கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு. இந்த டிஜிட்டல் காலத்தில் பயன் உண்டா? -ஆர்.கே. கல்யாணி, செல்வமருதூர், திசையன்விளை.
அவ்வைப் பாட்டியின் சொல் என்றும் பொய்யாகாது. எந்தக் காலத்திலும் எல்லாருக்கும், எல்லாமும் தெரிந்துவிடாது. அட, செல்போன் காலமாகட்டும் , இப்போது ஏஐ என்று புதுமையாக ஏதோ வந்துகொண்டிருக்கிறதே. எது வந்தாலும், ஒவ்வொரு தனி மனிதருக்கு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. எல்லாம் தெரிந்துவிட்டது என்று எந்த மனிதன் நினைக்கிறானோ, அவன் தேங்கி நிற்கும் சாக்கடை ஆகிவிடுவான். எனவே தினமும் புதிது புதிதாகக் கற்றுக் கொண்டிருங்கள். அப்போதுதான் புத்தி உயிர்ப்புடன் இருக்கும்.
கர்மவினையை அனுபவித்தே கழிக்க வேண்டுமெனில், பூஜை எதற்கு? -சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
மனிதனுடைய பாவ கர்மாக்களை மூன்றுவிதமாக பிரிக்கலாம்.
1. சஞ்சித கர்மம்: நமது முன்னோர் செய்த பாவ- புண்ணிய தொகுப்பு.
2. பிராப்த கர்மம்: இப்பிறவியில் நாம் செய்த பாவ- புண்ணிய கணக்கு.
3. ஆகாமிய கர்மம்: மேற்கண்ட இரு பாவ- புண்ணியமே ஆகாமியம்.
ஆக உங்கள் முன்னோர், நீங்கள் செய்த பாவம் அனைத்தையும் சேர்த்து அதன் பலா பலன்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும். அதுதான் அனுபவிக்கணும் என்று ஆகிறதே, அப்புறம் எதற்கு பூஜை செய்யவேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள். பூஜை, பரிகாரங்கள் பிரார்த்தனைகள் என்று கண்டிப்பாக செய்யவேண்டும்.
அவ்வாறு நீங்கள் செய்யும்போது, அந்த பாப கர்மாவின் தீவிர எதிர்வினை மிகவும் குறைந்துவிடும். உங்கள் கஷ்டங்கள், நீங்கள் தாங்கக்கூடிய அளவில் அமையும். ஸ்ரீரமண மகரிஷியிடம், டி.பி. ராமச்சந்திர ஐயர் என்ற வழக்கறிஞர் ஒருவர் பகவான், தனது கர்மாவை முற்றிலுமாக மாற்றிக் கொள்ளமுடியுமா என வினவினார். அதற்கு பகவான், "கர்மா ஒருவரை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. ஒன்று கடந்தகால நிகழ்வுகளின் மூலமும்; மற்றொன்று எதிர் கால திட்டம், லட்சியம், ஆசைகள் என இவற்றை அடைவதற்காக விழை யும் கர்மாக்கள் எனவும் ஏற்படுகிறது. உடனே ஐயர், பகவானிடம் பழைய கர்மாவை அழிப்பது எப்படி எனக் கேட்க, அதற்கு பகவான், "உனக்கு நிகழும் எதுவாக இருந்தாலும், அதை மனதளவில் எந்த எதிர்ப்புமின்றி அப்படியே ஏற்றுக்கொள். எது நிகழ்வதாக இருந்தாலும், அது கடவுள் விருப்பப்படியே நிகழ்கிறது. எனும் மனப் பக்குவத்தோடு இரு. இப்படியிருந்தால் நாளடைவில் மனம் அதற்குப் பழகிவிடும் என்றார். ஆக, உங்கள் மனம் பக்குவமடையவே, நீங்கள் பூஜை செய்யவேண்டும். பூஜைமூலம் உண்டாகும் மனப்பக்குவம் கர்மாவை அழித்துவிடும்.
ஞானம் என்பது கற்றுத் தேர்ந்து வருவதா? இல்லை, தானாக வருவதா? -கே.எல். சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்.
