இல்லம் தராத இதயம் தொடும் இனிய சைவ சுவைகளை அளித்து "அடையார் ஆனந்த பவனில் சாப்பிடாதோர் அகிலத்தில் பிறக் காதோர்'' என்கிற அளவு சைவ உணவு பிரியர்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும், எங்கெங்கு காணிடும் ஆ2இயடா'' என்று தமிழகம், இந்தியா, உலகமெங்கும் பரந்து விரிந்த கிளைகளோடு பளிச்சிடும் ஆ2இ அடையார் ஆனந்த பவன் உணவகம் அதிபர் ஃ.ப.சீனிவாச ராஜா அவர்களை சென்னை அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஆ2இ ஹெட் ஆபீஸ் - தலைமை அலு வலகத்தில் சந்திக்க சென்றபோது முதலில் நம்மை அசர வைத்து வரவேற்றது அதிபரின் அமரர்கள் ஆகிவிட்ட அப்பா திருப்பதிராஜா- அம்மா முத்துலட்சுமி இருவரும் உலகிற்கு ஒளிதரும் சூரிய பகவான் குதிரைகள் பூட்டிய தேரில் வருவதுபோல் அழகிய இரண்டு குதிரைகள் தேரில் சிலையாக, வாயிலில் காட்சி தந்ததைதான்!
அடையார் ஆனந்தபவனை 45 வருடங்களுக்குமுன்பு துவங்கி நாவிற்கு சைவ உணவுகளை வித்தியாசமான சுவைகளில் வழங்கிய முன்னோடி, தெய்வங்களாகி இன்றும் அடையார் ஆனந்தபவனின் அபார வளர்ச்சி உயர்விற்கு அருள்தந்து வருகிறோம் என அந்த தெய்வ தாய் தந்தை காட்சியளிப்பதை கண்டு மெய்சிலிர்த்துப் போனோம்.
அதிபரின் அறை உள்ளே நாம் சென்றபோது அவர் தாய்- தந்தை சிலையை கைகூப்பி மனதார வணங்கி நின்றதை பார்த்து மனம் மகிழ்ந்தோம். நம்மை அன்புடன் வரவேற்ற A2B அதிபர் நம் கேள்விகளுக்கு பக்தி பரவசத்துடன் பதில் அளித்தார்.
உங்கள் தாய்- தந்தையை தெய்வங்களாக வழிபட முக்கிய காரணங்கள் என்ன?
"தாத்தா, அப்பா இருவருமே இராஜபாளையம் விவசாயம் செய்தவர்கள். என் தந்தை சிறிய அளவிலே ஸ்வீட் ஸ்டால் துவங்கி தனி சுவையில் பலரையும் அசர வைத்தார். அதன்பிறகு நானும் என் சகோதரர் வெங்கடேசனும் உணவக துறையில் உற்சாகமாக இறங்கி உயர்வு பெற்றோம். எங்கள் அம்மாவும் அற்புதமாக சமையல் செய்வார். எனவே, சமையற்கலை வல்லுனர்களான எங்கள் தாய்- தந்தை விதைத்த விதைதான் இன்று ஆலமரம்போல் ஆ2இ பரந்து விரிந்து இருக்கிறது. நாங்கள் அடையார் ஆனந்தபவன் உணவகம் கிளைகளை படிப்படியாக திட்டமிட்டு சிறந்த சுவைதரும் சமையற்களை நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி, அன்பான, பணிவான, சிறப்பாக வரவேற்று உபசரிக்கும் ஊழியர்களை பணிக்கு அமர்த்தி கனிவுடன், மனிதநேயத்துடன் ஆனால் கண்டிக்க வேண்டிய நேரங்களில் கண்டித்து மேற்பார்வை யிட்டு எந்த ஒரு சிறு குறைகூட வாடிக்கையாளர்கள் சொல்லமுடியாத அளவு நன்கு செயல்பட ஆணிவேராக இருந்தவர்களே எங்கள் தாய்- தந்தைதான். ஏற்ற நேரங்களில் பாராட்டி, இறக்கமான சோதனையான சமயங்களில் ஆலோசனைகள் கூறி நஷ்டமின்றி நாங்கள் தொழில் தொடர உதவிய அமரர்கள் ஆகிவிட்ட என் தாய்- தந்தை மனித தெய்வங்களை எந்த நாளும் மறக்கமாட்டோம். இன்றும் தாய்- தந்தை அமரர்கள் ஆன தினத்தை "உழைப்பாளிகள் தினம்' ஆக கொண்டாடி எங்கள் ஊழியர்களுக்கு சிறந்த சேவை செய்தவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் தந்து தாய்- தந்தையர் உழைப்பை கௌரவித்து வருகிறோம்.
தினமும் அறுநூறு ஏழைகளுக்கு மூன்று கிளைகளில் காலை, மதியம், இரவு அன்னதானம் செய்து ஆத்ம திருப்தி அடைந்துவருகிறோம்!''
தெய்வங்களான உங்கள் தாய்- தந்தை எப்படி உங்களை "தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'' என்று மனம் உருக வைத்தார்கள்?
