இறைவனுக்கு பூஜை செய்வதைவிட, பசியை போக்கினால் மகேஸ்வரன் மகிழ்வார் என்பது உண்மையா? -சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இறைவனுக்கு பூஜை செய்வது, அன்னதானம் செய்வது என இரண்டுமே அவசியமானதுதான். இறைவனுக்கு பூஜை செய்யும்போது, சில கட்டுப்பாடுகள், சாஸ்திர பிரகாரம் நடப்பது, சில உணவுகளை, சில செயல்களை கண்டிப்பாக தவிர்ப்பது என இதனை மேற்கொள்ளும் மனிதர்களுக்கு ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும். ரண்ப்ப் டர்ஜ்ங்ழ் எனும் அதீத மனபலமும் கிடைக்கும். இதன்மூலம் பூஜை செய்பவர்கள் அவர் களையும் அறியாமல் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறார்கள். மனோ தத்துவப்படி, நாம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவாகவே ஆகிவிடுகிறோம். இதன்மூலம் தினமும் பூஜை, புனஸ்காரம் செய்பவர்கள் தெய்வத்தின் நல்ல குணங்களை பெறுகிறார்கள். தோஷங் கள் அகன்றுவிடும். இது பூஜை செய்வதன் பலன். அன்னதானம்: நமது இந்து மதம் பிதுர்கடன், ஈஸ்வர பூஜை, வேத யாகம் மற்றும் அனைத்து ஜீவராசி களுக்கும் உணவு படைப்பது என கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போதிக்கிறது. திருவள்ளுவர், விருந்தோம்பல் எனக் கூறியிருப்பது அன்னதானம் பற்றியதுதான். ஒவ்வொரு இல்லறத் தாரும் அதீதிகளுக்கு உணவிடுவது என்பது கட்டாய கடமையாகும். பழைய காலத்தில், யாராவது ஒருவருக்கு அன்னம் கொடுக்காமல் இவர்கள் சாப்பிட கூடாது. சாப்பிட மாட்டார்கள் என்கிற அளவிற்கு பண்பாடு, பழக்கம் இருந்துவந்துள்ளது. நாம் அன்னதானம் செய்யும்போது, "ஒரு கைப்பிடி சாதம்கூட இனி என்னால் சாப்பிட இயலாது. வயிறு நிரம்பி விட்டது'' போதும் போதும் என்பர். இந்த ஒரு அன்னதானத்திற்கு மட்டும்தான், இந்த போதுமென்ற மனம் வரும். இதனால்தான் அன்னதானம் செய்தால், அந்த ஈஸ்வரனே மகிழ்வார் என்று கூறப்பட்டுள்ளது. வெறும் பூஜை மட்டும் செய்வதோ அல்லது அன்னதானம் மட்டும் செய்வதோ ஒரு மனிதருக்கு சரிப்பட்டு வராது. நமது இந்து மதம் இவை இரண்டும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயம் எனக் கூறுகிறது.

அதிர்ஷ்ட மோதிரம், எண் ஜோதிடம், ஜாதகம் மூன்றிற்கும் என்ன வேறுபாடு? -கவிதா ஆற்காடு.

