ந்துக்கள் மிக புனிதமாக வழிபடும் செடி துளசி! மருத்துவரீதியாக பல பலன்கள் கொண்ட மூலிகைத் தாவரம். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட இந்த துளசி பச்சை நிறத்தில் ராமத்துளசி என்றும், கரும் ஊதா நிறத்தில் கிருஷ்ண துளசி என்றும் இருவகைகளில் உள்ளன. ஆங்கிலத்தில் இஹள்ண்ப் என்றும், தாவரவியலில் ஒசிமம் டெனுட்ப்ளோரம் (ஞஸ்ரீண்ம்ன்ம் பங்ய்ய்ண்ள்ச்ப்ர்ழ்ன்ம்) எனவும் அழைப்பதுண்டு. இந்த துளசி ஆண்டிமைக் ரோபியிஸ் மற்றும் ஆண்டி வைரஸ் போன்ற குணங் களைக் கொண்டுள்ளதால் காற்றில் உண்டாகும் மாசை சுத்தப்படுத்தும் தன்மை யைக் கொண்டுள்ளது. கொரோனா காலகட்டத் தில் மக்கள் துளசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தைத்தான் விரும் பிப் பருகி நலமுடன் வாழ்ந்த னர். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இப்படிப் பலவிதமான மருத்துவ குணம்கொண்ட துளசி ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமியின் அம்ச மான புனித துளசிக்கு பிருந்தாவனி, பிருந்தா, விஸ்வபூஜிதா, புஷ்ப சரா, நந்தினா, கிருஷ்ண ஜீவளி, விஸ்வ பவனி, துளசி பத்ரம் என்கிற எட்டு வகையான பெயர்கள் உண்டு. ஆழ்வார்கள் தங்களின் பாசுரங்களில் துளசியை "திருத்துழாய்' எனப் போற்றி பாடியுள்ளார் நம்மாழ் வார்.

"ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய்

நீடு நின்றவை ஆடும் அம்மானே''

Advertisment

என எட்டாம் திருவாய்மொழியில் பாடியுள்ளார். துளசி மாலை அணிந்த திருமாலே தன்னை வழிநடத்தும் தலைவன் என்கிற பொருளில் பாடி யுள்ளார். அதேபோன்று பூததாழ்வார்.

"பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி

தாம் தொழா நிற்பார் தமர்'' (2124)

Advertisment

மகாவிஷ்ணுவை வழிபாட்டிற்குப் பயன் படும் துளசியைப் பற்றி ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.

"பாடோமே எந்தை பெருமானை? பாடி நின்று

ஆடோமே ஆயிரம் பேரானை? பேர் நினைத்து

சூடோமே சூடும் துழாய் அலங்கல்? சூடிநாம்

கூடோமே கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சமே'' (1978)

என துளசியைப்பற்றி பெரிய திருமொழியில் பாடியுள்ளார். கிருஷ்ணாஷ்டகத்தில்,

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம்

அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (6)

ss

என ஒரு ஸ்லோகம் வருகிறது. துளசியின் நறுமணத்தால் மிகவும் சந்தோஷப்படுபவர் கிருஷ்ண பரமாத்மா எனச் சொல்லப்பட்டுள்ளது. புனித துளசியை தினமும் இளம்வயதில் சீதா பூஜை செய்ததால் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என துளசி ராமாயணம் தெரிவிக்கிறது. கர்நாடக சங்கீதத்தின் பிதாமகனான தியாகராஜ சுவாமிகள் இராமரிடம் அபார பக்தியைக் கொண்டவர் அவர் தனது கீர்த்தனையில், "துளசி தலமுலாச்சே' என துளசியைப்பற்றி பாடியுள்ளார். இப்படி வைணவ நெறியில் தெய்வீக துளசிக்குத்தான் முக்கியமான இடமுண்டு. மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தது துளசி இலைதான். அதேபோன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது வில்வ இலை. விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ, அம்பாளுக்கு சிகப்பு நிற அரளி, செம்பருத்தி, சரஸ்வதிக்கு வெள்ளைத்தாமரைப்பூ, லட்சுமிக்கு சிகப்பு நிறத்தாமரைப்பூ என ஒவ்வொரு தேவதைகளுக்கும் பூஜையின்போது குறிப்பிட்ட பூ, இலைகளைக்கொண்டு வழிபடுவது (வழக்கம்) மரபு. சிவபெருமானுக்கு பிடித்த வில்வ இலையைக்கொண்டு அர்ச்சனை, மாலை சாத்துவது என இல்லாமல் மகாவிஷ்ணு வின் அம்சமான துளசியைக் கொண்டு மாமுனியான அகத்தியர் ஒரு மாற்று முறையில் வழக்கத்திற்கு மாறாக வழிபட்டதால் அந்த சிவபெருமானுக்கு ஸ்ரீ துளசீஸ்வரர் என்கிற பெயர்வந்தது. சுமார் 1,400 ஆண்டுகளுக்குமுன்பு சென்னையை அடுத்த செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை யில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள குளத்தூர் என்கிற கிராமத்தில், துளசி வனமாக இருந்த இடத்தில் அகத்திய முனிவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கோவில் தலப்புராணம் கூறுகிறது.

