சைவமென்னும் சமுத் திரத்தில் நீந்தி, கரைகண்ட மெய்ஞ்ஞானிகளும், அடியார் களும் இவ்வுலகில் எண்ணற்ற வர்கள். அவர்களிடம் இறை வன் புரிந்த திருவிளையாடல் கள் கணக்கற்றவை. அவர்கள் ஆற்றிய இறை சேவையோ அளவில்லாதவை.
அப்படிப்பட்ட மெய்ஞானிகளுள், அதிலும் முருகனடியார்களுள் ஒருவராகத் திகழ்ந்தவரே ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள். இவருக்கும் தர்மாரண்யம் என்னும் ஆரணிக்கும் சம்பந்தம் என்ன? இவரது அவதார மகிமை என்ன? முழுமையாக அறிந்திடுவோம்! வாரீர்!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், அத்மகூர் என்னுமிடத்தில் வீரசைவ நெறி முறைகளைக் கடைபிடித்து, வீரசைவ அந்தணர் மரபினர் பலர் வாழ்ந்துவந்தனர்.
அவர்களுள் வேத, ஆகம, புராண இதி காசங்களைக் கற்று, வல்லுனராகத் திகழ்ந்தவர் ஸ்ரீசோமநாத ஆராத்திரியர். இவர் 64 கலைகளிலும் தேர்ச்சிபெற்றவர். இவர் பல ஆதாரங்களுடன் தொகுத்த நூல் "சோமநாதர் ஆராத்திரியர் பத்ததி' என்று சிறப்புடன் விளங்குகிறது. இந்நூல் வீர சைவ மரபினரின் அருநிதியாகத் திகழ்கின் றது. இவரது வழித்தோன்றலான மல்லைய தேவரும், அவரது மனைவி பிரமரகுந்தளாம் பாளும் அறநெறி தவறாமல் இல்வாழ்க்கை நடத்திவந்தனர். எனினும், இவர்கள் புத்திர சந்தானம் இல்லாமல் வருந்தினர்.
மல்லைய தேவர் ஒரு சிறந்த சொற் பொழிவாளர். இவருக்கு பல சீடர்கள் இருந்தனர். ஒருநாள் இவரது சீடர்களின் அழைப்பால் பழனிக்கு தனது துணைவி யாருடன் புறப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan_147.jpg)
அங்கு ஸ்ரீ பழனி ஆண்டவனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு தரிசனம் பெற்று, புராணச் சொற்பொழிவையும் ஆற்றினார். சில நாட்கள் பழனியில் தங்கி, தினமும் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் அற்புத தரிசனம் கண்டு, தமக்கு குழந்தையில்லா நிலையை கந்தனிடம் கூறிவந்தார். பின்னர் அத்மகூருக்கு திரும்பினார். முருகனருளால் இத்தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த மகன் சுப்பிர மணியம். இளைய மகன் மல்லையன். இருவரும் தந்தையைப் போன்றே கல்வி- கேள்விகளில் வல்லவராகத் திகழ்ந்தனர். இளையவரான மல்லையன் சிறு வயதிலேயே துறவறம் பூண்டு, ஸ்ரீசைலம் சென்று மடத்தில் சேர்ந்துவிட்டார்.
மூத்தவரான சுப்பிரமணிய ஐயர் தனது மாமன் மகளான சுப்பம்மாவை மணந்து, இல்லறத்தில் ஈடுபட்டார். பல காலமாகியும் இத்தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைக்க வில்லை. இதனால் மிகுந்த மனவாட்டம் அடைந் தனர்.
