என் வாழ்வில் தன்னம்பிக்கை, அமைதி இல்லை. இதற்கு ஏதாவது பரிகாரம் கூறவும். இனிமேல் ஏதாவது பெரிய அளவு துன்பம் ஏற்படுமா? -என். மோகன்

என். மோகன் 24-7-1952-ல் பிறந்தவர். மேஷ லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கை, தைரியம் இதுபற்றி அறிந்துகொள்ள அவரின் 3-ஆமிட அதிபதியை பார்க்கவேண்டும். மேலும் ஒருவருடைய அமைதி, தீர்க்க யோசனை இவற்றை தெரிவதற்கு அவரின் 5-ஆமிட அதிபதியை நோக்கவேண்டும். இவரின் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதியான சூரியன் கேதுவுடன், ராகுவின் பார்வையில் கிரகண யுத்தம் பெற்று, பலனற்று போய் விட்டார். ஒரு மனிதனின் அமைதியான மனமறிய, அவரின் சந்திரன் நிலை கணக்கிடப்பட வேண்டும். இந்த ஜாதகருக்கு, இவரின் தைரிய அதிபதியும், மோகனாகிய சந்திரனும், சனி மற்றும் கேது எனும் இரு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு தவியாய் தவிக் கிறார்கள். இதனால் பாப கர்த்தாரி தோஷம் பெற்றததால் இவரின் தன்னம்பிக்கை முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. இவ்விதம் மனக்கலக்கம் ஏற்பட்ட வர்கள் கும்பகோணம்- திருபுவனம்- கம்ப கரேஸ்வரரை வணங்கவேண்டும். மனக் கலக்கம் நீங்குவதோடு, ஏவல், பில்லி, சூன்யம், தீர அங்குள்ள சரமேஸ்வரரை தரிசிக்கவேண்டும். இவரின் சந்திரன்+ புதன் சேர்க் கைக்கு விஷ்ணு- துர்க்கையை வழிபடுவது அவசியம்.

என் ஜாதகப்படி என் வேலை யின் நிலை பற்றி கூறுங்கள்? -சண்முகம்

இவர் 14-4-1989-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கடக ராசி. லக்னத் துக்கு 6-ஆம் அதிபதி வேலையைப் பற்றி கூறுவார். இவரின் 6-ஆம் அதிபதி, சந்திரன் சனி சாரம் பெற்று நிற்கிறார். இங்கு சனி, சந்திரன் சம்பந்தம் ஏற்படுவதால், இவர் வேலையை மாற்றிக்கொண்டே இருக்கும் நிலை உண்டு. மேலும் இவரின் சனியின் இருபுறமும் கிரகங்கள் இல்லை. ஜாத கத்தில் சனியின் இருபுறமும் கிரகங்கள் இல்லாமல் இருப்பின், அந்த ஜாதகர், ஒரு வேலையைவிட்டால் அடுத்த வேலை கிடைப் பது சிரமம். எனவே இந்த ஜாதகர், ஒரு வேலை கிடைத்தால் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். நடப்பு சுக்கிர தசையில் சுக்கிர புக்தி. அடுத்து 2024 ஆகஸ்ட்டில் வரும் சூரிய புக்தி, இடமாற்றத்துடன் வேலை கொடுக்கும். இவர் பிரதோஷ காலத்தில், நெய்தீபமேற்றி சிவனை வழிபடவேண்டும்.

Advertisment

dd

வீட்டை இடிக்காமல், எதையும் மாற்றாமல், ஒரு எளிமையான வாஸ்து பரிகாரம் கூறுங்களேன்! -அனுராதா, சென்னை

இது எல்லாருக்கும் பயன்தரும் கேள்வி யாகும். உங்கள் வீட்டின் ஈசான்ய மூலை யில் ஒரு செம்பில் நீர் ஊற்றி, அதில் ஒரு தேங்காயை வைத்து, கலசம்போல வைத்து விட்டால் வாஸ்து குற்றத்தை, இந்த கலசம் நீக்கிவிடும். வாரத்திற்கு ஒரு தடவை செம்பு நீரை மாற்றிவிடுங்கள். தேங்காய்க்கு மஞ்சள், குங்குமம் இடுவது சிறப்பு. தேங்காயில் குடுமி இருக்கவேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ராசி, அம்சம் தவிர நிறைய கட்டங்கள் உள்ளதே. அதன் பயன் என்ன? அதனை எப்படி கணக்கீடு செய்கிறார்கள்? இதனைப் பற்றிக் கூறுங்கள்? -சுப்பிரமணியன், குன்றத்தூர்.