மேற்கண்ட மூன்றும், ஜோதிடத்தின் பிரிவுகள்தான். இரத்தின சாஸ்திரம்: ஜோதிடப்படி ஒவ்வொரு கிரகத்துக்கும், ஒவ்வொருவிதமான ரத்தினங்கள் கூறப் பட்டுள்ளது. இது தற்போது பெரிய வணிக விஷயமாக மாறிவிட்டது. இதில், ஜாதகர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நன்கு கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். யார் எந்த ராசிக்கல்லை கொடுத்தாலும், அதை வாங்கி விரலில் அணியவேண்டாம். அந்தக் கிரகம் உங்கள் ஜாதகத்தில் உச்சமாகி இருந்தால் நல்ல பலனைத் தரும். நீசமாகி இருந்தால், நீசக் கிரக கல்லை, கையில் போட்டதில் இருந்து, உங்களுக்கு நல்லவைகள் நடக்க தடை உண்டாகும். நீசபங்கம் ஆகியிருந்தால், அதற் குரிய கல்லை, அணியவேண்டும். ஒரு கிரக கல்லை விரலில் அணிந்து, நல்லது நடந்தால் சரி. உடம்பு சரியில்லாமல் போனாலோ, கெடுதல் நடந்தாலோ, முதல் வேலையாக, விரலிலுள்ள மோதிரத்தை கழட்டிவிடவும். எண் ஜோதிடம்: எண்களின் குணங்கள் மற்றும் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய எண்களின் தொடர்பு பற்றி கூறுவது. ஒருவர் பிறந்த தேதி எண்ணின் கூட்டுத் தொகைக்கும்; பெயரிலுள்ள எண்ணின் கூட்டுத் தொகைக்கும் சம்பந்தம் உண்டு. இப்போது, குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது, எண்ணியல் ஜோதிடரை கலந்துபேசி, பெயரை தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குமுன், அந்த பெயரின் கூட்டுத்தொகை எண், பிறந்த குழந்தையின் ஜாகத்தில், நீசமடைந்த கிரகத்தின் எண்ணை, குறிப்பிடாமல் இருக்க வேண்டும். அப்போதைய காலத்தில் பிறந்தவுடன் ஜாதகக் குறிப்பு எடுக்கமாட்டார்கள். இப்போது கணினியில், ஒரு நிமிடத்தில் ஜாதகம் வந்துவிடுகிறது. அதனால் பெயர் எண், நல்ல யோகமாக அமைந்த கிரகத்தின் எண்ணை சார்ந்து இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது அவசியம். இப்போதைய இளம் பெற்றோருக்கு ஒரு அறிவுரை. உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது, ஸ்டைலாக பேர் வைக்கி றோம் என்று கன்னா பின்னாவென்று வைத்துவிடுகிறீர்கள். சிலசமயம் அது கெட்ட வார்த்தை மாதிரி, காதில் நாராச மாக ஒலிக்கிறது. பெயர் என்பது, ஆயுளுக்கும் கூடவே வருவது. அதனை முழுமை பெறும் விதத்தில் அமையுங்கள். குழந்தையின் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகம்: குழந்தை பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிப்பது. வாஸ்தவத்தில் இந்த ஜாதகம் தான் மற்ற ஜோதிட பிரிவுகளின் அடிப்படை ஆகும். இதில் வேற்றுமை கிடையாது. ஜாதகம் கொண்டு, நவரத்தினம் அணிவது, பெயர் வைப்பது என இருந்தால், நல்ல நன்மை கிடைக்கும்.

தெய்வத்தை வணங்கினால், குடும்பத்தை காப்பாற்றுவாரா? சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

உங்களில் அனேகம் பேர், இந்த புராணக் கதையை கேட்டிருப்பீர்கள். நாரதர் உலகைச் சுற்றிக்கொண்டே, சதா, நாராயணா, நாராயணா எனக் கூறிக்கொண்டே வரும்போது, ஒரு விவசாயி, கடும் உழைப்பாளி, காலையில் எழுந்தவுடன் ஒருமுறை நாராயணா என்பர். அப்புறம் படுக்கப்போகும் போது, நாராயணா என்று ஒருமுறை வணங்குவார். அவ்வளவுதான். இதைப் பார்த்த, நாரதர் பெருமாளிடம், பிரபு இந்த விவசாயி, ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டுமே, உங்கள் நாமாவை உச்சரிக்கிறான் பாருங்கள். நான் நாள் முழுவதும் உங்கள் நாமாவை உச்சரித்து வணங்கு கிறேன் என தன்னைத்தானே, தனது பக்தியுணர்வை மெச்சிக்கொண்டார். உடனே பகவான், நாரதரிடம் ஒரு கிண்ணம் நிறைய எண்ணெயை நிரப்பி, இந்த கிண்ணத்திலுள்ள எண்ணெய், ஒரு துளியும் சிந்தாமல் உலகை சுற்றி வரவேண்டும் எனக் கூறினார். நம்ம நாரதர், அட இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என எண்ணி, உலகை சுற்ற ஆரம்பித்தார். எண்ணெய் துளிகூட சிந்தாமல் இருக்கவேண்டுமே என மிக கவனமாக, அந்த பக்கம், இந்தப் பக்கம் திரும்பாமல் சுற்றி வந்து முடித்தார். பெருமாளிடம், பாருங்கள், நீங்கள் சொன்ன மாதிரியே ஒரு துளியும் சிந்தாமல் கிண்ணத்தைக் கொண்டு வந்து விட்டேன் என நாரதர் பெருமையாகக் கூறினார். பெருமாள் சிறு புன்முறுவலுடன், அது சரி நாரதா, இன்று எத்தனை முறை என நாமத்தைக் கூறினாய் என வினவ, நம்ம நாரதர் ஜெர்க்காகி நின்றுவிட்டார். அட ஆமாம், நாம், இன்று ஒருமுறைகூட பகவத் நாமாவை உச்சரிக்க வில்லையே என யோசித்தார். பின், நாராயணர், அந்த விவசாயி அவனுடைய கடுமை யான தினப்படி வேலைகளுக்கு நடுவிலும், என்னை இருமுறை நினைத்தான். அவனுடைய பக்தியே சிறந்தது. அவனே எனது மிகச் சிறந்த பக்தன் என்று கூறினார். ஆக, மனிதர்கள் அனைவரும் அவரவர் கடமைகளை கிரமமாக நிறைவேற்ற வேண்டும். உன் கடனையை செய். பலனை நான் பார்த்துக்கொள்கிறேன் என கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். இதன்மூலம், வீட்டு கடமைகளை செய்யாமல், போங்கு காட்டிவிட்டு, எப்போதும் கோவில், குளம் என சுற்றி வருகிற ஆண்களையும் பெண்களையும் கண்டிப்பாக கடவுள் விரும்ப மாட்டார். தெய்வ அனுக் கிரகமும் இந்தமாதிரி ஆட்களுக்கு கிடைக்காது.

