1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் ஆவார். பஞ்சபூதத் தத்துவங்களின்படி உங்கள் எண் நாயகர் சூரியன் நெருப்பு தத்துவத்தைக் குறிப்பார். இந்த மாதம் உங்கள் நிலைமை படுமோசமாகப் போய்விடுமோ என அஞ்சும் நிலை ஏற்படும். ஆனால் தெய்வாதீனமாக நீங்கள் காப்பாற்றபட்டு விடுவீர்கள். பணவரவு சம்பந்தமான தகவல்கள் கிடைக்குமேயொழிய, பணம் கிடைக்கத் தாமதமாகும். இதுபோல் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறத் தடையுண்டு. அதனால் பணம் வருமென முடிவெடுத்து எந்த விஷயத்திலும் வாக்கு கொடுத்து விடாதீர்கள். உங்கள் இளைய சகோதரி எதிர்பாராத இடமாற்றம் பெறுவார். உங்கள் பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவர்கள் சார்ந்த அலைச்சலும் செலவும் உண்டு. இந்த மாதம் பங்கு வர்த்தக விஷயத்தில் கவனமாக இருக்கவும். சில தம்பதிகள் வீண் சந்தேகம் கொள்வர். கடன் விஷயத்தில் மிக கவனம் தேவை. தொழில் விஷயத்தில் வேண்டாத நபர்களால் மிரட்டப்படுவதும் செலவும் உண்டு. ஆன்மிகப் பயணங்களில் மிக கவனம் தேவை. தொழில், வியாபாரம் சம்பந்தமாக இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடும்போது ஒரு ஏமாற்று மனிதரிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். உங்கள் மூத்த சகோதரன் உங்களிடம் மனக்கசப்பு கொண்டு சண்டைக்கு ஆயத்த மாவார். உங்கள் தாயாரை வெளியிடங்களுக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் மாமியார், அவரையும் அறியாமல் ஒரு வில்லங்கத்தைக் கொடுத்துவிடுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

Advertisment

பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை உளமார வழிபடவும். அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு விளக்கேற்றி வணங்கவும். உங்கள் பெற்றோர் வயதுடையவர்களுக்கு நீர் சம்பந்தமான உதவிகள் செய்யவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன் ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்கள் தத்துவம் நீராகும். இதனால் உங்களுக்கு நீர் சார்ந்த இனங்கள் யோகம் தரும். இந்த மாதம் உங்களையும் அறியாமல் ஒருவித அச்சம் உண்டாகும். தேவையற்ற கற்பனை பயம் ஏற்படும். இதனால் ஒருவித படபடப்புக்கு உள்ளாவீர்கள். சொந்தத்தில் சில கர்ம விஷயங்களைப் பார்க்க நேரிடும். இதனாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். பணம் சம்பந்தமாக ஏமாற்றப்பட்டுவிட்டோம் என நினைத்து மருகிக் கொண்டிருந்த வேளையில், பணம் கைக்குக் கிடைத்துவிடும். பணம் சும்மா வராமல் கூடவே ஒரு செலவையும் இழுத்துக்கொண்டுவரும். அது வீடு, மனை, வாகனம் சம்பந்த செலவாக அமையும். மனை சார்ந்த ஒப்பந்தம் வரவையும் செலவையும் ஒரே நேரத்தில் கொடுக்கும். உங்கள் தாயார் இந்த க்ஷணம் வேறிடம் போகப்போகிறேன் என அடம்பிடிப்பார். ஆனால் உங்களுடன் தங்குவார். உங்களில் சிலருக்கு மருமகள் வரக்கூடும். ஏற்கெனவே இருக்கும் மருமகள் அல்லது மருமகன் தனது இன்னொரு பயங்கரமான முகத்தைக் காட்டுவார்கள். உங்களில் சிலர் வேலையில் பதவி உயர்வு பெறக்கூடும். பின் ஏன்தான் பிரமோஷன் வந்ததோ என அலறுவீர்கள். தம்பதிகள் வேறின மக்களை உங்கள் வாழ்க்கை யில் அனுமதிக்க வேண்டாம். சிலரது தொழில் நடக்கும் இடத்தில் தீவிபத்து ஏற்படக்கூடும். மூத்த சகோதரி நோய் பாதிப்புக்கு உள்ளாவார். அரசியல்வாதிகளுக்கு மந்திரி பதவி கிடைத்தாலும்கூட வேறொரு கௌரவக் குறைச் சலான விஷயமும் சேர்ந்துகொள்ளும். உங்களில் சிலர் வீடு மாறுவீர்கள். மாமியார் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் சினிமா, டி.வி கலைஞர்கள் கண்டிப்பாக வெகு கவனமாக இருப்பது நல்லது.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: துர்க்கையை வணங்கவும். துர்க்கையின் அபிஷேகத்திற்குப் பால், மோர், இளநீர் போன்றவற்றை காணிக்கை தரவும். வயதான வேலைசெய்யும் பெண்களுக்கு, அவர்களின் ஆரோக்கியம் சம்பந்தமாக ஏதேனும் மருந்து கேட்டறிந்து உதவி செய்யவும்.