ஞானம் என்பது கற்றும் வரும். கற்றும் ஒன்றும் புரியாத களிமண்ணாகவும் இருக்கும். உலகில் மிகச் சிலர்தான் எதுவும் கற்காமல், எவ்வித முயற்சியும் செய்யாமல் ஞானம் முழுமை அடைந்தவராகத் தோன்றுவர். இவர்களை சித்தர் என்று அழைப்பார்கள். பிறப்பிலேயே ஞானம் நிறைந்தவர்களை, ஒன்று பைத்தியம் என்று சொல்-யிருக்கிறார் கள். அல்லது பிச்சைக்காரன் என்றும் துரத்தி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஞானம் என்பது கற்று வருவதோ, அல்லது தானாக வருவதோ அது வேறு... ஆனால் நமக்கு முழுமையான ஞானம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கக்கூட துப்பு கிடையாது. அதுதான் உண்மை.
சாபமிடுவது இருவரையும் பாதிக்குமா? -கே.எல். சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்.
ஆம். ஒருவரை சாபமிடும் போது, அதனை எதிர்கொள் பவர், சாபத்தை வாங்குபவர் பாதிப் படைவார்கள். எனினும் காரண காரியமின்றி, பொறாமையால், வயிற்றெரிச்சலால் சாபமிடும் நபர்களை, அந்த சாபம் திரும்பி வந்து, நூறு மடங்கு கெடு பலனைத் தரும். அதனால் கூடியமட்டும் சாபம் இடாதீர்கள். உண்மையாகவே நீங்கள் கஷ்டத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள் எனில், மௌனமாக, கடவுளிடமும், சித்தர்களிடமும் கண்ணீரோடு முறையிடுங்கள். இந்த பிராத்தனை, உங்களுக்கு துன்பம் கொடுத் தவர்கள் மூலமே, விலகச் செய்துவிடும். அந்த இம்சை இல்லாமல் போய்விடும். என்ன ஒன்று சற்று நிதானமாக இந்த பிரார்த்தனையின் பலன் கிடைக்கும். எனினும் மிக நல்ல மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். எதற்கெடுத்தாலும் சாபமிட்டால் உங் களுக்கே கெடுதலாகும். உடம்பும் கெட்டுவிடும். கவனம் தேவை.
ஒரு வம்சம் விருத்தி யாகாமல் தடைபெற என்ன காரணம்? நிவர்த்தி செய்யவழி உண்டா? -கே.எல். சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்.
வம்சம் விருத்தி ஆகாமல் இருப்பதற்கு ஜோதிடப்படி, உங்களின் 5-க்குரியவர் 6, 8, 12-ல் மறைவது. அல்லது 5-ல் சூரியன்+சனி பாபர்கள் இருந்து, லக்னத்தில் ராகு, 7-ல் பலவீனமான சந்திரன், 12-ல் குரு இருக்க பிரேத சாப யோகம் என ஒரு அமைப்பு ஏற்பட்டு, வம்ச விருத்தி தடையாகும். போன ஜென்மம் அல்லது இந்த ஜென்மத் தில் மரங்களை வெட்டுவது, குளம், ஊருணி களை அழிப்பது, வேலை செய்யும் ஆட்களை துன்புறுத்துவது, கோவில் சொத்தை அபகரிப் பது என இவையும் வம்ச விருத்திக்கு தடை யாகும். சிவன் சொத்து குல நாசம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே பரிகாரமாக சிவன் கோவி-ல் மரங்களை நடுவது, குளம் போன்ற நீர்நிலை களைப் பாதுகாப்பது, பசு மடத்திற்கு சேவை செய்வது என இவைபோன்ற பொது சேவை கள், வம்ச விருத்தியை பெருக்கும் வழிகளாகும்.
மதம் சிறந்ததா? அந்த மதத்தில் உள்ள ஆன்மிகம் சிறந்ததா? -என். ஜானகிராமன், திசையன்விளை.
