"முருகா இங்கே வா' என்றாள் சௌபாக்கியவதி மீனாட்சி. இன்று உன் பிறந்தநாள். நீ நலமாக பல்லாண்டு வாழ வேண்டும். ஐந்து வயது முடிந்து ஆறாவது வயது. குருகுலத்தில் சேர்ந்து படித்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

சாதாரண நடையில், பத்து நிமிடங்களில் குருகுலத்தை அடைந்துவிடலாம். உனக்குத் தேவையான மாற்றுத் துணிகள், ஒரு கட்டு ஓலைச்சுவடி, ஒரு எழுத்தாணி, வறுத்த வேர்க் கடலை, பனங்கற்கண்டு மற்றும் குருவுக்கு நம் வீட்டு பச்சரிசி, வெற்றிலை, கொட்டைப் பாக்கும், கைத்தறி வேஷ்டி, தூண்டும், புதிய துண்டில் கட்டி வைத்துள்ளேன்.

aa

முருகா, உனக்கு குருகுலம் கல்வி பற்றி தெரியுமா, இக்கல்வி முறை, இராமாயண, மகாபாரத காலம் முதல் இருந்துவருகிறது. குழந்தை குறிப்பிட்ட வயதில், குருகுலம் சென்று, குரு பத்தினி, அவர்களுடைய குழந்தை கள் ஆகியவர்களுடன் சில ஆண்டுகள் தங்கி இருந்து, கல்வி கற்கவேண்டும். இந்த இடைவெளியில், பெற்றோர்களோ- மற்றவர்களோ குருகுலத்திற்கு வரமாட்டார்கள். எனவே, குரு பத்தினி, குரு மற்றும் அவர் களுடைய குழந்தைகள் ஆகியோருடன் சில ஆண்டுகள், கல்வி கற்றல், குரு பத்தினி இடும் பணிகளை செய்தல், யாசகம் பெற்று வருதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சில ஆண்டுகள் சென்ற பின்னர், குருகுலத்தில் கல்விப் பயிற்சியை முடித்தவர்கள் தங்களால் இயன்ற அல்லது குருவோ, குரு பத்தினியோ கேட்கும் குரு தட்சிணையை அளித்துவிட்டு, சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டும். இப்போது உனக்கு சிலர் அளித்த குரு தட்சிணை பற்றிக் கூறுகிறேன். கூர்ந்து கவனித்து உட் பொருளைப் புரிந்துகொண்டு மிகுந்த கவனத் துடன் நடந்துகொள்ளவேண்டும்.

முதலில், குருகுலத்தில் முறையாக கல்வி பயின்று குரு தட்சிணை அளித்துவிட்டு தன்னுடைய கிராமத்திற்கு திரும்பிய ஒருவன், தன் மதியின்மையால், தானும் உயிர் இழந்து, கற்ற கல்வியையும் வீணாக்கிய முட்டாள் ஒருவனின் கதையைக் கேள்.

Advertisment

குருகுலத்தில், கல்வியை முடித்துவிட்டு, தன்னுடைய கிராமத்திற்கு திரும்பி வரும் போது, அந்த பிரம்மச்சாரி சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பி, வழியில் ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் எவ்வித சிந்தனையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்தார். அந்த மரம், கேட்டதை, கேட்டபடி அருளும் கற்பக விருட்சம். இது அவருக்கு தெரியாது. பின்னர், களைப்பு நீங்கிய அவர், இப்போது நல்ல அறுசுவை உணவு கிடைத் தால், மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத் தவுடன், ஆறு மகளிர், தங்கத் தட்டுகளில் ஆவிபறக்க பலவிதமான உணவுகளுடன் வந்தனர்.

அந்த பிரம்மச்சாரி அந்த மகளிரை நீங்கள் யார்? யார் இந்த சுவையான உணவை அனுப்பி வைத்துள்ளார்கள் போன்று எதுவும் கேட்காமல், உணவை எடுத்து உண்ண ஆரம்பித்துவிட்டார். வயிறு நிரம்பிய பின்னரும் ஏதும் கேட்கவில்லை. மகளிர் அனைவரும் மறைந்து போனார்கள்.

