மகாவிஷ்ணுவான திருமால் அவர்கள் பூமிபாரம் தீர்க்க எடுத்த அவதாரங்கள் பத்து என்று கூறப் படுகிறது. இல்லை இல்லை 14 அவதாரங்கள் எடுத்துள்ளதாக வும் அதையும் கடந்து வியாச பகவான் அவர்கள் மகாவிஷ்ணு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதாரம் எடுத்துள்ளதாக அவரது புராணத்தில் குறிப்பிட்டுள் ளார். அதன்படி மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமர், பலராமன், கிருஷ்ணர், கல்கி மேலும் இதைக்கடந்து ஹயக்ரீவர், இருதுமன்னன், நவநாராயணர், மோகினி, தத்தாத்ரேயர், தன்வந்திரி, ஜனகர், நாரதர், குப்தர், அம்சவரத்தினர், ரிஷிபர், கபிலர், வியாசர், யக்ஞர் என்றால் விஷ்ணு இப்படி இந்து சமயத்தில் முழுமுதற் கடவுளான மும்மூர்த்திகளில் ஒருவராகவும் மூவுலகத்தையும் காப்பவருமாக விளங்கிவருகிறார் மகாவிஷ்ணு. இவரை பிறப்பும் இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் இவர் பரப்பிரமம், பரமாத்மா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். அப்படிப்பட்ட மகாவிஷ்ணு உலகில் அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார், எடுத்தும் வருகிறார்.
இவர் நீலநிறத் தோற்றத்தில் இருப்பதால் நீலவண்ணன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகி றார். இதிகாசங்களான மகா பாரதத்தில் இவருடைய கிருஷ்ண அவதாரத்தையும் இராமாயணத்தில் இராம அவதாரத்தையும் அனைவரும் மனிதம் உள்ளவரை மறக்க முடியாதவை. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணந்தவை. மேலும் பாகவத புராணம், விஷ்ணு புராணம், மச்ச புராணம், வாமன புராணம், பன்னீர் புராணம் ஆகிய நூல்கள் மகாவிஷ்ணுவின் பெருமைகளை உலகநலனுக்காக விவரமாக விவரித்துள்ளன. மகாவிஷ்ணுவின் குணநலன்கள் தாய் பசுவின் கன்று அதன் தாயிடம் செல்கின்ற அன்பு எப்படியோ அப்படி அவர் கடவுளுக்கு எல்லாம் தலைமை ஏற்கும் சிறப்புதன்மை பெற்றவர். ஏற்றத்தாழ்வு இன்றி நட்பு பாராட்டுபவர். இவர் கடவுளின் எளிமையை வெளிப்படுத்துபவர். இப்படிப்பட்ட குணங்களை அவர் கிருஷ்ண அவதாரத்தின்போது வெளிப் படுத்தியுள்ளார்.
பாகவத புராணத்தில் திருமால் அவர்கள் 25 அவதாரங்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது அவதாரங்களில் அவதாரம் என்பது பிறப்பு. அதில் ஆவேசம் அம்சம் முழு சக்தியை பெற்றது.
ஆவேசம் அதை தேவையின்போது மட்டும் பயன்படுத்து வது, இவர் பல அவதாரங்கள் எடுப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அசுர குருவான சுக்கிராச்சாரியார் மனைவியை மகாவிஷ்ணு கொன்றதன் காரணமாக அவரை ஏழுமுறை பூமியில் மனிதனாக பிறக்கும்படி சுக்கிராச்சாரியார் சாபம் கொடுத்துள்ளார் என்றும், அதன்விளைவாக தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி ஆகிய அவதாரங்களை எடுத்ததாகவும் அதில் கூறப் படுகிறது. அக்கினி புராணத்தில் லட்சுமியும் திருமாலும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவை காணவந்தார்கள்.
அவர்களை திருமாலின் காவலர்களான ஜெயன், விஜயன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர்.
