வினை எதிர்வினை என்றால் என்ன? வினை என்றால் செயல் என்று பொருள். எதிர்வினை என்றால் செயலுக்கு நிகரான எதிர்ச் செயல் என்று பொருள். அப்படியென்றால் செய்யக்கூடிய செயல் எப்படி இருக்க வேண்டும். செயலின் தன்மையை பொறுத்து அதன் விளைவுகள் வெளிப்படும்.

இதில் ஆறு அறிவின் செயல் எப்படி யிருக்கவேண்டும் ஆறறிவுக்கு குறைவான வற்றின் செயல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை பொறுத்தே விளைவுகளில் உண்டாகும் தன்மை மாறுபடும். வினை, நல்வினை என்றும் தீவினை என்றும் செயலாற்றும்.

தீவினையை பற்றி திருக்குறள் கூறும் கருத்தினைப் பார்ப்போம்.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.'

தீமையைத் தரக்கூடிய செயல்களை தமது நெஞ்சால் நினைப்பதுவே மிகப் பெரிய குற்றமாகும். ஆகையால் பிறன் பொருளை, அவன் அறியாமல் கவர்ந்து கொள்ளலாம் என்பது அதி தீமையான குற்றமாகும்.

sd

அத்தகைய செயலை செய்யக்கூடாது என்பதே இதன் உட்பொருள் ஆகும்.

Advertisment

இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தீமையை தரக்கூடிய, கெடுதி யான விளைவுகளை உண்டாக்கக்கூடிய விஷயங்களை மனதால்கூட நினைக்கக் கூடாது. இதுவே மிக முக்கியமான தார்மீக கருத்தாகும். நடந்துகொண்டிருக்ககூடிய கலிகாலத்தில் தீமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்ப்போமானால், அதிக சதவீதத்தினருடைய மனதில், நாம் ஒரு தவறை செய்துவிட்டாலும் அந்த தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்ற தவறான மிக மோசமான மனநிலையும், மனநிலையுடன்கூடிய சிந்தனையும் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது.

ஏனென்றால்? நீ எதை செய்கின்றாயோ... எதை எண்ணுகின்றாயோ... எதை நினைக் கின்றாயோ... அதற்கான பலனை, பயனை நீ பெற்று தீரவேண்டும் என்பது இறைவனின் விதி. அதாவது மாபெரும் இயற்கை சக்தியின் விதியாகும். இதை எந்த கொம்பனா லும் மாற்றமுடியாது. இதற்கு பரிகாரம் கிடையாது! பரிகாரம் ஏமாற்று வேலை.

பரிகாரம் என்பது தற்காலிகமாக தவறு செய்தவனின் மனதில் ஒரு சந்தோஷத்தை கொடுக்குமே தவிர, அது நிரந்தர தீர்வாக இருக்காது. தவறு செய்தால் அதற்கு பரிகாரம் இருக்கிறது எனும் மனநிலை மிக மோசமான சந்ததி அழிவினை தரக் கூடியது. இந்த மனநிலை வரும்பொழுது அவன் மீண்டும் ஒரு தவறை செய்யக் கூடிய எண்ணத்தையே அது தூண்டும். தவறு செய்தவன், தன் தவறை திருத்திக் கொண்டு மீண்டும் அந்த தவறை தன் மனதால்கூட நினைக்காத நிலையை உருவாக்கிக்கொள்வது மட்டுமே, அவன் பிறவிப் பயனில் எதிர்வரும் காலங்களில் அவனுக்கு கிடைக்கப்போகும் ஆரோக்கிய நன்மைகளை அளவிட முடியும்.

Advertisment

நன்மையானவை பற்றி திருக்குறள் பின் வருமாறு கூறுகிறது.

"அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.'

பிறருக்கு நன்மையானவற்றை ஆராய்ந்து அறிந்து, அவற்றைச் செவிக்கு இனிதாக ஒருவன் சொல்வானானால், அவனுக்குத் தீவினைப் பயன்கள் விலகி, நல்வினை எனப் படும் நன்மையான நலம்தரும் பயன்கள் பெருகும்.

இங்கே நம் முன்னோர்கள் சில தீய விஷயங்களில் தெரிந்தோ- தெரியாமலோ ஈடுபட்டு அதன் பயனை அனுபவித்தபிறகு அதில் உள்ள- அதாவது அந்த செயலிலுள்ள உண்மை தன்மையை உணர்ந்து அதன்பிறகு வரும் இந்தகால சந்ததி கள் இதுபோன்ற தீவினைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பல நூறு பழ மொழிகளை (டழ்ர்ஸ்ங்ழ்க்ஷள்)யும், நல்ல வற்றை அனுபவித்து நன்மையை தரக்கூடிய பழமொழிகளை (டழ்ர்ஸ்ங்ழ்க்ஷள்)யும் உருவாக்கி வைத்து சென்றுள்ளனர். உதாரணமாக "தீதும் நன்றும் பிறர் தர வாரா', "கெடுவான் கேடு நினைப்பான்', "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' இதுபோன்ற எண் ணற்ற பழமொழிகளை நம் முன்னோர் கள் நமக்காக உருவாக்கி வைத்து சென்றுள் ளனர்.