அப்போதும் அவருக்கு எந்த சிந்தனையும் இல்லை. சிறிது நேரம் கழித்து, இந்த நிலையில், நிம்மதியாக உறங்க, கட்டில் இருந்தால் நன்றாக இருக்குமென்று எண்ண, அழகான கட்டில், சாமரம் வீச மீண்டும் மகளிர் வந்தனர். மீண்டும் எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து, திடுக்கிட்டு எழுந்தார். ஐயோ நாம் எந்த சிந்தனையும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறோமே இந்தப் பகுதியிலுள்ள மிருகங்கள் தாக்கி நாம் இறந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்த போது மிருகங்கள் தாக்கி இறந்து போனார்.

Advertisment

இவ்வாறு தன் உயிரை இழந்ததால், அவர் கற்ற கல்வி அவருக்கும் பயனில்லாமல் போயிற்று.

அவர் தூங்க நினைத்தபோது, தான் நிம்மதி யாக தூங்க, தன்னைப் பாதுகாக்க பத்து, இருபது படைவீரர்களை அனுப்பி வைத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்து தூங்க முயற்சி செய்திருந்தால் நன்றாக இருந்திருக் கும். ஆனால், அவர், எந்த நிலையிலும் ஆராய்ந்து பார்க்காமல் இருந்து விட்டார்; இறந்தும் விட்டார்.

ass

"முருகா, குருகுலம் செல்ல உன்னைத் தயார் படுத்திக்கொள். வழியில், பசித்தால், வறுத்த வேர்க்கடலை, தேன், வெல்லம், வைத்துள் ளேன். தேவைப்பட்டால் சாப்பிடு, இல்லை யென்றால், குருகுலம் சென்றபின்னர் அதை குரு பத்தினியிடம் கொடுத்துவிடு. கையில் ஒரு சிறுதடியை வைத்துக்கொள்.

உனக்கு, வழியைக் காண்பித்துவிட்டு, நானும் நம்முடைய வயல்வெளிக்குச் சென்று அங்குள்ள வேலைகளைச் செய்ய வேண்டும்'' என்றார் சௌ. மீனாட்சி. இதன்பின்னர் சரவணன், தாய் கூறிய வழியில் சென்று குருவின் இல்லத்தை அடைந்தான்.

எதேச்சையாக வாயிலுக்கு வந்தார் குரு பத்தினி. அதே சமயம், குருவும் வர, இருவரும் முருகனைப் பார்த்தார்கள். முருகன், தன் தோளில் இருந்த துணிப்பைகளை ஓரமாக வைத்துவிட்டு, இருவரையும் மும்முறை சுற்றிவந்து, கீழே விழுந்து வணங்கி, அப்படியே இருவர் பாதங்களிலும் தன் தலை யைச் சாய்த்து, பின்னர் எழுந்து, கைகளைக்கூப்பி இருவரை யும் வணங்கியபடி, "என் பெயர் முருகன். என் பெற்றோர் சுந்தரேஸ்வரர். தாயார் மீனாட்சி.

இருவரும் இந்த குருகுலத்தில்தான் கல்வி பயின்றார்கள். நானும் கல்வி பயில வந்துள்ளேன்.''

முருகனுடைய பணிவு குரு மற்றும் குரு பத்தினிக்கும் ரொம்பப் பிடித்தது. குரு முருகனைப் பார்த்தார். அவனுடைய எதிர்காலம் அவருக்குத் தெரிந்தது. சிறந்த ஆன்மிக குருவாகத் திகழப்போகும் முருகன், பலருக்கும் குருவாக இருந்து அனைத்து சமய மக்களுக்கும் ஆன்மிக வழிகாட்டியாகத் திகழப்போகிறான் என்பதைக்கண்டு மிகவும் ஆனந்தப்பட்டார். அடுத்து, முருகனுடைய நிகழ்காலம் எவ்வாறு உள்ளது என்று பார்த்த போது மிகவும் திடுக்கிட்டுப் போனார்.