ss

நமஸ்காரம்

Advertisment

மனிதர்கள் பிறருக்குச் செய்யும் மரியாதை எனும் உணர்ச்சி, விநயம், பணிவு என்று சொல்கிற உயர்ந்த பண்பை வளர்க்கிறது. ஒரு பெரியவருக்கு பண்ணுகிற விநய மனோபாவத்திற்கு, நமஸ்காரம் எனும் கிரியை ரூபமான செயல் விருத்தியாகிறது. மனித வர்க்கம் மட்டும்தான் குறுக்காக இல்லாமல், நெடுக்காக வளர்ந்த ஜீவன். மனிதனுக்கு சிரஸே பிரதானம் என்பர். அந்த சிரஸூம் பூமியில் பட வணங்குவதே நமஸ்காரம்.

ஈஸ்வர சந்நிதானம், மகான்கள் பெரியவர்கள் சந்நிதானம் என்ற இடங்களில் நமஸ்காரம் செய்யும் வழக்கமுண்டு.

சாஷ்டாங்க நமஸ்காரம்

Advertisment

எட்டு அங்கங்கள் பூமியில்பட நமஸ்கரிப்பது. இதில் முன்னேந்தலை, தோள், கைகள், மார்பு, வயிறு, கால்கள் என எட்டு அங்கங்கள் நிலத்தில் படுவதால், அஷ்ட அங்கம் சாஷ்டாங்கம் என்று கூறுகிறார்கள். இதனை ஆண்கள் செய்வதற்குரியது.

பஞ்சாங்க நமஸ்காரம்

இது ஜோதிட பஞ்சாங்கம் அல்ல: பெண்களுக் குரியது. பெண்களின் கர்ப்ப ஸ்தானம் மற்றும் குழந்தை களுக்கு பாலூட்டும் மார்பு இவை பூமியில் படாமல் மற்ற ஐந்து அங்கங்களையும் வளைத்து செய்வது பஞ்சாங்க நமஸ்காரம். இது தாய்மைக்கு கொடுக்கும் பெருமையாகும். மேற்கண்டது அனைத்தும் மகான்கள் கோவில்களில் நமஸ்காரம் செய்யும் முறை மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள், அறிவாளிகள், சிறப்பு பெற்ற கலைஞர்கள், பண பலம் படைத்தவர்கள் இவர் களுக்கு கைகள் இரண்டையும் குவித்து வணங்குகிறோம்.

இன்னும் சில வெகு சிறப்புடையவர்களுக்கு சுவாமிக்கு நமஸ்காரம் செய்வதுபோல் கீழே கிடந்து மரியாதை கொடுக்கிறார்கள்.

