மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முதல் வாரம்வரை நீசமாக 4-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். என்றாலும் 11-ஆமிடத் தைப் பார்ப்பதால் ஓரிரு காரியங்களில் அனுகூலமான சூழ்நிலை தென்பட்டாலும் ராசிநாதன் நீசம் என்பதால் பெரும்பாலான விஷயங்களில் தேக்கங்களைத்தான் சந்திக்க நேரும் அல்லது தாமதப் பலன்களை உண்டாகலாம். 12-க்குடைய குரு 3-ல் மறைவு. 6-ஆம் தேதிமுதல் அஸ்தமனம். 3-க்குடைய புதன் அங்கு ஆட்சி என்பதால் குருவுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. மனதில் சிலநேரம் தைரியக்குறைவு, உங்கள்மீதே உங்களுக்கு சந்தேகம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். 5-ல் உள்ள கேது பிள்ளைகளைப் பற்றிய கவலைகளை உண்டாக்கும். சனியும் அந்த இடத்தைப் பார்ப்பதால் மனதில் எழும் திட்டங்களை சரிவர செயல் படுத்த இயலாது. ராசிநாதன் செவ்வாய் 5-ல் மாறியபிறகு சில நன்மைகள் ஏற்படும். ஒரு சிலர் குடியிருப்புவகையில் இடமாற்றத்தைச் சந்திக்கலாம். ராசியை சனியும் பார்ப்பதால் நம்பியவர்களால் சங்கடங் களைச் சந்திக்க நேரும். பூர்வபுண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தகப்பனார்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும்.
பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனை வழிபடவும். அல்லது முருகப் பெருமானின் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் சஞ்சாரம் என்றாலும் 11-க்குடைய குரு 2-ஆமிடத்தில் இருப்பது ஒரு ஆறுதல். ராசிநாதன் மறைவதால் எந்த ஒரு விஷயத்திலும் குழப்ப நிலைகளை சந்திக்கலாம். இது சரியா அல்லது தவறா என்று முடிவெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம். 2-ல் குரு என்பதால் தன வரவுக்கு இடமுண்டு. அதேசமயம் வீண் விரயத்திற்கும் வழியுண்டு. 8-ஆம் தேதிமுதல் நீச செவ்வாய் சிம்ம ராசியான 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். கணவன்- மனைவியிடையே சங்கடங்கள் ஏற்படலாம். கருத்து வேறுபாடுகளும் உருவாகலாம். 4-ல் உள்ள கேது தாயாருக்கு தேகசுகக் குறைவை உண்டாக்குவதோடு தன் சுகத்திலும் வைத்தியச் செலவை ஏற்படுத்தும். இருவரது உடல்நலத்திலும் அக்கறை காட்டுவது அவசியம். 10-ஆமிடத்து சனியும் ராகுவும் ஒருசிலருக்கு உத்தியோக இடமாற்றத்தையோ அல்லது வேறு உத்தியோக மாற்றத் தையோ தருவார்கள். மாத மத்தியில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரும். மாதக் கடைசியில் சுக்கிரன் ஆட்சிபெறுவது நன்மையைத் தரும் தொழிற்துறையினருக்கு கடன்பெறும் அமைப்பு உண்டு அவ்வாறு ஏற்படும் கடனை சுபக்கடன் அல்லது சுப முதலீட்டுக் கடனாக மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது.
பரிகாரம்: வெள்ளிதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 10-க்குடைய குருவும் ஜென்ம ராசியில் சஞ்சாரம். இருவரும் தொடக்கத்தில் செவ்வாயின் சாரத்தில் (மிருகசீரிடம்) சஞ்சாரம். செவ்வாய் 2-ல் நீசம். அலைச்சல்கள் சற்று கூடுதலாக காணப்படும். உத்தியோகரீதியாக மந்தமான சூழ்நிலைகளும் உருவாகலாம். 6-ஆம் தேதிமுதல் ஜென்ம குரு அஸ்தமனமாகிறார். உங்களது முயற்சிகளில் முன்னேற்றம் குறைவாக காணப்படும். அதாவது உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. பாக்கிய ஸ்தானாதிபதி சனி 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை குறையாது. என்றாலும் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வதால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். ஜென்ம ராசிநாதன் புதன் ஆட்சி என்பதால் கழுவின மீனில் நழுவின மீன்போல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்கலாம். 8-ஆம் தேதிமுதல் 11-க்குடைய செவ்வாய் 3-ல் மாறுகிறார். சனி, செவ்வாய் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இது அவ்வளவு நன்மையல்ல. "மந்தன் சேய் பார்த்திடவும் தீது சேர்ந்திடவும் தீது என்பது சந்திரகாவிய விதி'! எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு அஸ்தமான நிவர்த்திக்குப் பிறகு திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு யோகத்தைத் தருவார்.
