மது வாழ்வில் ஏற்படும் இன்பமும் துன்பமும் நமது செயல் வினைகளின் விளைவுகள் மற்றும் நம் பெற்றோர் செய்த செயல் விளைவுகளன்றி அதற்கு வேறு யாரும் பொறுப்பாளிகளாக முடியாது. பெரும்பாலும் நாம் துன்பத்தை அனுபவிக்கும் சமயம் அத்தகைய துன்பத்திற்கான காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவ விளைவுகள் என்ற எண்ணத்தால் வருந்தியும், அவற்றிலிருந்து விடுபட எண்ணி பல பரிகாரங்கள் செய்து வருகிறோம். நாம் வாழும் காலத்தில் இறந்த காலத்தை எண்ணி வருந்தாமலும், எதிர்காலத்தை எண்ணிக் கலங்காமலும், நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதையே அனைத்து மகான்களும் நமக்கு உபதேசமாகக் கூறியுள்ளனர். அறிவதற்குச் சாத்தியமற்ற முற்பிறவியையோ, வரும் நிச்சயமற்ற மறுபிறவியை மட்டும் எதற்காக கருத்தில்கொண்டு, நாம் தற்சமயம் வாழும் இப்பிறவியில் வருந்தவேண்டும். நாம் நினைப் பதுபோல் அது முற்பிறவியில் செய்த பாவம் என்பது அல்ல, நமது முற்பிறவி கள் செய்த பாவம் என்பதே உண்மை. அதனுடன் இப் பிறவியில் நாம் செய்யும் பாவ- புண்ணியங்களின் விளைவுகளும் இணைந்து கொள் கின்றன. நாம் செய்யும் வினைகளுக்கேற்ப நல்வினை இன்பத்தையும் தீவினை துன்பத்தை யும் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் தருகிறது என்பதே மறுக்கமுடியாத பிரபஞ்ச விதியாகும்.

இவ்விதியையே நாம் கர்மா என்று சொல்கிறோம். அத்தகைய கர்மவிதியை இரண்டு உண்மைச் சம்பவங்கள் நமக்குப் பாடமாக உணர்ந்துகிறது.

ss

உண்மைச் சம்பவம்-1

பூமராங் என்ற ஆயுதம் அதை செலுத்திய வர் கைகளுக்கே திரும்ப வரும் சக்தியுடையது. அதைப்போல் நாம் செய்த வினைகளுக்கான விளைவு நம்மிடமே திரும்ப வந்துசேரும் என்ற கர்மவிதியை இச்சம்பவம் தெள்ளத்தெளிவாக எடுத் துரைத்து நம் மனதிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைகிறது.

Advertisment

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தனது சொந்தத் தயாரிப்பில் ஒரு திரைப்படம் எடுக்க விரும்பி, "கவலை இல்லாத மனிதன்' என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து தனது சொத்துகள் பல வற்றை விற்றும், அடமானம் வைத் தும் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அத் திரைப்படத்தில் நடிகர் சந்திர பாபுவை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் பெற்றுக்கொண்டார். சில நாட்கள் முறையாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்திரபாபு நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல், தாமதமாக வருதல் மற்றும் பல நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதுமாக இருந்துள்ளார். இதனால் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் அதிக பணம் நட்டம் ஏற்படுவதை அறிந்து, நடிகர் சந்திரபாபுவை நேரில்சென்று கேட்டுவிடலாம் என்று எண்ணி நடிகரின் இல்லத்திற்கே சென்றுவிட்டாராம். கவிஞர் முன்பக்கம் வருவதை அறிந்த நடிகர் வீட்டின் பின்வாசல் வழியாக வெளியே சென்றுவிட்டாராம். ஒருவழியாக பெரும் சிரமத்துடன் அத்திரைப்படத்தை நிறைவு செய்து 1960-ல் வெளியிட்டார். ஆனால் அத்திரைப்படம் கவியரசருக்கு பெரும் நட்டத்தையே ஏற்படுத்தியது. கவியரசர் அவர்கள் "கவலை இல்லாத மனிதன் என்று படம் எடுத்து கவலை உள்ள மனிதனாகி விட்டேன்' என்று சக நண்பர்களிடம் கூறியுள்ளார். நடிகர் சந்திரபாபு அவர்கள்தான் அந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்பதை திரைத்துறை அறியும்.

