ஆலம்பூர் ஜோகுலம்பா ஆலயம்...
இந்த ஆலயம் தெலங்கானா மாநிலத்தில் இருக்கிறது. துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள அமைதியான நகரம் ஆலம்பூர். இதை பகவான் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுன் ஆலயத்தின் மேற்கு வாசல் என்று பொதுவாக கூறுவார்கள்.இந்த ஆலயம் ஒரு புகழ்பெற்ற ஆலயம். இந்த ஆலயத் தில் புராதன சின்னங்கள் நிறைய இருக்கின்றன.
பாதாமி, சாளுக்கிய வம்சத் தினரின் கலைத்திறன்களை இங்கு நாம் காணலாம். இந்த ஊரை பல தென்னிந்திய அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். இந்த ஆலயத்தில் அன்னை ஜோகுலம்பா குடியிருக்கி றாள். பாலா பிரம்மேஸ்வரர் என்ற பெயரில் சிவன் இருக்கிறார். ஜோகுலம்பாவிற்கு 18 பீடங்கள் இருக்கின்றன. அவற்றில் இது 5-ஆவது பீடம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/luck_5.jpg)
இந்த ஆலயத்திலுள்ள அன்னை ஜோகுலம்பாவின் தலையில் பல்லி, தவளை, தேள் ஆகியவை அமர்ந்திருப் பதைப் போன்ற சிலை இருக்கிறது. அன்னை பிணத்தின்மீது அமர்ந்தி ருப்பாள். நாக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
அன்னையின் தோற்றம் மிகவும் உக்கிரமாக இருக்கும். இந்த அன்னை யோக சித்தியை அளிக்கக்கூடியவள் என்பது பொதுவான நம்பிக்கை. அதன்காரணமாக தெலுங்கு மொழி யில் இந்த தாயை யோகுலம்பா என்று அழைக்கின்றனர். யோகினி தேவி யின் தாய் என்று அதற்கு அர்த்தம்.
இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை...
6-ஆம் நூற்றாண்டில் ரஸசித்தி என்ற பெயரில் ஒரு துறவி இருந்தார். அவர் சாதார ணப் பொருளைக்கூட தங்கமாக மாற்றி விடுவார். அவர் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசிக்கு மிகவும் நெருக்க மானவர். இங்கிருக்கும் பல சிலைகளை உண்டாக்கியவர் இவர்தான். ஒன்பது மூலிகைகளைக்கொண்டு ரஸசித்தி உருவாக்கிய ஒன்பது சிலைகள் இங்கு இருக்கின்றன.
சிவன், விநாயகர், முருகன், ஜோகுலம்பா ஆகியோரை வழிபட்டு, மூலிகைகளைத் தங்கமாக மாற்றி சிலைகளை உருவாக்கியிருக்கிறார் ரஸசித்தி. இந்த ஆலயத்தை தெற்கு கைலாசம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த இடத்தில் பிரம்மா தவம் இருந்ததாக வரலாறு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/luck1.jpg)
அவருக்கு அன்னை சக்தி யின் ஆசிர்வாதம் கிடைத்ததாக புராணம் கூறுகிறது.
1390-ஆம் வருடத்தில் ஒரு முகலாய அரசன் இந்த ஆலயத்தின்மீது தாக்குதல் நடத்த, இங்கிருந்த சிலைகளை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைத்திருக்கின்றனர். சுல்தான் என்ற அந்த மன்னனுடன் ஹரிஹரன் என்ற அரசன் போர் புரிந்திருக்கிறான்.
இப்போதிருக்கும் ஆலயம் 2005-ல் புதுப்பிக்கப்பட்டது.
சங்கராச்சாரியார் இங்குவந்து பூஜைகள் செய்திருக்கிறார்.
இந்த ஆலயத்திற்குச் செல்வதாக இருந் தால், சென்னையிலிருந்து ஹைதராபாத் திற்குச் செல்லும் ரயிலில் பயணித்து, கட்வால் என்ற ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளவேண்டும். சென்னையிலிருந்து கட்வால் 648 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து காச்சி குடா விரைவு ரயிலில் பயணிக்கலாம். கட்வால் ரயில் நிலையத்திலிருந்து ஆலம்பூர் ஜோகுலம்பா ஆலயம் 62 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/luck-t.jpg)