இறைவனை தரிசிப்பதைத் தடுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் முனிவர்கள் ஜெயன், விஜயன் இருவரையும் அசுரர்களாக பிறக்கும்படி சாபம் அளித்தனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய அவதாரங்கள்மூலம் அவர்களை தன்னோடு ஆட்கொண்டார்.
திருப்பாற்கடலை கடையும்போது அசுரர்களை மயக்க மோகினி அவதாரமும் எடுத்துள்ளார். இது குறித்து மகாபலிபுரத்தில் ஹரிஹரன் என்ற சிற்பத்தின்மேல் உள்ள ஒரு கல்வெட்டு ஒன்றில் தசாவதாரம் குறித்த வடமொழி ஸ்லோகம் பொறிக்கப் பட்டுள்ளது என்றும் அவற்றில் மகாவிஷ்ணு விற்காக பல்வேறு பெயர்களில் 105 ஆலயங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அதில் ஒன்று நேபாளத்தில் உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. புத்த மதத்தை தோற்றுவித்த புத்தரும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் வைணவ நூல்களில் அதற்கான ஆதார குறிப்புகள் இல்லை. இப்படி மகாவிஷ்ணுவின் பெருமைகளை கூறுவதற்கு மகாவிஷ்ணு நாமாவளி என்றும் நாமாவளி என்பது பெயர்களின் வரிசை என்றும் பொருள். அதேபோல் கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அட்ட தோத்திரம், விஷ்ணு சகஸ்ர நாமம் இப்படி பலவற்றை குறிப்பிடலாம். இதில் குறிப்பாக விஷ்ணு சஹஸ்ர நாமம் வைணவ ஆலயங்களில் மூலவருக்கு முன்பாக மந்திரமாக ஓதப்பட்டு வருகிறது. பலர் வீடுகளிலும் இந்த நாமத்தை உச்சரித்து பகவானை மனதில் இருத்திக்கொள்கிறார் கள். மகாவிஷ்ணு குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் ஏகப் பட்ட திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக கிருஷ்ண ரும், சத்யபாமாவும் நரகாசுரனை அழித்த தால் தீபாவளி பண்டிகை, அதே போல் வராக ஜெயந்தி, அட்சய ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி, வாமன ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, ஹயக்ரீவர் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி இப்படி பல விழாக்களை நடத்தி பக்தர்கள் வழிபட்டுவருகிறார் கள். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப் பட்ட 108 திவ்விய தேச ஆலயங்கள் உள்ளன.
அதில் பத்ராசலம், பூரி ஜெகநாதர், திருவை யோதி, மதுரா, துவாரகை, ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தாலும்கூட வெங்கடேசப் பெருமாள், வரதராஜப் பெருமாள், கம்பம் பெருமாள் என பல ஆயிரக்கணக்கான பெயர்களைக் கொண்ட ஆலயங்கள் தமிழகத்தில் ஏராளம், ஏராளம் உள்ளன. விஷ்ணு பகவானின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கிணைத்து தொகுப்பாக வியாசர் தந்துள்ளார் என்பதே இதற்கு உதாரணம். இது விஷ்ணு சகஸ்ர நாமாவளி என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
மகாவிஷ்ணு எடுத்த முதல் மற்றும் முதன்மையான அவதாரம் ஆதி புருஷ். இவர் உலகத்தை உருவாக்க அவதரித்ததாக கூறுகின்றனர். இந்து புராணங்களின்படி மகரிஷி யாசர் இவர் ஒரு முனிவர். இவர் வதிஸ்டரின் கொள்ளுப்பேரன். இவர் அறிவில் சிறந்த ஞானி. இவர்தான் மகாபாரதம் எழுதிய வர். வேதங்களை நான்காக பிரித்தவர் அதனால் இவருக்கு வேதவியாசர் என்ற பெயரும் உள்ளது. இவர் தொகுத்த விஷ்ணு புராணத்தை வைணவ சமயத்தை பின் பற்றுபவர்கள். பாடியும் கேட்டும் இறைவனிடம் சரண் அடைகிறார்கள் இப்படி பல்வேறு அவதாரங்களை எடுத்த மகா விஷ்ணு கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறையில் சாரநாதப் பெருமாளாக தோன்றியுள்ளார். இவர் எதற்காக இங்கு கோவில் கொண்டுள்ளார் என்பது குறித்து நாம் பார்க்கப் போகிறோம்.