இந்தமாதிரி தமிழ்நாட்டில், கீழே விழுந்து, கும்பிட்டு, மந்திரி, முதல் மந்திரி பதவி வாங்கியவர்கள் எல்லாம் நம்முடனே இருப்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

கைகூப்பி வணங்குமுறை

சுவாமிக்கு சிரசுக்கு மேல் கைகூப்பி வணங்க வேண்டும். இஷ்ட தெய்வத்துக்கு சிரசுக்கு மேலே, நன்றாக கை உயர்த்தி வணங்கவேண்டும். மற்ற தெய்வத்துக்கு சிரசின் உச்சியில் கைபடும்படி கூப்பிய கையாக வணங்கவேண்டும். குருவிற்கு, இரு புருவ மத்தியிலுள்ள இடத்தில் கைகூப்பி வணங்கவேண்டும்.

பிதாவுக்கு வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். ராஜாவிற்கும் வாய்க்கு நேராக வணங்க வேண்டும். மாதாவிற்கு வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

மற்ற எல்லாருக்கும் மார்புக்கு நேராக வணங்க வேண்டும்.

ஆக தெய்வமோ, மனிதர்களோ நமது பணிவை, தெரிவிக்கும் ஒரு விஷயம் நமஸ்காரம் ஆகும்.

இறை விரதத்தை கடைப்பிடிக்கும்போது நியதிகள்

நமது இந்து மதத்தில் கணக்கில் அடங்கா விரதங் கள் உள்ளது. அதனை முறையாகக் கடைப்பிடித்து, வழிபட்டால் இறைவன் அருளும், கருணையும் பெருகி, அவர்கள் வாழ்வு மிக சிறப்படையும்.

விரதம் ஆரம்பிக்கும் முதல்நாளே, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறை விளக்குகளை விளக்கி வைத்துவிட வேண்டும். மறுநாள் பூஜைக்கு வீடும், பூஜையறையும் தயாராக இருக்கவேண்டும். தேவையான பொருட்களை சேகரித்து வைத்துவிட வேண்டும். முதல்நாளே அசைவ சமையலை தவிர்த்துவிட வேண்டும்.

மறுநாள், குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். எந்த விரதம் இருக்கிறீர்களோ, அதற்கேற்ற பிரசாதம் தயாரித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் காலை அல்லது மாலை கோவில் சென்று வணங்க வும். கோவிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல், ஏதேனும் வாங்கிக்கொண்டு போகவேண்டும். சிவன் கோவில் எனில் வில்வ தளத்தையும், பெருமாளுக்கு துளசியையும், அம்பாளுக்கு குங்குமமும், துர்க்கைக்கு அரளி சரமும், லட்சுமி சந்நிதிக்கு மல்லிகை மாலையும், ஆஞ்சனேயருக்கு வெண்ணெயும், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் கொண்டு செல்லலாம்.

விரத நாட்களில், பெரும்பாலும் ஒருபொழுது உணவை எடுத்துக்கொள்வர் பெரும்பாலும் அது சிற்றுண்டியாகவே இருக்கும். ஏகாதசி விரதத்திற்கு, கோதுமை ரவையை உணவுக்கு பயன்படுத்துவர்.

விரத நாட்களில் அநாவசிய பேச்சு வேண்டாம். பகல் தூக்கம் கூடாது. சிலர் வெங்காயம், பூண்டு தவிர்ப்பர்.

நமக்கு வரலட்சுமி நோன்பு, கோகுலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி, தீபாவளி, திருக்கார்த்திகை, ஸ்ரீஅனுமன் ஜெயந்தி, மகாசிவராத்திரி என இந்தமாதிரி பெரிய, பெரிய நோன்பு விரதங்கள் உண்டு.

இதுதவிர ஒவ்வொரு கிழமை சார்ந்தும் விரத முள்ளது.

சோமவார விரதம்: இது திங்கட்கிழமைகளில் மாங்கல்ய விருத்திக்காக, சிவலி பார்வதியை விரதமிருந்து வணங்குவது.

செவ்வாய்க்கிழமை விரதம்: இது பெரும்பாலும் முருகரை குறித்து விரதமிருப்பது. பூமி சம்பந்தமான விருப்பம் நிறைவேற 21 செவ்வாய்க்கிழமை விரதமிருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் விரதமிருப்பவர் பூமியை தோண்டக் கூடாதாம். ஏனெனில் செவ்வாய் பூமி புத்திரன் ஆவார்.

