அவள் இளம்பெண். புத்தபிரான்மீது பெருமதிப்பு கொண்டவள். புத்தர் அந்த மடத்தில் தங்கியிருக்கும்போது மக்களுக்கு உபதேசம் செய்வார். அந்த உபதேசத்தை தினசரி சென்று கேட்பாள். அதனை முடிந்தவரை தன் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் செய்வாள்.
ஆயினும் அந்த இளம்பெண் மிக அழகாக இருந்ததால்... தன் அழகின்மீது அவளுக்கு கர்வம் கூடிக்கொண்டே வந்தது.
இதை கவனித்த புத்தர், மாயா ரூபம் ஒன்றை படைத்தார்.
மறுநாள்...
உபன்யாசம் கேட்கவந்த அந்த இளம் பெண்ணுக்கு ஆச்சர்யமும்- அதிர்ச்சியும் நிரம்பி விழிந்தது.
தன்னைவிட அழகாக, தன்னைவிட இளமையாக அங்கலட்சணம் ஆகப் பொருந்திய பெண்ணொருத்தி... புத்தரால் படைக்கப்பட்ட மாயரூபம்... மிகப் பணிவுடன் மடத்தில் இருப்பதைப் பார்த்தாள்.
தன்னைவிட அழகான பெண்ணை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும்? அந்த மாயா ரூப பெண்ணின்மீது (அது மாயா ரூபம் என்று அறியாமல்) பொறாமை கொண்டாள்.
அவளைப் பார்த்தாலே முகத்தை "வெடுக்'கென திருப்பிக்கொள்ள ஆரம்பித்தாள். புத்தர் இதைக்கண்டு மெல்லிய புன்னகை பூத்தார்.
அடுத்த நாள்...
அந்த (மாயப்) பெண் தலைமுடி வெள்ளை பட்டிருப்பதைக் கண்டாள்.
அதற்கடுத்த நாள்...
அதற்கும் அடுத்த நாள்...
என ஒவ்வொரு நாளும் உருமாறி அழகு தொலைந்து, வயோதிகத்துடன் இருந்தாள்.
இப்போது இந்தப் பெண் உண்மையை உணர்ந்தாள்...
"அழகும்- இளமையும் நிரந்தமில்லையோ? இதை உணராமல் நாம் நமது அழகின்மீது இத்தனை நாட்களாக கர்வத்துடன் இருந்து விட்டோமே...?' என எண்ணினாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vel_9.jpg)
அவளின் மனவோட்டத்தை அவளின் விழியோட்டத்தின் வழியே அறிந்த புத்தர். "நீ நினைப்பது சரிதான்; இந்த உலகில் அழகும். வாலிபமும் மட்டுமல்ல... உலகப் பொருட்களே நிலையில்லாததுதான். நிலையற்றத்தை நினைத்து கர்வப்படக்கூடாது என்றார்.
இப்போது அவளின் முகத்தில் ஒளிர்ந்தது... ஞானப்பிரகாசம்.
1964-ஆம் ஆண்டு சிலப்பதிகாரத்தை "பூம்புகார்' என வசனம் எழுதி திரைப் படமாக்கினார் கலைஞர் மு. கருணாநிதி. எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி நடிப்பில் ஆர். சுதர்சனம் இசையில் கே.பி.சுந்தரம்பாள் பாடிய ஒரு அருமையான பாடலை கலைஞர் எழுதியிருந்தார்.
"வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனிதனிலே
மறக்கவொண்ணா வேதம்'
-என்கிற பல்லவியில் அமைந்த அந்தப் பாடலின் முதல் சரணத்தில்... உளவியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியதை உணர்த்தி யிருப்பார் கலைஞர்.
வாலிபம் நிரந்தரமில்லை; வாலிபத்தில் அலட்சியம் கூடாது; கர்வம் கூடாது; நாளை முதுமை வரும் என்பதை உணர்ந்து வைத்திருப்பதே... மனதைரியத்தைத் தரும்... என்கிற புத்த தத்துவத்திற்கு ஒப்பானவை அந்த சரணத்தில் இருக்கிறது.
வாலிபம் என்பது கலைகின்ற வேடம்
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும்முன் காப்பவன்தான் அறிவாளி. அது
வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி!
வாலிபத்தில் கர்வம் வேண்டாம்; கடமையைச் செய்வோம்! அழகைவிட அழகு...
கடமையும் பணிவுமே!
(பெருகும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/vel-t.jpg)