1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வேலை தேடுவோருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அது பெரும்பாலும் சீருடைப்பணி அல்லது அது சார்ந்து இருக்கும். மாத முற்பகுதியில் நிறைய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். அது நன்மை தரத்தக்க அளவிலும் அமையும். மாதப் பிற்பகுதி சில சங்கடங்களையும் எதிர்ப்புகளையும் தரும். சிறிது நஷ்டமும் உண்டாகும். இதேபோன்று மாத முற்பகுதியில் சரளமான பணவரவையும், பிற்பகுதி பணத்தட்டுப்பாடையும் தரும். நீங்கள் மாதப்பிற்பகுதியில் சொற் களில் கவனமாக இருக்க வேண்டும். சிலரது பணம் காணாமல் போக வாய்ப்புண்டு; கவனம் தேவை. கடைசி வாரத்தில் பெற்றோர் நலனில் அக்கறை தேவை. சிலரது தாய் இடம் மாறக்கூடும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தத் தேதிகளில் பிறந்த குழந்தைகளின் தந்தை வேலை விஷயமாக இடம் மாறும்போது தாயும் இடம் மாறுவார். மற்றொரு காரணம் தாய்- தந்தை யரில் யாராவது ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதால் இடமாற்றம் ஏற்படும். சிலரது வேலையில் சட்டப்புறம்பான அதிர்ஷ்டம் உண்டாகும். சிலர் கைபேசியில் அதிக வம்பு பேசுவீர்கள். திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகளை மாத முற்பகுதியில் பேசினால்தான் நல்லவிதமாக நடக்கும். பிற்பகுதியில் தொடர்ந்தால் உங்கள் பேச்சு களால் களேபரம் உண்டாகிவிடும். இந்த மாதத்தில் நீங்கள் எதிலும் சற்று பணிவாக ஒதுங்கியிருப்பது நல்லது. ஏனெனில் எதிரிகளின் பலம் அதிக அளவில் பெருகி யுள்ளது. சண்டையில் நீங்கள் இறங்கி னால் தோற்றுவிடக்கூடும். எனவே உங்களையும் குடும்பத்தையும் சற்று கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: தெருவோரம் அமர்ந்துள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கவும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முருகனை வழிபடவும். பிறமத வழிபாட் டுத் தலங்களுக்கு முடிந்த காணிக்கை செலுத் துங்கள்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத முற்பகுதியில் பணத்தை கண்ணில் காட்டவே விடாமல் செய்து, மாதப் பிற்பகுதியில் பணவரவு சீராகும். இந்த மாதம் முழுவதுமே தைரியக் குறைவுண்டு. சொந்த மனைவியைக்கூட பத்து நிமிடம் துணிந்து பார்க்க பயமாக இருக்கும். பயணம்- அது சிறுதூரப் பயணமோ நீண்டதூரப் பயணமோ சரிப்பட்டு வராது. வாழ்க்கைத் துணைக்கு நிச்சயம் வேலை கிட்டும். அது அடுக்குமாடி நிறுவனம், கலைத்தொழில், ஒப்பனை என ஏதோவொன்றில் கிடைக்கும். சிலருக்கு அரசியல் அல்லது அது சார்ந்த வேலை அமையும். விளையாட்டுத் துறையினர் நிச்சயம் வேலை கிடைக்கப்பெறுவர். பங்குவர்த்தகம் சிறப்பாக ஜொ-க்கும்; வாரிவழங்கும். பூர்வீக தொழி-ல் மேன்மையுண்டு. குலதெய்வக் கோவில் கௌரவம் தரும். எதிரிகள் மறைவர். நோய் மறையும். நீங்கள் வெளியில் எதிரி களை வென்றுவிடுவீர்கள். ஆனால் வீட்டிற் குள்ளேயே