக யோசித்து பதில் சொல்லியிருக்கிறாய்... நன்றி.
உறவுகள் என்பதும் எப்போதும் பிரச்சினைகள் - சிக்கல் எனும் முடிச்சுகள் நிறைந்ததே. அந்த முடிச்சுகளை நாம் கவனமாகக் கையாள வேண்டும். கொஞ்சம் பிசகி னாலும் உறவு முறிந்துபோகும்'' என்றார் புத்தமகான்.
1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜா இயக்கத் தில் வந்த குடும்பத் திரைப்படம் "ஒரு விடுகதை ஒரு தொடர்கதை'. விஜயன், ஷோபா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருந் தனர். கதைப்படி நாயகி திருமணமானவள்.
ஆனால் ஒரு அழகான விளையாட்டு வீரரைக் கண்டு, மையல் கொண்டு, அவனுட னேயே வாழப்போய்விடுவாள். நாயகன் எவ்வித ஆர்ப்பாடமும் இன்றி, அவளை விட்டுக்கொடுத்துவிடுவான். எவ்வித உறவுச் சிக்கலும் வராமல் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பான்.
"விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பமும் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று'
என்கிற அருமையான பாடலை எழுதி, இசையமைத்திருப்பார் கங்கை அமரன்.
நம் உறவில் விழுந்த சிக்கலை சுமுகமாக ஆக்குவதும், கடினமாக ஆக்குவதும் வேறு யார் கையில் இருக்கிறது?
நிச்சயமாய்... உங்கள் கையில்தான் இருக்கிறது.