ஜோதிட மாமணி முனைவர் முருகு பாலமுருகன்
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, வடபழனி,
சென்னை-600 026, தமிழ்நாடு, இந்தியா.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிலும் துணிவுடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 13-4-2022 முதல் 22-4-2023 முடிய விரய ஸ்தானமான 12-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் பண வரவில் சற்று ஏற்ற- தாழ்வுகள் இருக்கும். உங்களது ஆடம்பர செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத உதவிகளால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. குரு தனது விசேஷப் பார்வையாக ஜென்ம ராசிக்கு 4, 6, 8-ஆம் வீடுகளை பார்ப்பதால் கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில் திறம் பட செயல்படுவீர்கள். அசையும்- அசையா சொத்து வழியில் சுப- செலவுகள் ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன்கள் சற்று குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலங்களை அடைய முடியும். குரு 12-ல் சஞ்சரிப்பது மட்டுமின்றி சனியும் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஒருசில முன்னேற்றங்களை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்தாலும் உங்களின் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், உத்தியோக ரீதியாக இருக்கும் நெருக்கடிகள் குறைந்து நற்பலனை அடையமுடியும். தற்போது சற்று நிதானத்துடன் இருந்துவிட்டால் 2023 முதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றங் கள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். வயிறு கோளாறு, இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மனவிக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குலதெய்வ வழிபாடுகளை செய்வது குடும்பத்திற்கு நற்பலனை உண்டாக்கும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர் களின் செயல்களால் சுபகாரிய முயற்சிகளுக்கு இடையூறு உண்டாகும். பெரியவர்களிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மிகவும் நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். எதிர்பாராத வகையில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே ஏமாற்றக்கூடிய காலம் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் உண்டாகும். உங்களுக்கு இருந்து வரும் வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச் செல்வார்கள். சில நேரங்களில் உடனிருப்பவர்களே சதி செய்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. தற்போது நிதானமாக இருந்தால் 2023 முதல் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
உத்தியோகம்
உத்தியோஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்றாலும் பணியில் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். உடல் சோர்வு, மந்தமான நிலை போன்றவற்றால் அடிக்கடி விடுப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும். வேலைப்பளுவும் சற்று அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய காலமாகும். மறைமுக எதிர்ப்புகளை உங்களது தேவையற்ற பேச்சுகளால் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பத்திரிக்கை நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாது இருக்கவும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் 2023 தொடக்கத்தில் கிடைக்கும். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது நல்லது.
விவசாயிகள்
போதிய நீரின்மை, சரியான வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விளைச்சலை நல்லவிதமாக எதிர்பார்க்க முடியாது. பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன்மூலம் அரசுவழியில் சில மானியத் தொகைகளைப் பெறமுடியும். விளை பொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியாமல் போவதால் லாபம் குறையும். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் 2023 தொடக்கத்தில் நல்லது நடக்கும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றாலும் எதிலும் ஒழுங்காக செயல்பட முடியாத நிலை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடல் நிலையில் சோர்வு உண்டாவதால் படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உங்களது வாய்ப்புகளைப் பிறர் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதம் ஆனாலும் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும். தேவையற்ற வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ளவும். வயிறு கோளாறு, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சிக்கனமாக செயல்பட்டு எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்களை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி இலக்கைத் தொடுவீர்கள். படிப்பில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல மதிப்பெண் எடுக்கமுடியும். உடன் பழகும் நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றா லும், ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவேண்டும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கு இடையூறு உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. எடுத்த ஆர்டர்களை முடிக்க நீங்கள் சற்று கவனம் செலுத்தவேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் கடினமான பணியை சிறப்பாகச் செய்துமுடிக்கமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மட்டுமே அவர்கள்மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்க மாக இருந்தாலும் சனி அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகளால் சுபச்செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன்களை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஆதாயப்பலனை அடையமுடியும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும், தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு தேடிவரும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022
குரு பகவான் 12-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சாதகமற்று இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர் களை அனுசரித்து நடந்துகொள்வதன்மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக்குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறமுடியும். கூட்டாளிகளை, தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். நீங்கள் எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு- சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத் தையும் பூர்த்தி செய்துவிட முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத் துக் கொள்வதன்மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்குக் கடனா கக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு எதிலும் முனைப்புடன் செயல்பட்டால் விரைவில் நல்ல வளர்ச்சி அடையலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். வரும் 17-1-2023-ல் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின் மூலம் சனி 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குருபகவான் ரேவதி நட்சத்திரத்தில் 12-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். குடும்பத் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் தேடிவரும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றா லும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வேலைப்பளு குறையும்.
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் 17-1-2023 முடிய சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதுச் சனிக்கிழமைகளில் திருப்பதி வேங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம்.
ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் ராகுவுக்குப் பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேது 7-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்குப் பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: ஆழ்சிவப்பு. கிழமை: செவ்வாய். கல்: பவளம். திசை: தெற்கு. தெய்வம்: முருகன்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும், அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், அதிக ஆர்வம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு 13-4-2022 முதல் 22-4-2023 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சிபெற்று சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்களுக்கு தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குரு தனது சிறப்புப் பார்வையாக 3, 5, 7 ஆகிய வீடுகளை பார்ப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகக்கூடிய பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் நல்லநிலை அடைவீர்கள். இதுநாள்வரை 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகமான ராகு, கேது தற்போது கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் மேலும் பல அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கடந்தகால அலைச்சல்களும் டென்ஷன்களும் குறையும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை விலகி நல்ல முன்னேற் றங்கள் உண்டாகும். புதிய திட்டங்களைத் தீட்டி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்து மன நிம்மதி ஏற்படும். வேலையாட்கள் திறமையாக செயல்பட்டு உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறையும். உத்தியோகத்தில் தடைப்பட்ட உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடந்தகாலக் கவலைகள் மறைந்து மன நிம்மதி ஏற்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளநிலை ஏற்படும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உங்கள் ராசிக்கு சனி 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் தன லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனி திருக்கணிதப்படி 17-1-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் தொழில், உத்தியோகத்தில் சற்று கவனமாக செயல்படுவது சிறப்பு. குரு, கேது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் சகலவிதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் சிறப்பான உடல்நலத்துடன் இருப்பதால் கடந்தகால வீண் செலவுகள் குறையும். உங்களுக்கு உள்ள அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து மன நிம்மதியான சூழ்நிலைகள் உண்டாகும். கடினமாக பணியைக்கூட எளிதில் செய்துமுடிக்கும் பலம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் கிடைக்கும்.
குடும்பம், பொருளாதார நிலை
இதுவரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகி ஒற்றுமையும் சந்தோஷமும் உண்டாகும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிய உறவினர்களும் தேடிவந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையானது உயர்ந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க விரும்புபவர்களின் எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி கைகூடும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் லாபம் காணக் கூடிய காலணிது. தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கல் நல்லமுறையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி திரும்பக் கிடைக்கும். அசையா சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள், தேவையற்ற வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். பெரிய மனிதர்கள்மூலம் எதிர்பாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். தொழிலாளர்களும் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் புதிதாக இணைவார்கள். தொழில், வியாபாரத்தைப் பல இடங்களில் விரிவுபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகம்
நீங்கள் சந்தித்து வந்த சோதனைகள், வீண் பழிச்சொற்கள் யாவும் விலகி எதிர்பாராத உயர்வினை அடைவீர்கள். மற்றவரை அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பு, பலரை வழிநடத்திச் செல்லக்கூடிய பதவிகள் உங்களைத் தேடிவரும். பதவி உயர்வுகள் உண்டாவதால் அதனுடன் ஊதிய உயர்வும் உண்டாகி பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ள முடியும். உங்கள் திறமைகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் செல்ல விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.
