"பகவத் கீதை'யில் இடம்பெறக் கூடிய பல விஷயங்களை தனக்கேயுரிய தெளிவான பார்வையுடன் தன் நூல்களில் அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறார் மாபெரும் அறிவாளி யான ஓஷோ.

அவற்றை வாசிக்கும்போது, அவரின் ஆழமான சிந்தனையை எண்ணி, நான் வியந்திருக்கிறேன்.

மகாபாரத காலத்தில் குருக்ஷேத்ர போர் நடைபெற்றபோது, போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பகவான் உபதேசம் செய்ததுதான் பகவத்கீதை என்ற விஷயம் நம் அனைவருக்கும் தெரியும். இதைப்பற்றி பல நாட்கள் நான் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். போர் புரியவேண்டிய இடத்தில் போர்தான் புரிய வேண்டுமே தவிர, பக்கம் பக்கமாக பேசிக்கொண்டா இருப்பார்கள் என்று.

ss

மணிக்கணக்காக பகவான் கிருஷ்ணர் போர் நடக்கவேண்டிய இடத்தில் உபதேசம் செய்து கொண்டி ருந்தால், போர் எப்படி நடக்கும் என்று நான் ஆழமாக சிந்தனை செய்து பார்த்திருக்கிறேன்.

பல எழுத்தாளர்களிடமும் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களிடமும் இதைப்பற்றி கேட்கவும் செய்திருக்கிறேன்.

Advertisment

அவர்களால் அதற்கு உரிய பதிலைக் கூறமுடிய வில்லை. "உங்களின் சிந்தனை அருமையான- ஆழமான சிந்தனை. நாங்களே இப்படியொரு கோணத்தில் இதைச் சிந்தித்துப் பார்த்ததில்லை'' என்று அப்போது அவர்கள் கூறினார்கள்.

என் சந்தேகத்திற்குச் சரியான விடையைக் கூறியவர் ஓஷோதான்.பகவத்கீதை பற்றி அவர் எழுதியிருந்த நூலில் அவரே இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

என் மனதில் உதித்த இதே சிந்தனை அவரின் சீடர் ஒருவருக் கும் தோன்ற, அவர் அதைப்பற்றி கேட்க, அதற்கு ஓஷோ கூறுகிறார்:

Advertisment

"நீ கேட்பது சரியான கேள்வி. போர் நடக்கவேண்டிய இடத்தில் யாராவது மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டா இருப்பார்கள்? உண்மையிலேயே நடந்தது என்னவென்றால், கிருஷ்ணன் உபதேசமே செய்ய வில்லை.

அவர் தன் வாயைத் திறந்து எதுவுமே பேசவில்லை.

அர்ஜுனனின் அப்போதைய நிலை என்ன என்பது கிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவனின் ஆற்றல் என்ன என்பதும் அவருக்குத் தெரியும். அவன் எந்த அளவிற்கு கலக்கமடைந்த நிலையில் இருக்கி றான் என்ற விஷயமும் அவருக்கு நன்றாக தெரியும். அவன் இப்போது கலக்கமடைந்து குழப்ப நிலையில் இருக்கிறான் என்பதையும் அவர் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்.

அவனை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர் அவர்.

அதேபோல கிருஷ்ணரை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன் அர்ஜுனன்.

அவனின் மனதை அவர் அறிவார். அவரின் மனதை அவன் அறிவான். அங்கு வார்த்தைகளுக்கு இடமே இல்லை.

வார்த்தைகள் தேவையுமில்லை.

போர்க்களத்தில் பல உன்னதமான விஷயங்களை- உபதேசங்களை அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கூற விரும்பி னார். ஆனால், அவர் வாயைத்திறந்து அவற்றைக் கூற வில்லை. மனதைத் திறந்தார். அவர் கூற நினைத்த உபதேசங் கள் அவனுடைய மனதிற்குக் கடந்து சென்றுவிட்டன.

அவன் அதைப் புரிந்துகொண்டான். அவனுடைய மனதிற்கு அந்த உபதேசங்கள் போய் சேர்ந்துவிட்டன என்பதை கிருஷ்ணரும் புரிந்துகொண்டார்.

வாய் திறந்து உடையாடாமலே... ஒருவர் கூற விரும்பியது இன்னொருவரிடம் போய் அடைந்துவிட்டது.

இதைத்தான் ஆங்கிலத்தில் "பங்ப்ங்ல்ஹற்ட்ஹ்' என்று கூறுகிறார்கள். இந்தச்செயல் பல மணி நேரங்கள் நடக்க வில்லை. சில நொடிகளிலேயே நடந்து முடிந்துவிட்டது.இதுதான் குருக்ஷேத்ர போர்க்களத்தில் உண்மை யாகவே நடைபெற்றது.''

அறிவுக் கடலான ஓஷோவின் இந்த விளக்கம் என்னை முழுமையாக திருப்திப்படுத்தியது. அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து வியந்தேன். அதன்காரணமாக நான் அவரின்மீது வைத்திருந்த அளவற்ற மதிப்பும், மரியாதையும் மேலும் பல மடங்கு அதிகரித்தது.