இங்குள்ள சாரநாதப் பெருமாள் ஆலயம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆழ்வார்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நூல்களான 4,000 திவ்ய பிரபந்தத்தில் இக்கோவில் குறித்து பெருமைப்படுத்தப்பட்டுள்ளது. விஷ்ணு பகவானுக்கு எழுப்பப்பட்ட 108 திவ்ய ஆலயங்களில் இது 14-ஆவது ஆலயமாக கருதப்படுகிறது. இவ்வாலய இறைவனை சாரநாதர் என்றும் அவரது துணைவியார் லட்சுமிதேவியை சாரநாயகி என்றும் வணங்கி அழைக்கப்படுகிறார்கள்.
இங்கு இவர் தோன்றுவதற்கு காரணம் இந்து புராணத்தின்படி பூமி பாரத்தை குறைப் பதற்காக உலகத்தை அழிக்க முடிவுசெய்தார் திருமால். அப்போது படைப்புக் கடவுளான பிரம்மா கவலையுடன் மகாவிஷ்ணுவை சென்று சந்தித்தார். உங்கள் கவலைக்கு காரணம் என்ன என்று மகாவிஷ்ணு கேட்க அப்போது பிரம்மா உலகம் அழியப் போகிறது.
படைப்புத் தொழில்செய்யும் நான் அது சம்பந்தமான சிருஷ்டி மற்றும் வேதங்களும் அழிந்து போகுமே. அதை நான் எப்படி பாதுகாப்பது. அதற்கு ஒரு வழி கூறுங்கள்.
என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு ஒரு வலுவான மண் பானை தயார் (குடம்) செய்து அதனுள் வேதங்களையும் கருவிகளை யும் வைத்துவிடுங்கள். அவை பத்திரமாக இருக்கும். அழியாது. மீண்டும் படைப்புத் தொழிலை நீங்கள தொடரலாம் என்றுகட்டளையிட்டார் இதற்காக பிரம்மா பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மண்ணை எடுத்து குடம் போன்ற பானையை உருவாக்க முனைந்தார். ஆனால் அந்த மண்களால் பானையை உருவாக்க முடிய வில்லை. இறுதியாக இப்பகுதிக்கு வந்த பிரம்மா இங்குள்ள மண்ணை எடுத்து பானையை உருவாக்கினார்.
அந்தப் பானை மிகவும் அருமையாகவும் உறுதி யாகவும் உருவானது. அதில் வேதங்களை யும் கருவிகளையும் வைத்துப் பாதுகாத்தார்.
திருச்சேறை பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண்ணில் இருந்து பானையை உருவாக்கி அதில் வேதங்களை வைத்து காப்பாற்றிய தால் இந்த இடம் மிகமுக்கிய இடமாக கருதப் படுகிறது. மகா பிரளயத்திற்கு பிறகு அனைத்து உயிரினங்களும் வாழ காரணமாக அமைந்துள் ளது. இந்த பூமி அதன்காரணமாகவே இந்த இடத்திற்கு "சாரசேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சாரநாதப் பெருமாள் கோவில் துவாபர யுகத்திலேயே இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழில் சேரு என்பது மண்ணைக் குறிக்கும். அதன் படி இந்த இடத்தில் மண் எடுத்து பானை செய்து படைப்புத் தொழிலை பிரம்மா தொடர்வதற்கு காரணமாக இருந்து பிரம்மாவின் படைப்புத் தொழிலை தொடரச் செய்ததால் இதற்கு சாரம் என்ற பெயர். அதன்காரணமாக இங்குள்ள பெரு மாளுக்குப் பெருமாள் என்கிற பெயர் நிலைத்து உள்ளது.