சிவபெருமான், பார்வதிதேவியின் திருக்கல்யாண வைபவ திருக்காட்சியை தென்திசையிலிருந்து கண்டு மனம் குளிர்ந்த அகத்திய முனிவர்தான் சென்ற முக்கிய இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இதுபோன்ற அரிய செய்தி களை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியார் தனது நூலில் கூறியுள்ளார். சிவபெருமான்மீது மிகுந்த பக்திகொண்டு அவன் அருளைப் பெற்ற அகத்தியரைப் பற்றி திருநின்றியூர் பதிகத்தில்,

"வந்தோ ரிந்திரன் வழிபட மகிழ்ந்து

வான நாடுநீ யாள்கென அருளி''...

எனத் தொடங்கும் பாடலில் சுந்தமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் "நடுவு நில்லாது சரிந்த இவ்வுலகைச்' சீர் செய்ய குறுமுனியான அகத்தியரை சிவபெருமான் தெற்குத் திசைக்கு அனுப்பியதாகப் பாடியுள்ளார். அதேபோல் சிலப்பதிகாரத்தில் "மாமுனி பொதியின் மலைவலம்கொண்டு' எனப் பாடப்பட்டுள்ளது. தனக்கு தமிழறிவுறுத்திய சிவபெருமானை முழுமுதற் கடவுளாக நினைத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் அகத்தியர் வழிபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிவாலயத் தைக் கட்டியதாகத் தெரிகிறது. 7-ஆம் நூற்றாண்டின் இறுதி கால கட்டத்தில் பல்லவ வம்சத்தின் இரண்டாம் நரசிம்மவர்மனால் திருப்பணி செய்யப்பட்ட கைலாசநாதர் கோவிலின் தெற்கு பிராகாரத்திலுள்ள அகத்தியர் கோவிலே முதன்மையான, பழமையான கோவில் எனச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களுக்குச் சென்ற அகத்தியர் குளத்தூருக்கு வருகை தந்துபோது அவருக்கு இவ்விடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் என மனதில் தோன்றவே, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். பொதுவாக அகத்தியரால் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டால் அந்த லிங்க திருமேனியின் பீடம் சதுரவடிவில்தான் (ஆரிட லிங்கம்) இருக்கும். அதேபோன்றுதான் இங்கு மூலவர் ஸ்ரீ துளசீஸ்வரர் காட்சியளிக்கி றார்.

சிவ பூஜைக்கு உரிய வில்வம் கிடைக்காத தால் அப்பகுதியில் அதிகளவு வளர்ந்த துளசியைக்கொண்டு தினமும் அர்ச்சனை செய்தார். ஒருநாள் சிவபெருமானுக்கு (லிங்கம்) துளசியால் கட்டப்பட்ட மாலை சாத்தும்போது, அகத்தியர் குள்ள உருவம் என்பதால் சிவலிங்கம் தன் தலையை கீழே சாய்த்து மாலையை விரும்பி ஏற்றுக் கொண்டது. இன்றளவும் மூலவரின் லிங்க திருமேனி ஈசான மூலை (வடக்கிழக்கு) பக்கம் சற்று சாய்ந்து திரும்பியவண்ணம் அமைந்துள்ளது. சிவபூஜைக்கும், அபிஷேகத்திற்கும் உபயோகப்படும்வண்ணம் ஒரு தடாகத்தை (குளம்) கோவிலுக்கு அருகே ஏற்படுத்தினார். கிழக்குத் திசையை நோக்கி இருக்கும் மூலவர் துளசீஸ்வரர் சந்நிதிக்கு அருகே மேற்கு திசையை நோக்கியவண்ணம் வில்வநாயகி எனும் பெயரில் அம்பாள் சந்நிதி உள்ளது. இக்கோவிலில் கல்யாண துர்க்கை (பிடாரி அம்மன்) வடக்கு திசை நோக்கி எழுந்தளியுள்ளார். கல்யாண துர்க்கையை வழிபட திருமண தடங்கல்கள் நீங்கும் என்பது மட்டுமின்றி கணவன்- மனைவியிடையே பிரச்சினை நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும் என்பது ஐதீகம். இக்கோவிலை உருவாக்கிய அகத்திய முனிவர் தவக்கோலத்தில் சிறிய சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவருக்கு உகந்த ஆயில்யம் நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இக்கோவில் அமைந்துள்ள குளத்தூருக்கு முற்காலத்தில் செம்பியன் குளத்தூர் என்று பெயர். சோழ மன்னர்களை செம்பியன் எனவும் சொல்லுவதுண்டு. இக்கோவிலில் திருப்பணி செய்யும்போது கிடைத்த கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இக்கல்வெட்டு சோழ மன்னரான விக்கிரம சோழன் (கி.பி. 1122-1135 ஆட்சி) காலத்தைச் சார்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். சோ பட்டத்து ராணியான திருவயிறவாய்ந்த பிராட்டியாருக்கு செம்பியன் மகாதேவி என்கிற ஒரு பெயரும் உண்டு.

