13-2-2025 முதல் 14-3-2025 வரை

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் ஆவார். இந்த சூரியனின் காரக பலன், அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிப்பது ஆகும். அதுபோல் உங்களை சுற்றி உள்ளவர்களை கைவிடாமல் காப்பாற்றுவீர்கள். இந்த குணநிலை மற்றவர் களை காப்பாற்றும்போது நிறைவாகத் தெரியும். ஆனால் தாலி கட்டிய மனைவியையும், வைத்துக்கொண்ட துணைவி யையும், ஒருசேர கவனிக்கும்போது, இதனை வாசிக்கும் உங்களுக்கே ஒருமாதிரி இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ஜாதகர், இதெல்லாம் ஒரு விஷயமா என சுத்தமாக கண்டு கொள்ளாமல், அசால்ட் ஆறுமுகமாக வலம் வருவார். இதனால், உங்களின் மாமியார் உங்களை பிடி பிடியென பிடிப்பார். இம்மாதிரி அழும்பு பண்ணுவதற்கு, இன்னொரு காரணம், உங்கள் வியாபாரத்தில் நல்ல பணவரவு இருப்பதால் இருக்கும். மேலும் உங்கள் தொழிலில் குறுக்குவழி பணவரவும் நிறைய இருக்கும். இவ்விதம் இரு மனைவி வாய்ப்பு கிடைக்காதவர்கள், உங்கள் வாழ்க்கைத் துணையிடமும், உங்கள் மூத்த சகோதரனிடமும் அகப்பட்டு முழியாய் முழிப்பீர்கள். உங்கள் இளைய சகோதரி, அவள் பங்குக்கு ஒரு வேண்டாத்தனம் செய்து உங்களை கலவரப் படுத்துவாள். வேறு மத, வேறிட பெண் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும். தொழிலில் செய்த ஒப்பந்தங்கள் பற்றி விழிப்பாக இருக்கவும். வீடு பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிற்சாலையில், பணிபுரியும் பெண்களின் ஆரோக்கியம் அல்லது அவர்களின் சிறு குழந்தைகள் பொருட்டு, செலவுசெய்ய வேண்டி இருக்கும். உங்கள் வாரிசுகளின் தொழில் மேன்மைக்கு, லஞ்சம் கொடுக்க, நீங்கள் பணம் செலவு செய்யவேண்டிவரும். இந்த செலவு, தொழிலை மிக முதன்மை, முதலிடத்துக்கு கொண்டு வந்துவிடும். உங்களுக்கு நல்லதும் நூறு சதவீதம் நடக்கும்; கெட்டதும் நூறு சதவிகிதம் நடக்கும்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று சிவனுக்கு நிறைய விளக்கேற்றி வணங்கவும். ஒரு இஸ்லாமிய தம்பதிக்கு, வஸ்திர தானம் செய்யுங்கள்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

Advertisment

உங்கள் எண்ணின் நாயகன் சந்திரன் ஆவார். இவர் மன உணர்ச்சிகளின் காரகன் ஆவார். நல்லதோ- கெட்டதோ சட் சட்டென்று மாறும் மனமும் சிந்தினையும் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் மூத்த சகோதரி ஒரு நல்லதிர்ஷ்டம் தருவார். உங்களின் சில வாரிசுகள், வெளிநாடு செல்வர். உங்களின் சிலர், தொழில், வேலையின் பொருட்டு வெளிநாடு செல்லமுடியும். கலைஞர்களில் சிலர் வெளியிடம் சென்று எண்ணியதை நிறைவேற்றலாம். அரசியல்வாதிகள், நல்ல பதவியை பெறுவர். அதில் போக்குவரத்து கலந்திருக்கும் ஒரு மனிதனுக்கு இவ்வளவு நல்லது நடந்தால், சுற்றியுள்ளவர்கள் சும்மா இருப்பார்களா! வயிறு எரிந்து தீய்த்துவிட மாட்டார்களா. உங்கள் இளைய சகோதரம், ஏதாவது அவமானம் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். உங்களிடம் பணியாற்றிய பணியாளர்கள், ஏதோ ஒரு பொருளை, (அநேகமாக அது பணமாக இருக்கும்.) திருடிவிட்டு கம்பி