அதேபோல் மற்றொரு புராணக் கதையில் கலியுகத்தில் படைப்புத் தொழிலை தொடர பிரம்மா செய்த பானையின் ஒரு முனை பகுதி இங்கு இருந்ததால் அதற்கு கும்பகோணம் என்றும் அந்த குடத் தின் வாய்ப்பகுதி இருந்த இடம் தற்போது குடவாசல் என்றும் பானையின் உள்ளடக்கம்.
அதாவது சாரம் இருந்த பகுதி அதனால் இந்த ஊருக்கு சாரம் அது மருவி தற்போது திருச்சேரை என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவான திருமாலை சார்ந்த ஊர் என்பதால் இவ்வாலய இறைவனுக்கு சாரதாதப் பெருமாள் என்றும் லட்சுமிதேவிக்கு சாரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார் கள். இவ்வாலையத் தின் விமானத்திற்கு சாரவிமானம். இங்குள்ள தீர்த்தம் சார தீர்த்தம், இப்படி ஐந்து அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. இதனால் இந்த ஆல யம் பஞ்ச சேத்தி ரம் என்றும் குறிப்பிடப் படுகிறது. இவ்வாலயத் திலுள்ள மூலவர் சாரநாதப் பெருமாளுக்கு அருகில் மகாலட்சுமி, சாரநாயகி, நீலா தேவி, பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய என ஐந்து தாயார்கள் உள்ளனர். இது வேறெங்கும் இல்லாத சிறப்பு என்கிறார் கோவில் அர்ச்சகர் பட்டாச்சாரியார் சௌந்தர்ராஜன். மேலும் இராவணன் சீதையை கவர்ந்துசென்று இலங்கையில் சிறை வைத்தான். இராம, லட்சுமணர்கள், வானரப்படைகள் உதவியுடன் இராவணனை போரில் வதம்செய்து சீதையைமீட்டு வந்தனர்.
இராவணனின் சகோதரன் விபீஷணன் தர்மத்தின் வழி நின்று ராமருக்கு உதவி செய்தார். அதன்காரணமாக சீதையுடன் அனைவரும் அயோத்தி சென்றனர். இராமர் பட்டாபிஷேகம் முடிந்தபிறகு விபீஷணன் தனது இலங்கை தேசத்திற்கு திரும்பிச் செல்ல முடிவு செய்தார். அவர் செல்வதற்கு உதவியாக இராமபிரான் ரங்க விமானம் ஒன்றை அவருக்கு அளித்தார். அதனுடன் விபீஷணன் இராமபிரான் உருவப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு அந்த விமானத்தில் இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்தபோது களைப்பின் காரண மாக விபீஷணனின் விமான ரதம் ஸ்ரீரங்கம் பகுதியில் தரையிறங்கியது. அங்கே விபீஷ ணன் எடுத்துவந்த இராமபிரான் படத்தில் இருந்து அரங்கநாதர் காட்சி கொடுத்தார். அப்போது அரங்கநாதர் தான் இங்கேயே தங்க விரும்புவதாக கூறினார். அப்போது திருச்சேறையில் சாரநாதப் பெருமாளுக்கு பிரம்மோற்சம் நடைபெற்றது. அதை பார்க்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். இருவரும் இவ்வாலயத்தில் நடைபெற்ற பிரம்மோற்சவ தத்துவத்தை கண்டு மகிழ்ந்த னர். இதன்காரணமாக இவ்வாலய இறைவனுக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக் களிலும் விஷ்ணு பகவான் இங்கு வந்து தரிசனம் தருவதாக பக்தர் கள் நம்புகிறார்கள்.