சண்டை இழுப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இந்த மாதம் முழுவதும் உங்கள் இளைய சகோதரர் பாடாய்ப்படுத்துவார். ஒன்று ஏதாவது சண்டை இழுத்துவிடுவார் அல்லது எங்காவது சென்றுவிடுவார். உங்கள் வாழ்க் கைத் துணைக்கும் உங்கள் தாய்க்குமிடையே "ஈகோ' பிரச்சினை தலைதூக்கும். உங்களில் சிலருக்கு மருமகள் வருவாள். பரம்பரை பெண் அரசியல்வாதிகள் பெரிய- கம்பீர மான பதவிபெறுவர். காதல் திருமணம் நடக்கும். தந்தையின் காது அல்லது கணுக் கா-ல் வ- ஏற்படும். கோவிலுக்குச் செல்வதற்கு மாதத்தின் முத-ரண்டு வாரங்களில் தடையேற்படும். ரியல் எஸ்டேட், நெருப்பு, மின்சாரம், பானைபோன்ற தொழில் செய்பவர்கள் மிக மேன்மையடைவார்கள். அதுபோல சீருடைப் பணியாளர்கள், அரசு உத்தி யோகஸ்தர்கள் ஆகியோருக்குப் பதவி உயர்வுண்டு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: காது கேளாத குழந்தைகளுக்கு உதவுங்கள். பழமுதிர்சோலை முருகனை வணங்கவும். பிறமொழித் தொழிலாளர் களுக்கு உதவவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வீடு மாற்றும் செயல் உண்டு. இந்த தேதிகளில் பிறந்த குழந்தை களின் பெற்றோருக்கு அரசுவேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இளைய சகோதரரின் திருமண நிச்சயம் சம்பந்தமான அலைச்சல் உண்டு. இந்த மாதம் கைபேசிக் கடை, புத்தகக் கடை, நகைக்கடை, ஜோதிடம், அக்கவுன்டன்ட், வழக்கறிஞர் போன்ற தொழில் நல்ல முறையில் நடக்கும். ரியல் எஸ்டேட் துறையினர் அரசின் அனுகூலத்தைப் பெறுவர். உங்கள் குலதெய்வம் சம்பந்தமாக பெரிய அளவில் செலவழிப்பீர்கள். இதற்குக் காரணம், உங்களுக்கு இடமாற்றத்துடன்கூடிய பதவி உயர்வு கிடைப்பதால் இருக்கும். கடன் வசூலாகும். மருத்துவத் துறையினர் பணப் பரிசு பெறுவர். உங்களது அதிக உழைப்பு அதிக வருமானத்தைத் தரும். வியாபாரிகள் வீடு வாங்குவர். இது மாதத்தின் முற்பகுதியில் நடக்கும். பிற்பகுதியில் "வீடு வாங்கிய நேரம் சரியில்லை போலும்' என்று எண்ணத் தோன்றுமளவுக்கு சூழ்நிலை உருவாகும். அதற்கு உங்களில் சிலரது போதைப் பழக்கம், வேண்டாத சகவாசம் காரணமாக இருக்கும். உங்கள் விவசாய நஷ்டத்துக்கு அரசு நிவாரணம் வழங்கும். விவசாயம், வாகனம், வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்யும்போது பிறர் பேச்சைக் கேட்டால் சரிவை சந்திக்கக்கூடும்; கவனம் தேவை. உங்கள் வாரிசுகள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வர். உங்களில் சிலர் மாதப் பிற்பகுதியில் வெளிநாடு, இஸ்லாமிய நாட்டு வேலை கிடைத்துச் செல்வர். திரும ணப் பேச்சுகள் தொடங்கிய வேகத்தில், உங்கள் பெற்றோர்மூலம் சற்று சுணக்கம் ஏற்படும். மாமியார் உடல்நலக் குறைவை சந்திக்கக்கூடும். பங்கு வர்த்தகம் எதிர்பாராத வகையில் பணம் தரும். ஊடகம், விளம்பரம், போக்குவரத்து, செய்தி, வீடுமாற்றும் துறை போன்றவை நல்ல பணவரவைக் கொண்டுவரும். உங்கள் மூத்த சகோதரி வேலை கிடைத்து வேறிடம் செல்வார்.
அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: கடைகளில் வேலைபார்க்கும் சிறுவர்களுக்கு உதவுங்கள். பழனி முருகனை வணங்கவும். பிற மொழி, இன, மதக் குழந்தைகளுக்கு உதவிபுரியவும்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத இறுதி வாரத்தில் ஒரு மாறுதல் உண்டு. அது வேலையில் இடமாற்றமாக இருக்கலாம்; திருமணமாகி வேறிடம் செல்லலாம். தொழில், வேலையில் பதவி உயர்வுண்டு. ஆனால் அந்த உயர்வில் நீங்கள் எதிர்பார்த்த கையூட்டு கிடைக்காது. மாதப் பிற்பகுதியில் ஆரோக்கியம் சற்று கெடக்கூடும். தொண்டையில் வெப்பம் சம்பந்தமான கோளாறுகள் வந்து சரியாகும். இப்போது நடக்கும் திருமணம் வெகுவிமரிசையாக- நல்லதிர்ஷ்டத்துடன் நடக்கும். திருமண அமைப்பாளர்கள், திருமண சேவை செய்வோர் நிறைய வாய்ப்புகள் பெறுவர். தொழி-ல் கவனம் தேவை. சிலசமயம் திருஷ்டிபோல சில வில்லங்கம் வந்துசேரும். உங்கள் தொழி-ல் வரும் அதிக வருமானம் வருமானவரித் துறையினர் கவனிக்கப்பட்டு வரி விதிக்கப் படும். இதனால் பணவிரயம் உண்டு. இது லாபத்தில் நஷ்டமாகும். பங்கு விற்பனை மாதப் பிற்பகுதியில் கலவரப்படுத்தும். வேலை விஷயமாக வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். பூர்வீக சொத்து சற்று குழப்பத்தை ஏற்படுத்தும். வீடுவாங்க தொகை கேட்கும் போது முடியாதபட்சத்தில் கோபித்துக் கொள்வார். மருமகன் தனது கௌரவம் பாழாகிவிட்டதாக வேதனை கொள்வார். உங்கள் வாரிசுகள் அவர்கள் பங்குக்கு உங்களைப் பாடுபடுத்துவர். கலைத் துறையினர் ஏனோ மிகவும் சோர்வடைந்து விடுவர். விவசாயிகள் தகுந்த சமயத்தில் அரசு உதவி கிடைக்காமல் அல்லாடுவர். காவல்துறையினர் அதிக வேலையோடு அதிர்ஷ்டமும் காண்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 29.
எச்சரிக்கை எண்கள்: 3, 12, 21, 30.
பரிகாரம்: உங்கள் பூர்வீக இடத்தி லுள்ள குழந்தைகள் மற்றும் அரசு சத்துணவு உண்ணும் மாணவர்களுக்குத் தேவையறிந்து உதவிபுரியவும். திருத்தணி முருகனை வணங்கவும். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயமாகும். ஆனால் திருமண சமயத்தில், உங்களில் சிலர் தங்களது வேலைபற்றிக் கூறிய பொய்யான தகவல் வெளியே தெரிந்து சற்று திணறவேண்டியிருக்கும். உங்கள் தந்தையின் பூர்வீக மனையொன்று கைக்கு வந்துசேரும் அல்லது வீடுவிற்ற காசு வரும். இது சம்பந்தமாக உங்கள் இளைய சகோதரர் உங்கள்மீது கோபம் கொள்வார். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பெருமையடைவர். குழந்தைப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பெயர், புகழ் பெறுவர்; பெறும். விளையாட்டுத் துறையினரின் பெருவெற்றி சற்று சந்தேகத்தோடு பார்க்கப் படும். காவல்துறையில் உள்ளவர்களின் பணி பாராட்டையும் எதிர்மறை விமர்சனங் களையும் சம அளவில் பெறும். கலைத் துறையினர் சிலர் மிகுந்த புகழும் கூடவே சிலபல