கடைச்சங்க காலத்துப் புலவர் நல்லாத னார் எழுதி இயற்றிய திரிகடுகம் எனும் நூல் மனித வாழ்க்கையில் மனிதனுடைய நடத்தை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகிறது.

"தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்

வாய்மை உடைமை வனப்பாகும்.'

தீமை

"மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்

தவத்தில் தருக்கினார் கோள்.'

ஒருவன் தன் மனதில் ஆசை, பொறாமை, கோபம் என்ற எதுவுமில்லாத தூய்மை உடையவராய் இருப்பது அற நூல்கள் கண்ட முடிவாகும். நல்ல செயல்களை விரித்துரைக்கும் உண்மை உடையவராய் இருத்தல் ஒருவனுக்கு அழகாகும். பிறருக்கு தீங்கு விளைவிப்பனவற்றை மனதால்கூட நினைக்காமலும், வாயால் சொல்லாமலும் இருப்பது என்ற இம்மூன்றும் தவ ஒழுக்கத்தில் சிறந்து உயர்ந்து நிற்பவர்களுடைய கொள்கையாகும்.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் தன்னுடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை திருவொற்றியூரில் அமைந் திருக்கக் கூடிய வடிவுடைய அம்பிகையிடம் கோரிக்கையாக வைப்பதை பார்க்கலாம்.

"எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக் குள் அருள்

பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்

புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒற்றிப் பூரனார்பால்

மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.'

அழகிய திருவொற்றியூரில் எழுந்தருளி யுள்ள பூரணத்துவம் நிறைந்த சிவ பெருமானிடத்தில், அழகு செய்யப்பட்ட பச்சை நிறமான மணிபோல் திகழ்பவளே! வடிவுடைய மாணிக்கமான அம்பிகையே! உள்ளும் புறமும் ஒத்த நறுமணம் வீசும் புண்ணியத் தன்மையுடைய மல்லிகை மலரை போன்றவளே! இந்த எளியேன் எண்ணும் எண்ணங்கள் யாவும் பயன்மிக்கதாக அமைய எனக்கு உன்னுடைய அருளைப் பொழிய திருவுள்ளம் கொள்வாயாக தாயே. பெரும் வள்ளல் தன்மையைக்கொண்ட எல்லா உயிர்களிடத்திலும் கருணையும் அன்பும் செலுத்தும் இராமலிங்க வள்ளலாரே, உமையம்பிகையிடம் தான் எண்ணக்கூடிய எண்ணங்கள் பயனுள்ளதாக இருக்க அருள் புரிவாயாக என்று இறைஞ்சுகிறார். இப்போது நாம் நமது எண்ணங்களை எப்படி மேம்படுத்தி வைத்துக்கொண்டு, மேன்மை யாக வைத்துக்கொண்டு இறைபக்தி செய்ய வேண்டும் என்பதை, ஒவ்வொருவரும் உணர்ந்து, தெளிந்து, புரிந்துகொண்டால் யாவருக்கும் துன்பம் என்பதே இல்லை.

சங்ககாலப் புலவர் அவ்வையார் மனித இனத்தின் உடலும் உடலுக்குள் இருக்கும் மனமும் எப்படியிருக்கவேண்டும் என்பதை பின்வரும் குறளின்மூலம் உணர்த்துவதை புரிந்துகொள்ளலாம்.

"நல்வினையும் தீவினையும் உண்டு திரிதரும்

செய்வினைக்கும் வித்தாம் உடம்பு.'

உடம்பை ஒளி உடம்பு என்று அவ்வை யார் குறிப்பிடுகின்றார். நல்லவை செய்தால் வரும் நன்மையும், தீயவை புரிதலால் வரும் தீங்கும்கூட ஒளி உடம்புக்கும் உண்டு. செயல்களின் பயனை அடைவது மட்டுமல்ல, செயல்களுக்கு காரணமாக இருப்பதும் ஒளி உடம்பும், உள்ளமுமே ஆகும்.

நம் முன்னோர்கள் அனைவருமே நாம் ஒவ்வொருவரும் வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்கான வழியானது நன்மையானவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

இறைவன் நமது உள்ளத்தில் எத்தகைய தன்மையில் இருக்கிறான் என்பதனை திருமந்திர சிற்பி தனது திருமந்திரத்தில் கூறுவதைப் பார்க்கலாம்.