ee

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்கள் எண்ணின் நாயகரின் தத்துவம் ஆகாயமாகும். எனவே விமானம், காற்றாலைகள் மற்றும் ராக்கெட், ஏவுகணை விஷயம் நல்ல அதிர்ஷ்டம் கொண்டுவரும். உங்களில் சிலருக்கு வேலை கிடைக்கும். ஆனால் அது தரும் இடமாற்றம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். உள்நாட்டில் வேலை செய்தாலும், இந்த மாதம் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனையைக் கையாள முடியும். உங்கள் வீடு அல்லது மனையை வெளிநாட்டு நபர்கள் விலைக்கு அல்லது குத்தகைக்குப் பேசி முடிக்கும் போது வெளிநாட்டுப் பணத்தைக் கையாள்வீர்கள். இந்த மாதம் பங்கு வர்த்தகம் பக்கம்கூட தலைவைத்துப் படுக்கக் கூடாது. கலைஞர்கள் ஏதோவொரு விஷயத்திற்காக அவமானம் அடைவர். அந்த பழிச்சொல்லை நீக்க பணம் கொடுக்கவேண்டியிருக்கும். இந்த குறிப்பிட்ட செலவால் அந்த அவமானம் மறைக்கப்படும், உங்கள் எதிரிகள் கிடைத்த லாபத்துடன் இடம் பெயர்வர். உங்கள் தந்தைக்கு ஏற்படவிருந்த ஒரு கௌரவக்குறைச்சல் நீங்கிவிடும். தொழில் எதிர்பாராத லாபம் கொடுக்கும், அதேநேரம், உங்களின் ஒழுக்கத்தையும் சற்று சீண்டிப் பார்க்கும். உங்கள் மூத்தசகோதரி சார்ந்த ஒரு செலவை வேண்டாவெறுப்பாக செய்யவேண்டிய கட்டாயம் வரும். மாமனார் உங்களின் வீடு, விற்பனை சம்பந்தமாக உதவிச் செய்வார். ஏனோ இந்த மாதம் குலதெய்வக் குற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நல்லது. அரசியல் வாதிகள் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் குலதெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்ளவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் ராகு ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி இவரின் தத்துவம் காற்றாகும். எனவே காற்று சம்பந்த தொழில்கள் உங்களுக்கு நன்மை தரும். இந்த மாதம் கிடைக்கும் வருமானங்களால் சிலரது நற்பெயர் கெட்டுவிடும். வாரிசுகள் உங்களைத் திட்டக்கூடும். உங்கள் பணியாளர்கள் செய்யும் நல்ல விஷயங்களும் தொல்லையில் முடியும். தாயார் நிலை கவனிக்கப்படவேண்டும். சிலருக்கு அரசாங்கத்தால் ஏற்படவிருந்த மிகப்பெரிய தண்டனை நீங்கிவிடும். வாழ்க்கைத்துணை சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின் சரியாவர். தந்தைக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் ஏதோவொரு காரணத்தால் சண்டை ஏற்படலாம். இதனால் உங்களுக்கும் சற்று மன உளைச்சல் ஏற்படும். கலைஞர்கள் பணம், வாக்கு விஷயமாக அல்லல்பட நேரிடும். ஒப்பந்தம், சாலைப் பணிகளின் குத்தகை எடுத்தவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் வெளிநாட்டு இம்சை பெறுவர். இவர்களின் வெளிநாட்டு முதலீடுகள் விஷயம் தொல்லை தரும். மாமியார் ஆட்டோ போன்ற சிறுதூரப் பயணத்தில் அல்லல்படுவார். வீட்டில் பழுதுபார்க்கும் செலவு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 7, 27.

பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை தரும். குலதெய்வக் கோவிலுக்கு காணிக்கை செலுத்தவும். விளையாடும்போது காயப்படும் இளைஞர்களுக்கு தேவையறிந்து உதவவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்ணின் நாயகன் புதன் ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி புதனின் தத்துவம் காற்றாகும். இதன்படி காற்று சம்பந்த தொழில்கள் நன்மை தரும். இந்த மாதம் பணவரவு செழிப்பாக இருக்கும். கைபேசிமூலம் பணவரவு பற்றிய தரவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் உங்கள் நிலைமைதான் சற்று தொய்வடைந்ததுபோல் ஆகி விடும். வாகனத்தில் மெதுவாகச் செல்லும்போது கல் தடுக்கி விழுவீர்கள் என்பதா- நண்பர்கள் ஆசை யாக அறையும்போது அடிபட்டுவிடும் என்பதா- ஓர் அரசியல் வாதி முன்பகையில் பின்னியெடுப்பார் என்பதா- பணியாளர்கள் படுத்தி எடுப்பார்கள் என்பதா- இளைய- மூத்த சகோதரரும் சேர்ந்து உங்களை பாடாய்ப்படுத்து வார்கள் என்பதா- ரொம்ப பாவம் நீங்கள். சரி- இப்படி அடிபடாமல் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்? பேசாமல் குடும்பத்துடன் வேறிடம் நகர்ந்து விடுங்கள். அல்லது நீங்கள் மட்டுமாவது இடம் மாறிவிடுங்கள். சிலசமயம் வெளியூரில் இருக்கும் வாரிசுகள் உதவிசெய்வர். அரசியல்வாதிகள் அல்லல்படும் நிலையுண்டு. கலைஞர்கள் பிற இன, பிற மத தொடர்புகளின் உதவியைப் பெறுவர். உங்கள் இளைய சகோதரர் செய்த ஒரு தேவையற்ற காரியத் தால், அவரின் மனைவி பஞ்சாயத்து ஆரம்பித்துவிடுவார். தொழில், வியாபாரத்தில் மிக கவனம் தேவை. இந்த மாதம் சில செயல்களாலும் சில இடமாற்றங்களாலும் உங்களின் நிலைமை சற்று காப்பாற்றப்படும். ஏனோ உங்கள் மாமனார் நிலையும் பரிதாபமாகும்.

