சிக்ரி மாதா மந்திர் என்னும் ஆலயம் உத்தரப் பிரதேசத்தில், அங்குள்ள மோதி நகர் மாவட்டத்திலிருக்கும் சிக்ரிகலா என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது அந்தப் பகுதி யிலுள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று.
இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சிக்ரிமாதாவுக்கு மகாமாயாதேவி என்றொரு பெயரும் இருக்கிறது.
17-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப் பட்டது. ஜாலிம் கிரி பாபா என்பவர் இந்த கோவிலைக் கட்டினார். அவர் கோஸ்வாமி இனத்தைச் சேர்ந்தவர். அவரின் காலத்திற்குப் பின்னால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கின்றனர்.
இந்த அன்னை துர்க்கையின் அவதாரம். இந்த ஆலயத்தில் பல கடவுள்களின் சிலைகளும் இருக்கின்றன. இங்கு நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.
அப்போது ஊர்வலம் நடக்கும். பொருட் காட்சி நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அன்னையை வழிபடுவார்கள்.
இந்த கோவில் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cheri.jpg)
ஜாலிம்கிரி பாபாவின் கனவில் ஒருநாள் அன்னை சிக்ரி மாதா தோன்றினாள். ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி, அந்த இடத்தில் தான் இருப்பதாகக் கூறினாள். அவரின் ஆட்கள் அந்த இடத்தைத் தோண்ட, மண்ணுக்குள் ஒரு சிலை இருந்தது. அந்த இடத்தில் பாபா, அன்னைக்கு ஆலயத்தை உண்டாக்கினார். அதுதான் இப்போது நாம் காணும் சிக்ரி மாதா மந்திர்.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு பெரிய ஆல மரம் இருக்கிறது. 1857-ஆம் வருடத்தில் பிரிட் டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஏராள மான வீரர்களை அதில் தூக்கில் தொங்க விட்டு இறக்கச் செய்திருக்கின்றனர். அந்த சமயத்தில் பல வீரர்கள் அன்னை சிக்ரி மாதாவை மனதில் நினைத்து தங்களைக் காப்பாற்றும் படி வேண்டிக்கொண்டார்கள். அவர்களுக்கு முன்னால் அன்னை தரிசனம் தந்திருக்கிறாள்.
அருகிலிருக்கும் குகைக்குள் சென்று மறைந்து கொள்ளும்படி அன்னை கூற, அதன்படி பலர் நடந்திருக்கின்றனர். அந்த வகையில் பலர் உயிர் தப்பியிருக்கின்ற னர்.
அவ்வாறு தப்பித்தவர்களின் குடும்பத் தைச் சேர்ந்தவர்களும் வாரிசுகளும் இப்போது இங்குவந்து அன்னையை வழிபடுகி றார்கள்.
அன்னை சிக்ரி மாதாவை வழிபடுவதற்கு வரக்கூடியவர்கள் இங்கிருக்கும் ஆலமரத்திற்கு ஒரு சிவப்புநிற நூலைக் கட்டி, மரணமடைந்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவார்கள்.
புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கவேண்டுமென சிக்ரி மாதாவை வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தபிறகு, குழந்தையைக் கொண்டு வந்து அன்னையின் காலடியில் வைத்து வழிபடுவார்கள்.
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தற்காக ஆலமரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 130 என்பதும், 30 பேர் துப்பாக்கி யால் சுடப்பட்டு இறந்தனர் என்பதும் வரலாறு.
சித்திரை நவராத்திரி சமயத்தில் இங்கு சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு பக்திப் பெருக்குடன் வருவார்கள். கருவறையிலிருக்கும் அன்னைக்கு ஜரிகை போட்ட சிவப்புத் துணி, தேங்காய், ஏலம் ஆகியவற்றைப் பிரசாதமாக வைத்து வழிபடுவார்கள்.
1952-ஆம் ஆண்டுவரை அன்னைக்கு மிருகங்களை பலிகொடுக்கும் வழக்கம் இருந்தது. அதற்குப்பிறகு அது நிறுத்தப்பட்டு விட்டது. பலி கொடுக்கப்பட்ட இடத்தில் சித்திரை நவராத்திரி சமயத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள்... அதாவது 6, 7, 8 ஆகிய நாட்களில் யாகம் நடக்கும். பலிதரும் வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டதால், சிலர் தாங்கள் கொண்டுவரும் சேவல்களையும் ஆடுகளையும் அன்னை சிக்ரி மாதாவிற்கு முன்னால் வைத்து, பின்னர் எடுத்துச் சென்றுவிடுவார்கள்.
டில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தைச் தேடிவருகிறார்கள்.
டில்லியிலிருந்து ஹரித்வார் செல்லும் பாதையில் இந்த ஆலயம் இருக்கிறது. சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் பயணம் செய்யுங் கள். பயண தூரம் 2,208 கிலோ மீட்டர். புது டில்லியிலிருந்து இந்த ஆலயம் 65 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/cheri-t.jpg)