நீட்டிவிடுவர். குடும்பத்தில் சொற்கள் கர்ண கடுரமாகி, குடும்பம் ரணகளமாகிவிடும். தம்பதி களுக்குள், கைகலப்பு சண்டை ஏற்பட்டு, காவல்துறை செல்லவேண்டி வரும். பங்கு வர்த்தக முதலீட்டில் அதிக கவனமும் பொறுமையும் செலுத்த, அதற்கேற்ற துறையினர், இஸ்லாமிய நாட்டு வர்த்தகம் பெற்று செழிப்படைவர். உங்களின் தொழில் எத்தளத்தில் இருப்பினும், அதில் ஒரு சிறிதளவாவது வெளிநாட்டு தொடர்பு ஒட்டிக்கொண்டிருக் கும் கைபேசி தகவல்களிடம் கவனம்தேவை. இந்த மாதம் உங்களுக்குக் கிடைக்கும் அதிர்ஷ்ட நிகழ்வுகளை, அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். உங்கள் நலன் உங்கள் கையில்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று சிவன் அபிஷேகத்திற்குரிய அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொடுங்கள். உங்களிடம் பணியாற்றும் ஒருவரின் பணத்தேவை அறிந்து உதவுங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். குரு எப்போதும் எவருக்கும் நல் லதை மட்டுமே செய்வார். இந்த நல்ல மனமே இவரின் காரகம் ஆகும். ரொம்ப நாளாக வீட்டுக்கடனுக்கு அலைந்து கொண்டிருந்தால், இப்போது அது, நீங்கள் நினைத்தபடியே கிடைத்து வீடு, அடுக்குமாடி வீடு வாங்கமுடியும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்கள், உங்கள் எண்ணம்போலவே வேலை கிடைக்கப்பெறுவர். இந்த மாதம் பணவரவு மிக நன்றாகவே இருக்கும். எனினும் பணம் சம்பந்தமான ஒரு அதிருப்தி இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் அவ்வப்போது உங்கள் தந்தைக்கும், உங்கள் இளைய சகோதரனுக்கும் இடையே யுத்தம் உண்டாகும். இதற்கு சிலசமயம், உங்கள் வாழ்க்கைத் துணையின் சில செயல்கள் காரணமாக அமையும். ஒரு காதல் துளிர்த்த மாத்திரத் திலேயே, உடனே சண்டை வந்துவிடும். திருமணம் நடக்கும்போது, உங்களின் மூத்த சகோதரி, கொஞ்சம் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வார். உங்கள் இளைய சகோதரனின் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இப்போது தொடங்கும் தொழில்களில் கைபேசி சம்பந்தம் அதிகமிருக்கும். தொழிலில் பிற இன, பிற இட பணியாளர் கள் அதிகம் பங்கெடுப்பர். தொழில் முதலீடுகளை நன்கு யோசித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் அரசு இடையூறு கொடுத்தாலும், அதனை சமாளித்துவிடுவீர்கள். பெண் அரசியல்வாதிகள், தங்கள் பிறந்த இடத்தில் பெரும் புகழும், சேவைக்கான மதிப்பும் பெறுவர். சில அரசியல்வாதிகள் தங்கள் துறையை, வேறு ஒரு அரசியல்வாதியுடன், மாற்றிக் கொள்வர். உங்கள் மூத்த சகோதரி வீடு வாங்க இயலும். அதற்குரிய கடனுக்கு உங்கள் பெயரை நுழைத்து விடுவார். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு, உள் நாடு அல்லது வெளிநாட்டில் மிகப்பெரிய வேலை கிடைக்கும். அதற்கு அரசியல்வாதியின் அணுசரணை கிடைக்கும். வேலையின் பொருட்டு, சிலர் வாழ்க்கைத்துணையை பிரிய நேரிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று, சிவனுக்கு வஸ்திரம் காணிக்கை செலுத்தவும். உங்கள் தந்தையின் வயது ஒத்த, ஒரு பிறமத பெரியவருக்கு, அவரது கைபேசி சம்பந்தமான உதவியைக்கேட்டு செய்யுங்கள்.