பரிகாரம்: நாசிம்மரை பானகத்துடனும் தீபமேற்றியும் வணங்கவும், இந்த மாதம் உங்கள் பாடே பெரும்பாடு, உங்களால் பிறருக்கு உதவிச் செய்ய இயலாது.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்கள் தத்துவம் நீராகும். எனவே, உங்களுக்கு தண்ணீர் சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் நன்கு அதிர்ஷ்டம் தரும். இந்த மாதம் உங்கள் வியாபாரம், வணிகம், தொழில் ஆகியவற்றில் பணவரவு அதிகமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டு. ஆனால் ஏதோவொரு காரணத்தால் அப்படியே நின்றுவிடும். இதனால் நீங்கள் தொழிலில் பணம் கொடுக்கவேண்டியவர்களுக்கு சொன்ன நேரத்தில் கொடுக்கமுடியாமல் அவமானப்பட நேரிடும். உங்களில் சிலர் பல்வலி, தாடை வீங்கிப்போதல் என அல்லல்படுவீர்கள். உங்கள் இளைய சகோதரன் பண சம்பந்த இன்னலுக்கு ஆளாவார். உங்கள் பணியாளர்கள் இம்சை தருவர். வேலை செய்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நலம். உங்களில் சிலர் வெளிநாடு சம்பந்த வேலை கிடைக்கப்பெறுவர். உங்கள் வீட்டைப் பிற இன, பிற மத ஆட்கள் வாடகைக்கு எடுப்பர். உங்கள் வாரிசுகளில் சிலர் கல்வி விஷயமாக வெளிநாட்டு உதவி பெறுவர். இந்த மாதம் திருமண விஷயங்களை சற்று ஒத்திவைக்கவும். திருமண விஷயம் கௌரவத்தை உரசிப்பார்க்கும். வாக்கில் கவனம் தேவை. தந்தை மற்றும் ஆன்மிக விஷயம் உங்களைப் பாடாய்ப்படுத்தும். தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை கொண்டவர்கள் கவனமாக இருப்பது. நல்லது. அரசியல் வாதிகள் பெரும் கஷ்டத்தில் சிக்கப் போகிறோம். எனும் கிலியில் இருந்தவர்கள், கஷ்டம் நீங்குவதோடு மிகப்பெரிய நல்ல பலனையும் பிறந்த இடம் சம்பந்தத்தில் பெறுவர். இந்த மாதம் தேவையற்ற அலைச்சல் இருக்கும். மாமனார்- மாமியார் நிலை கவனிக்கப்படவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 17, 26.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: கனக துர்க்கையை வணங்கவும். அருகிலுள்ள துர்க்கையை நிறைய பழங்களுடன் மற்றும் தீபமேற்றியும் வணங்கலாம். இளம்பெண்ணின் திருமணத் தடைகளை முடிந்தால் நீக்க உதவலாம்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்களின் நாயகன் கேது ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்களின் தத்துவம் நெருப்பாகும். எனவே, நெருப்பு சம்பந்த வேலை, தொழில் மிக ஆகிவரும். இந்த மாதம் அரசு சார்பில் நிறைய பணம் கட்டவேண்டுமோ என பயந்தவர்களுக்கு அது நீங்கிவிடும். அரசிடமிருந்து வரி சம்பந்தமாகக் கட்டிய பணத்தின் மீதி கைக்குக் கிடைக்கும். ஏனோ இந்த மாதம் உங்கள் வாக்கு சற்று தகராறு பண்ணும். பணம் "வரும்; ஆனா வராது' எனும் நிலையில் இருக்கும்.பெற்றோர்கள் பயணத்தின்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்கள் வாரிசுகளால், சில தம்பதிகள் வாக்குவாதம் செய்யக்கூடும். இந்த மாதம் சில அலைச்சல்கள் வருமானம் கொண்டுவந்து சேர்க்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். வீடு விற்கும்போதும் வாங்கும்போதும் மிக கவனமாக இருக்கவும், குத்தகை, ஒப்பந்த விஷயங்களில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங் களை இப்போது தவிர்த்துவிடுங்கள். எப்போதும் கேது எனும் கிரகம் பிரிக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த மாதம் கேது சற்று சுபத்தன்மை பெறுகிறார். ஏனெனில் கேது பகவான் குருவால் பார்க்கப்படுகிறார். எனவே செலவுகள் சுபச்செலவாக அமையும். அலைச்சல் களும் சுப அலைச்சலாகவும், வருமானம் தரும் அலைச்சல் களாகவும் இருக்கும். மேலும் கேது சாரம் வாங்கிய சாரநாதர் சூரியன் நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். எனவே உங்களில் யாருக்கெல்லாம் அரசு சார்ந்த வரி, கட்டணம் போன்றவை பற்றிய திகில் உள்ளதோ, அவர்கள் தைரியமாக அரசுத்துறையை அணுகுங்கள். உங்களுக்கு அனுசரணையான, குறைந்த அளவு கட்டணம் செலுத்தி விடலாம். இந்த மாதம் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கண் சிகிச்சைக்கு இந்த