ஐயப்பனின் அறுபடை வீடுகள் எவை? -ஆர். விநாயகராமன், செல்வமருதூர் திசையவிளை.

1. ஆரியங் காவு

2. அச்சன் கோவில்

3. குளத்துப் புழா

4. எருமே-

5. பந்தளம்

6. சபரிமலை.

இவையே ஐயப்பனின் அறு படை வீடுகள் ஆகும்.

ஒருவரின் லக்னத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பலன்கள் இருந்தால் கெடுதலா? -சங்கீத சரவணன், மயிலாதுறை.

ஆம். ஒருவரின் லக்னத் தில் நிறைய கிரகங்கள் இருந் தால், அது கிரக யுத்தம் எனும் வகையில் வந்துவிடும். இந்த கிரக யுத்தம் என்ன செய்யும். ஒன்றையொன்று, பின்னுக் குப் பிடித்து இழுக்கும். எனவே முன்னேற்றம் என்பது ரொம்ப மெதுவாக அமையும். ஒருபடி முன்னேறினால், ஒன்பது படி இறங்கும்படி இருக்கும். அப்புறம் வாழ்க்கை சிக்கலாகி, சிடுக்குகள் நிறைந்தது மாதிரி இருக்கும்.

qq

மனைவியின் ஜாதக அமைப்பு கணவனின் வளர்ச்சியைப் பாதிக்குமா? -ராஜாராம், திருச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும், தனிப்பட்ட ஜாதகம் இருக்கிறது. இந்த ஜாதக பலன்தான், அவரை செயல்படச் செய்யும். அவரின் தசாபுக்தியைப் பொறுத்தே, வாழ்வின் ஏற்றத் தாழ்வு அமையும். மனைவியின் ஜாதக பலன். சற்று உறுதுணை யாக இருக்குமே யொழிய, முழுவதும் நன்மையும் தராது; கெடுக்கவும் செய்யாது.

Advertisment

மற்ற மதங்களைவிட இந்து மதத்தில் அதிக விசேஷம் ஏன்? -என். ஜானகிராமன், செல்வமருதூர்.

மற்ற மதத்தில் ஒரு சாமிதான் இருக்கும். அட மிஞ்சி போனால் இரண்டு, மூன்று தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்துக்குரிய பண்டிகை வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் வரும். ஆனால் இந்து மதத்தில் ஏகப்பட்ட தெய்வங்கள். அத்தனை தெய்வத்துக்கும் விசேஷ பண்டிகைக்கு, வருடத்துக்கு 365 நாட்கள் போதவில்லை. அதனால்தான் இந்து மதத்தில் இத்தனை பண்டிகை, விசேஷம் உள்ளது.

கோவிலில் தங்கத்தேர் இழுப்பதன் பயன்? -கவிதா, திண்டுக்கல்.

Advertisment

தங்கம் என்றாலே ஐஸ்வர்யம்தான். செழிப்புதான். மேலும் தங்கம் என்றவுடன் குரு அங்கே வந்துவிடுவார். தங்கம் தோஷமில்லாதது. எனவே தோஷமில்லாத தங்கத்தால் தேர் செய்து, முழுமையான தெய்வத்தை அதில் இருத்தி, அவரை இழுப்பது என்பது மிகவும் விசேஷமான பலனைத் தரும். ஒவ்வொரு தெய்வ விஷயத்திற்கும், ஒவ்வொரு நோக்கமும், பலனும் இருக்கும். ஆனால் தங்கத் தேர் இழுப்பதற்கு, எந்த குறிப்பிட்ட நோக்கமும் தேவையில்லை. உங்களின் பிரார்த்தனைகள் எதுவாக இருப்பினும், நீங்கள் தங்கத்தேர் இழுப்பதாக வேண்டிக்கொள்ளலாம். இறைவனின் அணுக்கிரகம் இருந்தால், உங்களுக்கு தங்கத்தேர் இழுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

12 ராசிக்கும் ருத்ராட்ச முகங்களுக்கும் உள்ள சிறப்புகள் எவை? -சுரேஷ், பல்லாவரம்.