இது மட்டு மல்ல; அனைத்து நதிகளிலும் புனித மானது எது என்று கேட்டால் கங்கை என்று கூறுவோம். ஒரு முறை நதிகளுக் குள் போட்டி ஏற்பட்டது. அதில் எது புனித மான நதி என்ற பிரச்சினையைத் தீர்க்க பிரம்மா விஷ்ணுவின் (வாமன அவதாரத்தின்போது) பாதத்தை பார்த்ததும் அது கங்கை நதி என்று எண்ணினார். இதனால் கங்கை புனிதமான நதி என்ற பெயர் பெற்றது. இதைக்கண்டு வருத்த மடைந்த காவேரி நதி நாம் மட்டும் புனிதமான நதி இல்லையா? தனக்கும் சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று விரும்பியது.
அதன்காரணமாக மகாவிஷ்ணுவை நோக்கி காவிரி தவம் செய்தாள் இறைவன் காவிரி தாய்க்கு அருகில் ஒருசிறு குழந்தையாக தோன்றினார். காவேரித்தாய் அன்போடும் பாசத்தோடும் அந்த குழந்தையை எடுத்து அன்பை செலுத்தி மிகவும் பாசத்துடன் வளர்த் தார். இதனைக்கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு காவிரித் தாய்க்குக் காட்சி கொடுத்தார்.
அப்போது காவேரி நீயும் புனிதமான நதியாக வேண்டுமானால் திருச்சேரையிலுள்ள சாரநாத தீர்த்தத்தில் நீராடுமாறு காவேரி யிடம் கூறினார். அதன்படி சாரநாத தீர்த்தத் தில் காவிரி நீராட காவிரி நதிக்கு புனித நதி என்ற அந்தஸ்தை வழங்கினார் மகாவிஷ்ணு. அப்போது காவேரி தாய் இறைவனிடம் மூன்று வரங்களை கேட்டார். ஒன்று மகாவிஷ்ணுவான பகவான் திருச்சேரையில் சாரநாதப் பெருமாள் என்ற பெயரில் நிரந்தரமாக இருந்து அவரை வந்து வணங்கும் பக்தர்கள் அனைவரையும் காத்தருள வேண்டும். அடுத்து திருச்சேரையில் உருவாகும் அனைத்து உயிரினங்களும் பரமபதம் அடையவேண்டும். தனக்கு கங்கைக்கு சமமான அந்தஸ்தை தர வேண்டும் என கேட்டார். காவிரித் தாய் கேட்டபடி மகாவிஷ்ணு மூன்று வரங்களையும் அளித் தார். காவிரியின் மடியில் குழந்தை யாக விஷ்ணு பகவான் தவழ்ந்ததை இக்கோவிலில் சிற்ப மாகவும் சிலையாக வும் வடித்து வைத் துள்ளனர். காவிரி தாய்க்கு என இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதுமட்டுமல்ல; தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவர் அழகிய மணவாள நாயக்கர். இவர் மன்னார்குடியில் மகாவிஷ்ணுவான ராஜகோபாலருக்கு கோவில் கட்டமுடிவு செய்தார். அந்தப் பணிக்காக அவரது உத்தரவை நிறைவேற்ற தனது மந்திரி நரச பூபாலனை நியமித்தார். அரசரின் உத்தரவுப்படி மன்னார் குடியில் கோபாலனுக்கு கோவில் கட்ட தஞ்சை பகுதியில் இருந்து கற்கள் மற்றும் இடுப்பொருட்கள். வண்டிகள்மூலம் மன்னார் குடிக்கு கொண்டு செல்லப்பட்டது மந்திரி நரசபூபாலன் திருச்சேறைசாரநாதப் பெருமாளின் தீவிர பக்தர் அதன்காரணமாக திருச்சேறை பெருமாளுக்கும் கோவில் கட்டவேண்டும் என்று முடிவுசெய்தார்.