ss

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எணிண்னி நாயகர் ராகு ஆவார். இவரின் காரகம் மட்டற்ற சுதந்திரப் போக்கு ஆகும். சுதந்திர மனப்பான்மை, நிறைய தைரியம் கொடுக்கும். அதிலும் இந்த மாதம் தைரியத்தோடு, நிறைய அடாவடித்தனமும் சேர்க்கும். பிறரிடம் ஒரு விஷயத்தை கூறிவிடாதே என ஒருவர் ஒன்றைக் கூறினால், முதல் ஆளாகப் போய், அதனை அனைவரிடமும் பரப்பிவிடுவீர்கள். ஏனோ இந்த மாதம் வம்பு குசும்பு, வதந்தி பேசுவதற்கு ரொம்ப ரொம்ப ஆசை வரும். இந்த மாதிரி குசும்பு பேச்சினால், வீட்டில் வாழ்க்கைத் துணையோடு பிணக்கு ஏற்படும். சிலருக்கு, வெளிநாட்டிலிருக்கும் உங்கள் இளைய சகோதரி, வெளிநாட்டில் ஒரு தொழில் அல்லது வேலையை ஏற்பாடு செய்து கொடுப்பார். வீட்டில், வானத்தில் பழுது பார்க்கும் செலவு வரும். சிலரின் வேûயில் பதவி உயர்வு வருவதை தடுப்பது யார் என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியும். சிலரின் உஷ்ண மற்றும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு, தகுந்த மருத்துவரை சந்திக்க முடியும். உங்களின் இந்த மாத செயல் திறனின் வேகத்தை பார்த்து, உங்களுடன் பழகியவர்கள் சற்று நகர்ந்துவிடுவர். உங்கள் மூத்த சகோதரனுக்கும், உங்கள் தந்தைக்கும் சண்டையும் பிரிதலும். உண்டு. இளம் பெண்களிடம் ரொம்ப ஜாக்கிரத்தையாக பழகவும். இளம் பெண்கள், அதுவும் பிற மத, மத இன பெண்கள் விஷயமாக பெரிய அவமானம் வந்து விடக்கூடும். உங்கள் தாயார் இடம் மாற வாய்ப்புண்டு. உங்கள் வேலையில் இட மாற்றம் ஏற்படும். உங்களில் சிலரின் வாழ்க்கைத்துணைக்கு, பணம் செலவளித்தால், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று சிவனை வில்வ இலைகளை காணிக்கையாக்கி வணங்கவும். பிறமத இளம் பெண்களுக்கு, விரும்பும் வஸ்திரம் வாங்கி தானம் செய்யவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். மனதின் எண்ணங்களை, பேச்சாக, எழுத்தாக ஒலியாக மாற்றித் தரும் காரகர் இவர். எனவே இவரை கல்வி, வியாபார காரகன் என்றும் அழைப்பர். இந்த மாதம் உங்களில் தகுதியுடைய அனைத்து ஆண்- பெண்ணிற்றும் திருமணம் ஆகிவிடும். திருமணத்தில் சற்று கலப்பு உண்டு. சில திருமணங்கள் பெண் கொடுத்து பெண் வாங்குகிற வித மணமாக இருக்கும். இத்திருமணம் ஜாதகருக்கு வண்டி, வாகன வசதியை கொடுக்கும். உங்கள் தொழிலில், வேலை செய்யும் பணியாளர்கள் உங்கள்மீது குற்றம், குறை கூறுவர். சிலர் சண்டையிட்டு வெளியேறிவிடுவர். கைபேசி தகவல்களை முழுமையாக நம்ப வேண்டாம். வீடு, வாகன யோகம் உண்டு. உங்கள் வாரிசுகளின், அதிக செலவால், அவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். இதனால் உங்களுக்கும், உங்கள் வாரிசுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, அவர் வேறிடம் சென்று விடுவார். ரியல் எஸ்டேட் துறையினர், மனை உரிமையாளருடன் சேர்ந்து, அடுக்குமாடி வீடு கட்டி விற்பனை செய்வர். அது ஜாயிண்ட் வென்ஞ்சர் என்ற பெயரில் நடக்கும். உங்கள் பெற்றோர் நிறைய