அப்போது சுப்பிரமணிய ஐயருக்கு தான் பழனி ஆண்டவரின் அருளால் பிறந்தது நினை விற்கு வந்தது. உடன் தனது மனைவியுடன் பழனிக்குச் சென்றார். சில நாள் அங்கு தங்கினார். அப்போது தைப்பூசம் நெருங்கிவந்தது. பூசத்திருநாளுக்கு முன்னால் புனர்பூசத்தன்று இத்தம்பதிகள் இருவர் கனவிலும் தோன்றிய பழனியம்பதி முருகப் பெருமான், "ஒரு சிறந்த தவப்புதல்வன் உங்களுக்கு பிறப்பான் என்று அருள் மொழிந்தார். அதிகாலையில் இக்கனவை கண்ட இருவரும், அதைப்பற்றி சொல்லி சிலாகித்துக்கொண்டனர். மகிழ்ந்த இருவரும் சண்முக நதியில் நீராடி, சரவணனை வணங்கினர். அடியவர்களுக்கு அன்னமிட்டு மகிழ்ந்தனர்.
சில நாட்கள் பழனியில் தங்கிய தம்பதியர்கள் திருச் செந்தூரைப் பார்க்க விரும்பி, அங்கு சென்றனர். அங்கு மாசிப் பெருவிழாவினைக் கண்டு இன்புற்று, சில நாள் தங்கினார். அப்போது மீண்டும் கனவில் உதித்தக் கந்தக்கடவுள், சுப்பம்மாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆறுமுககுரு எனப் பெயரிட்டு அவர்களுக்கு திருநீறு தந்து மறைகின்றார். கனவுக் காட்சியினை சுப்பம்மா கூறிட, இருவரும் மெய் சிலிர்த்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி, நடுநாட்டை வந்தடைந் தனர்.
திருக்கோவிலூரில் தங்கினர். திருவீரட் டானேஸ்வரர் திருவருளால் 4774-ஆம் ஆண்டுகள் (கி.பி. 97) கார்த்திகை தீபத்திரு நாளில் திருஅவதாரம் செய்கின்றார் ஆறுமுக குரு என்னும் ஞானியார் சுவாமிகள். ஆறுமுக குரு பிறந்த மூன்று நாட்களில் அவரது தாயார் சுப்பம்மா மறைந்துவிடுகிறார். தந்தை சுப்பிரமணிய ஐயர், திருக்கோவிலூர் திருமடத்து வீரசைவத் துறவியிடம் மகன் ஆறுமுககுருவை வளர்க்கும்படி கூறி ஒப்படைத்துவிட்டு ஸ்ரீசைலம் சென்றுவிடுகின்றார்.
ஆறுமுக குருவானவர் கல்வி, கேள்வி, இஷ்டலிங்க பூஜை, சிவாலய தரிசனம் என மேன்மையடைந்து, அஷ்டாங்க யோகத்தை கற்றறிந்ததோடு சகல ஞான விஷயங்களையும் கற்றறிந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan1_24.jpg)
இந்த தெய்வீக குழந்தை யின் தோற்றம் திருவண்ணா மலையிலுள்ள குகை நமச்சிவாயர் திருமடத்தின் ஆறாம் மடாதிபதிக்கு, குகை நமச்சிவாயர் வாயிலாக ஞானமார்க்கமாக தெரிய வந்தது. அப்போது ஆறாம் மடாதிபதி ஜீவித்திருக்கும் காலத் தில் அடுத்தபடியாக பட்டம் சூட்டப்பெற்றி ருந்த ஏழாம் மடாதிபதி திடீரென சிவகதி அடைந்துவிட்டார். இதனால் அடுத்த மடாதிபதி ஒருவர் இல்லாததால் வருத்தம் கொண்டார் ஆறாம் குரு. பின்னர், ஆதி குரு வான குகை நமசிவாய ரின் கனவு வழிகாட்டுதல் படி தனது சீடர்களுடன் திருக்கோவிலூர் வந்தார் ஆறாம் குரு. வீரசைவ மடத்தினை அடைந்த இவர், ஆறுமுகம் குருவிற்கு தூல பஞ்சாட்சரத்தை உபதேசம் செய்து, சிவலிங்கத்தையும் கழுத்தினில் அணிவித்தார்.