இன்னல்களும் பெறுவர். உங்களில் சிலர் பிறரை வெளுத்துவாங்குவீர்கள். சிலர் பிறரிடம் இன்னல்பட நேரும். தம்பதிகளுக்குள் பிணக்கும் பிரிவும் ஏற்படக்கூடும். அதற்கு உங்களில் சிலரது மறைமுகமான செயல்களே காரணமாக இருக்கும். வியாபாரம், திருமணம் விஷய மாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. இந்த மாதம் உங்களில் பலர் எதைத் தொட்டாலும் அதில் வில்லங்கம் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே தரவுகள் மற்றும் பயணச்சீட்டு போன்ற முக்கியமானவற்றைப் பாதுகாப் பாக வைத்துக்கொள்ளவேண்டும். சிலருக்கு ரயி-ல் ஏறி அமர்ந்தபின்தான் டிக்கெட்டை வீட்டிலேயே வைத்துவிட்டது ஞாபகத்துக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அரசு அதிகாரிகளால்- வரிவசூல் போன்றவற்றால் அலைக்கழிக்கப்படுவார்கள். பின்வாசல் வழியாக அதிர்ஷ்டம் வர வாய்ப்புள்ளது. மாதப் பிற்பகுதியில் தந்தை- மகன் முரண்பாடு வரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 13, 22, 31.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு உதவிபுரியவும். சிக்கல் முருகன் ஆலயம் சென்று வணங்கவும். பிறமதப் பெரியவர்களுக்கு உதவிபுரியவும்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் திருமணத்திற்குக் காத்திருப் போருக்கு திருமணம் நடக்கும். பெரும் பாலும் தாய்வழி சொந்தத்தில் சற்று விருப்பத் திருமணமாக நடக்கலாம். தாயாரின் உடல்நிலை சற்று சீர்கெடலாம். இதற்குக் காரணம், வரும் மருமகள் உங்கள் தாயாரைவிட மேன்மையாக இருப் பார். மிகவும் கம்பீரம் காட்டுவார். இதனால் உங்கள் தாயார் சற்று மனம் சுணங்கிப்போவார். வாழ்க்கைத்துணை மூலம் மனை அல்லது அடுக்குமாடி வீடு கிடைக்க வாய்ப்புள்ளது. மாத முற்பகுதியில் அரசுவகை லாபமும், பிற்பகுதியில் அரசாங்க தொல்லையும் செலவும் உண்டு. மாதத்தின் இறுதி வாரங்களில் வரி கட்டுவது, வட்டித் துயரம், கொடுத்த கடன் வராம-ருப்பது கடன் கேட்டால் தராமல் இழுத்தடிப்பது, சற்று தோல்சார்ந்த நோய், நரம்பு பிடித்திழுப்பது என ஒன்றுமாற்றி ஒன்று வந்து பாடாய்ப்படுத்தும். இந்த நிலையில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சீருடைப் பணி கிடைத்து அவர் மிடுக்காக இருக்க, நீங்கள் புழுங்கிப் போவீர்கள். ஏனோ இந்த மாதம் உங்கள் நிலையும், உங்கள் பெற்றோர் நிலையில் சற்று தொய்வாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் அவரது பெற்றோரும் உங்களை சற்று இம்சை செய்யக்கூடும். சிலர் பூர்வீக இடத்தி-ருந்து மருமகன் வரப்பெறுவீர்கள். உங்கள் யோகப்படி மனை வாங்கவோ அல்லது மனை, வய--ருந்து நல்ல வருமானம் வரவோ வாய்ப்புள்ளது. இதுபோன்ற அலைச்சலால் கடைசி வாரத்தில் மூளை மிகவும் குழம்பிவிடும். ஊடகத்துறையினர் அரசு சார்பில் ஒரு நன்மையும் ஊக்கமும் பெறுவர். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 18, 27.