360 டிகிரி கொண்ட ராசி மண்டலத்தை பல பிரிவுகளாக பிரிக்க இயலும். அதற்கு ஒவ்வொன்றிற்கு ஒரு கணக்கும், பயனும் உள்ளது. சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

ராசி: இது ராசி மண்டலத்தை, 360 டிகிரியை 12 பங்காக பிரிப்பது. ஒவ்வொரு ராசியும் 30' சம அளவு கொண்டது. ஒரு குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கீடுசெய்து, அதில் அந்த நேரத்து கிரக நிலையைக் குறிப்பர். இதைக்கொண்டுதான், மனிதனின் முழு ஆயுளுக்கும் பலன் சொல்லமுடியும்.

ஹோரர்: இது ஒவ்வொரு ராசியையும் இரண்டு சமபங்காக பிரித்து பார்ப்பது. இது ஜாதகரின் செல்வநிலை, ஒழுக்கம் இவற்றைக் குறிப்பது.

திரேக்காணம்: இது ஒவ்வொரு ராசி யையும் 10 டிகிரிகொண்ட 3 பாகமாக பிரிப்பது. இதனைக்கொண்டு ஜாதகரின் உடன்பிறப்புகளையும், அறிவையும் தெரிந்துகொள்ளலாம்.

நவாம்ஸம்: இது ஒவ்வொரு ராசியையும் 9 சமபங்குகளாக பிரிப்பது. இதனைக் கொண்டு ஜாதகப் பலன்களை நிறைய உறுதி செய்ய இயலும். மேலும் இது திருமண உறவை பற்றி கூறும்.

த்வாத சாம்ஸம்: இது ராசியை 12 சம பங்காக பிரிப்பது. இது பெற்றோர் மற்றும் ஊழ்வினை பற்றிக் கூறும்.

த்ரிசாம்ஸம்: இது ராசியை 5 பாகமாக பிரிப்பது. இது ஜாதகரின் நோய், ஆரோக் கியம், இழப்புகளை அறியமுடியும்.

சப்தாம்ஸம்: ஒரு ராசியை 7 பாகமாக பிரிப்பது. இது குழந்தைகள், பேரக்குழந்தை, சமுதாயத்தின் அங்கீகாரம் இவைப் பற்றி பேசும்.

தஸாம்ஸம்: இது ஒரு ராசியை 10 சமபாகமாக பிரிப்பது. இது ஒருவரின் தொழில் வளம். வேலையா, சொந்தத் தொழிலா, செயல் திறன் இவை பற்றிக் கூறும்.

ஷஷ்டியாம்ஸம்: ஒரு ராசியை 60 பாகமாக பிரித்து கூறுவது இதனைக் கொண்டு இரட்டைக் குழந்தைகளின் வாழ்க்கை நிலையைக் கூறலாம்.

சதுர்தாம்ஸம்: ஒரு ராசியை நான்கு சமபாகமாக பிரிப்பது. இதனைக் கொண்டு கல்வி பற்றி அறியலாம்.

விம்ஸாம்ஸம்: ஒரு ராசியை இருபது பாகமாக பிரிப்பது. ஒருவரின் ஆன்மிக உணர்வு பற்றி அறிய உதவும்.

சத்துரு விம்ஸாம்ஸம்: ஒரு ராசியை 24 சமபங்காக பிரிப்பது. இதுவும் ஜாதகரின் உயர் கல்வி மற்றும் சென்ற பிறவியின் நல்வினைகள் பற்றி அறியக்கூடும்.

இந்த வர்க்க பிரிவுகளைக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட விஷயத்தின், சிறப்பான, முக்கிய மான செய்தியை அறியலாம். ஆனாலும் பெரும்பாலும் ஜோதிடர்கள், ராசி, அம்சம் மட்டுமே எடுத்துக்கொள்வர்.