1. மேஷ ராசி- 6 முகம் அல்லது 14 முகம்.

2. ரிஷப ராசி- 7 முகம் அல்லது 13 முகம்.

3. மிதுன ராசி- 15 முகம் அல்லது 19 முகம்.

4. கடக ராசி- 2 முகம் அல்லது 13, 16 முகம்.

5. சிம்ம ராசி- 3 முகம் அல்லது 12 முகம்.

6. கன்னி ராசி- 15 முகம் அல்லது 19 முகம்.

7. துலா ராசி- 7 முகம் அல்லது 13 முகம்.

8. விருச்சிக ராசி- 6 முகம் அல்லது 14 முகம்.

9. தனுசு ராசி- 4 முகம் அல்லது 5 முகம்.

10. மகர ராசி- 17 முகம் அல்லது 14 முகம்.

11. கும்ப ராசி- 17 முகம் அல்லது 14 முகம்.

12. மீன ராசி- 4 முகம் அல்லது 5 முகம்.

ஒரு முக ருத்ராட்சம் எளிதாகக் கிடைக்கும். 5, 6, 11, 14 முக ருத்ராட்சத்தை எல்லாரும் அணியலாம். 17, 19 முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது. அவர்கள் 5 முக ருத்ராட்சம் அணியலாம்.

இறைவனுக்கும் வண்ணங்களுக்கும் தொடர்பு உண்டா? -ரேவதி, திருத்தணி.

மகாவிஷ்ணுவும், பார்வதியும் நீல நிறம் கொண்டவர்கள். ருத்திரனும், சரஸ்வதியும் வெள்ளை நிறம் கொண்டவர்கள். பிரம்மாவும், லட்சுமி யும் செம்மஞ்சள் நிறம் கொண்டவர்கள். ஆதிசக்தியான அம்பாள், இவ்விதம் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் செயலுக் காக, தன்னிலிருந்து, தானே இவர்களை தோற்றுவித்தாள் என தேவி மகாத்மியம் உரைக்கின்றது. இதுவே ஆதி தெய்வங்களின் தோற்றமும் வர்ணமும் ஆகும். பிற்காலத்தில் நிறைய தெய்வங்கள் ஆவிர்பர்த்தனர்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் எவ்வாறு கணிக்கப்பட்டது? இறைவனுக்கும் இந்த ராசிகளுக்கும் தொடர்பு உண்டா? -கலைச்செல்வி, இராயபுரம்.

ஒவ்வொரு நாளும் சூரிய உதய, அஸ்த மனம் கணக்கிடப் படுகிறது. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியாக மாறிக் கொண்டே இருப்பார். அவர் சித்திரை மாதத்தில் நகரும்போது அதனை மேஷம் என்றனர். வைகாசி மாதம் சென்றபின் அது ரிஷபம் எனப்பட்டது. இதன்படி, தமிழ் மாதங்கள் 12-லும் சூரியன் மாறும் போது, ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு ராசி எனக் கணக்கிடப்பட்டது.

இந்த 12 ராசிகளுக்கும் குறிப்பட்ட தெய்வம் கூறப்பட்டுள்ளது.

மேஷம், விருச்சிகம்- முருகர்.

ரிஷபம், துலாம்- மகாலட்சுமி.

மிதுனம், கன்னி- மகாவிஷ்ணு.

கடகம்- பார்வதி.

சிம்மம்- சிவன், சூரியன்

தனுசு, மீனம்- சிவன், குரு, தட்சிணாமூர்த்தி.

மகரம்- கும்பம்- சனீஸ்வர பகவான்.

பூமியை வட்ட வடிவமாக வரைந்தால் அதில் 360 டிகிரி இருக்கும். இதனை 12 சீதோஷ்ண குணம் கொண்ட வீடுகளாக பிரித்துள்ளனர். இதுவே 12 ராசிகளாகும்.