பழமையான இந்த ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளசீஸ்வரர் கோவில் மன்னர் களின் ஆட்சியில் மானியத்தைக்கொண்டு நித்திய பூஜைகளும், திருப்பணிகளும் சரிவர நடந்தது. காலப்போக்கில் அரசியல் சூழ்நிலை காரணமாக கடந்த சில ஆண்டு களாக கவனிப்பாரற்று கட்டடம் சிதலடையத் தொடங்கியது. பழைய கருங்கல் கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உட்பட்டன. இதனால் நித்திய பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறா மல் தடைபெற்றன. உள்ளூர் கிராமவாசிகள் ஒன்றுகூடி கோவிலை சீர்படுத்தி, முறைப் படி கும்பாபிஷேகம் செய்ய முக்கிய பிரமுகர் களான ஜெயகிருஷ்ணன் வரதன், கே. ரமேஷ், ஜி. டில்லிபாபு போன்றோர் ஸ்ரீ துளசீஸ்வரர் பக்த ஜன சபா எனும் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, 2010-ஆம் ஆண்டு கும்பா பிஷேகத்தை சிறப்பாக நடத்தினார்கள்.

கோவிலின் சிறப்பைப்பற்றி சபாவின் செயலாளர் கே. ரமேஷ் கூறும்போது, "மிக பழமையான இக்கோவிலை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்த பின்பு இக் கிராமத்தில் ஓர் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டது மட்டுமின்றி விவசாயம் தொழில் சிறக்க ஆரம்பித்தது. மகாசிவராத்திரிக்கு முதல்நாள் இரவு சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரத்தில் வாழும் மார்வாடி (சேட்) சமூகத்தினர் ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனை, பஜனை போன்ற நிகழ்ச்சிகளை வருடம்தோறும் பக்தியுடன் நடத்திவருகிறார்கள். சிவராத்திரி சமயத்தில் சூரிய ஒளியானது சிவலிங்கம் திருமேனியில் படும்வண்ணம் முற்காலத்தில் கட்டியுள்ள னர். அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட புனித குளம் தற்சமயம் தூர் எடுக்காமல் குப்பை குளமாக உள்ளது. இதை அரசு சரிசெய்து கொடுத்தால் கிராம மக்களுக்கும், கோவிலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில்தான் ஆண்டாள் தோன்றினாள். அதே போன்று இங்குள்ள இந்த துளசி வனத்தில் அகத்தியரால் மூலவர் ஸ்ரீ துளசீஸ்வரர் எழுந்தருளினார்.

அதேபோன்று கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேச்சுவர துளசி வனத் தில் மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக லட்சுமிதேவியே பூதேவியாக பிறந்தாள். இந்த பூதேவியைதான் ஸ்ரீனிவாசப் பெருமாள் (ஒப்பிலியப்பன்) மணந்துக்கொண்டார்.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபகர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ணரி டம் பக்தி உள்ள இடமெல்லாம் துளசிதேவி (துளசி செடி) தோன்றுகிறாள் (வளரும்) எனச் சொல்லுவார். இங்கு சிவன், விஷ்ணு என்கிற பேதமின்றி சிவாலயத்தைச் சுற்றி இன்றும் அதிகளவு துளசிச் செடிகள் வளருகிறது. இதுவே இந்த ஸ்தலத்தின் மகிமையை பறைசாற்றுவதாக இருக்கிறது'' என பெருமிதத்துடன் கூறினார்.

கோவில் தொடர்புக்கு:

கே. ரமேஷ்- 9444 022133, அர்ச்சகர் ஸ்ரீதர்- 94448 12002.