பரிகாரம்: புதன்கிழமையன்று சக்கரத்தாழ்வாரை வணங்கவும்.
கடகம்
கடக ராசிக்கு 6, 9-க்குடைய குரு 12-ல் மறைவு. 6-ஆம் அதிபதி 12-ல் மறைவது ஒருவகையில் நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் பாக்கியாதிபதி 12-ல் மறைவது அவ்வளவு நல்லதல்ல என்பதும் நீங்கள் அறிந்ததே! தகப்பனார்வழி உறவுகளால் மனவருத்தம், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சங்கடம், குடியிருப்புவழியில் இடமாற்றம் அல்லது ஒருசிலருக்கு ஊர்மாற்றம் போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். 6-ஆம் தேதிமுதல் குரு அஸ்தமனமாகிறார். பொதுவாக அஸ்தமனம் பெறும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும் என்பதால் அவ்வாறு பலமற்ற கிரகத்தின் பார்வைக்கும் பலம் குறைவு. அந்தவகையில் குரு 4, 6, 8-ஆமிடங்களைப் பார்த்தாலும் அஸ்தமன காலத்தில் பெரிய சங்கடங்கள் ஏற்படாது என எதிர்பார்க்கலாம். 10-க்குடைய செவ்வாய் 2-ல் மாறியபிறகு தொழில்ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகலாம். புதிய கூட்டு முயற்சிகள் பலன் தரும். அட்டமச்சனி காலம் முடியும்வரை தன்னிச்சையாக செயல் படுவதைத் தவிர்க்கவும். மாத பிற்பாதியில் 2-க்கு டைய சூரியன் 12-ல் மறைவதால் பொருளாதாரத்தில் சிறுசிறு பற்றாக்குறைகளை சந்திக்கலாம். புதிய பயணங்களும் உருவாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பொறுமையாக நடந்துகொள்வது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று கரூர் மற்றும் நாமக்கல்வழி பத்து கிலோமீட்டர் தூரம் மோகனூர் சென்று ஸம்மோஷண கிருஷ்ணரை வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதியில் 10-ல் திக்பலம் பெறுகிறார். 10-க்குடைய சுக்கிரன் 9-ல் தர்மகர்மாதிபதி யோகம் பெறுகிறார். வாழ்க்கை, தொழில் இரண்டிலும் சற்று நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்த சில மாதமாக தொழில் சம்பந்தமாகவோ அல்லது உத்தியோகம் சமபந்தமாகவோ பெரிய நன்மைகளை அனுபவிக்க முடியாதவர்கள், அதிக உழைப்புக் கொடுத்தும் ஆதாயம் பெறாதவர்கள், இந்த தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், வரவு- செலவு போன்ற பலன்களைத் தரும். 11-ல் உள்ள குரு 6-ஆம் தேதிமுதல் அஸ்தமனம் பெற்றாலும் ராசிநாதன் மாத பிற்பாதியில் 11-ல் மாறுகிறார். அது உங்களுக்கு முன்னேற்றம் காரிய அனுகூலம் போன்றவற்றைத் தரும். ஜென்ம கேது சப்தம ராகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் ஆண்- பெண்களுக்கு சற்று தாமதத்தை ஏற்படுத்தும். 7-ல் சனி நிற்பதும் தோஷம்தான்! 11-ல் நிற்கும் குரு அஸ்தமன நிவர்த்திக்கும் பிறகு (7-ஆமிடத்தைப் பார்க்கிறார்) திருமண முயற்சிகளை நடத்தித் தருவார். ஜென்ம கேது உடல்ரீதியாக சோர்வு, வைத்தியச் செலவு இவற்றைத் தருவார். உடன்பிறந்த சகோதர- சகோதரிவகையில் உதவி, ஒத்தாசைகளை எதிர்பார்க்கலாம். 8-ஆம் தேதிமுதல் செவ்வாய் ஜென்ம ராசிக்கு மாறி சனி, செவ்வாய் பார்வை பெறுகிறார்கள். தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரையில் விநாயகருக்கு செம்பருத்தி பூ சாற்றி வழிபடவும்.