திருமண விழாக்களில் கலந்துகொள்வர். இந்த எண் மாணவர்கள், கல்வி பாட பிரிவை மாற்றுவதால், வேறிடம் செல்லக்கூடும். சில மாணவர்கள் உயர் கல்வியின் பொருட்டு, வெளிநாடு செல்வர். கர்ப்பஸ்திரிகள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சினிமா கலைஞர்கள், எதிர்பாராதவிதத்தில் அதிர்ஷ்டம் காண்பர். அரசியல்வாதிகள், ஆரோக்கியமான சந்திப்புகள் நடத்துவர். இந்த சந்திப்புகள் மிக மேன்மையான பேர், புகழ், பண வசதி தரும். தொழில் விரிவாக்கத்திற்கு முதலீடு கிடைக்கும். மாமியார் சற்று உடல்நலம் கெட காண்பார். உங்கள் மனைவிமூலம் வீடு அல்லது பங்குக்குரிய பணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று சிவனுக்கு பூஜைக்குரிய தளங்கள், பூக்கள், கற்பூரம் இவற்றைக் கொண்டு காணிக்கை செலுத்தி வணங்கவும். பிறமத, பிற இன பெண்ணின் திருமணத்திற்கு முடிந்த உதவி செய்யவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். இந்த சுக்கிரனின் காரகம் பிறர்மீது பாசம், அன்பு, எல்லாருடனும் இணைந்து செயல்படுவது, சுற்றுப் புறத்தை அழகாக்கி கொள்வது என இவ்வித காரகங்கள் கொண்டவர். இந்த மாதம் இந்த எண்காரர்கள், ஒரு அருமையான விபரீத ராஜயோகம் பெறப் போகிறீர்கள். உங்களுக்கு வரும் நஷ்டங்கள் லாபமாகிவிடும். துன்பங்கள் இன்பமாகிவிடும். வேலை போய்விடும் என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு, வேலை நிரந்தரமாகிவிடும். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்கு, சிறிது கால பயிற்சியாக சென்றுவருவீர்கள். பணவரவு நல்ல செழிப்பாக இருக்கும். வாக்கு காத்ரம் பெறும். உங்கள் சொல்லுக்கும் பிறர் பணிந்து நடப்பர். இம்சை தந்துகொண்டிருந்த பணியாளர்கள், அவர்களாகவே இடம்மாறி சென்றுவிடுவர். வீடு சம்பந்தமான முதலீடு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மருமகன் வரும் நேரிமிது. சிலர் வீட்டில் மருமகனுக்கும், உங்கள் தந்தை அல்லது உங்கள் வாரிசுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படும். இதனால் உங்கள் மனம் சங்கடம் கொள்ளும். சினிமா கலைஞர்கள் சில இடர்பாடுகளை எதிர்மறை செய்திகளை சந்தித்தாலும், அதையும் மீறி பிரகாசிப்பர். அரசியல்வாதிகள், மிகப்பெரிய நன்மை பெறுவர். ரொம்ப நல்ல பலன்களைக் காண்பர். அதே சமயம், பிறந்த இடத்து தொண்டர், வாக்காளர்களிடம் சிக்கி முழி பிதுங்கியும் விடுவர். சிலசமயம் கிடைத்த ஆட்டோவில் ஏறி எஸ்கேப் ஆகிவிடுவர். எனினும் இந்த மாதம் இந்த எண்காரர்கள் எதையும் சமாளிக்கும் திறமை யோடு மிளிர்வதால், இதெல்லாம் ஜூஜீபி சமாச்சாரம் என தட்டிவிட்டு செல்வர்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று, நிறைய மலர்கள், இனிப்புகள், சுவாமி பிரசாத பயன்பாட்டிற்கு வெல்வம், சர்க்கரை, நெய் இவற்றுடன் வழிபடவும். தம்பதிகளான ஆசிரிய பெருமக்களுக்கு வஸ்திரம் அல்லது இனிப்புடன் வணங்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் கேது