எச்சரிக்கை எண்கள்: 4 13 22, 31.
பரிகாரம்: உங்கள் வீட்டில், அலுவலகத் தில், தொழிற்சாலையில் வேலைபார்க்கும் நபர்களின் குழந்தைகளுக்கு பயணச் செலவுக்கு உதவவும். சிறுவாபுரி முருகனை வணங்கவும். பிற மத, இன தம்பதிகளுக்கு உதவிபுரியவும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் வீடு மாற்றம் உண்டு. வீட்டுக்குரிய அட்வான்ஸ் பணம், பூர்வீக வீடு சம்பந்தமான தொகை, வயலுக்குரிய காசு, வாகனம் வாங்க வைத்திருந்த பணம் என ஏதோவொரு விதத்தில் எதிர்பாராத பண நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் வேலையில் சீருடை மற்றும் ஊடக சம்பந்தம் வரும் அல்லது வேலையின் பொருட்டு இவர்களை சந்திக்கவேண்டி இருக்கும். தொலைக் காட்சி, பத்திரிகை, செய்தித்துறை போன்றவற்றில் பணிபுரிவோர் ஏற்றமும் மாற்றமும் காண்பர். இவர்களில் சிலருக்கு பணிபுரியும் இடத்தில் காதல் விருப்பம் ஏற்பட்டு, அது திருமணத்தில் முடியும் சாத்தியக்கூறுண்டு. மனை குத்தகை, வீடுகட்டும் ஒப்பந்தம், மருந்து ஏஜென்சி, வீடு மாற்றும் தரகர் என இவை சார்ந்த துறையினருக்கு மதிப்பு பெருமளவில் அதிகரிக்கும். உங்கள் வாரிசுகளில் சிலர் வீடு சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவர். பங்கு வர்த்தகம் லாபம் அதிகரிப்பதுபோல் உயர்ந்து, பின் சரிவைக் காணநேரும்; கவனம் தேவை. அரசியல்வாதிகள் சொந்தத் தொகுதியில் வெற்றியடைவதுபோல் தோன்றி, பின்னர் அது கனவாக நேரலாம். மூட்டுவ- வரக்கூடும். சிலருக்கு மறுமணப் பேச்சு விறுவிறுப்படைந்து, பின் சத்தமின்றிப் போய்விடும். கலைஞர்கள் விளம்பரப்படம், சண்டைப் படத்தில் நடிக்கக்கூடும். உங்களில் சிலரது இளைய சகோதரருக்கு சீருடை, இராணுவப் பணி கிடைக்கும். அலைபேசியால் காதுவ- வரலாம். அரசுப்பதவி வேண்டுவோர் மாத முற்பகுதியில் முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும். பூர்வீக இடம் சார்ந்த விஷயங்களையும் மாத முற்பகுதியிலேயே ஆவன செய்துகொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: வீடு கட்டுவோர், பிளாட் கட்டும் இடத்தில் வேலைசெய்யும் குழந்தைகளின் தேவை யறிந்து படிப்பு மற்றும் பிற செலவுகளுக்குப் பணம் கொடுக்கவும். மருதமலை முருகனை வணங்கவும். மருத்துவ மனையில் வேலை செய்யும் பிற இன, மத நபர்களுக்கு உதவிசெய்யவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் நினைத்த இடத்தில் நினைத்தபடி மனைவாங்க இயலும். அதுபோல வயல், தோட்டம், செங்கல் சூளை போன்றவை வாங்கமுடியும். நீங்கள் இவ்வளவு தொகை முதலீடு செய்யும்போது அரசாங்கத்தின் கண்களை உறுத்தும். உடனே வரி, வட்டி என கிளம்பிவிடுவர். இதனால் வரிப் பணமாக நிறைய தொகை செலவழிக்கவேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாது பத்திரிகை, ஊடகத் துறையினரும் உங்கள் முதலீடுகள் பற்றி செய்தி