கன்னி
இம்மாதம் கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 4, 7-க்குடைய குருவும் சஞ்சாரம். பொதுவாக 10-ஆமிடத்து குரு பதிமாறச் செய்யும் என்பது ஜோதிட விதி! வேலை, தொழில் இவற்றில் சில மாற்றங்கள் ஏற்படலாம். 2-ஆமிடத்தை குரு பார்ப்பதால் தனவரவு நன்றாக அமையும். வீடு வாகன யோகமும் உண்டாகும். ஒருசிலர் சொந்த வீட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்குண்டான வங்கிக் கடனும் அமையும். 12-ல் உள்ள கேது சிலருக்கு இடமாற்றத்தையும் அல்லது அயல் நாட்டு உத்தியோகம்மூலம் வெளிநாட்டு பயண அனுபவத் தையும் தருவார். 10-ஆமிடத்து குரு 2, 4, 6-ஆமிடங் களைப் பார்ப்பதால் அதன்மூலம் உண்டாகும் பலனை மேலே கூறினோம். என்றாலும் குருவின் அஸ்தமன காலத்தில் மேற்கூறிய பலன் தாமதமாகும். அஸ்தமன நிவர்த்திக்குப்பின் நன்மைகளை அனுபவிக் கலாம். 12-க்குடைய சூரியன் 9-ல் சஞ்சரிக்கும் காலம் தகப்பனா ருக்கு மருத்துவச் செலவு, சங்கடம் ஆகியவை ஏற்படலாம். எனினும் பாதிப்புக்கு இடமிருக்காது. 6-ல் உள்ள சனியும் ராகுவும் மறைமுக சத்ரு தொல்லைகளை விலக்கு வார்கள். போட்டி, பொறாமைகளையும் ஒதுக்குவார்கள்.
பரிகாரம்: புதன்கிழமையன்று லட்சுமி நாராயணரை வழிபடவும். இயலாதவர்கள் புதன் ஹோரையில் பெருமாளை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 7-க்குடைய செவ்வாய் 10-ல் நீசம். தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் எடுக்கும் முயற்சிகள் இம்மாதம் 8-ஆம் தேதிக்குப்பிறகு முன்னேற்றம் பெறும். ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் துறையினருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். 9-ல் உள்ள குரு ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனும் ராசியைப் பார்க்கிறார். எந்த ஒரு ஜாதகத் திலும் ராசிநாதனே ராசியைப் பார்ப்பது அல்லது குரு லக்னம், ராசி ராசிநாதன் இவர்களைப் பார்ப்பது எல்லாம் பலம் தரும். 6-ஆம் தேதிமுதல் குரு அஸ்த மனமானாலும் உங்கள் முயற்சிகள் அஸ்தமன நிவர்த்திக்குப்பிறகு பலன் தரும். எதிர்காலம் கருதி எடுக்கும் செயல்பாடுகள் அனுகூலம் தரும். 3-ஆமிடத்தை 3-க்குடையவரே பார்ப்பதால் நண்பர்கள் வட்டாரத்தில் அல்லது பழகிய வட்டாரத்தில் உதவி, ஒத்தாசைகள் கிடைக்கும். உண்மையான ஊழியர்கள் அமைந்து உங்கள் மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப் படும். "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற சொல்லுக்கேற்ப முயற்சிப்பவர்க்குத்தான் தெய்வம் துணை புரியும். அதைத்தான் வள்ளுவர் "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்' என்கிறார். சோம்பேறிக்கும், முயலாதவர்க்கும் தெய்வம் துணைபுரியாதல்லவா!