ஆவார். உன்னதமான யோசனைகள், உயர்ந்த லட்சியங்கள், தெய்வீக சிந்தனை இவற்றின் காரகர் கேது ஆவார். ஆனால் இந்த மாதமும் இதே இறை சிந்தனை தொடருமா எனில் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. நிறைய சினிமா பார்க்க ஆர்வம் அதிகரிக்கும். கூடவே சினிமாவில் நடிப்பவர்களை யும் பார்க்க ஆசை தூண்டும். எனினும் உங்கள் அடிப்படை சன்யாச குணம் சும்மா படத்தை பார்த்தால் போதும் என்று கட்டுப்படுத்தும். சுகர் பேஷண்ட்கள் நிறைய இனிப்பை சாப்பிட்டுவிடுவர். இந்த விஷயத்துக்காக, உங்கள் வயதான தந்தையுடன், அவரின் ஆரோக்கியம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். சற்று கலப்பு மணமாக நடக்கக்கூடும். சிலருக்கு அரசு சார்ந்த வேலை கிடைத்தும் அதில் சேர்வதர்க்கு தடை ஏற்படும். சிலர் சீருடை பணியில் சேரலாம். உங்கள் தொழிற்சாலையில், சில காவல் துறையினர் கெடுபிடி செய்வர். இதனால் அரசாங்கத்தோடு சில பல மோதல், வீண் செலவு, அபராதம் என இவை வரிசை கட்டிவரும். உங்கள் உடன்பிறந்த சகோதரர், சில பல இன்னலை கொண்டு வந்து சேர்ப்பார். பண வரவு மிக நன்றாக இருப்பினும், ஏதோ ஒரு மனப் பிராண்டல் இருந்துகொண்டே இருக்கும். உடனே நீங்கள் வாழ்க்கைத்துணையின் வீட்டில், யாரோ செய்வினை செஞ்சுட்டாங்க என்று புலம்புவீர்கள். ஆனால் இது திருஷ்டி தோஷமாகவே இருக்கும். உங்களின் வாழ்வு தரும் மேன்மையால், சில சிறு இம்சைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று சிவனுக்கு வில்வ தளம் சாற்றி, விளக்கு ஏற்றி, தெரிந்த சிவ மந்திரங் களை கூறவும். பிற இன, பிற மத தம்பதிகளுக்கு டார்ச் லைட் போல், வெளிச்சம் தரும் பொருள் வாங்கிக் கொடுங்கள்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். இவர் ஸ்த்ர தன்மைக்கு உழைப்புக்கும் காரகர் ஆவார். இந்த மாதம் உங்களுக்கு வேலை கிடைக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் பதவி உயர்வு உண்டு. செய்யும் தொழில் பற்றிய விளம்பரம், செய்திகள், பேட்டி இவை பத்திரிகையில் வெளியாகும். இவ்வளவும் ஆனபிறகு, உங்கள் வாய் சும்மா இருக்குமா, மானா வாரியாக பேசுவீர்கள். எவரையும் எடுத்தெறிந்து வீசுவீர்கள். இதனால் கோபமடைந்த இளைஞர் ஒருவர் உங்களை சப்பென்று, பேசின வாயில் அறைந்துவிடுவார். அரசியல் வாதிகளிடமும் இவ்விதமே பேச, அவர்கள் வெகுண்டு எழுந்து உங்கள் பணபுழக்கத்தை கட்டுப்படுத்திவிடுவர். இதனால் இந்த மாதம், அவ்வப்போது திட்டும், அடியும் வாங்க நேரிடும். உங்கள் பெண் வாரிசு, வெளிநாடு அல்லது உள்நாட்டில் அறிவுக்கூர்மை அல்லது விளையாட்டு சம்பந்தமாக வெகு புகழ்பெறுவார். பங்கு வர்த்தகம் வாரி வழங்கும். ஒப்பந்த விஷயங்கள் ஓஹோதான். சினிமா கலைஞர்கள், ஒரு மாற்றம், ஏற்றம் தருவதைக் காண்பர். அரசியல்வாதிகள், பிறந்த இடத்து பிரச்சினையை சந்திப்பீர். உங்கள் மூத்த சகோதரர் சிறு நரம்பு தளர்ச்சி, உஷ்ண நோயால் அல்லல்பட நேரிடும். குலதெய்வக் கோவிலுக்கு மின்சார மேளம் போன்று