வெளியிடுவர். "கடன் வாங்கினேன்' என நீங்கள் அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனும் பணம் கைமாற்றுக் கொடுக்கல்- வாங்க-ல் சற்று மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு உயர்நிலையிலுள்ள மருமகன் கிடைப்பார். வெளியூர், வெளிநாட்டிலுள்ள வாரிசு மற்றும் குடும்பத்தார் உங்களுடன் வந்து தங்குவர். தாய்மாமன் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களில் சிலரது தந்தையால் குடும்பத்தில் கொஞ்சம் அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு. இளைய சகோதரரின் மனைவி கோபித்துக்கொள்ள வாய்ப்புண்டு. சிலர் பழைய தொழிலைப் புதுப்பிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள் எண்ணியதை துணிச்சலாக சாதிப்பார்கள். கலைஞர்களின் மறுமணம் நடக்கும். வீடு சம்பந்தமான பங்குகள் நல்ல லாபம் தரும். அரசியலையே தொழிலாகக்கொண்ட பெண்கள் வெற்றியும் பதவியும் பெறுவர். சமையல் கலைஞர்கள் பழமையான உணவு சம்பந்தமாக நிறைய வேலைவாய்ப்பும் லாபமும் பெறுவர். அடுப்பு விற்கும் கடைக்காரர்கள் நல்ல நன்மை பெறுவர். இந்த தேதிகளில் பிறந்த குழந்தைகள் தொழிற்கல்வி, பேஷன் டிசைனிங் போன்ற கல்விகளில் மேன்மை பெறுவர். தொழில்புரிவோர் நல்ல லாபம் பெறுவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: நாட்டுப்புறக் கலைஞர்களின் குழந்தைகளுக்குத் தேவையறிந்து உதவிசெய்யவும். சுவாமிமலை முருகனை வணங்கவும். தோட்டவேலை செய்யும் பிற இன, மத மனிதர்களுக்கு உதவிசெய்யவும்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்களில் சிலருக்கு இந்த மாதம் மிகநல்ல பதவி கிடைக்கும். அதற்கு சற்று தொகை செலவாகும். இந்த மாதம் தொழில் தொடங்க விரும்புவோர், சற்று வில்லங்க நிலையிலுள்ள தொழிலை எடுத்து நடத்தி வெற்றிப்பாதையில் செல்வர். சிலர் மாத முற்பகுதியில் வேலைகிடைத்து மாதப் பிற்பகுதியில், ஒன்று, உங்களுக்கு அந்த வேலை பிடிக்காமல் வெளியே வந்துவிடுவீர்கள் அல்லது அவர்களே அனுப்பிவிடுவார்கள். உங்களில் சிலரது வாரிசுகள் திருமணமாகி வெளியூர் செல்வர். உங்களது பங்கு வர்த்தகம் லாபமும் முதலீடும் பெறும். சிலரது இளைய சகோதரர் சண்டை யிட்டு வெளியேறுவார். அரசியல்வாதி கள் ஆன்மிகப் பயணமும், செலவும், மேன்மையும் பெறுவர். உங்களில் சிலருக்கு திடீரென எதிர்பாராத- தகுதியில்லாத கௌரவமும் கிடைக்கும். வேறுசிலர் சில இன்னல்களை எதிர்கொள்ள நேரலாம். கலைஞர்கள் இப்போதிருக்கும் இடத்தில் லாபமும் வேறிடத்தில் நஷ்டமும் பெறுவர். இந்த மாதம் உடல்நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 5, 14, 23.
பரிகாரம்: சமையல் கலைஞர்கள் வீட்டுக் குழந்தைகளின் தேவையறிந்து உதவவும். வயலூர் முருகனை வணங்கவும். உங்கள் வீட்டருகிலுள்ள பிற மத, இன மக்களுக்கு உதவிசெய்யவும்.
செல்: 94449 61845