அரசியல்
மக்களுடைய ஆதரவுகளைப் பெற்று உயர்வடையக்கூடிய பொற்காலமாகும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் தேவையறிந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியாக செயல்படுவீர்கள். கட்சிப் பணிக்காக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைந்து லாபத்தினைப் பெறுவீர்கள். கடந்த கால சோதனைகளைத் தற்போது சாதனைகளாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் அதிகரிப்பதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகளை வாங்குவீர்கள். அரசுவழியில் மானிய உதவிகள் கிடைக்கும். பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி சுமுகமான நிலை ஏற்படும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும்.
கலைஞர்கள்
நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கக்கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பு அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது. அடிக்கடி படப்பிடிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வீடு, வாகனங் களை வாங்குவீர்கள்.
பெண்கள் நீண்டநாட்களாக இருந்த உடல் பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர பாக்கியம் அமைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொன், பொருள், ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமடையக் கூடிய காலமிது. முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு தேர்ச்சிகளைப் பெறுவீர்கள். பள்ளிக் கல்லூரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஊக்கமருந்தாக அமையும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டித் தேர்வுகளில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடையமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் நல்லது நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்கள் மூலம் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவீர்கள். கேது 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிட முடியும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். கடந்தகால நெருக்கடிகளும் வேலைப்பளுவும் குறையும். உங்கள்மீது இருந்த அவபெயர் விலகும். சக ஊழியர்கள் உதவி சிறப்பாக இருக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு லாப ஸ்தானமான 11-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகள் வழியில் இருந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நவீன பொருட்கள் வாங்கிச் சேர்ப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் சாதகப்பலன் கிட்டும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சனி 10-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் தொழில்ரீதியாக வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரித்தாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதுமூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபங்களை ஓரளவுக்கு அடைவீர்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் எடுத்த பணியை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளிநபர்களிடம் பேசும்போது குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு ஜென்ம ராசிக்கு 11-ல் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைத் தக்கநேரத்தில் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றா டப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடிவரும். கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் குறைந்து அடைய வேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக தொழிலை விருத்திசெய்ய வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு ஒரு புதிய வழி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறமுடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு நீண்டநாட்களாக இருந்த சம்பள பாக்கி கிடைத்து கடன்களை பைசல் செய்வீர்கள்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குரு ஜென்ம ராசிக்கு 11-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கவேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார்- உறவினர் களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் நற்பலனை அடையலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சக ஊழியர்கள்மூலம் ஆதாயம் அடைய முடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும்.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 12-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவதும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 8. நிறம்: வெண்மை, நீலம். கிழமை: வெள்ளி, சனி. கல்: வைரம். திசை: தென்கிழக்கு. தெய்வம்: விஷ்ணு, லக்ஷ்மி.
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
நல்ல அறிவாற்றலும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் வரும் 13-4-2022 முதல் 22-4-2023 வரை உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் தொழில், உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றாலும், சர்ப்ப கிரகமான ராகு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களையும், எதையும் எதிர்கொள்ளும் பலத்தையும் அடையமுடியும். 10-ல் குரு பதவி பாழ் என்பது பழமொழி. சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திகொண்டால் நற்பலனை அடையமுடியும். குரு தனது விசேஷ பார்வையாக 2, 4, 6-ஆம் வீடுகளைப் பார்ப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைத்து குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட முடியும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடந்த காலங்களில் நிலவிய தேவையற்ற அலைச்சல்கள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறையும். இதுவரை இருந்துவந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். சனி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ளவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது, முடிந்தவரை கடன் வாங்காமல்- இருக்கும் நிதிநிலையை வைத்து நிலைமையை சமாளிப்பது நல்லது. பொதுவாக அஷ்டமச்சனிக் காலத்தில் தேவையற்ற வழியில் கடன்கள் அதிகரிக்கும் என்பதால் உங்கள் கையிருப்பை மீறி பண விஷயத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருக்கும் காலங்களில் உங்கள் சிக்கல்கள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து பல்வேறு வளமான பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிலும் நீங்கள் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும் என்பதால் அவர்களை கவனமாகக் கையாள்வது நல்லது. தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையைச் சேர்த்துச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் ஒருசில மருத்துவச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உணவு விஷயங்களில் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் நன்றாக அமையும். புத்திரர்களால் சில நேரங்களில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வதை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அசையா சொத்து வகைகளில் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் சேமிப்புகள் சற்று குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட், ஷேர் போன்றவற்றில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படவும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருக்கவும். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை என்பதுபோல தேவையற்ற விரோதங்களை சம்பாதிப்பீர்கள். ராகுவின் சாதக சஞ்சாரத்தால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். 2023 முதல் உங்களுக்கு பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தொழில், வியாபாரம்
நிறைய நெருக்கடிகளை சந்திக்கவேண்டிய காலமிது. எடுக்கும் எந்தவொரு காரியங்களிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வேலையாட்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
உத்தியோகம்
பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் திறமைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்கவேண்டி வரும். சிலநேரங்களில் வீண்பழிகளைச் சுமக்க வேண்டி வரலாம். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று கூறமுடியாது. எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகக்கூடும். உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
அரசியல்
மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் நல்ல பதவி அடைவதற்கு அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்யவேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்வீர்கள். பத்திரிகை நண்பர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், இருக்கும் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். விளைபொருட்களுக்கு ஏற்ற விலையை சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அரசுவழியில் சிறுசிறு மானியத் தொகைகள் கிடைக்கும். பங்காளிகள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பனவரவுகளால் உங்கள் கடன்கள் குறையும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் சில காரணங்களால் கைமாறிப் போகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஜான் ஏறினால் முழம் சறுக்கும். ஆடம்பரமான செலவுகளைச் செய்யமுடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். கையில் இருக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாமல் காப்பாற்றிக் கொள்வதும், கௌரவம் பாராமல் எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவதும் நல்லது. வெளிநபர்களிடம் வீண்பேச்சைக் குறைக்கவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திரவழியில் ஒருசில மன சஞ்சலங்கள் உண்டாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பேசவேண்டாம்.