தானம் செய்வீர்கள். உங்களில் தகவல் தொடர்பு அதிகமாக அமையும். அது தொழில் சார்ந்து, வாரிசு சார்ந்து, கலை உலகம் சார்ந்து, பங்கு வர்த்தகம் சார்ந்து, விளையாட்டு துறை சார்ந்து, சிறு பயணங்கள் சார்ந்து, காதல் விஷயம் சார்ந்து, தொலைக் காட்சி தொடர் சார்ந்து, வீடு விற்பது சார்ந்து, உலக செய்திகள் சார்ந்து என ஒரு பெரிய லிஸ்ட்டே வரும். ஆக இவை சார்ந்து பேசிக்கொண்டும், வாதம் செய்துகொண்டும் இருப்பீர்கள். இதில் நிறைய தகவல் பிற மத சம்பந்தமாக அமையும். இந்த மாத சம்பவங்களை பார்த்து, நீங்கள், நீ நல்லவனா- கெட்டவனா என கேட்கக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ மகா சிவராத்திரியன்று, சிவனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும். உங்கள் பெண் வாரிசுக்கு நல்ல அழகான ஆடை வாங்கிக் கொடுங்கள்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய் ஆவார். மிகுந்த சக்தி, ரொம்ப பிடிவாதம் முரட்டுத்தனம் என இவரின் காரகங்கள் ஆகும். இந்த மாதம் செலவு சென்னை மழைபோல தொடர்ந்து இருக்கும். அப்படியானால் அவ்வளவு செலவுக்கும் பணம் எவ்விதம் வரும். பணம் நீங்கள் செலவு செய்ய செய்ய அது பாட்டுக்கு கல்லா நிரம்பிக் கொண்டே இருக்கும். கல்லாவை உங்கள் வாழ்க்கைத் துணை நிரப்பலாம். உங்கள் வணிகம் நிரப்பலாம். வணிக பங்குதாரர் கல்லா பெட்டியை நிரப்பலாம். உங்கள் தந்தை கல்லா பெட்டியை நிரப்பலாம். வெளிநாட்டிலிருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர் நிரப்பலாம். ஆக, ஏதோ ஒரு விதத்தில் கல்லா நிரம்ப, நீங்கள் ஜாலியாக செலவளிப்பீர் கள். ஒரு ஜாலி டூராக வெளிநாடு சென்று என்ஜாய் பண்ணிவிட்டு வருவீர்கள். சிலருக்கு கறுப்பு பணம், கள்ளப்பணம், கணக்கில் வராத பணம் அதிகமாக, அதனை என்ன செய்வதென்று தெரியாமல், இப்படி மானா வாரியாக வெளிநாட்டு பயணம், திருமணத்தை ஊரே வாய் பிளக்கும்படி நடத்துவது, வெளிநாட்டு முதலீடு தூங்கு வதற்கு விலை உயர்ந்த மெத்தை வாங்குவது, ஊரிலேயே பெரிய பெத்த மாளிகை கட்டுவது, என இவ்வித செலவு களைச் செய்வீர்கள். நல்ல காலத்திலேயே உங்களுக்கு பிடிவாதம் அதிகமிருக்கும். அதுவும் இந்த பணவரவு செலவு காலத்தில், பிடித்த முயலுக்கு இரண்டேகால்தான் என வாதிடுவீர்கள். அரசியல்வாதிகளும், அவர்கள் வாரிசும் மிக சண்டை போட்டுக்கொள்வர். சினிமா கலைஞர்கள் நல்ல லாபத்துடன் சில சண்டைகள், விரயங் களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். திருமணம் பெரும் பொருட் செலவில் நடக்கும். இளைய சகோதரனுடன் சண்டை வரும். உங்கள் தந்தையின் சொத்து லாபம் தரும். தொழிலில் நல்ல லாபம் உண்டு. அதிக வருமானத்தை அரசாங்கம் வரி வசூல் செய்துவிடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

பரிகாரம்: ஸ்ரீ சிவராத்திரியன்று, சிவ வழிபாட்டிற்கு விபூதி, குங்குமம் அளித்தும், பிரசாதம் தயாரிக்க துவரம் பருப்பு கொடுத்தும் வணங்கவும். புதிதாக திருமணமான, பிற இன மண மக்களுக்கு நிறைய பணத்தை மொய் பணமாக கொடுங்கள்.