ஜெபமாலையில் 108 மணிகள் இருப்பதன் தாத்பார்யம் என்ன? -சுப்பிரமணியன், சேலம்.

108 எனும் எண், இந்து மதத்தில் முக்கியமானதாகும். எல்லா தெய்வங்களுக்கும் அஷ்டோத்ர நாமம் என்றிருக்கிறது.

இது தெய்வத்தின் 108 நாமங்களைக் கூறுகிறது.

ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டது. எனவே மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் வரும்.

ஜோதிடத்தில் 12 ராசிகளும், 9 கிரகங்களும் உள்ளது. இதனை பெருக்கினால் 108 வரும்.

இந்தியாவில் 108 திவ்ய தேசங்கள் உள்ளது.

சிவதாண்டவம் 108 நடன நிலைகளை உள்ளடக்கியது.

இதனால்தான் ஜெபமாலையில் 108 மணிகள் உள்ளது. இதை உருட்டியபடியே, பிரார்த்தனை ஜெபம் செய்யும்போது, கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கும். மேலும் எண்ணிக்கையும் சரியாக இருக்கும். இந்த 108 எனும் எண் இன்னும் பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டது.

சுவாமிக்கு சல்லடை தட்டு பயன்படுத்துவது ஏன்? -காயத்ரி, சென்னை.

சுவாமியின் அபிஷேகத்தின்போது, வெறுமனே, அபிஷேகம் செய்யாமல், சல்லடை தட்டுமூலம் அபிஷேகம் செய்யும் போது, அங்கு, அனேக புனித நதிகளின் சங்கமம் ஏற்படும் என்பது ஒரு சாஸ்திரம். எனவே இந்த ஐதிகத்தின்படி, சல்லடை மூலம், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.

நெற்றியில் சந்தனம் இட்டுக்கொள்வதால் நன்மை உள்ளதா? -எஸ்.ஆர். ஹரிஹரன், சென்னை.

நெற்றியில் விபூதி, சந்தனம், திலகம், குங்குமம், களபம், கோபிச்சந்தனம் எனும் பிருந்தாவனத்திலுள்ள மண் இவையனைத் தும் நெற்றியில் இட்டுக்கொள்வது வழக்கம்.

இது ஒரு பாதுகாப்பு ஆகும். நாம் எந்த தெய்வத்தை உபாசிக்கிறோமோ, அந்த தேவதையின் சின்னம் அணிந்து பூஜிக்கும் போது நற்பலன் கிடைக்கும் என்பது ஒரு விதி. இதனை திலகவிதி என்று கூறுகிறார் கள். இவ்விதம் நெற்றியில், திலகம் அணியாமல் பூஜை செய்யக்கூடாது என்று கூறுவார்கள்.

பிரம்ம முகூர்த்தத்தில் சந்தணமும், விடியற்காலை குங்குமமும், மாலையில் திருநீறும் அணிவது நோய் நிவாரணத்துக்கு உகந்தது என்கிறார்கள்.

சந்தணம், விபூதியை இடுப்புக்கு கீழ் பூசக்கூடாது. சந்தணம் மிக குளிர்ச்சியான பொருள். அதை இடுப்புக்கு கீழ் மிகையாக பூசினால், இனவிருத்தி திறன் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசி செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக்கொள்வதும் வழக்கம்.

திருமண் இடுவதை நாமம் போடுவது என்கிறோம்.

மகாவிஷ்ணுவுக்கு கேசவா, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர என்று 12 நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லி, 12 இடங்களில் திருநாமங்களை இட்டுக்கொள்வார்கள். இப்படி பகவத் நாமத்தை சொல்லி போட்டுக்கொள்வதால், நாமம் போடுவது என்ற பெயர் வந்து விட்டது.

திருநீறு, திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும் உலகிலுள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.