வத்திராயிருப்பு ரோட்டடி தெருவில் அமைந்துள்ள கிராமத்து தெய்வம் அய்யனார் சுவாமியை குலதெய்வமாக வழிபட்டுவரும் திருமதி. புவனா செல்வராஜ் அந்த அற்புதமான அய்யனார் அருளால் தான் புரிந்துவரும் சாதனைகளை பற்றி இங்கே விளக்குகிறார்.
கர்ப்பகால யோகா பயிற்றுனர். கர்ப்பகால யோகா செய்வதால் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேலும் பிரசவ காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, கைலி கால் வீக்கம், தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு கொள்ளலாம்.
கர்ப்பகால யோகா பயிற்சிமூலம் சுகபிரசவ வாய்ப்பு மட்டுமின்றி உடல் எடை சீராக இருத்தல், குழந்தைக்கும் அம்மாவிற்குமான நெருக்கம் அதிகரிக்கிறது.
கர்ப்பகால யோகாவிற்கும் சர்ழ்ம்ஹப் யோகாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
குழந்தையை சுகபிரசவமாக பெற்றெடுப்பது மட்டுமல்லாமல் குழந்தை பிறந்த பிறகும்கூட குழந்தை பெற்றதற்கான பாதிப்பு எதுவும் இல்லாமல் வாழ வழிவகை செய்துள்ளார்.
புவனா செல்வராஜ் அளித்துள்ள பயிற்சியின் மூலமாக சுமார் 75 சதவிகித வெற்றியையும் பெற்றுள்ளார்.
மேலும் குழந்தைப் பேறை எளிதாக்கும் பர்த் பால் (இண்ழ்ற்ட் இஹப்ப்) பயன்படுத்தி சில பயிற்சிகளைச் செய்யலாம்.
முடிந்த அளவு கீழே உட்கார்ந்து எழுந்திருக்கவேண்டும். மாடி படி ஏறி- இறங்கவேண்டும்.
யோகா பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் வலி அல்லது மாற்றங்கள் குறித்து டிரைனரிடம் உடனடியாக விவாதித்து தேவையான உதவிகளை பெறவேண்டும். முக்கியமானது அத்துடன் மருத்துவர் ஆலோசனையும் அடிக்கடி பெற்று அதன்படி நடக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சி செய்யும் போது மிகவும் கவனம்தேவை. மூச்சை அடக்கக் கூடாது. ஏனென் றால் குழந்தைக்கும் தாய்க்கும் தொப்புள் கொடிமூலம் சுவாச பரிமாற்றம் நடக்கிறது.
சரியாக மூச்சுப் பயிற்சி செய்தால் பிரசவத்தின்போது குழந்தை வெளியில் வரும். வலி தாய்க்கு சுலபமாக இருக்கும். தாய்க்கும் வலி தெரியாது. பிறந்த குழந்தைக்கு சுவாசம் சீராக இருக்கும்.
முதல் பிரசவத்தில் சிசேரியன் செய்திருந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்குபின்பு சரியான முறையில் யோகா பயிற்சி செய்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். குழந்தை பெற்றெடுக்கும்போது பிரசவ அறைக் குள் கணவனும் உள்ளே இருந்தால் மனைவிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மனைவியின் கை, கால்களை பிடித்துவிடுவது, வலி ஏற்படும் பகுதிகளில் மசாஜ் செய்வது மிகவும் ஆறுதலாகவும் சுக பிரசவம் ஏற்படவும் வாய்ப்பாக இருக்கும். அதற்காக இவருடைய வகுப்பில் ஆண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்.
யோகா பயிற்சியை விரிவுபடுத்தி நிறைய பெண்களுக்கு கற்றுத்தர வேண்டும். பெண்கள் சுகப்பிரசவம் பெறவும், பிரசவத் திற்கு ஆரோக்கிய மான வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் திருமதி. புவனா செல்வராஜ் அவர்களின் முக்கிய நோக்க மாக இருக்கிறது.
இவர் அரசு சுகாதார மையங்களில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக யோகா பயிற்சி அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
திருமதி. புவனா செல்வராஜ் தொடர்புக்கு: 96888 18483
insta@prenatal Bhuvana