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் சென்று தாயாரையும் ரங்கநாதரையும் வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம். 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவு. உங்களுடைய முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படலாம். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், பிரச்சினைகள் உருவாகலாம். 8-ல் இருக்கும் குரு 6-ஆம் தேதிமுதல் அஸ்தமனமடைவதால் குருவின் பார்வைக்கு பலமும் குறைவு. தேவையில்லாத கற்பனை பயம், வீண் மனக் கவலை ஆகியவற்றை சந்திக்க நேரும். தகப்பனாருக் கும் வைத்தியச் செலவு போன்ற விரயங்கள் ஏற்படலாம். அட்டம குரு 12, 2, 4 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். வரவும் உண்டு செலவும் உண்டு. வாகன யோகமும் உண்டு. வாகனத்தால் செலவும் உண்டு. 8-ஆம் தேதிமுதல் ராசிநாதன் 10-ல் மாறி ராசியையே பார்க்கிறார். அது ஒருவகையில் ஆறுதல். உங்களைப் பற்றி தவறாக நினைத்தவர்கள் அந்த கருத்துக்கு மாறாக உங்கள்மீது நன்மதிப்பை எதிர்பார்க்கலாம். வீண் அலைச்சல்கள் ஏற்படத்தான் செய்யும். 4-ல் உள்ள சனி ராகு உடல்நலத்தில் ஆரோக்கியக் குறைவை உண்டாக்கினாலும் குரு பார்வையால் நிவர்த்தி உண்டு. மாத பிற்பாதியில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் சற்று குறைவாகக் காணப்படும். உயரதிகாரிகளிடையே கருத்து மோதல்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ளவேண்டும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் ராகுகாலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். கடந்த காலத்தில் 6-ல் மறைந்தபோது பல இன்னல்கள், இடைஞ்சல்கள், விரயங்கள், தேக சுகத்தில் பிரச்சினை போன்ற பலன்களைத் தந்தார். அதிலும் குரு மாறும் கடைசி ஒருவார காலத்திற்குள் சிலருக்கு ஆரோக்கியம் சார்ந்த தொந்தரவுகள், கால் பிரச்சினை, வயிற்று உபாதை இவற்றைத் தந்தார். இம்மாதம் குரு 7-ல் நின்று ராசியைப் பார்த்தாலும் 6-ஆம் தேதி முதல் அஸ்தமனமாகிறார். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக குருவின் அஸ்தமன நிவர்த்தி வரை உடன்பிறப்புவகையில் மனவருத்தம், உடல்சோர்வு, அசதி, காரிய அனுகூலத்தில் தாமத சூழ்நிலை போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். 9-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. தகப்பனார்வழி உறவுகளால் விவகாரங்கள் ஏற்படலாம். 8-ஆம் தேதிமுதல் 12-க்குடைய செவ்வாய் 9-ல் மாறி 12-ஆமிடத்தையே பார்ப்பதால் தேவையற்ற செலவுகள், தற்கா-க இடமாற்றம், திடீர் பயணம் ஆகியவை ஏற்படலாம். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை அதிகரிக்கும். குரு 4-க்குடையவரும் என்பதால் தாயார் தேகநலனில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தாயாருக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு, மனக் கிலேசம் ஏற்படலாம். 3-ல் ஆட்சிபெற்ற சனி தைரியம், தன்னம்பிக்கையைத் தருவார். தன்மையாக செயல்படும் துணிச்சலையும் தருவார்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு சென்று சௌந்திரராஜப் பெருமாள் கோவி-லுள்ள தன்வந்திரி பகவானை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 2-ல் ஆட்சி. ஏழரைச்சனியில் கடைசிக்கூறு பாதச்சனி நடக்கிறது. 3, 12-க்குடைய குரு 6-ல் மறைவது நல்லதுதான். என்றாலும் 12-ஆமிடத் தையே பார்ப்பதால் வீண் அலைச்சல், திடீர் இடமாற்றம், வெளியூர் பயணம், ஏற்கெனவே இருக்கும் விரயங்கள் அதிகமாகுதல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் குரு அஸ்தமன நிவர்த்திக்குப் பிறகு தொழில், உத்தியோகம், வேலை இவற்றில் சற்று ஆறுதலான விஷயத்தைத் தருவார் என்று எதிர்பார்க்க லாம். சிலருக்கு சிப்பந்திகள் பிரச்சினையும் தீரும். 2-ல் உள்ள ராகு குடும்பத்தில் அவ்வப்போது குழப்பங்களை ஏற்படுத்தும். அதனால் மனநிம்மதியும் குறையும். சிலர் குடியிருப்புவகையில் இடமாற்றத்தை சந்திக்க நேரும். 