அவருடைய இல்லம் மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருக்குமாம். அவரது கார், வீட்டின் மேல் தளத்தில் நிற்கும்விதமாக அவரது இல்லத்தை மிக பிரம்மாண்டமாகக் கட்டியிருந்தாராம். நடிகர் சந்திர பாபுவின் மனதில் தானும் ஒரு சொந்தத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நடிகர் சந்திரபாபு அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தனது பிரம்மாண்ட இல்லத்தை அடமானம் வைத்து "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப் படத்திற்கு பூஜை போட்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் நடித்துவிட்டு அடுத்து படப்பிடிப்பிற்கே வரவில்லை. நடிகர் சந்திரபாபு அவர்களும் பண நெருக்கடிக்கு ஆளானார். எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் சந்தித்து தன் சூழ்நிலையை எடுத்துக்கூறலாம் என்று எண்ணி, எம்.ஜி.ஆர். அவர்களின் இல்லம் சென்றுள்ளார். அங்கு எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் எம்.ஜி. சக்கர பாணி அவர்களுடன் ஏற்பட்ட தகராறில் இனி எம்.ஜி.ஆர் இப்படத்தில் நடிக்கமாட்டார் என்று கூறிவிட்டார். எனவே அத்திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்க முடியாததால் தனது மாடிவீட்டை விற்கும் நிலைக்கு வந்து படத் தலைப்பிற்கேற்றவாறு ஏழையானார். நடிகர் சந்திரபாபு அவர்கள் அத்தருணத்தில் "தான் கவியரசருக்குச் செய்தது. எம்.ஜி.ஆர் மூலமாகத் தனக்கே திரும்ப வந்தது'' என்பதை உணர்ந்தார். ஒரு பத்திரிகையில் அவரே இதைக் கூறி தன் தவறை உணர்ந்து கவியரசரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். எனவே நாம் எதைப் பிறருக்குத் தருகிறோமோ அதையே இப்பிரபஞ்சம் நமக்குத் தரும் என்ற (கர்ம) விதியை உணர்ந்து பிறருக்கு நன்மை செய்கிறோமோ இல்லையோ- தீமை செய்யாமல் இருப்பதே நம் வாழ்வின் இன்பத்திற்குப போதுமானது.

ss

Advertisment

உண்மைச் சம்பவம்-2

பெற்றோர்கள் சேர்த்து வைத்திருக் கும் சொத்துகளை நாம் பெற விரும்பா விட்டால் நிராகரித்து விடலாம். ஆனால் அவர்கள் மூலமாக நமக்கு வரும் மரபுவழி நோயை நம்மால் நிராகரிக்க முடியாது. அதுபோல நம் பெற்றோர்கள் செய்த பாவ- புண்ணிய விளைவுகள் நாம் விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடையும். ஒரு பெண் ஏதோ ஒரு குடும்பச் சூழல் காரணமாக தனது கணவனுடன் வாழாமல் வந்ததை குற்றமெனச் சுட்டிக்காட்டி அப்பெண்ணின் தாயார் மனம் நோகும்படியாக கடுமை யான வார்த்தைகளைக் கூறிவிட்டார் மற்றொரு பெண்மணி. காலங்கள் உருண்டோடியது. இந்நிகழ்வு நடந்து இருபத்தி ஐந்தாண்டு காலம் கழிந்து குற்றம் சாட்டிய பெண்மணியின் மகள் குடும்பச் சூழல் காரணமாக அவளது கணவனைப் பிரிந்து தாய் வீடு வரும் நிலையைப் பிரபஞ்சம் தந்தது. மகளின் நிலையை எண்ணி அப்பெண்ணின் தாயார் மனம் வருந்தியதோடு, எந்தத் தவறும் செய்யாத அவரின் மகளும் மனம் வருந்தும் நிலை வந்தது. இதுவே முற்பிறவிகள் செய்த செயல் விளைவுத் தத்துவம் ஆகும். நாமோ அறியாமையால் நமது முற்பிறவி பாவம் என்று கருதி பல பரிகாரங்கள் செய்துவருகிறோம். எனவே நாமும், நமது பிள்ளைகளும் பரிகாரம் தேடி அலையாமல் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் "தீதும் நன்றும் பிறர் தர வாரா'' என்ற கனியன் பூங்குன்றனாரின் அறிவுரையைக் கருத்தில் கொண்டு நமது எண்ணம், சொல், செயலால் பிறருடைய மனம் கடுகளவேணும் வருந்தச் செய்யாத அறவாழ்க்கை வாழவேண்டும்.