ஏனெனில், மறுநாள் காலை சூரிய உதயம் பார்க்கும் முருகன் அன்று மாலை சூரிய அஸ்தமனம் பார்க்க இருக்க மாட்டான் என்பதை அறிந்தார். ஒரு கணம் அவர் அதிர்ந்து போனார். முதலில் முருகனுடைய எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார். இதன்மூலம் இறைவன் எனக்கு ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று உணர்ந்தார். உடனே, முருகனைக் கூப்பிட்டு, நான் நாளை காலை எழும்பும்போது உடனே, காலைக் கடன்களை முடித்துவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து, முதலில், சூரிய பகவானை வணங்குவோம்.

அவரைப் போற்றும்வகையில், நாம் அனைவரும் ஆதித்ய ஹிருதயம் சொல்வோம்.

சூரிய நமஸ்காரம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறேன். பின்னர், ஸ்ரீ கணேசர், முருகன், சிவன், அம்பிகை, ஐயப்பன் ஆகி யோரையும் முறைப்படி வணங்குவோம். பின்னர், நாம் எல்லோரும், சிற்றுண்டி மற்றும் கஞ்சியை அருந்தி விட்டு, சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

"முருகா, இப்போது மிக முக்கியமான விஷயம் பற்றிக் கூற விரும்புகிறேன். இந்த கிராம எல்லையில் ஒரு மலை இருக்கிறது. மலை மேலே, ஒரு கோவில் இருக்கிறது.

அந்தக் கோவிலில், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் மற்றும் வள்ளி- தெய்வயானை சமேத ஸ்ரீ முருகப் பெருமானும் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில், அந்நியரின் படையெடுப்புக்குப் பயந்து, மூலதெய்வமுள்ள இடத்தில், மற்ற உற்சவ விக்ரகங்கள், மதில் சுவரைக் குடைந்து, ஒரு மேடையை உருவாக்கி, அம் மேடையில், உற்சவ விக்ரகங்கள், விலை உயர்ந்த பொருட்கள், பூஜைகள் குரிய பாத்திரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்து கற்கள், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றால் சுவர் எழுப்பிவிடுவார்கள். வெளியிலிருந்து வருபவர்கள், இங்கு, மூலதெய்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லையென்று எண்ணிக்கொண்டு, வந்த வழியே திரும்பிவிடுவார்கள்.

இவ்வாறு இருந்தாலும்கூட, அன்றாட பூஜைக்கு ஏற்பாடும் செய்து விடுவார்கள். அதன்படி ஒரு அர்ச்சகர், நாள்தோறும் காலையில் பூஜை செய்துவிட்டு, நைவேத்திய மும் செய்வார். அப்போது, மூலதெய்வமுள்ள சுவற்றிற்கும் பூஜைசெய்து நைவேத்தியமும் செய்துவிட்டு, அதில் சிறு பகுதியை, வெளியே உள்ள நந்திகேஸ்வருக்கும் சமர்ப்பணம் செய்துவிட்டு, காக்கை மற்ற பறவைகளுக் கும் உணவளித்துவிட்டு, வீடு திரும்புவார்.

அவர் வரமுடியாத நிலையில், அங்கு அருகில் இருப்பவர்கள் இந்தப் பணிகளை மேற் கொள்வார்கள். இந்த அர்ச்சகர்தான் இந்தக் கிராமப் புரோகிதரும் கூட... இந்த கிராமத்தில் நடைபெறும் அனைத்து சுப- அசுப காரியங் கள் இவர்மூலம்தான் நடைபெறும். இவரது சேவை அறிந்து, இவருக்கும் இவரது குடும் பத்திற்கும் தேவையான அனைத்து வசதி களையும். செய்து தருகிறார்கள். "சரி, முருகா, இப்போது நீ, புறப்பட வேண்டும். என்னுடன் வா. உனக்கு வழியை காண்பித்து விட்டு, குருகுலப் பணிகளைத் தொடரவேண்டும்'' என்றார்.

சிறிது நேரம் கழித்து, குரு, முருகனுடன் வெளியில் வந்தார். அப்போது, ராமையா, தலையில் விறகு சுமையுடன் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தார். முருகனுக்கு மலை அடிவாரம் வரை நல்ல துணை ஆயிற்று என்று எண்ணினார். உடனே, அவர், ஓ ராமையா.. என்று உரக்கக் கூவ, ராமையாவும் திரும்பிப் பார்த்து நின்றார். குருவும், முருகனும் அவரிடம் சென்று, "ராமையா, இச்சிறுவன் முருகன், இவனை உன்னுடன் அழைத்துச்சென்று, மலை அடிவாரத்தில் விட்டுவிடு. அவன், மலை ஏறி, கோவிலுக்குச் செல்லட்டும்'' என்றார்.