அங்கே சூட்சம பஞ்சாட்சரத்தை திருக் கோவிலூர் நாயகியாம் அன்னை பெரிய நாயகி உபதேசிக்க, காரணம் பஞ்சாட்சரத்தை குலகுருவான சோமநாத ஆராத்திரியர் உபதேசம் செய்ய, சிவஞானத்தை உபதேசித்தார் கோவில் வீரட்டானேஸ்வரர். இப்படியாக, துறவிகள் பலருக்கும் கிட்டாத பேறுகள் எல்லாம் கிடைத்தது ஆறுமுகம் குருவிற்கு.
இதற்கும் மேலாக சாட்சாத் அந்த சுப்பிரமணியரே இவருக்கு பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்தருளுகின்றார். பிரணவத்தின் பொருளை முதலில் தந்தை ஈசனுக்கும், பின்னர் அகத்தியருக்கும், அடுத்த படியாக அருணகிரிநாதருக்கும், அதன்பின்னர் இந்த ஆறுமுக குருவிற்கும் உபதேசித்தருளி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈசன் இவ்வருட் துறவிக்கு திருநீற்றுப் பையும், ருத்ராட்ச மாலையும் அளித்தருளினார்.
கமண்டல நாக நதிக்கு தென்பால் தர்மாரண்யம் என்னும் இந்த ஆரணி மாநகரில் கோவில் தொண்டு அருளுகின்றார் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி. கிழக்கு நோக்கிய ஐந்து கலசங்களுடனான ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் ஆலயம் அழகுற அமைந்துள் ளது.
உள்ளே சென்றதும், நேராக பலிபீடம் மற்றும் த்வஜஸ்தம்பம். அதன் முன்னே வாகனங்களாக நடுவே மயிலும், இருபுறமும் இரண்டு நந்திகளும் உள்ளன. சிவ ஸ்வரூபமான இவ்வாலய கந்தனுக்கு நந்தியும் வாகனமாகத் திகழ்கின்றது. இங்கு பஞ்சாட்சர படிகள் என்னும் ஐந்து படிகள் உள்ளன. இது போன்று திருச்செந்தூர் மற்றும் திருப்பரங் குன்றத்திலும் உள்ளன. 16 கால்கள்கொண்ட மண்டபம் பழமையை பறைசாற்றுகின்றன.
அங்கிருந்தபடியே மூலவரை கண் நோக்குகின்றோம். கருவறையுள் கருணாமூர்த்தியாக வள்ளி- தெய்வானையுடன் கருணைப் பொழிகின்றார் ஸ்ரீ சுப்பிர மணிய சுவாமி. பன்னிரு கரங்கள்கொண்டு, பக்தர்களின் எண்ணங்களை படியெடுக்கின் றான் இந்த பன்னிரு கரத்தோன். இவரது தலைப்பகுதியில் சிவலிங்கம் காணப்படுகிறது. இவரது பன்னிரண்டு கரங்களில் சக்தியின் ஆயுதமான திரிசூலம் காணப்படுவது விசேஷ ஒன்றாகும்.
அற்புத தரிசனத்தை முடித்து, ஆலய வலம்வருகையில், தென் கோஷ்டத்தில் எழுந்தருளுகின்றார் தென்முகக் கடவுளான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. வடகோஷ்டத்தில் ஸ்கந்த மாதாவான ஸ்ரீ ஸ்கந்த துர்க்கை இரு கரங்களிலும் நீலோற்பல மலர் ஏந்தி அமர்ந்துள்ளாள். இந்த ஸ்கந்த மாதாவிற்கு ஒரு புராணம் உண்டு. இவள் 5-ஆவது துர்க்கையாக போற்றப்படுகின்றாள்.
ஈசனது நெற்றியில் இருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகளை முதலில் வாயு பகவான் பெற்று, அக்னியிடம் தர, அந்தத் தீப்பொறியில் கொதிப்பினை தாங்காத அக்னி அன்னை பராசக்தியை வேண்டிட, அன்னை துர்க்கையாக வடிவங்கொண்டு, அந்த ஆறு தீப்பொறிகளைப் பெற்று சரவணப்பொய்கையில் சேர்க்கின்றாள். துர்க்கையின் இந்த வடிவமே ஸ்கந்த துர்க்கை என்றும் ஸ்கந்த மாதா என்றும் போற்றி, துதிக்கப்படுகின்றாள். இச்சன்னிதிக்கு பின்புறம் கருங்கல் மண்டபம் ஒன்று பாங்குற அமைக்கப் பட்டுள்ளது.