ஒரு சமூகத்திற்கு மதம் எதற்கு எனக் கேள்வி வந்தால், அந்த மக்களின் கஷ்டம், குறைகள், துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்காக, மதகுருவைத் தரிசிக்கச் செல்கிறார்கள். அந்த மதத்தின் தலைவரான, மதகுரு அந்தந்த பரிகார நிவர்த்திகளைக் கூறி, மனிதர்களைத் தெளி வடையச் செய்கிறார். "இதனால் மனிதர்கள் தங்கள் மதத்தையும், மத குருவையும் ரொம்பவும் பணிந்து வணங்குகின்றனர். உலகில் நிறைய மதங்கள் உள்ளது. ஒவ்வொரு மதத்திற்குமான ஆன்மிக வழிகள் பல வகையில் உள்ளது. சில உருவ வழி பாடு உடையது. சில மதம் அருவ வழிபாடு கொண் டது. சில புத்தகங்களை வாசிக்கும் ஆன்மிக வழி கொண்டது. இப்படி பல ஆன்மிகப் பாதைகள் கொண்ட பல மதங்கள் நம் நாட்டில் உள்ளது. இந்து மதம் தவிர, மற்ற மதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தம் வீட்டுக்குக் குழந்தைகளை, தங்களது மதம் சார்ந்த பயிற்சி வகுப்பில், ஆரம்பம் முதலே படிக்க வைத்துவிடுகிறார்கள். எனவே மற்ற மதக் குழந்தைகளிடம், பெரியவர்களிடம் கேட்டால், அவர்களது மதத்தை உசத்தி யானது எனக் கூறுவதுடன் அதன் ஆன்மிக பக்தி மார்க்கத்தை அழகாக விளக்கவும் செய்வார்கள். இதுவே, நமது இந்து மதக் குழந்தைகளிடம், உன்னுடைய மதம் அதன் உண்மை பற்றி கூறு எனில், அதற்கு டக்கென்று கோவிலும், சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும்தான் நினைவுக்கு வரும். வேறு எதுவும் சொல்லத் தெரியாது. இது யார் தவறு. இந்து மதக் குழந்தை களுக்கு, தேவாரம், திருவருட்பா, கீதை என ஏதாவது ஒன்று தெரியுமா? அடக் குழந்தைகளை விடுங்கள். பெரியவர் களுக்காவது தெரியுமா? ஒன்றும் தெரியாது. எங்காவது இந்து மத ஆன்மிக வகுப்பு நடக்கிறதா? எனக்கு ரொம்ப இந்து மதம், அதன் ஆன்மிகம் பற்றித் தெரியவில்லை. அதனால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆளை விடுங்கள்.
பக்தி+அன்பு+அருள்= மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன? -ஆர்.வள்ளிபாலன், திசையன்வினை
பக்தி- இறைவனிடம் செலுத்து வது.
அன்பு- சக ஜீவ ராசிகளிடம் செலுத்து வது.
அருள்- தெய்வம் நமக்கு அருளுவது.
அன்பே சிவம் என்பர். ஒரு நாள் விடியற்காலைப் பொழுதில், ஸ்ரீரமண மகரிஷி, தனியாக ஓரிடம் சென்று, சுள்ளி களைப் பொறுக்கி, அடுப்பு மூட்டி, அதில் ஒரு பாத்திரத்தில் வெள்ளை நிற மாவை, நீரில் கரைத்து, அதனைக் காய்ச்சினார். இதனை ஒளிந்து நின்ற பக்தர் ஒருவர், சுவாமி காயகல்பம் தயாரிக்கிறார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பின் காய்ச்சி முடித்த சுவாமி, அவரைக் கூப்பிட்டு, கொஞ்சம் தள்ளி, மூடி இருந்த ஒரு கூடையைத் திறக்கச் சொன்னார். அதில் இருந்த நான்கு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி களும் ஓடி வந்து, கஞ்சியைக் குடித்து பசியாறின. ஆக எல்லா உயிர்களிட மும் அன்பு செலுத்துவது ஆன்மிகம் எனத் தெரிகிறது. எனவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவதே உண்மை யான பக்தியாகும். இந்த உண்மை யான பக்தியே ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தகும். இது ரமண மகரிஷி மட்டுமல்ல; அனைத்து சித்தர் பெருமக்களின் தீர்க்கமான கோட் பாடாகும். இதில் ஒற்றுமை, வேற்றுமை என்ன இருக்கிறது.