ஐயா, "அப்படியே செய்கிறேன்' என்றார் ராமையா. பின்னர், ராமையா முருகன் இருவரும் மலை அடிவாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் சென்றபோது, "ஐயா, ராமையா, உங்கள் தலைமேல் உள்ள விறகு சுமையை கீழே போட்டுவிடுங்கள். விறகுக்கிடையில், பாம்பு உள்ளது என்றான் முருகன். இதைக் கேட்டதும், ராமையாவும் விறகுக் கட்டையை கீழேபோட்டுவிட்டார். அதிலிருந்து இரண்டு பாம்புகள் வெளியே வந்து, சிறிது நேரத்தில் மறைந்தும் போயின. இதைக்கண்டு, ராமையா அதிர்ச்சி அடைந்து, முருகா, நல்ல வேளை, பாம்புகள் என்னைக் கடித்திருக்கும். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். மிக்க நன்றி'' என்றார்.

ஆனால் பாம்புகள், முருகனைத்தான் குறிவைத்தன என்று இறைவன் மட்டுமே அறிவார்.

பின்னர், பச்சைக் கொடிகளை கயிறாக முறுக்கி, விறகுக் கட்டைகளை, வைத்து கட்டி எடுத்துக்கொண்டு வந்து, இருவரும் மலை அடிவாரம் நோக்கிப் புறப்பட்டனர். மலை அடிவாரம் இருவரும் அடைந்து சற்று நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டபோது, ஐயா, ராமையா, இந்த ஊரில் வாழும் ஒவ்வொரு வரின் பங்களிப்புடன், சில நல்ல விஷயங் களைச் செய்ய விரும்புகிறேன். அதற்கு முதலில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை என்றான் முருகன்.

"முருகா, நீ என்ன செய்ய நினைக்கிறாய் என்று விவரமாகக் சொல்'' என்றார் ராமையா.

உள்ளூர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் பல திட்டங்களை நிறைவேற்ற எண்ணியுள்ளேன். முதலில், இந்த அடிவாரத்தில், எழுபது அடி உயரத்தில், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் சிலை அமைக்கவேண்டும். அஸ்திவாரம் பலமுள்ளதாக அமைக்க வேண்டும். சிலையைச் சுற்றி பத்து அடி அகலத்திற்கு கற்களால் சுவர் எழுப்ப வேண்டும். சிலையின் வலதுபக்கம் சிவனுக் கும் இடதுபக்கம் பார்வதிக்கும் ஒதுக்கி, சிவபெருமானுக்கு சிவப்பு வண்ணத்திலும், பார்வதி தேவிக்கு பச்சை வண்ணத்திலும் பச்சிலை மூலிகைச்சாறு பூசவேண்டும்.

இதேபோல், நந்தி தேவருக்கும் மண்டபம் அமைத்து, மழை, வெய்யிலால் பாதிக்காத வாறு பாதுகாக்கவேண்டும். மேலும், மலைக் குச் செல்லும் பாதையில், அகலமான படிக் கட்டுகள் அமைக்க வேண்டும். இரு புறமும் சுவர்கள் எழுப்பி, வண்ண ஓவியங்கள், கடவுளர் படங்கள், நாயன்மார்கள் படங்கள், நரசிம்மர், பத்து அவதாரப் படங்கள், திருக் கோவில்கள், கடவுளின் வாகனங்கள் போன் றவை அமைக்கலாம். மேலே, ஸ்வாமி அதிகார நந்தி தேவரை அடுத்து முன்மண்டபத்தை அகலமாக்கி பக்தர்கள் அமர்ந்து பார்க்க வசதி செய்யலாம். தம்பி முருகா, ஒரு பக்கம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உள்ளூர் மக்களின் சேவை மிகவும் தேவை என்கிறாய்.