மேலும் செவ்வாய்க்கிழமை துர்க்கையையும் அனுமனையும் நோக்கி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. துர்க்கைக்கு மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரமும், அனு மனுக்கு, அனுமன் சாலிஸாவும் கூறப்படும். மிகையான துன்பங்கள் அகல இவ்விரதம் கைகொள்ளப்படுகிறது.

புதன்கிழமை விரதம்: புதன்கிழமைகளில் புதனுக்கும் மற்றும் சிவபூஜைக்கும் விரதமிருப்பர். புதன் கிழமையன்று, நீராடி பச்சை நிற பொருட்களை பயன் படுத்தி ஒருவேளை உணவருந்தி பூஜை, விரதமிருப்பின் நல்ல புத்திசாலி குழந்தைகள் பிறப்பார்கள் எனும் நம்பிக்கை உள்ளது. அன்று விரதமிருப்பவர்கள் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடாது எனும் விதி உள்ளது. அவ்வாறு பயணம் செய்தால், தென் துருவத்திலிருந்து, வட துருவத்துக்கு செல்லும் காந்த சக்தி தீமை தருமாம்.

வியாழக்கிழமை விரதம்: இரு பெரும்பாலும் தட்சிணாமூர்த்தி, சாய்பாபா, காஞ்சிப் பெரியவர், இராகவேந்திரர், ஸ்ரீரமண மகரிஷி போன்ற சித்தர்களை குறித்து விரதம் இருப்பதுண்டு. மஞ்சள் பொருட்கள் தானமும், கதலி வாழையை பூஜிப்பதும் சிறப்பான நன்மை தரும்.

வெள்ளிக்கிழமை: இன்று அம்பாள், மகாலட்சுமி, சந்தோஷிமாதா, அன்னபூரணி என இவ்வாறு சாந்தமாக உள்ள அன்னையை விரதமிருந்து வழிபடுவது மிகச் சிறப்பு. முடிந்தால் ஏதேனும் இனிப்பு பிரசாதம் படைத்து வழிபடலாம். இதில் விரதம் இருக்கும் பெண்கள், முக்கியமாக மாலை உணவை தவிர்க்கக்கூடாது என ஒரு ஆச்சாரம் உள்ளது.

சனிக்கிழமை: இது சனிபகவானுக்கு உரிய விரதநாள். மேலும் வெகு முக்கியமாக குலதெய்வம் எனும் சாஸ்தாவை வணங்க ஏற்றநாள். உங்கள் வீட்டில் ஏதாவது விஷயம் நடக்காமல் தடைப்பட்டு வந்தால், சனிக்கிழமை, சாஸ்தாவை நினைத்து விரதமிருங்கள். சனிபகவானுக்கு என விரதம் இருக்காவிட்டாலும், கோவிலில்; சனி சந்நிதியில் எள், கறுப்பு வஸ்திரம், எண்ணெய் இவைகொண்டு வணங்கலாம். காரியத் தடை, தாமதம் நீங்கும். வாழ்க்கை நல்ல மாறுதலும், ஏற்றமும் பெறும்.

ஞாயிற்றுக்கிழமை: இது சிவனுக்கும், சூரியபகவானுக்கும், விரதம் இருக்கும் நாள். அரசு பணியில் பதவி உயர்வு வேண்டுபவர்கள், அரசியலில் முதன்மைபெற விரும்புவோர். புகழின் வெளிச்சம் விரும்புவோர், கண்பார்வை தீட்சயண்யம் பெற விரும்புவோர் விரதமிருந்து ஆதித்ய ஹ்ருதயம் கூறவேண்டும்.

நமது முன்னோர்கள் நிறைய விரதம் மேற்கொள்ளு மாறு வாழ்வியலை வகுத்துள்ளனர். இந்த விரதங்கள் இறைவனின் அருளை பெற்றுத்தருவதோடு, நம் மனம், உடல் கட்டுப்பாட்டையும் ஒழுங்குபடுத்தும் என உறுதி யாக நம்பினர்.

இந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் உண்மைதான் என தற்போது மேலைநாட்டினர் ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர்.

எனவே விரதத்தை முறையாகக் கடைபிடித்து வாழ்வை நிறைக்கச் செய்யுங்கள்.