8-ஆம் தேதிமுதல் சிம்ம ராசிக்கு மாறும் செவ்வாய் சனியைப் பார்க்கிறார். சனியும் செவ்வாயைப் பார்க்கிறார். அது ஒருவகையில் சங்கடம்தான். உடல்நலத்தில் பிரச்சினை, உண்டாகலாம். பண வரவிலும் செலவு அதிக மாகக் காணப்படும். 6-ல் வந்திருக்கும் குரு தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் அதன்மூலம் கடன்கள் அடைப்படும் அமைப்புகள் ஏற்படும். 5-ல் உள்ள சூரியன் பிள்ளைகள் பற்றிய மனக்கவலையைத் தருவார்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும். ஆஞ்சனேயருக்கு நெய் தீபமேற்றவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஜென்மச்சனி நடப்பதோடு ராகுவும் இணைந்து ஜென்ம ராகு, சப்தம கேது என்று கூடுதல் சுமையைத் தருகிறார்கள். தான் யார், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் யார் என்ற புரிதலை ஜென்ம சனி தருவார். சிலருக்கு கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் அல்லது ராகு தசையோ புக்தியோ நடந்தால் அறுவை சிகிச்சை, சந்திர தசையோ புக்தியோ நடந்தால் இழப்பு, பொருட்சேதம் போன்றவற்றை சந்திக்க நேரும். 8-ஆம் தேதிமுதல் 3, 10-க்குடைய செவ்வாய் 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். ஏற்கெனவே 7-ல் உள்ள கேதுவோடு செவ்வாய் இணைவது தோஷம்தான். திருமணத்தடை, தாமதம், அலைக்கழிப்பு நேரும். ஒருசிலர் பார்க்கும் உத்தி யோகத்தை விட்டுவிட்டு வேறு உத்தியோகத்துக்கு மாறும் அமைப்பு உண்டாகும். வெளியூர் அல்லது வெளிமாநில, வெளிநாட்டு உத்தியோக முயற்சிகள் பலன்தரும். அதே சமயம் வெளியூரில் உத்தியோகம் பார்க்கும் அன்பர்களுக்கு ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மீண்டும் தாய் நாட்டுக்குத் திரும்பும் சூழ்நிலைகளும் உருவாகும். இவையெல்லாவற்றுக்கும் ஒரு ஆறுதல் தேறுதல் ராசியைப் பார்க்கும் குரு தருவார் என்று நம்பலாம். 6-ஆம் தேதிமுதல் குரு அஸ்தமனம். அஸ்தமன நிவர்த்திக்குப்பிறகு ராசியைப் பார்க்கும் குரு சில நன்மை ஆதாயம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: தென்காசி போகும் பாதையில் கடைய நல்லூர் அருகில் கிருஷ்ணாபுரம் சென்று ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை வழிபடவும்.
மீனம்
மீன ராசிநாதன் குரு 4-ல் சஞ்சாரம். 4, 7-க்குடைய புதனும் ஆட்சி. ராசிநாதன் 3-ல் மறைந்த காலத்தில் தேக சௌகரியத்தில் பிரச்சினை, அதனால் வைத்தியச் செலவு, விரயம் இவற்றை சந்தித்திருக்கலாம். குரு 4-ல் மாறி 12-ஆமிடம், 10-ஆமிடம், 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். 6-ஆம் தேதிமுதல் குரு அஸ்தமனம் என்பதால் நீங்கள் ஈடுபடும் செயல்களில் முழுமையான நற்பலனை அனுபவிக்க இயலாது. சாண் ஏற முழம் வழுக்கிய நிலையாகத்தான் அமைகிறது. தொழில், உத்தியோகம் இவற்றிலும் திருப்தியற்ற நிலைதான் உருவாகிறது. குருவின் அஸ்தமன நிவர்த்திக்குப்பிறகு (ஜூலை 6-ஆம் தேதி) ஆறுதலான விஷயங்கள் அமையும். 2-க்குடைய செவ்வாய் 8-ஆம் தேதிமுதல் 6-ஆமிடமான சிம்ம ராசிக்கு மாறி 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் பற்றாக் குறை நிலவலாம். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம். ஜூலை 6-க்குப்பிறகு தொழி-ல் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். 4-ல் உள்ள குரு வீடு, வாகனம் இவற்றில் நற்பலன் தரும். தொழில் இயக்கம் இருந்தாலும், குடியிருப்பில் சில நன்மைகள் அமைந்தாலும் ஏதோ ஒரு மனக்கவலை உள்ளிருந்து உங்களை வாட்டும். மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் உங்களுக்கு மன ஆறுதல் இல்லாமல் தவிப்பீர்கள். அதை மற்றவர் அறியாதபடி நடந்துகொள்வீர்கள். எது எப்படிப் போனாலும் குருவருளும் திருவருளும் உங்களுக்கு துணையாக நின்று வழிநடத்தும். மனக்காயங்களுக்கு மருந்தளிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகுதீபமேற்றி வழிபடவும். ஜீவசமாதி வழிபாடு நற்பலன் தரும்.
செல்: 99440 02365