மாணவ- மாணவியர்
படிப்பில் சற்றே நாட்டம் குறையக்கூடிய காலம் என்பதால் முழு முயற்சி யுடன் கல்வியில் ஈடுபாடு காட்டுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் உங்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும். புதிய நட்புகள் மூலம் உங்களின் பொது அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும். திறனை வெளிகாட்டும் போட்டிகளில் வெற்றி கிட்டும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
ஜென்ம ராசிக்கு 10-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றா லும், தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மன நிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி சற்றுவிட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது, பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக் கொள்வது நல்லது. சக ஊழியர்கள் உதவியால் கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்க முடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். சனி 9-ல் 29-4-2022 முதல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கிய பாதிப்புகள் சற்று விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். வேலையாட்களை சற்று கவனமாகக் கையாள்வது நல்லது. ஒருசில வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்து ஆதாயம் கிடைக்கும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சரித்தாலும், 8-ல் சனி சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால், எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகள், வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்க மாக இருக்கும் என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப்பெற சற்று தாமதநிலை ஏற்படும். பணியில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதாலும், சனி 8-ல் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்துகொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ராகு 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, எதையும் சமாளித்து ஏற்றமடையும் யோகம் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது சிறப்பு. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சக ஊழியர்கள் உதவியால் உங்கள் வேலைப்பளு குறையும். சிறிது காலம் பொறுமையுடன் செயல்பட்டால் உயர்பதவிகளை அடையமுடியும்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருந்தால் நற்பலனை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் முன்னேற்றங் களை அடையமுடியும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துகொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும். தொழிலில் பொருட்தேக்கங்கள் விலகி நல்ல வளர்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. சனி பகவான் 17-1-2023 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீவேங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 8. நிறம்: பச்சை, வெள்ளை. கிழமை: புதன், வெள்ளி. கல்: மரகதம். திசை: வடக்கு. தெய்வம்: விஷ்ணு.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம்,ஆயில்யம்)
அழகான உடலமைப்பும், மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே, ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பாகும். இதனால் கடந்தகாலப் பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு மிகவும் சாதகமான பலனைப் பெறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களைப் பெறுவர். உங்களை வெறுத்து ஓடி ஒளிந்தவர்களும் உங்கள் அருமை பெருமைகளைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்ட வருவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாகக் குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம், பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் போன்றவை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்றால் கருத்து வேறுப்பாடுகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ முடியும். உடல் ஆரோக்கியரீதியாக சற்று அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க முடியும். மனைவி, பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சர்ப்ப கிரகமான ராகு 10-ஆம் வீட்டிலும், கேது 4-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. இதனால் சிறுசிறு பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்றாலும், குரு சாதகமாக சஞ்சரிப்பதால் பாதிப்புகள் இருக்காது. தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அமைப்பும், லாபங்கள் அதிகரிக்கும் யோகமும் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் இருந்த கெடுபிடிகள் விலகி நிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி ஆதாயம் அடைவீர்கள். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். நீண்டநாட்களாக நெருக்கடிகளை சந்தித்தவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஊதிய உயர்வைப் பெற்று வரும் நாட்களில் உங்கள் கடன்களை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையமுடியும். சனி திருக்கணிதப்படி அதிசாரமாக வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன்பிறகு முழுமையாக 17-1-2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு அஷ்டமச்சனி என்பதால், இக்காலங்களில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். நீண்டநாட்களாக உங்களைத் தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இவ்வளவு நாட்களாக மனதில் நிலவிக்கொண்டிருந்த சில பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
குடும்பம், பொருளாதார நிலை
கடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்பத் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடிவந்து ஒற்றுமைக்கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த நீண்ட நாள் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடையக்கூடிய காலமிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சிறப்பாக செயல்பட்டு உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் லாபத்தைப் பெருக்கிக் கொள்ளமுடியும். கைநழுவிய வாய்ப்புகளும் தேடிவருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி- முதலாளி என்ற பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை நிலவும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவேண்டிய காலமிது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண் பழிச்சொற்கள் விலகி எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடிவரும். பெயர், புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்
அரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலமிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்றுவிடுவீர்கள். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வதன் மூலமும் அரசுவழியில் ஆதாயங்களைப் பெறமுடியும். காய், கனி, பூ போன்றவற்றால் லாபம் கிட்டும். கால்நடைகளை வாங்கமுடியும். நிலங்கள்மீது இருந்த வம்பு வழக்குகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு, சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும், அதன்மூலம் நற்பலன்களும் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். புது வீடுக் கட்டிக் குடிபுகக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் இருந்துவந்த மந்த நிலைகள் விலகி ஞாபகசக்தி அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு தேடிவரும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உள்ள நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாகக் குறையும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். 4-ல் கேது சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஆன்மிக- தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடிவரும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் விலகி நல்ல நிலையை எட்டமுடியும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த கடந்தகாலப் பிரச்சினைகள் விலகி லாபத்தை அடையமுடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு சனியின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில், வியாபாரம் நல்லமுறையில் நடைபெற்று லாபத்தை அள்ளித் தரும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். கூட்டாளிகளால் சிறிது நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். ராகு 10-ல் உள்ளதால், உத்தியோகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிப்பதால் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற்று கடந்தகாலக் கடன்களை பைசல் செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாடப் பணிகளில் ஈடுபடுவதில் சற்று மந்தநிலை ஏற்படும். கேது 4-ல், சனி 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வாக்குவாதங்களால் நிம்மதிக் குறைவு உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை தவிர்க்கமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி, பொறாமைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரவழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கேது 4-ல், சனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர் களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலன்களை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டு உயர்பதவியை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை வரும் நாட்களில் அடையமுடியும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் கிடைக்கவேண்டிய லாபம் கிட்டும். தேவையற்ற தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023
குரு புதனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுத்து லாபங்களை காணமுடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக நடந்துகொள்வார்கள். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடிவரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைப்பளுவும் குறையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.
பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால், ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு. கிழமை: திங்கள், வியாழன். கல்: முத்து. திசை: வடகிழக்கு. தெய்வம்: வேங்கடாசலபதி.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குரு 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவில் சிறுசிறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள் என்றாலும், சனி 6-ல் ஆட்சி பெற்று 17-1-2023 வரை சஞ்சரிப்பதாலும், 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் தக்க நேரத்தில் வரவேண்டிய பணவரவுகள் கிடைத்து உங்கள் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட முடியும். குரு பகவான் தனது சிறப்புப் பார்வையாக 2, 4, 12-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பிறகு நற்பலன் கிடைக்கும். சிலருக்கு சொத்துகளைப் பராமரிப்பு செய்வற்காக சுபச்செலவுகள் செய்ய நேரிடும். சுகவாழ்வுக்குப் பஞ்சம் ஏற்படாது. புதிய வாகனங்கள், நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. ராகு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். தந்தை, தந்தை வழி உறவுகளிடைய சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சில நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் தனித்திறனுடன் செயல்படுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேலையாட்கள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதில் செய்துமுடிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். உங்கள்மீது இருந்த வீண் பழிச்சொற்கள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பணியை நீங்கள் எடுத்துச்செய்ய நேரிடும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தூரப் பயணங்களால் அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதனால் மன நிம்மதியும் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் எதையும் சமாளித்துவிட முடியும். வரும் 17-1-2023 முதல் சனி உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. சனி சாதகமாக சஞ்சரிப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மன நிம்மதியற்ற நிலை நீடிக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் வீண் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறைவு உண்டாகாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டிய காலமிது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனமாக செயல்பட்டால் அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வீண்செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமாக சுமுக தீர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
தொழில், வியாபாரம்
எடுக்கும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். அதிகமான உழைப்பினை மேற்கொண்டால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் போட்டி, பொறாமைகளை எளிதில் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையாட்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறமுடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு செய்யும் நோக்கங்களில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையில் சோர்வு உண்டாகி அடிக்கடி விடுப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் சிறு தடைக்குப் பின்பு கிடைக்கும்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நல்லது. மக்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தியாக இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக முயற்சிகளை எதிர்கொள்ள நேரிடும். பத்திரிகை செய்திகளாலும், தேவையற்ற வதந்திகளாலும் மன நிம்மதி குறையும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு தொடர்பான வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். விளைபொருளுக்கேற்ற விலை சற்று குறைவாக கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். பயிர்களை இன்சூரன்ஸ் செய்வது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் மானியங்கள் கிடைத்து ஆறுதல் அடைவீர்கள்.
கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் ஓரளவுக்குக் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகளால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். வரவேண்டிய பணத் தொகைகளும் சற்று தாமதப்படுவதால் சில நேரங்களில் கடன்வாங்க நேரிடும். உடனிருப்பவர்களிடம் பழகும்போதும், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் சற்று மனநிம்மதி குறையும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு அமைந்து குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். பிள்ளைகளால் மன சஞ்சலங்களையும் எதிர்கொள்வீர்கள். தங்களுடைய மனக்குறைகளைக்கூட தகுதியானவர்களிடம் மட்டும் பகிர்ந்துகொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று அதிக கவனம் எடுக்கவேண்டிய காலமாகும். மந்த நிலை, ஞாபகமறதி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாயக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றா லும் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களது ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் படிப்படியாக விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் சிறு தடைக்குப்பின் நிறைவேறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
ஜென்ம ராசிக்கு 8-ல் குரு சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால், ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் 3-ல் கேது, 7-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன், பொருளை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் சற்று தாமதங்களுக்குப் பிறகு கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முடிந்த வரை உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கேது 3-ல், சனி 6-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் பைசலாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடையமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திரவழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினைக் கொடுக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். தெய்வ தரிசனங் களுக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்களுக்கு வரவேண்டிய ஊதிய பாக்கிகள் கிடைத்து கடன்கள் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் சனி 6-ல், கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் தேவைக்கேற்ப தக்கநேரத்தில் பணவரவுகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். உற்றார்- உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவியிடையே உள்ள பிரச்சினைகள் முழுமையாக விலகி ஒற்றுமை நிலவும். வயது மூத்தவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாமல் இருந்தாலும் புதிய ஆர்டர்கள் கிடைத்து தன லாபத்தை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு கூடுதலாக இருக்கும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எதிலும் சிறப்பாக செயல்படமுடியும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற் கொள்வீர்கள்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குரு ஜென்ம ராசிக்கு 2, 11-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சிறுசிறு தடைகளை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி, வயிறு பாதிப்புகள் தோன்றலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். தற்போது உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்லநிலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தால் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையும்- அசையா சொத்துகள் மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 8-ல் சஞ்சரிப்பதால், குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய்தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள்நிறப் பூக்களை அணிவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு. கிழமை: ஞாயிறு, திங்கள். கல்: மாணிக்கம். திசை: கிழக்கு. தெய்வம்: சிவன்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
மென்மையான குணமும், அனைவரிடமும் இதமாகப் பழகும் ஆற்றலும் கொண்ட கன்னி ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றபடும் குருபகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ஆட்சிபெற்று சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் எளிதில் பூர்த்திசெய்ய முடியும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். கடன் பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதியுடன் இருக்கமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத் தும் கைகூடி தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 3, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறப் பாக இருந்து அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நினைத்த படி நிறைவேறும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மறைந்து போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான பண வரவை பெற்று லாபத்தை அடைய முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தக்கநேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். கூட்டாளிகள்மூலம் நற்பலன்களை அடைய முடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். நீண்டநாட்களாகத் தடைப்பட்டு வந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். சர்ப்ப கிரகமான ராகு 8-ஆம் வீட்டிலும், கேது 2-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். குறிப்பாக மனைவிவழி உறவினர்கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உடல்நிலை நன்றாக இருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, உணவு விஷத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துரீதியாக வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயத்தை அடையமுடியும். சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும் அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பென்பதால் உங்களுக்கு இக்காலங்களில் மிகவும் அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற் றம் ஏற்பட்டு நீங்கள் சமுதாயத்தில் உயர்வான நிலையை அடையமுடியும். கடன்கள் எல்லாம் குறைந்து நிம்மதியுடன் வாழமுடியும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த வம்பு, வழக்குகளில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அஜீரணக் கோளாறு, வயிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கடந்த காலங்களில் இருந்த வீண் மருத்துவ செலவுகள் தற்போது குறையும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். இருக்கும் கடன்கள் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை கவனமாகக் கையாள்வது நல்லது. பொன், பொருள் ஆடை, ஆபரணம் சேரும். நெருங்கியவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அவர்களால் அனுகூலங்களைப் பெறமுடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும். கொடுத்த கடன்கள் தக்கநேரத்தில் திரும்ப வரும். கடந்தகால வம்பு வழக்குகளில் சாதகப்பலன் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும்.
தொழில், வியாபாரம்
தொழி-ல் இருந்த போட்டிகள் குறைந்து நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்களின் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையமுடியும். தொழிலை விரிவுசெய்வதற்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் சற்று அலைச்சல், டென்ஷன்கள் அதிகரித்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களால் ஆதாயத்தை அடையமுடியும்.
உத்தியோகம்
பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருப்பர்களின் ஒத்துழைப்புகளும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். பணி நிமித்தமாக இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். உழைப்பிற்கான ஊதியத்தைப் பெறமுடியும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் குறைந்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடையமுடியும். பதவிக்கோ, மக்களின் ஆதரவுக்கோ குறை இருக்காது என்றாலும், கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். அலைச்சல் காரணமாக ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் திறம்பட செய்துமுடிக்க முடியும்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை அடையமுடியும். பொருளாதார மிகுதியால் பூமி, மனை வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப் பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும் விலகி ஒற்றுமை பலப்படும். வம்பு, வழக்குகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். கால்நடைகள்மூலம் ஆதயாங்களை அடைவீர்கள்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடிய வாய்ப்புகள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சில நேரங்களில் போட்டிகளும், பணவரவுகளில் நெருக்கடிகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிப்புகள் பெருகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையினை அடைய முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித் தொகைகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இருந்த மந்தநிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளைச் செய்வீர்கள்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு தனது சொந்த நட்சத்திரத்தில் 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால், உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரம் செய்வர்களுக்கு இருந்துவந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிட முடியும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலம் ஆதாயம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து கடந்தகால சோதனைகள் விலகும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான சனியின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். நல்ல வரன்களும் தேடிவரும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பும், சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் சிறப்பாக அமையும். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, பயணங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் தடையின்றிக் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். இடமாற்றத்தை விரும்பியவர்களுக்கு இனிய செய்தி கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் ராகு 8-ல் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றிவிட முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் கருத்து வேறுபாடுகள் குறையும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நவீன பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புத்திரவழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானபலனைப் பெறுவார்கள். தற்போது உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். தொழிலில் நல்ல லாபங்களை அடையமுடியும் என்றாலும் வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். சக ஊழியர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நற்பலன்களை வாரிவழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப் பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன்மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி ஆதாயம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மிகத் தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அலைச்சல், உடல் அசதி ஏற்படும் என்பதால் தேவையற்ற தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
உங்கள் ராசியாதிபதி புதனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், சனி 6-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றிகிட்டும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பு அமையும்.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைப் பயன் படுத்துவதும் நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 7, 8. நிறம்: பச்சை, நீலம். கிழமை: புதன், சனி. கல்: மரகதப் பச்சை. திசை: வடக்கு. தெய்வம்: மகாவிஷ்ணு.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். 6-ல் சஞ்சரிக்க உள்ள குரு தனது விசேஷப் பார்வையாக 2, 10, 12-ஆகிய வீடுகளை பார்வை செய்ய உள்ளார். உங்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, கையிருப்பைக் கொண்டு செலவு செய்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. சனிபகவான் உங்கள் ராசிக்கு 17-1-2023 முடிய 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டமச் சனி நடைபெறுவதாலும், கேது ஜென்ம ராசியில், ராகு 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. இயற்கை உணவுகளாக எடுத்துக்கொள்வதும் சிறப்பு. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன நிம்மதி குறைவுகள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின்பே நற்பலனை அடையமுடியும். அசையும்- அசையா சொத்துகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தற்போது இருக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் எதிலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலம் தொழிலில் ஒருசில ஆதாயங்களை அடைய முடியும். வேலையாட்கள்மூலம் வீண் பிரச்சினை ஏற்படும். சில நேரங்களில் நீங்களே நேரடியாக வேலை செய்தால் தான் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். பெரிய தொகைளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளியூர் தொடர்புகள்மூலம் சற்று அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது உத்தமம். தேவையற்ற அலைச்சல், வேலைப்பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு, ஓய்வுநேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்பதால், உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் குறைந்து நற்பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு செயலிலும் தற்போது நிதானமாக செயல்பட்டால் 2023 தொடக்கத்தில் நற்பலனை அடையமுடியும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகும். நேரத்திற்கு உணவு உட்கொள்வதன் மூலம் வயிறு கோளாறுகளைத் தவிர்க்கமுடியும். மனைவி, பிள்ளைகள் மூலம் வீண் மருத்துவச் செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், வம்பு, பிரச்சினைகள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே அடிக்கடி உண்டாகக்கூடிய வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடினமாக இருக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன்ஜாமின் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடலாம்.