இங்கே ஆலய உற்சவ மூர்த்தங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத் தூண்களில் எழில் கொஞ்சும் புடைப்புச் சிற்பங்கள் ஏராளம். மண்டபத்தின் வெளிப்புறமாக தெற்கு பார்த்தபடி நின்றுள்ளார் ஸ்ரீ தண்டபாணி சுவாமி.
வாயு திசையில் விசித்திரமான வன்னி மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் வடக்குப்புற கிளைகள் முள்ளுடனும், தென்புற கிளைகள் முள் இல்லாமலும் வளர்கின்றது. இம்மரத்தில் மும்மூர்த்திகள் வாசம்புரிகின்றனர் என்றும் இதுபோன்ற அமைப்பு ஒரு லட்சம் மரங்களில் ஒன்று மட்டுமே இருக்கும் என்றும், இங்கு தசவித தானங்கள் தந்தால் அதன் பலன் கோடி மடங்கு பெருகும் என்றும் கூறுகின்றார் இவ்வாலய அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார்.
இவ்வன்னி மரமே இத்தலத்தின் முதன்மை விருட்சமாகத் திகழ்கிறது. அருகே வில்வ மரம் ஒன்றும் உள்ளது. சற்று முன்னே நவகிரக சன்னதி யும் அமைந்துள்ளன. ஈசான திசையில் ஸ்ரீ பொங்கு சனீஸ்வரர் ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். அருகே அவசர காலங்களில் வெளியேறும் துணைவழி ஒன்று உள்ளது.
திட்டமான ஆலயம். அதிர்வலைகள் அதிகமாக உணரப்படுகிறது.
கடலூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் மடாலய நிர்வாகத் திற்கு உட்பட்ட இவ்வாலயத் தில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறு கின்றன. தினமும் காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் 8.30 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். இவ்வாலயக் கும்பாபிஷேகம் 2005-ஆம் ஆண்டு வெகுசிறப்புடன் நடைபெற்றுள்ளது.
சித்திரை வருடப்பிறப் பில் ஆரம்பித்து ஒரு வாரம் சூரிய ஒளி ஸ்கந்தன்மீது படரும். அப்போது முதல்நாளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதுபோல் ஆவணிமுதல் தேதியிலிருந்து ஒருவாரம் சூரிய ஒளி படர்கிறன்து. வைகாசி விசாகம், ஆடி மற்றும் தை கிருத்திகைகள், ஐப்பசியில் ஸ்கந்தர் சஷ்டி ஆறு நாட்கள் சிறப்பு வழிபாடும், லட்சார்ச்சனையும் நடைபெறும். சூரசம்ஹாரமும் விமரிசையாக நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் திரு நட்சத்திரமும், தீப உற்சவமும் சிறப்புற நடைபெறுகின்றது.
அற்புத சக்திநிறைந்த ஸ்கந்த துர்க்கையை செவ்வாய்க்கிழமைகளில் அபிஷேகித்து வழிபட, படைவீரர்கள் மற்றும் போலீஸ் துறைகளில் தேர்ச்சிபெறுகின்றனர். அதோடு செவ்வாய் தோஷத்திலிருந்தும் விடுதலை பெறுகின்றனர். எண்ணற்ற விசேஷப் பலன்களை அருளிய இத்தல முருகன், குறிப்பாக புத்திர சந்தானம், வியாபாரம் மற்றும் விவசாயத்திற்கு அருள் புரிகின்றார். ஸ்ரீ சுப்ர மணிய சுவாமியைத் தரிசித்து சுகமான வாழ்வை பெறுவோம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/murugan-t.jpg)