நான் வாக்கிங் போகும்போது, ஒரு பருந்து என் தலையில் தட்டிவிட்டு போய்விட்டது. இது நல்லதா- கெட்டதா. ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? -சங்கீதா, பெங்களூர்

பதில்: பொதுவாக காகம் தலையில் தட்டிவிட்டது என்றுதான் சொல்வார்கள். ஆனால் நீங்கள் பருந்து தட்டிவிட்டது எனக் கூறியிருக்கிறீர்கள். இதுபற்றி சாஸ்திரத்தில் எதுவும் குறிப்பாக கூறப்படவில்லை. ஆயினும் இது கெட்டது கிடையாது எனக் கூறலாம். மேலும் நீங்கள், பெருமாளுக்கு ஏதாவது வேண்டிவிட்டு, பின் சுத்தமாக மறந் திருப்பீர்கள். அதனை உங்களுக்கு ஞாபகப் படுத்தவே பருந்து ஸ்பரிசம் உண்டானது போலும். உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கருடருக்கு நெய் விளக்கேற்றவும்.

எங்களுக்கு முதல் பெண் குழந்தை உள்ளது. ஆண் வாரிசு யோகம் எப்போது என கூறுங்கள்? -கிருஷ்ணவி, கோயம்புத்தூர்

சீனிவாசன் 28-2-1991-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். கார்த்திகாயினி 1-9-1999-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, கார்த்திகை நட்சத்திரம். இவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்குமா எனக் கேட்டுள்ளார்கள். எப்போதும் முதல் குழந்தைக்கு. 5-ஆமிடத் தையும், இரண்டாவது குழந்தைக்கு 7-ஆமிடத் தையும் நோக்கவேண்டும். அதன்படி இவர்கள் இருவர் ஜாதகத்திலும், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. 2025-க்குள் ஆண் குழந்தைக்கு வாய்ப்புள்ளது.

இவ்விதம் ஆண் குழந்தை வேண்டுவோர். திருச்சி, உறையூர் பாண்டமங்கலம், ஆலயத் தில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் நெய் தீப மேற்றி, அரச மரத்தை வழிபடவேண்டும்

எப்போது திருமணம் கூடிவரும்? தயவுகூர்ந்து பரிகாரத்துடன் கூறவும். -பாலாஜி, கும்பகோணம்

Advertisment

பாலாஜி 7-11-1982-ல் பிறந்தவர். மேஷ லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். இவரின் லக்னத்தின் 7-ஆம் வீட்டில் ஐந்து கிரக சேர்க்கை உள்ளது. இது ஒரு சன்யாச யோக ஜாதகம் ஆகும். எனினும் 7-ஆம் வீட்டில், 5-ஆம் அதிபதி சூரியன் நீசம் பங்கமாகியும், 7-ஆம் அதிபதி சுக்கிரன் வலுப்பெற்றும், கிரக கூட்டணியில் உள்ளனர். இதனால், இவர், ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வார். நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி நடப்பு 2024 ஜூலைவரை. அடுத்துவரும் குரு புக்தியில் இஷ்டமான பெண்ணை விருப்பத் திருமணமாக செய்துகொள்வார். முதல் திருமண பெண் வேண்டும் என்றால், காலம் முழுக்க சன்யாசியாகவே இருக்க நேரிடும். இவருக்கு 8-ஆம் அதிபதி எனும் மாங்கல்ய அதிபதி, கேதுவுடன் இருப்பதால், திருமணத் தடை ஏற்படுகிறது. இதற்கு அங்காரக சதுர்த்தி யன்று, விநாயகரை வணங்கவேண்டும். மேலும், இவ்விதம் திருமணத் தடை உள்ளவர் கள். விழுப்புரம், வளவனூர் அருகே சிறுவந் தாடு லட்சுமி நாராயணர் கோவிலில், மட்டை தேங்காயை வைத்து வழிபட்டு, எடுத்துச் சென்று, தினமும் வீட்டில் வைத்து வழிபட் டால், இவ்விதம் வெகுகாலம் தடைபட்ட வர்களுக்கு திருமணம் நடக்கும். குல தெய்வ வழிபாடும் நேர்த்திக்கடனும் அவசியம்.