இது உன் பரந்த மனதைக் காட்டுகிறது. குருக்கள் ஐயாவும் மிகுந்த அளவில் மகிழ்ச்சி அடைவார். இதில் அவரும் உதவுவார் என்றார் ராமையா. பின்னர் குருக்கள் அவர்களிடம் விஷயங்கள் தெரிவிக்க அவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, முருகா நீ இப்போது சொன்னவற்றை ஒரு அகலமான ஓலையில் எழுதிக் கொண்டுவா. நாளை மாலை பெரிய ஆலமரத்தடியில் நடை பெறும் கிராம சபைக் கூட்டத்தில், நான் செய்தியை அனைவருக்கும் வாசித்துக் காட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு அறிந்து செயல்படலாம் என்றார்.

பின்னர் அவர், "முருகா, என்னுடன் வா, ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு, பிரசாதம் எடுத்துக்கொள். குரு குலம் சென்று குரு பத்தினியிடம் கொடுத்துவிடு. அவர் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பார்கள். சரி, என்னுடன் வா முருகா! எனக்கும் ஒரு வீட்டில் புரோகித வேலை இருக்கு.

முதலில், அந்தப் புஷ்கரணி யில், முகம், கை, கால் கழுவிக் கொண்டுவா. பன்னீரில் விபூதியைக் குழைத்து நெற்றி நிறைய பூசுகிறேன். பிறகு, அம்பாள் பிரசாதமாக குங்குமத்தை இடுகிறேன். அதற்கு முதலில் உன்னுடைய நீண்ட கூந்தலை அழகாகச் சுருட்டி, தலையில் வைக்கிறேன். நிதானமாக நடந்துவர, ஒரு கைத் தடியும் தருகிறேன் என்றார் குருக்கள் ஐயா. இதன்பின்னர், முருகன், ராமையா மற்றும் குருக்கள் குறுக்கு வழியில் நடந்தனர்.

சிறிது நேரம் கழித்து, முருகா, நானும், ராமையாவும் தொடர்ந்து செல்கிறோம். நீ, நூறு அடி தூரம் நடந்து, வலதுகை பக்கம் திரும்பினால் குருகுலம் வந்துவிடும். அங்கு குருவிடம் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல். நாளை குருவுடன் நான் சொன்ன இடத்திற்கு வந்து விடு என்றார்.

முருகன், அவர் கூறிய வழியில் வந்து குருகுலத்தின் வாயிலில் வந்து நின்றான். அதே சமயம், குருவும், குரு பத்தினியும் வாயிலுக்கு வந்தனர். அங்கு, ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் நிற்கக் கண்டு, ஸ்வாமியை வலம் வந்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர். முருகன் திகைத்து குருவே, அம்மா, என்ன இது, என்னைச் சுற்றி வந்து நமஸ்காரம் செய்கிறீர்கள்.. என்றான்.

முருகனின் குரல் கேட்டு அனைவரும் ஒரே குரலில், கையில், சூலாயுதம் தாங்கி ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்தான் எங்களுக்கு திவ்ய தரிசனம் தந்தார் என்றனர்.

பின்னர், குருக்கள் கூறியவாறு ஒன்று விடாமல் நடந்தது அனைத்தையும் முருகன் கூற, அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குருவும், முருகன், பிற்காலத் தில் சிறந்த குரு வாகத் திகழ் வான் என் பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்த நாள், கிராம சபையில், முருகனின் கோவில் கட்டு வது பற்றிய கருத்துக்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. கிராம மக்கள் அனைவரும் அவரவர்க்கு ஒதுக்கப் பட்ட பணிகளைத் திறம்படச் செய்து முடித்தனர். எல்லாப் பணிகளும் நல்லமுறை யில் நிறைவுற்றதும், கும்பாபிஷேகத் திற்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளில் கும்பாபிஷேகம் நல்லவிதமாக நடைபெற்றது. காக்கைகள், புறாக்கள், கருடன்கள் மற்றும் பல்வேறுவிதமான பறவைகள் பறந்தன. காலப்போக்கில் முருகன், குருகுலத்தின் பொறுப்பை ஏற்றார். இவ்வாறு ஒரு சிறந்த கோவில் உருவானது. இதில் சிறப்பு, ஊர் கூடித் தேர் இழுத்ததுதான்.