தேனினும் இனியார், பாலன நீரற்றர் தீங்கரும்பு அன்னையர்தம் திருவடி தொழுவார் ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆணையின் உரிவை போர்த்த எம் மடிகள் அச்சிறு பாக்குமது ஆட்சி கொண்டாரே.
அருள்மிகு ஆட்சிபுரீஸ்வரர் திருக்கோவில் செங்கல் பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ளது .இது தேவாரப் பாடல்பெற்ற தொண்டை மண்டல தலங்களின் வரிசையில் 28-ஆவது திருத்தலமாகும், ஐந்து நிலைகளைக்கொண்ட கம்பீரமான ராஜகோபுரத்துடன் இக்கோவில் கிழக்கை நோக்கி பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
பொதுவான அமைப்பாக அல்லாமல், இங்கு கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடபுரமாக அமைந்துள்ளது.
இந்த அற்புத ஆலயத்தின் தலவிருட்சம் சரக் கொன்றை மரமாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/paraman.jpg)
இத்தலத்தின் நாயகன் அட்சீஸ்வரர் என்றும், உமையாட்சி ஈஸ்வரர் என்றும், இரு கருவறைகளில் லிங்கத் திரு மேனியாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
அன்னையாக இளங்கிளி அம்மனும், உமயம்மையும், ஆறுதல் தேடி வருவோருக்கு அருளை வழங்கிக்கொண்டிருக் கின்றார்கள்.
உலகாளும் பரமன் திரிபுரம் அழிக்க மூன்று அசுரர்களையும் வதம் செய்ய, பூமியை தேராக்கி 4 வேதங்களையும் புரவி களாக்கி, பிரம்மனை தேரோட்டியாகவும், சூரிய, சந்திரர் களை, சுழலும் இரு சக்கரங்களாகவும், இணைத்து புவியில் வீற்றிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும், போருக்கான ஆயுதங்கள் ஆக்கி போரிட புறப்பட்டார்.
அச்சமயம் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கு வதற்கு மறந்தார். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்தார். தேரின் அச்சு இரு பாகமாக உடைந்ததனால் அச்சு+இரு+பாக்கம் என்ற பெயர் உருவானதாகவும், அது மருவி அச்சிறுப்பாக்கமாக வழக்கத்தில் உள்ளது.
இங்கு சித்திரை மாதம் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி பெரும்பேறு கண்டிகை கிராமத்தில் எழுந்தருளி அகத்தியருக்கு காட்சிதரும் ஐதீகம் நடைபெறுகின்றது.
மேலும் கண்ணுவ முனிவர் போன்று சித்தர்களும், பெருமக்களும், இங்கு வழிபட்டதாக தலபுராணங்கள் கூறுகின்றன.
சிவனால் வதம்செய்த தாரகன் மற்றும் விதியுன்மாலி ஆகியோர் துவார பாலகர்களாக இத்திருத்தலத்தில் வீற்றிருக்கின்றார்கள்.
சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 262-ஆவது தேவார தளமாகும்.
பாண்டிய மன்னன் ஒருமுறை சிவ தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலம் அமையப்பெற்ற இடத்தின் அருகே அவரது தேரின் அச்சு முறிந்தது. சேவகர்கள் தேரை சரிசெய்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பொன்னிற உடும்பை மன்னன் காண நேர்ந்தது. அந்த உடும்பு ஒரு சரக் கொன்றை மரத்தின் அடியில் புகுந்துகொண்டது. சேவகர்கள் மரத்தை வெட்டியபொழுது குருதி வெளிப்பட் டது, உடும்புதான் வெட்டுப்பட்டதாக மன்னன் நினைத்து மரத்தின் அடியில் தோண்டி பார்க்க ஒன்றுமே புலப்பட வில்லை அன்றிரவு உறக்கத்தில் காட்சிதந்த ஈசன் உடும்பின் மூலம் திருவிளையாடல் நிகழ்த்தியதை உணர்த்தினார்.
மேலும் சுயம்புவாக எழுந்தருளியதை உணர்த்தினார். அந்த இடத்தில் ஆலயம் கட்ட மன்னன் விருப்பம் கொண்டான்.
அந்நேரம் திரிநேதிரதாரி என்னும் மூன்று கண்களை யுடைய, முனிவர் அங்குவந்தார். அவர் தீவிர சிவபக்தராக இருப்பதை அறிந்த பாண்டிய மன்னன் அவரிடம் கோவிலை கட்டித்தரும்படி கூறிவிட்டு, தனது பயணத்தை தொடர்ந்தான்.
நாட்கள் கடந்து மன்னன் திரும்பியபொழுது நந்தி, கொடி மரத்துடன், ஆட்சி சுவரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின் பிராகாரத்தில் ராஜ கோபுரத்தின் நேரே உமையாற் றீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தான மாக கட்டி வைத்திருந்தார்.
புரியாத மன்னன் காரணம் கேட்க உமையாட்சி செய்த ஈஸ்வரனை உடும்பு வடிவாகி எனையும் ஆட்சி செய்தான்.
எனவே உங்களுக்கு காட்சி தந்த உமையாள் ஈஸ்வரருக்கு பிரதான வாயில்கொண்டு ஒரு கருவறையும், எமையாட்சி செய்த ஈஸ்வரனுக்கு பிரதான கருவறையும் வைத்து கோவில் கட்டினேன் என்றார்.
சுயம்புலிங்கமாக திகழும் உமையாட்சி ஈஸ்வரரே இங்கு பிரதான தெய்வமாக விளங்குகின்றார். திருவிழாக்களும், விசேஷங்களும், இவருக்கே நடைபெறுகின்றது.
திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில், இத் திருத்தலத்தினை பற்றி குறிப்பிட்டுள்ளார். இத்திருத்தலமானது நீர் தத்துவம் கொண்டு விளங்குகின்றது.
ஆட்சி அமைக்கும் சூழல் இல்லாதவர்களும், சரியான தொழில் மற்றும் பணி அமையாதவர்களும், திருமணம் குழந்தை பேரு போன்ற வாழ்வியல் தடை உள்ளவர்கள், ஐயனுக்கும், அன்னைக்கும், புது துணி அணிவித்து தங்களது விருப்பத்தைக் கோர, இத்திருத்தலத்தில் ஐயனின் அடிபணிய, அத்தனை துன்பங்களும் விலகி ஓடும் என்பது நிதர்சனமான உண்மை.
தல புராணத்தில் கூறிய அச்சு முறிவிநாயகர் சந்நிதி கோவிலுக்கு வெளியில் மேற்கு நோக்கி ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.
அருணகிரிநாதர் இந்த விநாயகரை தரிசித்துவிட்டு, அச்சிறு பொடி செய்த, என்ற இவரது புகழைப் பாடிதான், திருப்புகழை துவங்கினார் என்று புராணம் கூறுகின்றது.
எந்த ஒரு புது முயற்சியும் அச்சு முறி விநாயகரை வணங்கி துவங்கும் பொழுது அது சிறப்பை எட்டுகின்றது என்பது கண்கூடாக காணுகின்ற உண்மையாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/paraman-t.jpg)