மாதத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருவண்ணாமலை செந்தூர விநாயகரை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள விநாயகரை தீபமேற்றி வழிபடுவது நன்று. உங்களவிட வயது குறைந்த இளைஞர்களுக்கு தேவையைக் கேட்டு உதவவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்களின் தத்துவம் காற்றாகும். எனவே, காற்று அடிப்படைத் தொழில்கள் நல்ல அதிர்ஷ்டம் தரும். உங்களின் சில இளைய சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவர். சிலர் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற தகவல்தொடர்புமூலம் வெளிநாட்டுப் பணம் சம்பாதிப்பர். இந்த மாதம் புத்திப்பூர்வமாக வருமானம் வந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட ஆட்கள் சற்று வில்லங்கம் பிடித்தவர்களாக இருப்பர். எனவே பழகும் மற்றும் வியாபார பங்குதாரர் போன்ற ஆட்களிடம் கவனம் தேவை. வீடு, மனை தொடர்பு விஷயங்களை சற்று தவிர்த்துவிடுவது நல்லது. திருமணப் பேச்சுகளைப் பேசலாம். ஆனால் அடுத்த மாதம் முடிவெடுங்கள். இந்த மாதம் மருமகள் வருவாள்; ஆனால் அவர்கள் குடும்பம் ரொம்ப வில்லங்கம் கொண்டதாக அமையும். அரசு வேலை கிடைத்தும் அதில் சேர முடியாத அளவில் ஒரு வில்லங்கம் உண்டாகும். நரம்பு வலி அல்லது தோல் அரிப்பு வந்து இம்சையாகும். இந்த மாதம் உங்களுக்கு வரவிருந்த பெரிய அவமானம் இறைவன் அருளால் தவிர்க்கப்படும். அரசு சார்ந்த கைது போன்ற நடவடிக்கை நீங்கிவிடும். இதனால் உங்கள் கௌரவம் பாதுகாக்கப்படும். உங்கள் தந்தை அவருடைய எதிரிகளால் துன்பப்படுவார். ஏனோ உங்கள் எதிரிகளுக்கும் வெகுகோபம் வந்து உங்களைப் பாடாய்படுத்துவர். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களால் வெகு கஷ்டம் அனுபவிப்பார்கள். அதிலும் மந்திரி பதவி போன்ற பெரிய பதவிகளில் உள்ளோர் நிஜமாகவே அல்லாடிப் போய்விடுவர். இதனால் சிலரின் பதவி பறிபோகவும் கூடும். அரசு அதிகாரிகளில் சிலர் மயிரிழையில் தப்பிக்கக்கூடும். பெற்றோர் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: பைரவரை வணங்கவும். பைரவரின் பூஜை பயன்பாட்டிற்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். உங்கள் பெற்றோர் வயதுடையவர்களுக்கு தேவையறிந்து உதவுங்கள்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய் ஆவார். பஞ்சபூதத் தத்துவப்படி உங்களின் தத்துவம் நெருப்பாகும். இந்த மாதம், உங்கள் எண்ணின் நாயகன் பலவீனமான நிலையில் உள்ளார். எனவே பயணங்களில் வெகு கவனம் தேவை. கூடவே காசு பண விஷயங்களில் ஜாக்கிரதை யாக இருங்கள். தேவையற்ற செலவுகள் வரும். அது உங்கள் தாயார் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது வீடு அல்லது வாகனம் பழுது ஏற்படுவதால் உண்டாகலாம். உங்கள் வாரிசு சம்பந்தமாக ஒரு தொல்லை ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் அது சரியாகிவிடும். சிலரது காதல் முறிந்துவிடும் என்ற நிலை ஏற்படும்போது அது அழகாக நிறைவேறிவிடும். எதிரிகள் அவர்களின் சொந்தப் பிரச்சினையால் உங்களை மறந்தே போய்விடுவர். உங்கள் நோயும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் பணியாளர்கள் அவர்களையும் அறியாமல் மிகக் கோபமடைவர். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். திருமண நேரத்தில் சில பிரச்சினை வரக்கூடும். உங்கள் மனைவியின் உடல் நலத்தில் முதலிலிலேயே கவனம் எடுக்கவும். தந்தையின் வாக்கு மற்றும் இருப்பிடம் சம்பந்த இனங்களில் சற்று கவனமாக இருங்கள். தொழிலில் வெளிநாட்டு சம்பந்தம் இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை முதலீடாக மாற்றிவிடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைக் கூடியமட்டும் தவிர்ப்பது நலம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.

எச்சரிக்கை எண்கள்: நீங்கள் பிறந்த எண்.

பரிகாரம்: இந்த மாதம் கண்டிப்பாக செவ்வாய்க் கிழமைதோறும் விரதமிருங்கள். அது முருகர் அல்லது துர்க்கை என எவர் பொருட்டாகவும் இருக்கலாம். அடிபட்ட வயதான பெண்ணிற்கு உதவுங்கள்.

செல்: 94449 61845