"உணர்வு அதுவாயுமே உத்தம மாயும்

உணர்வது நுண்ணறிவு எம் பெருமானைப்

புணர்வது வாயும் புல்லிய தாயும்

உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே.'

உள்ளத்தில் உணர்வாகவும், உணர்வின் மேலான நினைவாகவும், நினைவில் மனம் கூர்ந்து ஆராய்ந்து அறியும், அறிவாகவும் விளங்கும் சிவப்பரம்பொருள், ஆருயிர் களோடு கலந்திருந்தாலும், அப்பரம்பொருள் அறிவதற்கு அரிதான, நுண்ணியனாகவும் (கண்ணுக்குப் புலப்படாத) இருக்கின்றான். உடலாக, உணர்வாக, அண்டவெளியாக இருப்பவனும் அவனே சிவப்பரம் பொருளே ஆகும்.

இவ்வாறு உடலோடும், உயிரோடும் கலந்து இருக்கக்கூடிய இறையெனும் பரம்பொருளை நாம் கண்டுகொள்ளாமலும், கவனிக்காமலும் நமது எண்ணங்களை சிறுமைப்படுத்தி, மேம்படுத்தாமல் தீய வழிகளில், தீய சிந்தனைகளுடன் பயணிக்கும் பொழுது வாழ்வானது நரகம் ஆகிவிடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். உடலும் உள்ளமுமே பெரும் கோவில், மீதமுள்ள எவையும் நிலை யானது அல்ல; நிரந்தரமானதும் அல்ல.

உடலும், உள்ளமும், உயிரும் எல்லையில்லா தது, விலைமதிப்பற்றது. வாழும் காலத்தில் நல்லதை நினைப்போம் நல்லதையே செய்வோம். நல்லதையே பெறுவோம்.

மேலும் திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்.

"உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்தும்

மடலான மாமாயை மற்றுள்ள நீவப்

படலான கேவல பாசம் துடைத்துத்

திடமாய்த் தனைஉறல் சித்தாந்த மார்க்கமே.'

ஐம்பூதங்களாலான இவ்வுடம்பு காமம், வெகுளி, பொறாமை, பேராசை, ஆணவம், கர்வம் என்னும் ஆறு குற்றங் களை உள்ளடக்கி இருக்கிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து பொறி புலன்களால் வரும் இச்சைகள் எல்லாம் தோன்றுவதற்கும் இந்த உடம்பே காரணமாக இருக்கிறது. இதுகொண்ட மன அழுக்குகள், குற்றங்கள், மலங்கள் கழிந்துபோக, இறையருளைப் பெறுவதற்கு தடையாக இருக்கின்ற, கண்பார்வையை மறைக்கும் படலம் போன்ற ஆணவத்தையும், பாசத்தையும் விட்டு ஒழித்து உள்ளத்தில் உறுதி குறையாமல் இருப்பதே சித்தாந்த நெறிமுறைகளாகும்.

"நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த

தன்மையான் ஆளப் படும்.'

அரசனுக்கு நல்லவை- தீயவற்றை ஆராய்ந்து, அவற்றுள் நல்லவற்றையே விரும்பிய இயல்புடையவன் (அரசனால் உண்மையானவன் என்று அறியப்பட்டுச்) சிறந்த பணிகளில் ஆளப்படுவான் (அமர்த்தப் படுவான்).

ஆகவே மனித குலத்தில் நாம் பிறப் பெடுத்திருப்பது நமக்கு கிடைத்த மாபெரும் வரமாகும். இங்கே தான் என்ற அகந்தையும், தனக்கானது என்று சுயநலமும், விடுத்து தீய எண்ணங்களில் இருந்தும், தீய சிந்தனைகளில் இருந்தும், தீய வழிகளில் இருந்தும் நாம் ஈடுபடாமல் நல்லவழிகளிலும் நன்மை யான செயல்களிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உள்ளபூர்வமாக உணர்ந்து புரிந்து நடந்துகொள்ளவேண்டும். நமது எண்ணம், சொல், செயல் என்ற மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் இருக்கும்பொழுது, நம்மை எந்த துன்பமும் நெருங்காது! ஏனென் றால்? அத்தகைய செயல்களில் நாம் இருக்கும் பொழுது, நம்மை சிவப்பரம் பொருளானது பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

நலமானதை நினைப்போம், நல்லதை செய்வோம். தீய செயல்களை அகற்றி நன்மையானதை பெறுவோம். பரம் பொருளின் பாதுகாப்பில் பரமானந்தம் பெறுவோம்.