தொழில், வியாபாரம்
தொழிலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் நிலவும். கூட்டாளிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் தாமதநிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எவ்வளவுதான் சோதனைகளை சந்தித்தாலும் எதையும் எதிர்கொண்டு லாபங்களைப் பெறக் கூடிய அளவிற்கு ஆற்றலையும் துணிவையும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உயரதிகாரிகளின் நெருக்கடி அதிகரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். சில நேரங்களில் வீண் பழிச் சொற்களும், பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திறமைகளை வெளிபடுத்த இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய உயர்வுகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்போது பயன்படுத்திக் கொள்ளவும்.
அரசியல்
பணவரவுகளுக்குத் தடைகள் நிலவினாலும் பதவிக்கு இடையூறு வராது. உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். கட்சிப் பணிகளுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். மறைமுக வருவாய்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் எதிலும் அதிக கவனம் தேவை. மக்களின் ஆதரவைப் பெற அவர் களின் தேவையறிந்து செயல்படுவது மிகவும் உத்தமம். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்களின் பலம் குறையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. சிறிது லாபத்தைக் காணவே நிறைய பாடுபட வேண்டியிருக்கும். கால்நடைகளாலும் வீண் விரயங்கள் உண்டாகும். அரசுவழியில் சுமாரான உதவியே கிடைக்கும். பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வாய்க்கால் வரப்புப் பிரச்சினைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதம் உண்டாகும். தேவைக்கேற்ற வேலை யாட்கள் கிடைக்காமல் நடக்கவேண்டிய வேலைகள் தடைப்படும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் தேவையற்ற பிடிவாதங்களைத் தளர்த்திக்கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே நல்லது. வரவேண்டிய சம்பள பாக்கிகளில் தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில நேரங்களில் மனசஞ்சலங்கள் உண்டாகக்கூடும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலைகள் ஏற்படக்கூடும் என்றாலும் விடாமுயற்சியுடன் பாடுபட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கமுடியும். வீணான பொழுதுபோக்குகள் உங்களின் மனநிலையை மாற்றுவதுடன் வீண் சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். தகுதிப் போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் நடந்துகொள்வது மிகவும் உத்தமம்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு தன் சொந்த நட்சத்திரத்தில் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், ஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்வதால் அவ்வளவாக சாதகப் பலன்களைப் பெறமுடியாது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும், உங்கள் ராசிக்கு சனி யோக காரகன் என்பதால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் தனித் திறமையால் எதிர்பார்க்கும் லாபங்களை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப்பளு காரணமாக மன அமைதி குறையும். வேலை தேடுபவர்கள் பெரிய வாய்ப்பை எதிர்பார்க்காமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு உங்கள் ஜென்ம ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், சனி 4-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்தநிலை தோன்றும் என்றா லும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளிவைப்பது உத்தமம். அசையா சொத்து வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் தடைப்பட்டுக்கொண்டிருந்த பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வேறு ஊருக்குச் சென்று பணிபுரிய நேரிடும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக இருந்து எதிலும் திறம்பட செயல்படமுடியும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவுகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கமுடியும். வெளியூர்மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் நெருக்கடிகள் குறையும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்காவிட்டாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
ஜென்ம ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 4, 5-க்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 4-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்வர்களாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகக் கூடும் என்பதால் விட்டுகொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர் களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகளால் சுபச்செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் தேவையற்றவகையில் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாது இருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் வேலையும் சேர்த்துச் செய்யவேண்டி இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் கடினமான பணியைக்கூட குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குருபகவான் புதன் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரித்தாலும், 5-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளைப் பெறும் ஆற்றல் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் 1, 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்க மாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிடமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய போட்டி, பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். வேலையாட்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மனநிம்மதி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் தொழீல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியும். உங்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கௌரவப் பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய்தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனி பகவான் 4-ல் 17-1-2023 முடிய சஞ்சரிக்க இருப்பதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீவேங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 7, 8. நிறம்: வெள்ளை, பச்சை. கிழமை: வெள்ளி, புதன். கல்: வைரம். திசை: தென்கிழக்கு. தெய்வம்: அஷ்டலக்ஷ்மி.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு சகலவிதத்திலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலங்களும் புத்திரவழியில் மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வந்தவர்களுக்கு உடம்பு பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி 3-ஆம் வீட்டில் 17-1-2023 முடிய சஞ்சரிப்பதும், ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறைந்து கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர் கள் ஆதரவாக செயல்படுவதால் மனநிம்மதி உண்டாகும். பகைவர்களும் நட்புக் கரம் நீட்டுவார்கள். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்குக் கிடைத்து பெரிய ஆர்டர்களையும் எளிதில் செய்து முடித்து லாபம் காணமுடியும். வங்கிமூலம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளைத் திறம்பட செய்துமுடித்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து தேவையற்ற அலைச்சல்கள் குறையும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் விலகி மன நிம்மதி ஏற்படும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும், 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் சிறப்பாக இருந்து பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்களின் தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு வாரிசு யோகம் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலமுடன் இருப்பதால் எல்லா பிரச்சினைகளும் விலகி மன நிம்மதி உண்டாகும். நீண்டநாட்களாக இருந்து வரும் ஆரோக்கிய பாதிப்பு படிப்படியாகக் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் படிப்படியாகக் குறையும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகள தாராளமாக இருந்து கடன்கள் குறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்க்கு நல்ல லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்க்கும் ஆதாயங்களைப் பெறமுடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்களைப் பெறமுடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரம்
செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் வரவேண்டிய வாய்ப்புகளும் லாபங்களும் தடையின்றி வந்து சேரும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பெரிய தொகைகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமானப் பலனை அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய பயணங்களால் நல்ல லாபங்களை அடைவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்தகால நெருக்கடிகள் யாவும் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவுகளும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கமுடியும். ஊதிய உயர்வுகளால் பொருளாதார நிலையானது உயரும். பணி நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலைப்பளு குறையும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
அரசியல்
தாங்கள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகள் தடையின்றிக் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். மறைமுக வருவாய்கள் அதிகரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பத்திரிகை நண்பர்களின் ஆதரவும், மக்களின் ஆதரவும் உங்கள் பெயர், புகழை உயர்த்தும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலமான பலனை பெறுவீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். காய், கனி போன்றவற்றால் சிறப்பான லாபத்தைப் பெற முடியும். வங்கிக் கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றிக் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஆடம்பர கார், வீடு, மனை போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் தடையின்றி கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களைப் பெறுவர். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டக்கூடிய அளவிற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராளமான பண நடமாட்டம் இருப்பதால் வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவுகளும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்குப் பணியில் உயர்வுகள் கிட்டும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல உயர்வினை அடையமுடியும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு அற்புதமாக இருப்பதால் மனநிறைவு உண்டாகும். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். நல்ல நண்பர்களின் நட்புகளால் சாதகமானப்பலன்கள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமானநிலை ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன்களை எளிதில் பைசல் செய்யமுடியும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் கடந்தகால பாதிப்புகள் விலகி மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். உற்றார்- உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். திறமை வாய்ந்த வேலையாட்கள் தொழிலுக்குக் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிச் சொற்கள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சம்பள பாக்கிகள் வரும் நாட்களில் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் குறையும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சாரம் செய்வதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்குவாதங்கள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார்- உறவினர் களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன்கள் உண்டாகும். புத்திரவழியில் சுபச்செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வேலைதேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். வெளியூர் வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு இடையூறுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என்றாலும், சனி 3-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. பொன், பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்தது செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலைதேடுபவர்கள் தற்போது கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல வேலைவாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குருபகவான் சனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், சனி 3-ல் ராகு 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்து நிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமுகநிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சனி 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் சிறந்தமுறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப் பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள். கிழமை: செவ்வாய், வியாழன்.கல்: பவளம். திசை: தெற்கு. தெய்வம்: முருகன்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும், பலரை வழிநடத்தும் திறனும் கொண்ட தனுசு ராசி நேயர்களே! ஆண்டுக்கோளான குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது நாள்வரை இருந்த முயற்சித் தடைகள் விலகி ஒருசில முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறைந்து படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். பொருளாதாரநிலை ஏற்ற இறக்க மாக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப் பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், அதன் பின்பு முழுமையாக 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனியால் பல இன்னல் களை எதிர்கொண்ட உங்களுக்கு இனி ஏழரைச்சனியின் தாக்கங்கள் படிப்படியாகக் குறைந்து நல்லது நடக்கும். உங்களுக்கு உள்ள கடன்கள் வரும் நாட்களில் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வளமான பலனை அடைய முடியும். சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் அதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துவழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவு, பிள்ளைகள் வழியில் தேவையற்ற கவலைகள் ஏற்படும் காலம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து நற்பலனை அடையமுடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் சிறு தடைகளுக்கு பின்பு நற்பலனை பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றா லும், அதனை உங்களின் தனித்திறமையால் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தி உழைத்தால் விரைவில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்கள் உழைப்பிற்கான பலனை அடைய சில இடையூறுகள் இருந்தாலும் வரும் 2023 முதல் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். பொருளாதாரநிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் படிப்படியாக உயரும். வேலை தேடுபவர்களுக்கு தற்போது சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் முழுத் திருப்தி இருக்காது. அதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துச் சென்றால் விரைவில் மிக பெரிய உயர்வை நீங்கள் அடையமுடியும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகைகளை மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தற்போது பாதிப்புகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன்கள் குறையும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உற்றார்- உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்க மாகத்தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் நல்லது நடக்கும். புத்திரர்களால் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துகளால் சுபச்செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் குறைந்து ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சுமாரான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைத்து விடும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் வரும் நாட்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் ஓரளவுக்கு உயர்வினை உண்டாக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் சிறு தடைக்குப் பின்பு நிறைவேறும். தொழில் போட்டி காரணமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். சிந்தித்து செயல்பட்டால் 2023 முதல் உங்கள் வாழ்வில் மிக பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகம்
பணியில் இதுவரை இருந்த கெடுபிடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும் நாட்களில் கிடைக்கும். சில நேரங்களில் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உயரதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை சரியாகிப் பயன்படுத்திக்கொண்டால் 2023 தொடக்கத்தில் உயர்வான நிலையை அடையமுடியும்.
அரசியல்
உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து நல்ல நிலையை அடைவீர்கள். மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தைப் பெறக்கூடிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது உத்தமம். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மறைமுக வருவாய் விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
விவசாயிகள்
விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பங்காளி களிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் விரைவில் உங்களுக்கு சாதகமான நல்ல தீர்ப்பு கிடைத்து நிம்மதி ஏற்படும். எதிலும் முனைப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். கால்நடைகளால் ஓரளவுக்கு நற்பலன்களை அடையமுடியும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது உத்தமம். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தாமதப்படும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பத்திரிகை நண்பர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவதும், தேவையற்ற கிசு கிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றா டப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடந்தகால கடன்கள் வரும் நாட்களில் குறையும். கணவன்லி மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவார்கள். மேற்படிப்புகாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடன் இருப்பது நல்லது.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற எதிர்நீச்சல் போட வேண்டும். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் வீண் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும் என்றாலும் உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும், சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு இடையூறுகளுக்குப் பிறகு நல்லது நடக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி பெரியதொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உங்கள் பணியில் மட்டும் சிந்தித்து செயல்பட்டால் நல்ல நிலையை அடையமுடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பதாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சுமாராக இருந்தாலும் அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்று கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கடந்தகால கவலைகள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துகளால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து எதிலும் முன்னேற்றத்தை அடையமுடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்லநிலையை எட்டலாம். கூட்டாளிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் கிடைத்து கடந்தகால கடன்கள் குறையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். கேது 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து, செல்வது, வயது மூத்தவர்களிடம் பேச்சைக் குறைப்பது நல்லது. ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் செயல்படுவது உடல் நலத்திற்கு நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறலாம். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். தற்போது சற்று முனைப்புடன் பணியாற்றினால் விரைவில் சிறப்பான நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைக் கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் தொடர்ந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் சம்பளம் சற்று குறைவாக இருக்கும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குருபகவான் சனி நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது சிறப்பு. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சனி 2-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், கேது 11-ல் இருப்பதால் எதையும் சமாளித்துவிட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று தேக்கநிலை இருந்தாலும் உங்களின் சுய முயற்சியால் போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். வேலையாட்களால் சிறிது நெருக்கடிகள் இருக்கும் என்பதால் நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் சற்று உழைத்தால் உயர்வை அடைய முடியும். தேவையற்ற பயணங்களைக் குறைத்து கொண்டால் அலைச்சலைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சக ஊழியர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சுலபமாக சமாளிக்க முடியும்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் சற்று அலைச்சல் ஏற்பட்டாலும் படிப்படியான வளர்ச்சியை அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச்சனி முடிந்து சனி 3-ல் சஞ்சரிப்பதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எளிதில் முன்னேறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மிக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் ஏற்பட்டாலும் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெறமுடியும். புதிய ஆர்டர்கள் கிடைத்து கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு பெரிய நிறுவனத் தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரைச்சனியில் பாதச்சனி 17-1-2023 முடிய நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது. வியாழக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவதும் நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: மஞ்சள், பச்சை. கிழமை: வியாழன், திங்கள். கல்: புஷ்பராகம். திசை: வடகிழக்கு. தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