"அப்பா, அம்மா இருவருமே எங்களுக்கு பெருமையும், சந்தோஷமும் தரும் அளவு அன்பான, பண்பான, ஆற்றல்மிக்க குழந்தைகள் நிச்சயம் பிறந்து A2B புகழ் உயர்த்துவார்கள் என்று எங்களுக்கு திருமணமான உடன் "தெய்வ ஆசி' தந்தார்கள். அதுபோலவே இப்போது என் மனைவி ஆனந்தி சீனிவாசனுக்கும் எனக்கும் பிறந்த பி.காம்., எம்.பி.ஏ., படித்த மூத்த மகள் பூஜா ஓர் கம்பெனி சென்னை தி.நகரில் அமைத்து ட்ரெஸ், கவுன்சிலிங் ட்ரீட்மெண்ட அளித்து பெயர் பெற்றுள்ளார். சேவை மனப் பான்மையில் மனோதத்துவ டாக்டர்களை பணியமர்த்தி அனைத்து டென்ஷன்கள், மனநோய்கள், குழப்பங்களுக்கு தீர்வுதந்து வருகிறார்.
இரண்டாவது பெண் பவித்ரா உணவுக்கலையை ஆஸ்திரேலியாவில் படித்து எம்.பி.ஏ முடித்து அங்குள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தில் புதுப்புது ரெசிபிகள், ஐஸ்கிரீம்கள் அறிமுகம் செய்து சுவையில் அசத்தி வருகிறார். நிர்வாக பொறுப்பில் நிலையான புகழ்பெற்று வருகிறார்.
மூன்றாவது மகன் ஸ்ரீ விஸ்வம்
ஆஸ்திரேலியாவில் உணவுத் துறையில் டட்.உ செய்து மெல்போர்னில் படித்துவருகிறார். இரண்டு வருடம் கழித்து முனைவர் பட்டம்பெற்று சைவ உணவுத் துறையில் பிரம்மாண்டமான மாற்றங் களை கொண்டுவர இருக்கிறார். நான்காவது பெண் பிராத்தனா பி.காம். பட்டப்படிப்பு சிங்கப்பூரில் படிக்கிறார். இவரும் விரைவில் நிர்வாக பொறுப்பிற்கு வந்துவிடுவார்.
இப்படி எங்கள் நான்கு வாரிசு களும் நன்றாக இருக்க பெரும் உணவக மற்றும் மனநல மாற்றங் களை கொண்டுவர எங்கள் தாய்- தந்தை இன்றும் தெய்வ சக்தியுடன் எங்களை உயரவைத்து வருகிறார் கள். விவசாய குடும்பத்தில் பிறந்து எங்களை உணவக தொழிலில் உச்ச நிலைக்கு உயர்த்தி வருகிறார்கள்.
உங்கள் குலதெய்வம் மற்றும் அதன் மகத்தான சக்தி பற்றி கூறுங்கள்?
"வாடிக்கையாளரிடமும் நல்லபெயர் சம்பாதிக்க தாய்- தந்தை அருளுடன் எங்கள் குலதெய்வ அருளும் அற்புதங்களுக்கும் எங்களுக்கு மிகவும் உறுதுணை யாக இருக்கிறது. தாய்- தந்தை பக்தியுடன் இறை பக்தியும் எங்களுக்கு உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் திருவண்ணாமலை எனும் மலையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப்பெருமாளே எங்கள் குலதெய்வம். இந்த கோவில் அழகை பார்த்துப் பார்த்து பரவசப்பட்டு சென்று வணங்கி பரிபூரண ஸ்ரீனிவாசப் பெருமாள் அருளை எங்கள் குடும்பத் திற்கும், பரம்பரைக்கும் பெற்றுவருகிறோம். எங்களின் இந்த குலதெய்வம் காரில் நாங்கள் சென்று கொண்டு இருக்கும்போது டயர் வெடித்து, மரத்தில் மோதி மிரளவைக்கும், மரணத்தை எட்டி பார்க்க வைக்கும் சாலை விபத்துகளில் எங்களை மயிரிழையில் உயிர் தப்பவைத்து எங்கள் குலதெய்வம் ஸ்ரீனிவாசப் பெருமாள் எங்களை காப்பாற்றி பக்தியில் "கோவிந்தா சரணம்'' என்று எங்களை கோஷம்போட வைத்த சம்பவங்கள் பல உண்டு. இப்படி எங்கள் குல தெய்வம் ஸ்ரீனிவாசப் பெருமாள் எங்களை காப்பாற்றி வருகிறது! தெய்வங்களாகி விட்ட தாய்- தந்தை இரு வரின் தெய்வ அருளோடும், குலதெய்வத்தின் குன்றாத அருளோடும் ஆ2இ அடையார் ஆனந்தபவன் உணவக அதிபர் மற்றும் அவரின் குடும்பம், அவரின் உடன் பிறந்தோரின் குடும்பம் மற்றும் அவரின் மனைவியின் உடன்பிறந்தோரின் குடும்பம் மிகச்சிறப்பாக நன்றாக இருந்து வருகிறது.