அதன்காரணமாக மன்னருக்கு தெரியாமல் மன்னார்குடிக்கு கோவில் கட்ட வண்டி களில் ஏற்றிச் செல்லும் கற்கள் இடுபொருட் களினை ஒவ்வொரு வண்டியில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து திருச்சேறை பெருமாளுக்கும் கோவில் அமைக்கும் பணியை செய்து வந்தார்.
மந்திரி நரச பூபாலனின் இந்தச் செயல் ஒற்றர்கள்மூலம் மன்னருக்கு தெரியவந்தது. நமக்குத் தெரியாமல் அங்கு எந்தக்கோவில் கட்டுகிறார் மந்திரி எனக் கோபத்துடன் மணவாள நாயக்கமன்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சேறை வந்தடைந்தார். இங்கு மன்னார்குடி ராஜகோபாலர் சந்நிதி போன்று மகாவிஷ்ணுவுக்கும் ஒரு கோவிலைக்கட்டி அது முடிவும் தருவாயில் இருந்ததைக் கண்டார் மன்னரும் பெருமாளின் பக்தர் அல்லவா மந்திரி பெருமாளுக்கு கோவில் கட்டியதை கண்டு மகிழ்ந்தார். மன்னர் உடனே அமைச்சரை அழைத்து பாராட்டிய தோடு கூடுதல் நிதி கொடுத்து மீதியுள்ள கோவில் பணிகள் அனைத்தையும் முடிக்கு மாறு உத்தரவிட்டார். அதன்படிதான் இங்கு சாரநாதப் பெருமாள் கோவில் முழுமை பெற்றுள்ளது என்கிறார் இவ்வாலய அர்ச்சகர்களில் ஒருவரான சௌந்தர்ராஜ பட்டாச்சாரியார்.
பெருமாள் அபயகரத்துடன் அருள் பாலித்துவரும் அபூர்வ ஆலயம் இது. இதேபோன்று எர்ணாகுளத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ கற்கரையிலுள்ள கடற்கரையப்பன் கோவிலிலும் இதே பெருமாள் காட்சி அளிப்பதாக கூறுகின்றனர். இங்கு இராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் இராமரின் 14 வருட வன வாசத்திற்கு பிறகான அவர்களின் தோற்றத்தை சித்தரிக்கிறது இவ்வாலயம். வைஷ்ணவ நவகிரக ஆலயங்களில் இதுவும் ஒன்று. சனிபகவானின் மகன் மாண்டிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கட்டுமானம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது. எனவே இது சோழர் காலத்திலும் அடுத்து விஜயநகர வம்சத்தினர் அடுத்து தஞ்சையை ஆண்டநாயக்கர்கள் இக்கோவிலை புனரமைப்பு செய்துள்ளனர்.
இவ்வளவு சிறப்புபெற்ற திருச்சேரை சாரநாதபெருமாள் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ரிண விமோசனர்- அதாவது கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுகிறவர்கள் இவ்வாலய இறைவனை வணங்கி பூஜை செய்தால் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வருகிறார் கள். எனவே சிவனும் பெருமாளும் அருகருகே இருந்து அருளாட்சி செய்யும் ஊர்களில் திருச்சேறையும் ஒன்று. எனவே, திருச்சேறை சிவனையும் பெருமாளையும் வேண்டி வணங்குகிறவர்களுக்கு அனைத்து நலன்களையும் வாரிவழங்குகிறார்கள்.
சாரநாதப் பெருமாள் ஆலயத்தில் ஐந்து லட்சுமிகள் கோவில் கொண்டுள்ளது மிகவும் வித்தியாசமானது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நோய் நொடியால் பாதிக்கப் பட்டவர்கள், கடன் தொல்லையால் அவதிப் படுபவர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்வாலய இறைவனை வணங்கி நலம் பெருகிறார்கள். நாமும் அங்கு செல்ல வேண்டும் அல்லவா; புறப்படுவோம் திருச்சேறைக்கு.