அனைவரிடமும் அன்பாகப் பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே! இது வரை தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்த ஆண்டுக்கோளான குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களும், எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். இதுமட்டுமின்றி சனி உங்கள் ராசியிலும் 17-1-2023 முதல் 2-லும் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனி நடைபெறுகிறது. சர்ப்ப கிரகமான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் இக்காலங்களில் சஞ்சரிக்க உள்ளனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் தேவையற்ற செலவுகள் உண்டாகும். எதிர்பாராத மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற- இறக்கமான நிலை நிலவுவதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே சிரமப்பட வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படவில்லை என்றால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். குரு பார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர் கள் தக்கநேரத்தில் உதவி செய்வதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனைப் பெறமுடியும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, நேரத்திற்கு உணவு உண்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களைத் தற்போதிய காலத்திற்கு தவிர்ப்பது, அப்படி அவசியம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால், அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர் கள் பெயரில் செய்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. எந்த வேலை என்றாலும் நீங்களே நேரடியாக களத்தில் இருந்து செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். சில நேரங்களில் உங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் சென்றால் நீங்கள் எடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடிக்கமுடியும். வேலை தேடுபவர்கள் பெரிய வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்து இருக்காமல் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, நேரம் கிடைக்கும்போது உங்கள் கல்வித் திறனை மேன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவது எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தியபடியே இருக்கும். அன்றாடப் பணிகளைச் செய்து முடிப்பதில் மந்தநிலை ஏற்படும். மனைவி, பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அதிக வேலைப்பளுவால் அலைச்சல், உடல் அசதி ஏற்படும். எடுக்கும் காரியங்களில் தடையும், உடன்பிறப்பு களால் தேவையற்ற மனசஞ்சலங்களும் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனம் தேவை.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டாலும் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள்கூட சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அசையா சொத்துகளால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே கடன்வாங்க வேண்டியிருக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் இருப்போர் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டிய காலமிது. பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்ப தில் பல இடையூறுகளை சந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய ஆர்டர்கள் கைமாறிப் போகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஒருசில வாய்ப்புகள் வந்தாலும் குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவுசெய்வதில் இடையூறு ஏற்படும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் மனோ தைரியத்தால் அடையவேண்டிய இலக்கை அடைந்து வீடுவீர்கள்.
உத்தியோகம்
பணியில் இருப்பவர்கள் மிகவும் வளைந்து கொடுத்துச் செல்லவேண்டிய காலமாகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளைப் பிறர் தட்டிச் செல்வார்கள். இது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கும் உங்களைப் பொறுப்பேற்கச் செய்வார்கள். வீண் பழிச்சொற்கள் உங்களின் மன நிம்மதியைக் குறைக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையானது சோர்வடையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அதிக பாடுபட வேண்டிய இருக்கும். மக்களின் ஆதரவு குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுவதால் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இடையூறு ஏற்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். வயல் வேலைகளுக்கு சரியான வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமதநிலை ஏற்படும். நீர்மட்டம் குறைவு, அதிக காற்று, மண் வளமின்மை போன்றவற்றால் பயிர்கள் பாதிப்படையும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். விளைநிலங்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறு ஏற்படும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே காலத்தை நகர்த்தமுடியும். பிடிவாதம், முன்கோபம், அதிகார குணம் போன்ற அனைத்தையும் தவிர்த்து சக கலைஞர்களையும் அனுசரித்து நடப்பதே நல்லது. பத்திரிகை நண்பர்களை பகைத்துக்கொள்ளாமல் இருப்பது உத்தமம். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
பெண்கள்
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மாதவிடாய்க் கோளாறு, உடல் சோர்வு ஏற்படும். கணவர்வழி உறவுகளை அனுசரித்து நடந்தால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமையால் மற்றவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் சிலரிடம் நல்ல பெயரை எடுக்கமுடியாது. மனதில் உள்ள குறைகளைக் கூறுவதென்றால் கூட நம்பிக்கையான நபர்களிடம் கூறுவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு.
மாணவ- மாணவியர்
கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. மந்தநிலை, ஈடுபாடின்மை, தேவையற்ற பொழுதுபோக்கு மற்றும் நண்பர்களின் சகவாசங்கள் போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்று கவனம் தேவை.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும், உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகள் சிறு தடைக்குப் பின்பு கைகூடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும் என்றா லும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்காது.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3-ல் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசிக்கு 2-ல் சனி அதிசாரமாக சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மன வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டி வரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நேரமாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடன் பணிபுரிபவர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதியவேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதன்மூலம் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர் கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளிவைக்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறமுடியும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதால் சுக வாழ்வு பாதிப்படையும். நேரத்திற்கு உணவுண்ண முடியாத சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு நிம்மதி அளிக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் விரைவில் நல்லநிலை அடைய முடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குரு ஜென்ம ராசிக்கு 3-ல் சனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி வீண் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பதன்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை ஓரளவுக்கு அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் செய்யவேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக நடந்துகொள்வது நல்லது.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குரு புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உற்றார்- உறவினர்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் நடக்க விருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் என்றாலும், பணியில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாக் கோர்த்து அணிவிப்பது, வெண்முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய்தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும். ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சனேயரையும், வேங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவதும் நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 8. நிறம்: நீலம், பச்சை. கிழமை: சனி, புதன். கல்: நீலக்கல். திசை: மேற்கு. தெய்வம்: விநாயகர்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
மற்றவர்களுக்குத் தீங்குசெய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று கடமையே கன்னியமாய் செயலாற்றும் பண்புகொண்ட கும்ப ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சிபெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டுமல்லாமல் ராகு முயற்சி ஸ்தானமான 3-ல், கேது 9-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசியாதிபதி சனி வரும் 17-1-2023 முடிய 12-லும், அதன்பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது, மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்ளவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் குருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் எதிர்கொண்டு தெம்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள், நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் கடந்தகால நெருக்கடிகள் விலகும். தொழிலாளர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்த வேலைப்பளு குறைந்து எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொண்டு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டவர்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். நல்ல வாய்ப்புகள் கிடைத்து எதிலும் முனைப்புடன் செயல்படுவீர்கள் என்றாலும் தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது சற்று பொறுமை யுடன் செல்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற் கொள்வீர்கள்.
குடும்பம், பொருளாதாரநிலை
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடிவந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இருந்த கடுமையான நெருக்கடிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சற்று கவனமாக செயல்பட்டால் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்டநாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத் திற்கு உதவும்.
