கோயம்புத்தூர் சூலூர் ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் சாம்ராஜ்ஜியப் பேரரசராக, பளிச்சிடும் வெள்ளை, வேஷ்டி சட்டை, தெய்வீகத் தோற்றத்துடன் எண்பதிற்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பாலிடெக்னிக் முதல் பல்மருத்துவக் கல்லூரி, ஆர்கிடெக்ட், இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஏராளமான கல்வி, விவசாய, பக்தி, சமூக சேவைகளுடன், பல ஆசிரியப் பெருமக்கள், பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புத் தந்து, ஏராளமான மாணவ- மாணவிகளுக்கு தரமான கல்வி, வேலை வாய்ப்புகள் வழங்கி, 1983-ம் ஆண்டுமுதல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நற்கல்வி சேவை செய்து வரும் "கல்வித்தந்தையும்' "யஒஓஆவஆ நஐதஊஊ' போன்ற ஏராளமான சிறப்புப் பட்டங்கள், கௌரவ விருதுகள் வாங்கிக் குவித்திருக்கும் சேர்மன் டாக்டர். க.வி.குப்புசாமி ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடியோம். ஆர்.வி.எஸ் கல்வி சாம்ராஜ்ஜிய மன்னராக அவர் திகழ்வதைப் பார்த்து நாமும் பிரமித்தோம்.

tt

எண்பது வயது தாண்டியும் தினமும் தவறாமல், தளராமல் தனது பெரிய திருக்கோவில்போல் மின் ஒளியில் பிரகாசிக்கும் சேர்மன் அறைக்கு வந்து, சிறு வயதிலேயே காலமாகிவிட்ட மகன் ஆர்.வி.எஸ் என்ற ரத்தினவேல் சுப்பிரமணியம் மற்றும், சமீபத்தில் காலமான மனைவி பத்மாவதி அம்மையார் உருவச் சிலைகள் மற்றும் அனைத்து தெய்வச் சிலைகளுக்கும் தீபாராதனை காட்டி வணங்கிவிட்டு, அவரைச் சந்திக்க அமர்ந்திருக்கும் விஐபி பிரமுகர் களை சற்று காத்திருக்கும்படி கூறிவிட்டு, அவரது நீண்ட நெடிய தெய்வீகப் பணிகள் பற்றிய விவரங்களை "ஓம் சரவணபவ' வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"நான் சிறுவயது முதலே தெய்வ நம்பிக்கையுடனும், ஆன்மிகப் பற்றுடனும் தான் வளர்ந்தேன். நான் பிறந்த முதலிப் பாளையைம் அவினாசி ரோட்டிற்குப் பக்கத்தில் உள்ளது. தாத்தா மாரப்ப செட்டியார் வீட்டில் நான் பிறந்தேன்.

Advertisment

பாட்டி பெயர் காளிம்மாள். எங்கள் குல தெய்வம் கொங்கல் அம்மன், ஈரோட்டில் உள்ளது. எனது குலதெய்வக் கோவிலுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து வருடந்தோறும் இந்தக் கோவிலின் தேரோட்டத்தையும் நான் நடத்திவருகிறேன். பரம்பரை பரம்பரையாக இந்த ஈரோடு கொங்கல் அம்மனை வழிபட்டு, கடின உழைப்பால் உயர்ந்து, இன்று பல சிகரங்களைத் தொட்டு கல்விப் பணியோடு, ஏராளமான தெய்வீகக் கோவில்களுக்கான தொண்டுகளையும், நாங்கள் செய்து வருகிறோம்.

எங்கள் ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களுக்கு, ஆன்மிகப் பெரியோர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், பக்தி சொற்பொழிவாளர்கள், சித்தர்கள் எனப் பலரும் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்றிருக்கிறார்கள் இன்றும் பல ஊர்களின் தெய்வீகத் திருப்பணிகளையும் ஏழை, எளியோருக்கு தேவைப்படும் உதவிகளையும் எங்களால் இயன்ற அளவு செய்தும் வருகிறோம்.

இந்தக் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் சூலூர் திருப்பதி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீ வேங்கடாஜலபதி திருக்கோவில், அறுபடை முருகன் திருக்கோவில், பகவதி அம்மன் திருக்கோவில் அமைத்து இருக்கிறோம்.

Advertisment

நாள்தோறும் தவறாமல் வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

எனது இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருளாலும், எல்லா தெய்வங்களின் அருளாலும் அனைத்து பணப் பிரச்சினைகüல் இருந்தும் மீண்டு, வந்திருக்கிறேன். உடல்நலன் மிகவும் பாதிப்பு அடைந்து பிழைக்க வாய்ப்பே இல்லையென்ற நிலையில் உயிர் பிழைத்து இப்போது 84 வயதிலும் தெம்புடன் நான் செயல்படுவதற்கு தெய்வ அருள்தான் முக்கியக் காரணம் என்று உறுதியாகக்கூறுவேன்.

tt

என்னைப் புகழ் ஏணியின் உச்சியில் ஜொலிக்க வைத்து, எனது உயிருக்கு எத்தனை ஆபத்தான நிலை வந்தாலும் என்னைக் காப்பாற்றி வாழ வைத்துவரும் மகத்தான மாபெரும் சக்தியின் வடிவங்களாக சிறுவயதில் காலமான என் மகன் இரத்தினவேல் சுப்பிரமணியம், மனைவி பத்மாவதி ஆகிய இருவரையும் கருதுகிறேன். அவர்கள் அணையாத ஜோதிகளாக என் இதயத்தில் இருக்கிறார்கள்.'

ஒரு பெரிய பணச் சிக்கலில் சிக்கித் தவித்து, மன வேதனையோடு காரில் வந்துகொண்டிருந்தபோது முருகன் எனக்குப் பெரிய பாம்பு வடிவில் வந்து நடுரோட்டில் காட்சிதந்து, கருணை மழை பொழிந்து என் சிக்கலைத் தீர்த்து வைத்ததை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்த்துப் போய்விடுவேன் நான்.

அவரின் பக்தி அனுபவங்கள் நம்மையும் சிலிர்க்க வைத்தது.

நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழும் ஆர்.வி.எஸ் கல்வி சாம்ராஜ்ய சேர்மன் "விஜயஸ்ரீ' டாக்டர் கே.வி. குப்புசாமி அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், ஐஸ்வர்யமுடனும் வாழ்ந்து கல்விப்பணி, தெய்வீகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய அனைத்து ஆண்டவன் அருளையும் வேண்டி விடை பெற்றோம்.

-பேட்டி, படங்கள்: விஜயாகண்ணன்

தொடர்புக்கு: 88257 29455