விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 6-2-2022 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. 4-ஆம் தேதி காலை கோவிலை அர வணைத்து பெருக்கெடுத்து ஓடும் மணிமுத்தா நதியிலிருந்து புனிதநீர் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, திருப்பணிக் குழுத் தலைவர் திருப்பணிச் செம்மல் அகர்சந்த் அவர்கள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிகர் பரமாச் சாரியார் அவர்கள் துவக்கி வைக்க, யாக சாலை பூஜைகள் தொடங்கின.
மூன்று நாட்கள் தினசரி ஆறு வேளையாக பூஜைகள் நடத்தப் பட்டு, 6-2-2022 காலை 8.01 மணி யளவில் ஐந்து கோபுரங்கள், மூலவர் விமானம் ஆகியவற்றின்மீது வேத மந்திரங்கள் முழங்க, தமிழ் ஓது வார்கள் பாசுரம் பாட, பக்தர்களின் 'ஹர... ஹர...' கோஷம் வானில் மோதி எதிரொ லிக்க, திருமாலின் கருட வாகனம் கோவில் வளாகத்தைச் சுற்றி வட்டமிட கலசங்கள்மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்கள்மீது பூமாரி பொழிந்தது!
நகரம் முழுவதும் குவிந்திருந்த லட்சக் கணக்கான பக்தர்கள்மீதும் ஹெலிகாப்டர் இருந்தபடி புனிதநீர் தெளிக்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், புகழேந்தி, அமைச்சர்கள் சி.வி. கணேசன், சிவசங்கர், நக்கீரன் ஆசிரியர் கோபால், எம்.எல்.ஏக்கள் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், நெய்வேலி சபா ராஜேந் திரன் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிய இந்து அறநிலையத் துறை ஆணையர் குமர குருபரன், இணை ஆணையர் அசோக்குமார், செயல் அலுவலர்கள் முத்துராஜா, மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட இந்த விழாவுக்கு காவல்துறை சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி சந்தோஷ்குமார் தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன், கடலூர் எஸ்.பி சக்தி கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் 1,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த ஆலயத்தை புராணகாலத்தில் விபசித்து முனிவர் உருவாக்கியுள்ளார். அதன்பிறகு மன்னர்கள் காலத்தில் சிறிது சிறிதாக சீரமைக்கப் பட்டது. பிறகு 1893-ஆம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அடுத்து 1910-ஆம் ஆண்டிலும் அடுத்து, 1956-ஆம் ஆண்டிலும், அடுத்து 1983-ஆம் ஆண்டி லும், அதற்கடுத்து 2002-ஆம் ஆண்டில் தற்போதைய திருப்பணிக்குழு தலைவர் அகர்சந்த் தலைமையில் வெகு விமர்சை யாக குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே திருப்பணிக் குழுத் தலைவர் தலைமையில் வெகு விமர்சியாக மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட் டுள்ளது.
இந்த விழாவுக்கு அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சி.வி. கணேசன், ஜெயின் ஜுவல்லரி உரிமை யாளர் அகர்சந்த், திருப் பணிக் குழு செயலாளர் கே, கே, டி, பழமலை, பொருளாளர் பெரியவர் விசுவ நாதன், உப தலைவர் கள் நக்கீரன் கோபால், கண் மருத் துவர் வள்ளுவன். முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர். ஜி என்கிற கோவிந்த சாமி முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னாள் நகர மன்றத் தலைவர் லட்சுமணன் பிள்ளை ஆகியோரின் சீரிய பணியினாலும்; சிவாச்சாரியார்கள், அர்த்தஜாம அடியார்கள் குழு மற்றும் நகரப் பிரமுகர் கள், வியாபாரிகள், பக்தர்கள் அர்ப்பணிப்போடு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இந்த ஆலயத் திருப்பணி செலவுகளில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்வதற்காக ஏழை எளியவர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை- 500 ரூபாய் முதல் லட்ச ரூபாய்க்குமேல் இறைத் திருப்பணிக்கு அர்ப்பணித்துள்ளனர். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து பொருளுதவி, உடலுழைப்பு ஆகியவற்றை அளித்துள்ளனர்.
இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சி யையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.
பழமலைநாதர் ஆலய கும்பா பிஷேகத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் ஒரு நிகழ்வு நடைபெற்றது. கும்பாபிஷேகத் திருப்பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள் விருதை நகர இஸ்லாமிய பெருமக்கள். இவர்கள் தங்களின் ஒருமித்த பங்களிப்பாக திருப்பணி செலவினங்களுக்காக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை, கும்பாபிஷேக குழுத் தலைவர் அகர் சந்த்திடம் வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கோல்டன் சேட் முகமது, ஜெயம் ராஜா, வானவில் அன்சார் அலி, முன்னாள் அ.தி.மு.க நகரச் செயலாளர் சோழன் சம்சுதீன் உட்பட, நகர முக்கிய இஸ்லாமிய பெரிய வர்கள் பெருமளவில் கலந்துகொண்ட னர். இந்த நிகழ்வு கோவில் வளாகத்தில் குழுமியிருந்த அனைத்து தரப்பினரிட மும் ஒருவித மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
பழமலைநாதர்- ஜாதி, மதம், இனம், மொழிகடந்து மக்கள் அனைவரையும் 'அன்பே சிவம்' என்ற நூலிழையில் இணைத்துள்ளார் என்றால் அது மிகையில்லை!
-எஸ். பி. சேகர்