தொழில், வியாபாரம்
புதிய முயற்சிகள்மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகள் உங்களுக்குத் தகுந்த ஒத்துழைப்பினைத் தருவார்கள். வேலையாட்கள் தகுந்த நேரத்திற்குக் கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு பணிசுமையும் அதனால் அலைச்சலும் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர்மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமானப் பலனைப் பெறுவீர்கள்.
உத்தியோகம்
தங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாகச் செய்துமுடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமை களை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும், தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் அமையும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும்.
அரசியல்
கட்சியில் உங்களுக்குப் பெயர், புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு, மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினைப் பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை அடைவீர்கள். பத்திரிகை உங்களின் நற்செயல்களைப் பாராட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசுமூலம் உதவிகள் கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றை வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கூலியாட்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களைப் பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். உடல்நலத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது.
பெண்கள்
திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
மாணவ- மாணவியர்
கல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். உயர்படிப்பிற்கான வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
உங்கள் ராசிக்கு 2-ல் குரு தனது சொந்த நட்சத்திரத்தில் ஆட்சிபெற்று சஞ்சாரம் செய்வதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து நல்லமுன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகி அனுகூலங்களை அடையமுடியும். கூட்டாளிகள் ஆதரவாக நடப்பதால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவியாக இருப்பார்கள். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு சாதகப்பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த முடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதும், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நிதானமாக செயல்பட்டால் உங்கள் கடன்களைக் குறைத்து கொண்டு சேமிக்க முடியும் புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வங்கிமூலம் நீங்கள் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைத்து தொழிலை மேன்படுத்தமுடியும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். புதியவேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழமுடியும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும், ஏழரைச்சனி நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய தாமதநிலை ஏற்படும். சர்ப்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பான நிலையில் இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்து வந்த கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். உங்கள்மீது இருந்த வீண் பழிச்சொற்கள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். சர்ப்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். ஏழரைச்சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை, கை, கால் அசதி, சோர்வு போன்றவை ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடையமுடியும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் தொழிலை விரிவுபடுத்த முடியும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன நிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் அதன்மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும்.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 2-ல் புதனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துகளால் கிடைக்கவேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதார நிலை உயர்வடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். ஏழரைச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாக செய்யமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழிலில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். வேலையாட்கள் உதவியாக இருப்பதால் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய ஆர்டர்கள் கிடைத்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதியவேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் வேங்கடாசலபதியை வழிபடுவதாலும், அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமேற்றுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 5, 6, 8. கிழமை: வெள்ளி, சனி. திசை: மேற்கு. கல்: நீலக்கல். நிறம்: வெள்ளை, நீலம். தெய்வம்: ஐயப்பன்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குரு பகவான் 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு இருந்த வீண் செலவுகள் குறைந்து படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து அன்றாட செலவுகளை எளிதில் சமாளிக்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க உள்ள குரு 5, 7, 9 -ஆம் வீடுகளைப் பார்ப்பதால் பிள்ளைகள்மூலம் அனுகூலம், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்லது நடக்கும் வாய்ப்பு வரும் நாட்களில் உண்டு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சர்ப்ப கிரகங்களான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றா லும், குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக இருப்பது சிறப்பு. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதுப் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி 17-1-2023 வரை சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெற்று உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செய்யும் தொழிலில் இருந்த தேக்கநிலை மாறி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். போட்டி பொறாமை களை சமாளித்து உங்களின் தனித்திறனால் ஏற்றங்களைப் பெறக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலையை அடையும் வாய்ப்பு உண்டு. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் லாபகரமான பலன்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்றமான நிலை உண்டாகும். உங்களின் உழைப்பிற்கான பலனை வரும் நாட்களில் அடைவீர்கள். உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். 17-1-2023 முதல் திருக்கணிதப்படி சனி 12-ல் சஞ்சரிப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால் அக்காலத்தில் எதிலும் சிக்கனமாக இருப்பது, உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உன்பது நல்லது. சில நேரங்களில் நிதானம் இல்லாமல் செயல்பட்டு வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் நேரம் என்பதால் எதைச் செய்வது என்றா லும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்போது சற்று கவனமாகச் செல்வது நல்லது.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. சில நேரங்களில் வீண் வாக்குவாதங்களால் நிம்மதிக் குறைவு ஏற்படும். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றிக்கொள்ள எதிர்நீச்சல் போடவேண்டி இருக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனைப் பெற முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை கிடைக்கும். கொடுத்த பணத்தை திருப்பிகேட்டால் பலபேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளிவட்டார நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.
தொழில், வியாபாசிரம்
தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனால் ஆதாயம் சற்று குறைவாக இருக்கும். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைத்து நிலைமையை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.
உத்தியோகம்
பணியில் படிப்படியான வளர்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமை களுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெறமுடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் தாமதமாகும்.
அரசியல்
மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய வேண்டியிருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் சமுதாயத்தில் நல்ல நிலையை எட்டமுடியும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்கக் கூடும் என்பதால் இருக்கும் சொத்துகளுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாமல் செயல்படவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
விவசாயிகள்
புழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக அமைந்து லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெறமுடியும். பொருளாதார நிலையில் சற்று ஏற்ற- தாழ்வுகள் இருக்கும் என்றாலும் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும், இருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்து கொள்ள அதிக நேரம் உழைக்கவேண்டி இருக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாக வரும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எடுத்த பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறக்கச் செய்யும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறுக் கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்றக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் சற்று கவனம்செலுத்த வேண்டிய காலமாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாயக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயில்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெறமுடியும்.
குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 13-4-2022 முதல் 28-4-2022 வரை
உங்கள் ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியில் சுய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள், அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். இயற்கை உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். கடந்தகால தேக்கநிலை விலகி நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்கள் தகுதிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் முடிந்த வரை அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்துவிடுவது நல்லது. வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 29-4-2022 முதல் 28-7-2022 வரை
குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும், 12-ல் சனி, 2-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால், இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்த்து விடுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால், முடிந்தவரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக, கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எடுத்த பணியை தக்கநேரத்தில் முடிக்கமுடியும்.
குரு பகவான் வக்ரகதியில் 29-7-2022 முதல் 23-11-2022 வரை
குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது உத்தமம். சனி 11-ல் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் அசையும்- அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்கநிலை விலகி ஒருசில அனுகூலங்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று தேக்கநிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காணமுடியும். தகுதியான வேலையாட்கள் தொழிலுக்குக் கிடைப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.
குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 24-11-2022 முதல் 24-2-2023 வரை
குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், 2-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு, மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சனி 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகள் இருந்தாலும் பொருட் தேக்கம் இல்லாமல் அடைய வேண்டிய லாபத்தை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களில் சற்று கவனத்துடன் செல்வது நல்லது.
குரு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை
குருபகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடையமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்- உறவினர்களும் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுக்கும்போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். இருக்கும் வாய்ப்புகளைத் தவறாது பயன்படுத்திக்கொண்டால் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தூரப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டைக் கடலை மாலை சாற்றுவது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது, மஞ்சள்நிறப் பூக்களை சூடிக் கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் சண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது. கேதுவுக்குப் பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. கிழமை: வியாழன், ஞாயிறு. திசை: வடகிழக்கு. கல்: புஷ்ப ராகம். நிறம்: மஞ்சள், சிவப்பு. தெய்வம்: தட்சிணாமூர்த்தி.