இயற்கையின் நம்பிக்கை

ஒரு பணியை நாம் ஒருவரிடம் ஒப்படைக்கும்பொழுது, அந்தப் பணியை அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவர்களிடம் முழு மனதுடன் ஒப்படைப்போம். அதுபோல் இயற்கையும் பெண்கள்மேல் நம்பிக்கை வைத்து தாய்மை அடையும் பொறுப்பை வழங்கியது. "பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. இக்காலப் பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணத்திற்குப்பிறகு சில பெண்கள் தங்களை முற்போக்கு பெண்களாகக் கருதிக்கொண்டு "நாங்கள் பிள்ளை பெறும் இயந்திரமல்ல'' என்று கூறும் வார்த்தைகளும், தங்கள் மனதிற்குத் தகுந்த ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பிறந்து பால் மனம் மாறாத குழந்தையை குழந்தை கள் பராமரிப்பு வகுப்புகளில் சேர்த்து விடுவதும், குழந்தைகளைப் பராமரிக்க ஆள் அமர்த்திவிட்டு, தாங்களும் ஆண்களுக் குச் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணத் தில் பணிக்குச் செல்வதாலும், இல்லற பந்தத்தில் இணைந்த தம்பதிகள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்தல் என்ற புனிதமான நிகழ்வை தோல்வியாகக் கருதி சில நாட்களுக்குள் தங்களுக்குள் உள்ள பந்தத்தை முறிக்க முன்வருவதுமாகிய அதிக அளவிலான நிகழ்வுகளால் இயற்கைக்கு தற்கால தம்பதிகளிடமும், புதுமைப் பெண்களிடமும் உள்ள நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. அதனால்தான் தற்சமயம் குழந்தையின்மையால் பல தம்பதிகள் மனம் வருந்தும் சூழல்பெருகிவருகிறது.

ஒரு கோவிலில் வரிசையாக அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவ்விடத்தில் யாரோ ஒருவர் சிறு குளறுபடி செய்து அதனால் சர்ச்சை ஏற்பட்டால், சில நிமிடங்கள் பிரசாதம் கொடுக்கும் பணிநிறுத்திவைக்கப்பட்டு, அங்கு மீண்டும் அமைதி நிலவிய பிறகே அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். முறையாக வரிசையாக நிற்பவர்களாலும் அச்சமயம் பிரசாதம் பெறமுடிவதில்லை. அதுபோல பல பெண்களும், பல தம்பதிகளும், வாழ்க்கையில் ஏற்படுத்தும் குழப்பங்களை கணக்கில்கொண்டே இயற்கை மனிதர்களைப் படைக்கும் பணியை சற்று நிதானமாக செய்துவருகிறதுபோல் தோன்றுகிறது. எனவேதான் மனமொத்த தம்பதிகள் பலரும் குழந்தை யின்மையால் மனம் வருந்தும் சூழலில் உள்ளனர். இதன்காரணமாக தற்சமயம் பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு நம் கையில்தான் உள்ளது. எனவே நாம் அனைவரும் இயற்கை நமக்குக் கொடுத்த பணியை முழுமனதுடன் மகிழ்ச்சியாகச் செய்து இல்லறத்தை நல்லமறமாகக் கருதி நமது கடமையை சரிவரச் செய்தால் மட்டுமே மீண்டும் இயற்கைக்கு நம்மிடம் நம்பிக்கை வரும்; சிந்திப்போம்.